Results 1 to 3 of 3

Thread: வாட்டில் மரம்

                  
   
   
 1. #1
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  52
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  101,536
  Downloads
  21
  Uploads
  1

  வாட்டில் மரம்
  குளிர்பருவம் இன்னும் முடியவில்லை
  ஆனாலும் இப்போதே…
  பாடுகின்றன பறவைகள் கிளையமர்ந்து.
  மூடுபனி மறைந்துபோனது
  இந்நாளை இன்னும் அழகாக்கிவிட்டு.
  சூரியன் வெளிப்பட்டுவிட்டது.
  ஓ.. வாருங்கள் என்னோடு…
  வாட்டில் மரத்தைக் கண்டுகளிக்க!

  தங்கத்தைப் பதுக்கிக் குவித்து
  தாமே வைத்துக்கொள்ளட்டும் கருமிகள்!
  உண்மையில் இங்கேதான் இருக்கிறது
  உலகுக்கு அறிவிக்கப்படாத கருவூலம்!
  பொன்மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கி
  பாதசாரிகளின் பாதையெங்கும் பூவிரித்து
  கண்ணையும் நெஞ்சையும் நிறைக்குமிந்த
  வாட்டில் மரத்துக்குதான் எவ்வளவு வாஞ்சை!

  ஆஹா.. நூதனம்! வியத்தகு விநோதம்!
  மகிழ்ச்சி வடிந்துவிட்ட கோப்பையொன்றில்
  வழிய வழிய பரவசத்தை நிறைத்தாற்போல்
  கவலையும் எரிச்சலும் மறக்கடிக்கப்பட்டு
  களிப்பேருவகை கொள்கிறது மனம்,
  மரங்காட்டும் மாயவித்தையின் முன்!

  ஏழையோ பணக்காரரோ…
  மிளிர்கின்ற மரத்தை சற்றே நின்று ரசித்து
  நன்றிமிகுதியால் வாழ்த்துபவர் எவரோ…
  அவரே நண்பனாகிவிடுகிறார் அம்மரத்துக்கு!
  கட்சியோ, மதமோ, சாதியோ, நிறமோ
  சார்ந்திருப்பது எதுவானால் என்ன?
  மரத்தை நேசிப்பவர் மனிதம் நேசிப்பது உறுதி.

  எல்லையில்லா வானம் நோக்கி
  எழுகின்றன மரங்கள் பூமியினின்று.
  சொர்க்கத்தின் நீலத்துக்குப் போட்டியாய்
  வாரிவழங்குகின்றன வாழ்வின் குதூகலத்தை
  தங்கள் மஞ்சள் பச்சை வண்ணங்களால்!
  மானுட வினைப்பயனின் அடையாளமாகவே
  மலர்கின்றன வாட்டில் மரங்கள்!

  குளிர்பருவம் இன்னும் முடியவில்லை
  ஆனாலும் இப்போதே…
  பாடுகின்றன பறவைகள் கிளையமர்ந்து.
  மூடுபனி மறைந்துபோனது,
  இந்நாளை இன்னும் அழகாக்கிவிட்டு.
  சூரியன் வெளிப்பட்டுவிட்டது.
  ஓ.. வாருங்கள் என்னோடு…
  வாட்டில் மரத்தைக் கண்டுகளிக்க!

  (தோரா வில்காக்ஸ் எழுதிய ‘The wattle tree’ என்னும் ஆங்கிலக்கவிதையின் தமிழாக்கம்)

  படம் நன்றி: இணையம்

 2. #2
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  08 Sep 2010
  Location
  Karappakkam,Cennai-97
  Age
  76
  Posts
  4,215
  Post Thanks / Like
  iCash Credits
  81,276
  Downloads
  16
  Uploads
  0
  வாட்டில் மரத்தின் வண்ணப் பூக்கள்
  ...வாசலில் தொங்கும் தோரணம் போல
  காட்டும் அழகைக் காணக் கண்கள்
  ...கோடி வேண்டும் அத்தனை அழகு !
  இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
  விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

 3. #3
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  52
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  101,536
  Downloads
  21
  Uploads
  1
  Quote Originally Posted by M.Jagadeesan View Post
  வாட்டில் மரத்தின் வண்ணப் பூக்கள்
  ...வாசலில் தொங்கும் தோரணம் போல
  காட்டும் அழகைக் காணக் கண்கள்
  ...கோடி வேண்டும் அத்தனை அழகு !
  உண்மைதான். அதனால்தான் கவிஞர் அவற்றை, தங்கத்தினும் மேலான கருவூலமென்று புகழ்கிறார். ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஐயா.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •