இன்று - மே 17: எட்வர்ட் ஜென்னர் எனும் மனித குலம் காக்க வந்த பெருமனிதர் பிறந்த தினம்.

உலகை பல நூற்றாண்டுகளாக உலுக்கி கொண்டிருந்தது, பெரியம்மை. எகிப்திய மம்மிக்களின் முகத்தில் அம்மை வடுக்கள் இருக்கிறது என்பது எவ்வளவு காலமாக அது உலகை ஆட்டிப்படைத்து இருக்கும் என்பதை புரியவைக்கும். எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு அந்நோய் வந்து சேர்ந்தது. உலகம் முழுக்க போர் மற்றும் வியாபாரம் செய்யப்போனவர்கள*ின் உபயத்தில் நோய் பரவியது. ஒரு வருடத்தில் மட்டும் 4 லட்சம் பேர் நோயால் இறப்பது வருடாந்திர நிகழ்வானது. பிழைத்தாலும் விடாது கருப்பு போல மூன்றில் ஒரு நபருக்கு கண்பார்வை காலி.
முகம் முழுக்க தழும்புகள்; எண்ணற்ற மரணங்கள் என்று உலகம் பீதியில் உறைந்து போயிருந்தது. அம்ஹெர்ஸ்ட் எனும் ஆங்கிலேய தளபதி பெரியம்மை கிருமியை அமெரிக்க பழங்குடியின மக்களுக்கு எதிராக பயன்படுத்த யோசனை எல்லாம் தெரிவித்தான். அம்மை குத்துதல் என்கிற முறை இந்தியா, சீனா, ஆப்ரிக்கா ஆகியவற்றில் பிரபலமாக இருந்தது. பெரியம்மையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுதலை பெற்ற நபரின் மருக்களில் பாலை எடுத்து இயல்பான மனிதர்களுக்கு குத்துவார்கள். இதுதான் அம்மை குத்துதல். ஏகப்பட்ட நபர்களிடம் இருந்து தேவையான அளவுக்கு அந்த திரவம் கிடைக்காது. வீரியமும் ஒரே மாதிரி இல்லாமல் இருந்தது