Results 1 to 5 of 5

Thread: கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?

    நடுநிசியில் சடக்கென எழுந்துகொண்டு
    இமைக்குவளை நிறைத்த மதுரசமேந்தி
    உன் உடல் உள்ளம் யாவற்றையும்
    ஏன் அர்ப்பணித்திருந்தாய் என் காலடியில்?
    கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?

    இந்த சலுகையை எங்கிருந்து பெற்றாய் என்றேன்
    மேற்கொண்டு என்னைப் பேசவிடாமல்
    என் அதரங்களில் உன் அதரங்களை
    அழுத்தமாய்ப் பதித்திருந்தாய்!
    கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?

    வாழ்வின் அக்கணமானது அமரத்துவமானது…
    இன்றென் மனமெழுப்பும் இன்னிசை யாவும்
    அன்றென் இதயத்தில் நீ
    அதீதமாய் நிரப்பியவற்றின் அதிர்வெதிரொலிகள்தாமே!
    கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?

    (மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்கள் எழுதிய ‘Shan Bhar Ko Kyon Pyar Kiya Tha?’ என்னும் இந்திக்கவிதை.)

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    இந்த கவிதையின் நாயகன் கொடுத்துவைத்தவன். கவிதை அழகாக இருக்கிறது. இன்னும் நிறைய கொடுங்கள்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    உள்ளடக்கம் அருமை..
    நேரடியான மொழி பெயர்ப்பு..எனவே ப்ளெயின் ஆக இருக்கிறது

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by aren View Post
    இந்த கவிதையின் நாயகன் கொடுத்துவைத்தவன். கவிதை அழகாக இருக்கிறது. இன்னும் நிறைய கொடுங்கள்.
    ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கு நன்றி ஆரென் அவர்களே.. இன்னும் தருகிறேன்.

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஜான் View Post
    உள்ளடக்கம் அருமை..
    நேரடியான மொழி பெயர்ப்பு..எனவே ப்ளெயின் ஆக இருக்கிறது
    மனந்திறந்த பின்னூட்டத்துக்கு நன்றி ஜான். கவிதை இறந்தகாலத்தின் இன்வாழ்வு பற்றிப் பேசுவதால் கொஞ்சம் வறட்சியாகத்தான் தோன்றியது. அதை வார்த்தைகளால் அலங்கரித்து அதன் வறட்சியை மாற்ற விரும்பவில்லை. அதனால்தான் அப்படியே மொழிபெயர்த்தேன். ரசிக்கும்படி இல்லையெனில் இனி மொழிபெயர்க்கும் கவிதைகளில் தங்கள் கருத்தைக் கவனத்தில் கொள்கிறேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •