Results 1 to 10 of 10

Thread: மனைவி என்கிற காதலிக்கு...

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    09 Jun 2013
    Location
    Ghana
    Posts
    11
    Post Thanks / Like
    iCash Credits
    10,750
    Downloads
    0
    Uploads
    0

    மனைவி என்கிற காதலிக்கு...

    உன்னோடு நான் வாழும்
    ஒவ்வொரு நொடிப்பொழுதும்
    ஒப்பிட்டு காண்பதற்கு
    உவமையொன்றும் இல்லையடி இப்புவியிலே;

    கோடியுகம் சுழன்ற பின்னும் என்றென்றும்
    பிடித்தவண்ணம் சூரியதடம் மாறாமல் சுற்றி வரும்
    புவியோடு சேர்ந்த எண் கோள்களுடன்;

    உன் அச்சில் நானும்
    என் அச்சில் நீயும்
    என்றென்றும் மாறாவன்புடன் சுழன்று நிற்போம்.

    இனி காலம் சொல்லட்டும்
    உதாரணத் தம்பதிகளாய்;

    உடலற்றுப் போன பின்னும்
    உயிரோடு நாம் இருப்போம்;

    புவி சுழலும் வரை, சூரியன் எரியும் வரை;
    மற்றும் ஒரு விண் குடும்பம் காணும் வரை;

    புவியியலும் புரிந்து கொள்ளும்
    நாமும் ஒரு காதல் கோள் குடும்பம் என்று.
    விண்ணில் சுழல்வதினால் வீழ்ச்சியென்றும் கிடையாது
    சாமானியர்க்கும் எட்டிவிடும் நம் காதல் சாட்டிலைட் துணையோடு

    வாழ்ந்துவரும் நம் காதல்
    வளரட்டும் பொழுதெல்லாம்
    ஈடில்லை இதைச் சொல்ல
    வேறொன்றும் சொல்ல..... இல்லை.

    வாழட்டும் நம் காதல்
    வளரட்டும் பொழுதெல்லாம்

    - கணவன் என்கிற காதலன்.

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வானகம் தாண்டி பிரபஞ்சத்தையும் எட்டிவிட்ட இனிய காதலுக்கு இன்வாழ்த்துக்கள்.

    என்றென்றும் வளர்ந்து தழைக்கட்டும் வரம் பெற்று வந்த காதல்.

  3. #3
    புதியவர்
    Join Date
    09 Jun 2013
    Location
    Ghana
    Posts
    11
    Post Thanks / Like
    iCash Credits
    10,750
    Downloads
    0
    Uploads
    0
    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    அன்புடன்,
    ரா.ப.ஆனந்தன்.

  4. #4
    புதியவர்
    Join Date
    11 Jun 2013
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    9,977
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல கவிதை.. நன்றி

  5. #5
    புதியவர்
    Join Date
    09 Jun 2013
    Location
    Ghana
    Posts
    11
    Post Thanks / Like
    iCash Credits
    10,750
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    இன்னும் ஒரு வருடம் கழித்து என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்!

    (ஆறு மாதம் முன்பு எழுதியது)
    என்னை மயக்கும் மார்கழி பனியும் நீ!
    என்னில் இனிக்கும் மாதுளங் கனியும் நீ!

    (இன்று எழுதியது)
    என்னை ஆட்டிப் படைக்கும்
    ஏழரை சனியும் நீ!
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by lenram80 View Post
    இன்னும் ஒரு வருடம் கழித்து என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்!

    (ஆறு மாதம் முன்பு எழுதியது)
    என்னை மயக்கும் மார்கழி பனியும் நீ!
    என்னில் இனிக்கும் மாதுளங் கனியும் நீ!

    (இன்று எழுதியது)
    என்னை ஆட்டிப் படைக்கும்
    ஏழரை சனியும் நீ!
    என்ன, சொந்த அனுபவமோ ?
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    ஆனந்தன், இதுதான் காலத்தை வென்ற காதல் என்பதோ ?
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    காதலி மனைவியாவதிலும்....மனைவி காதலியாவதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது.

    காதல் எனும் அச்சில் கணவனும் மனைவியும் கோள்களாய் சுற்றி வந்தால் இல்லற வெளி ஆனந்த வெளியாகும்.

    வாழ்த்துக்கள் ஆனந்தன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    காதலி மனைவியாவதிலும்....மனைவி காதலியாவதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது.

    காதல் எனும் அச்சில் கணவனும் மனைவியும் கோள்களாய் சுற்றி வந்தால் இல்லற வெளி ஆனந்த வெளியாகும்.

    வாழ்த்துக்கள் ஆனந்தன்.
    உண்மை சிவா.ஜி. இதை அனைவரும் உணர்ந்து இருந்தால் வாழ்க்கை சுமுகமாக நகரும்.
    ஆனாலும் காதலியே மனைவியாகி, மனைவியான பின்னும் காதல் தொடர்ந்து இருந்தால் அது உத்தமமான வாழ்வு என்று சொல்லலாம்.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •