Results 1 to 5 of 5

Thread: பார், பகலும் கழிந்தது இரவும் போனது

  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    பார், பகலும் கழிந்தது இரவும் போனது

    பார், பகலும் கழிந்தது இரவும் போனது,
    சூரியன் மேற்கை அடைந்து மறைந்தது.
    அந்திப்பொழுது வந்து ஆக்கிரமித்தது.
    முந்தைய அந்திப்பொழுதுகள் போலவே
    அந்தப்பொழுதும் இருந்தது.
    எழுந்தது முதலாகவே ஏனோ எண்ணியிருந்தேன்,
    பகலில் ஏதேனும் புதுமை நிகழுமென்று!
    பார், பகலும் கழிந்தது இரவும் போனது.

    பையப் பையப் புறப்பட்ட விண்மீன்கள்
    மெல்ல மெல்லப் பரவின வானமெங்கும்.
    முந்தைய இரவுகளைப் போலவேதான்
    அந்த இரவும் இருந்தது.
    அந்திவேளையில் ஏனோ சிந்தித்திருந்தேன்,
    இரவில் ஏதேனும் அதிசயம் நிகழும் என்று.
    பார், பகலும் கழிந்தது இரவும் போனது.

    பறவைகள் கீச்சிட்டன,
    அரும்புகள் மலர்ந்து மணம்வீசின.
    கிழக்கிலிருந்து மீண்டும் கதிரவன் எழுந்தது.
    வழக்கம்போல் வைகறைப்பொழுது புலர்ந்தது.
    உறங்கும்வேளையில் ஏனோ உத்தேசித்திருந்தேன்,
    விடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று.
    பார், பகலும் கழிந்தது இரவும் போனது.

    (மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்கள் எழுதிய ‘lo dhin beetha, lo raat gayee’ என்னும் இந்திக் கவிதை. மூலக்கவிதை கீழே )

    लो दिन बीता, लो रात गई

    लो दिन बीता, लो रात गई,
    सूरज ढलकर पच्छिम पहुँचा,
    डूबा, संध्या आई, छाई,
    सौ संध्या-सी वह संध्या थी,
    क्यों उठते-उठते सोचा था,
    दिन में होगी कुछ बात नई।
    लो दिन बीता, लो रात गई।

    धीमे-धीमे तारे निकले,
    धीरे-धीरे नभ में फैले,
    सौ रजनी-सी वह रजनी थी
    क्यों संध्या को यह सोचा था,
    निशि में होगी कुछ बात नई।
    लो दिन बीता, लो रात गई।

    चिड़ियाँ चहकीं, कलियाँ महकी,
    पूरब से फिर सूरज निकला,
    जैसे होती थी सुबह हुई,
    क्यों सोते-सोते सोचा था,
    होगी प्रातः कुछ बात नई।
    लो दिन बीता, लो रात गई,
    Last edited by கீதம்; 01-08-2013 at 11:06 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    சற்றே மாறுபட்ட கவிதை. கவிதையை ஹிந்தியிலும் படித்துப்பார்க்கிறேன்.
    நல்ல மொழிபெயர்ப்பிற்கும், மன்றத்தில் பகிர்ந்தமைக்கும் நன்றி.

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by பாரதி View Post
    சற்றே மாறுபட்ட கவிதை. கவிதையை ஹிந்தியிலும் படித்துப்பார்க்கிறேன்.
    நல்ல மொழிபெயர்ப்பிற்கும், மன்றத்தில் பகிர்ந்தமைக்கும் நன்றி.
    ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி பாரதி அவர்களே. தங்கள் வசதிக்காக மூலக்கவிதையையும் மேலே இணைத்துள்ளேன்.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    மிக அருமையான வரிகள் நன்றி கீதம்
    தாகூரின் கீதாஞ்சலி வரிகளுக்கும் இதற்கும் ஒப்பிடத் தோன்றியது இதமான வரிகள்

    அந்திப் பொழுதில் பறவைகள் பாடாதிருந்தால், காற்று ஓய்ந்து அடங்கிவிட்டால், என் மேலும் இருளைப் போர்த்தி விடு -
    உலகை இருளில் மூழ்கவைத்து மென்மையான தாமரை இதழ்களை மூடுவதைப்போல்.
    உணவுதீர்ந்து, கிழிந்த ஆடையுடன், புழுதியில் இருக்கும் நலிந்த பயணியின் வறுமையையும், வெட்கத்தையும் நீக்கி,
    வைகறைப் பொழுதில் - மலர் இதழ்களை விரிப்பது போன்று, அவன் வாழ்க்கையையும், உன் அன்பால் இனிமைப்படுத்து.
    (24)
    If the day is done, if birds sing no more, if the wind has flagged tired,
    then draw the veil of darkness thick upon me,
    even as thou hast wrapt the earth with the coverlet of sleep and tenderly closed the petals of the drooping lotus at dusk.
    From the traveller, whose sack of provisions is empty before the voyage is ended,
    whose garment is torn and dustladen, whose strength is exhausted, remove shame and poverty,
    and renew his life like a flower under the cover of thy kindly night.

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஜான் View Post
    மிக அருமையான வரிகள் நன்றி கீதம்
    தாகூரின் கீதாஞ்சலி வரிகளுக்கும் இதற்கும் ஒப்பிடத் தோன்றியது இதமான வரிகள்

    அந்திப் பொழுதில் பறவைகள் பாடாதிருந்தால், காற்று ஓய்ந்து அடங்கிவிட்டால், என் மேலும் இருளைப் போர்த்தி விடு -
    உலகை இருளில் மூழ்கவைத்து மென்மையான தாமரை இதழ்களை மூடுவதைப்போல்.
    உணவுதீர்ந்து, கிழிந்த ஆடையுடன், புழுதியில் இருக்கும் நலிந்த பயணியின் வறுமையையும், வெட்கத்தையும் நீக்கி,
    வைகறைப் பொழுதில் - மலர் இதழ்களை விரிப்பது போன்று, அவன் வாழ்க்கையையும், உன் அன்பால் இனிமைப்படுத்து.
    (24)
    If the day is done, if birds sing no more, if the wind has flagged tired,
    then draw the veil of darkness thick upon me,
    even as thou hast wrapt the earth with the coverlet of sleep and tenderly closed the petals of the drooping lotus at dusk.
    From the traveller, whose sack of provisions is empty before the voyage is ended,
    whose garment is torn and dustladen, whose strength is exhausted, remove shame and poverty,
    and renew his life like a flower under the cover of thy kindly night.
    மனத்தை இளக்கவைக்கும் தாகூரின் வரிகளைப் பதிந்து சிறப்பானப் பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி ஜான். அவர் கையாண்டிருக்கும் உவமைகளின் ஆழம் வியக்கவைக்கிறது.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •