Results 1 to 4 of 4

Thread: உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0

    உங்கள் கடவுள் நம்பிக்கை உண்மையா?

    ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் மலைப் பாங்கானப் பகுதியில் நடத்து
    சென்று கொண்டு இருந்தான். ஒரு மரத்தின் வேர் அவனது காலில் பட்டு மலையின்
    கீழே விழ நேர்ந்தது. கீழே உருளும் போது மனதில் சிறியப் பயம் உருவாகியது.
    அவன் நினைத்தான் கடவுள் என்று ஒருவர் இருந்தால் என்னைக் காப்பாற்றட்டும்
    என்று. அவன் நினைத்தவுடன் ஒரு மரக் கிளைத் தடுத்து அவன் தொங்கி கொண்டிருந்தான். அப்போது அவன் மனம் நினைத்தது நாம் கடவுளை
    அரைகுறையாக நம்பினோம் அரைகுறையாக காப்பாத்தப்பட்டோம் முழுமையாக நம்பினால்
    முழுவதுமாக காப்பாத்தப்படுவோம் என்று நினைக்க ........

    மேலிருந்து ஒரு சப்தம் கேட்டது மகனே இப்போதவது நீ நம்புகிறாயா? .... சரி நீ என்னை (கடவுள்) அரைகுறையாக நம்பினாய் அரைகுறையாக காப்பாத்தப்பட்டாய் நீ என்னை
    முழுவதுமாக நம்பினாய் என்பதற்கு மரக் கிளையிலிருந்து கையை எடு நான் உன்னை
    மீண்டும் காப்பாத்துகின்றேன் என்றது.
    நம்மில் எதனைப் பேர் கையை விடுவோம்...

    கையை எடுப்பது அல்லது
    எடுக்காமல் இருப்பது அதுவே நீங்கள் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை.


    ********சொற்பொழிவாளர்.திரு.சுகி.சிவம் அவர் அண்ணாமலையார் அற்புதங்கள் என்ற ஒலி நாடாவில் சொல்லியது ************

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கடவுளை நம்பிக் கையை எடுப்பவன்
    ......கடைந்து எடுத்த முட்டாள் ஆகும்
    கடவுள் என்றும் நேரில் வாரார்
    ......கண்ணைத் திறந்து கருணை செய்யார்
    இடுக்கண் வருங்கால் அறிவை நம்பு
    ......இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
    துடுப்பு என்னும் அறிவின் துணையால்
    ......துணிந்து வாழ்க்கைப் படகைச் செலுத்து.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    எனக்கு மிகவும் பிடித்த சொற்பொழிவாளர்களில் ஒருவரான சுகி சிவம் அவர்களின் கடவுள் நம்பிக்கை பற்றிய கருத்தை பதிவு செய்து பலரும் படிக்க வழி செய்ததற்கு நன்றி.

    யானைக்கு தும்பிக்கை போல மனிதனுக்கு நம்பிக்கை ஆயிற்றே.

    நம்பிக்கை என்பது உணரப்படுவதே அன்றி உரைக்கப்படுவது அல்ல.

    பதிவுக்கு நன்றி.

    மும்பை நாதன்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    கையை எடுத்திருந்தால்
    காப்பாற்றியிருப்பார் கடவுள் ஏப்படியெனில்
    கீழே! காலுக்கருகில்
    கடுந்தரை!
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •