Results 1 to 10 of 10

Thread: முற்றுப் புள்ளிகளாலான வாக்கியம்

                  
   
   
  1. #1
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0

    முற்றுப் புள்ளிகளாலான வாக்கியம்




    அது ஒரு கார் காலம்
    இலக்கியம் பாடா கார்கில் காலம்....

    மணந்தவன் போர்களத்தில், அழுவதா??? இல்லை
    மகன் பிறந்த மகிழ்ச்சியில் சிரிப்பதா???
    புரியாமல் புலம்பினால் பேதை

    மணநாள் அன்று வருவதாய்ச் சொன்னான்,
    தொலைபேசியில் தொடர்ந்தது தொலைந்தது
    அவள் வாழ்நாள்.....

    வீர நடையிட்டுச் சென்றவன்
    வீடு திரும்பினான்....
    மாலையிட்டவன் கழுத்தில் இறுதிமாலை...
    இட்டது யாரோ???

    திருமதி தியாகி என்று பட்டம்
    தந்தது தாய் நாடு!!!!
    விதவை ஆகிவிட்டால் என்று அழுது
    அடங்கியது தாய் வீடு!!!!

    அவள் நெற்றியில் இட்ட ஒரு
    புள்ளியை அழித்த பின்
    போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது அரசாங்கம்!!!!

    வாக்கியங்கள் முடிக்கப்பட்டன...
    பக்கங்கள் திருப்பப்பட்டன...
    மகன் இன்று இராணுவத்தில்!!!!

    முற்றுப்புள்ளியில் மறைந்தது அவள் வாழ்க்கை...
    அர்த்தமற்றதாய் அல்ல! ஆழமுள்ளதாய்...
    முற்றுப்புள்ளிகளாலான ஆனதொரு வாக்கியமாய்!!!!

    சுபாஷினி....
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  2. Likes PremM, prakash01, ramalakshmi liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    இலக்கியம் பாடா கார்கில் காலம்....!!நல்ல வார்த்தைக் கோர்ப்பு

  4. #3
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    இலக்கியம் பாடா கார்கில் காலம்....!!நல்ல வார்த்தைக் கோர்ப்பு
    நன்றி ஜான்
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  5. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    தொடரும் என்பதைக் குறிக்க ... என்று முற்றுப்புள்ளிகளால் வரிகளை நிறைப்போம். இங்கே முற்றுப்பெறாத தொடர்கதையாய் தியாகத்தின் புள்ளிகள்!

    தந்தையைத் தொடர்ந்து கணவனையும் போரில் இழந்தாள். பெற்றமகனையும் போருக்குப் பறிகொடுத்து அழும் வேளையில் 'இன்னொரு பிள்ளை இல்லையே... போருக்கு அனுப்பிவைத்திட' என்று அழுதாளாம் அந்நாளைய தாயொருத்தி.

    இரத்தத்தில் ஊறியிருக்கும் அசாதாரண துணிவு அது. அனைவருக்கும் வாய்த்திடல் சாத்தியமில்லை.

    மனம் தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் சுபாஷினி.

  6. #5
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0
    என் கண்ணில் நான் கண்ட சில யதார்த்த காட்சிகளின் வெளிப்பாடு தான் இந்த கவிதை. தீபிகா போன்ற பெண்களுக்கான காணிக்கையாக இது அமைய வேண்டும். கவிதைகளைப் படித்து அதற்கு பாராட்டு எழுத நேரம் ஒதுக்கும் தங்களுக்கு என் நன்றி. ஆங்கிலத்தில் ஒரு வசனம் உண்டு. " it takes lot of courage to speak, it takes even more courage to listen" . உண்மையில் தாங்கள் தான் துணிந்தவர். எழுதுவதற்கு இருப்பதை விட வாசிக்க அதிகம் ஆற்றல் தேவை. பாராட்ட அதை விட பெரிய ஆற்றல் தேவை. இவை இரண்டையும் நான் கீதம் உள்ளே நாதாமாய் காண்கிறேன்
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  7. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by subhashini View Post
    என் கண்ணில் நான் கண்ட சில யதார்த்த காட்சிகளின் வெளிப்பாடு தான் இந்த கவிதை. தீபிகா போன்ற பெண்களுக்கான காணிக்கையாக இது அமைய வேண்டும். கவிதைகளைப் படித்து அதற்கு பாராட்டு எழுத நேரம் ஒதுக்கும் தங்களுக்கு என் நன்றி. ஆங்கிலத்தில் ஒரு வசனம் உண்டு. " it takes lot of courage to speak, it takes even more courage to listen" . உண்மையில் தாங்கள் தான் துணிந்தவர். எழுதுவதற்கு இருப்பதை விட வாசிக்க அதிகம் ஆற்றல் தேவை. பாராட்ட அதை விட பெரிய ஆற்றல் தேவை. இவை இரண்டையும் நான் கீதம் உள்ளே நாதாமாய் காண்கிறேன்
    மிகைப்பாராட்டென்று நினைக்கிறேன் சுபாஷினி. என் மனந்தொட்ட எல்லா படைப்புகளுக்கும் உடனடியாக விமர்சனமோ, பாராட்டோ எழுத நினைப்பேன்.

    சில சமயங்களில் நேரமின்மையால் முடியாது போய்விடும். அல்லது நினைப்பவற்றை வார்த்தைகளாக்கும் வல்லமையற்றுப்போய்விடும்.

    இன்னும் சில உள்ளேயே கிடந்து மருகவைத்துக்கொண்டிருக்கும். சில படைப்புகள் அதிரடியாய் மனந்தொட்டு மௌனியாக்கிவிடும். அதையும் மீறி சிலவற்றுக்கு எழுதத் தோன்றும்.

    இதற்கு ஆற்றல் என்றோ துணிவு என்றோ பெயரிடலாமா என்று தெரியவில்லை. ரசிக்கிறேன் என்று கொள்ளலாம்.

    பின்னூட்டத்தை ஊக்குவிக்கும் தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சுபாஷினி.

  8. #7
    இளம் புயல் பண்பட்டவர் சுடர்விழி's Avatar
    Join Date
    26 Aug 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    473
    Post Thanks / Like
    iCash Credits
    21,698
    Downloads
    1
    Uploads
    0
    அருமையான கவிதை....

    வார்த்தைகளின் கோர்வை சிறப்பு !!

    பாராட்டுக்கள் !!!
    வல்லமை தாராயோ -இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே!![

  9. #8
    இளம் புயல் பண்பட்டவர் சுடர்விழி's Avatar
    Join Date
    26 Aug 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    473
    Post Thanks / Like
    iCash Credits
    21,698
    Downloads
    1
    Uploads
    0
    அருமையான கவிதை....

    வார்த்தைகளின் கோர்வை சிறப்பு !!

    பாராட்டுக்கள் !!!
    வல்லமை தாராயோ -இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே!![

  10. #9
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி சுடர்விழி
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

  11. #10
    புதியவர் subhashini's Avatar
    Join Date
    08 Jul 2013
    Location
    கோவை
    Posts
    48
    Post Thanks / Like
    iCash Credits
    11,093
    Downloads
    0
    Uploads
    0
    நான் மிகைத்துக் கூறவில்லை என நினைக்கிறேன். படிப்பதும் பாராட்டுதலையும் விட, ஒரு பதிவில் குறிப்பிடப்பட்ட செய்தியில் தாங்கள் ரசித்தவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது அந்த படைப்புக்குத் தாங்கள் தரும் மரியாதையும் படைத்தவரைப் பாராட்ட ஒதுக்கும் நேரமும் உண்மையில் போற்றப்பட வேண்டியவை. நன்றி கீதம்
    இசைநிறை

    எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •