குத்துசண்டை வீரன் ஓருவன் அசந்து தூங்கி கொண்டு இருந்தான். அப்போது அவன் கை விரல்கள் இடையே பெரும் வாக்குவாதம் யார் பெரியவர்கள் யென்று பெருவிரல் சொன்னது நீங்க நாலு பேரும் ஓரு அணி நான் தனி ஆளு நான் இல்லாட்டி எந்த வேலையும் செய்ய முடியாது என் அருமை உணர்ந்த துரோணர் ஏகலைவனிடம் என்னை வாங்கி கொண்டார் என்றது.

ஆள்காட்டி விரல் எந்த பொருளையும் அடையாளம் காட்டுவது நான்தான் அதனால் நான்தான் பெரியவனு சொல்லுச்சு.

நடுவிரல் எல்லோரும் வரிசையில் நில்லுங்கடா யாரு பெரியவனு பார்ப்போம்னு சொல்லுச்சு.

மோதிர விரல் மனுசன் தங்கத்தையோ வைரத்தையோ என்னில் தான் முதலில் மாட்டி ரசிப்பார்கள் என்று பெருமிதமா சொல்லுச்சு

கடைசி சுண்டுவிரல் நீங்கள் என்னதான் பெருமையா பேசினாலும் இறைவனை வணக்கும் போது நான்தான் முதலில் நிற்பேனு சொல்லுச்சாம்.

நன்றாக தூங்கி கொண்டு இருந்த குத்துசண்டை வீரனை அவன் எதிரி தாக்க வந்தான் உடனே அவன் விழித்து கொண்டு எழுந்து ஓரே குத்தில் சாய்த்தான்.

அந்த ஐந்து விரல்களும் பிறகு பேசிகொண்டன நம்ம ஐந்துபேரும் ஓற்றுமையா இல்லனா நம்ம நிலைமை என்னவாயிருக்கும*்!

# கி. ராஜநாரயணன் நாட்டுபுற கதைகள்.