Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: தமிழ் மன்றத்திற்க்கு வணக்கம். சுய அறிமுகம்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    09 May 2013
    Location
    A, A
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    9,907
    Downloads
    4
    Uploads
    0

    தமிழ் மன்றத்திற்க்கு வணக்கம். சுய அறிமுகம்

    சபையோர்க்கு வணக்கம்.

    என் பெயர் இருங்கோவேள். அ. போ.

    பொருநை நதிக்கரையோரம் பிறந்து, வைகை நதிக்கரையோரம் கல்வி பயின்று 1986 முதல் வங்கக்கரையோரம் - சென்னையம்பதியில் வாழ்ந்து வருகிறேன்.

    தற்போது சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் மருத்துவ சமூகவியலாளராக, நோயாளிகள் கல்வி மற்று ஆலோசனை - மேலாளராக பணியாற்றி வருகிறேன்.

    ஆர்வம் காரணமாக, சமூகவியல், உளவியல், மருத்துவமனை மேலாண்மை, தமிழ் இலக்கியம் போன்ற துறைகளில் முதுகலை பட்டமும், ஆய்வியல் பட்டமும் பெற்றுள்ளேன்.

    தினமணி, தினமலர், ஆனந்த விகடன், குமுதம், அமுதசுரபி, தி ஹிந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், போன்ற இதழ்களில் சில பல படைப்புகள் எழுதியுள்ளேன்.

    தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளில் மனம் லயித்து இதோ உங்களோடு அவ்வப்போது உரையாட உறவாட வருகிறேன்.

    வணக்கத்துடனும், வாழ்த்துக்களுடனும்,

    அன்பன்
    அ போ இருங்கோவேள்

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சுய அறிமுகம் அசத்தல். பன்முகத் திறமை கொண்ட ஒரு படைப்பாளரை நம் மன்றத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. தங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் மன்றத்தில் பிற உறுப்பினர் படைப்புகள் பற்றிய தங்கள் திறனாய்வையும் வழங்கினால் யாவரும் மகிழ்வோம். என்றென்றும் மன்றத்தோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள் நண்பரே.

  3. #3
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    அன்பு வரவேற்பு,இருங்கோவேள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    தங்களுடைய தூய தமிழ்ப் பெயரே , தங்களுடைய தமிழார்வத்தைப் பறைசாற்றுகிறது. வருக நண்பரே ! வணக்கம்.

    "தமிழ் மன்றத்திற்க்கு வணக்கம் " என்று எழுதியுள்ளீர்கள். வல்லின " ற் " வந்தால் அடுத்து " க் " வராது. " தமிழ் மன்றத்திற்கு வணக்கம் " என்று எழுதினாலே போதுமானது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #5
    புதியவர்
    Join Date
    11 Jun 2011
    Posts
    10
    Post Thanks / Like
    iCash Credits
    11,250
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம் இருங்கோவேள்!! உங்களை போன்ற சான்றோருடன் உரையாட தளம் அமைத்து கொடுத்த தமிழ் மன்றத்திற்கு கோடி நன்றிகள்.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    நல்வரவு இருங்கோவேள்..நல்ல அழகிய தூய தமிழ் பெயர்..

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    44
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,114
    Downloads
    0
    Uploads
    0
    இனிய வரவு இருங்கோவேள் தமிழ் மன்றத்திலும் தொடரட்டும் உங்களது இனிய தமிழ் பணி, வாழ்த்துக்கள்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    வணக்கம்....வருக...வருக...
    வாழ்த்துக்கள்.

  9. #9
    புதியவர்
    Join Date
    09 May 2013
    Location
    A, A
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    9,907
    Downloads
    4
    Uploads
    0
    மிக்க நன்றி அன்பரே,

    ஒற்றுப்பிழையை சுட்டிக்காடியமைக்கு.

    வணக்கத்துடன்,
    அ போ இருங்கோவேள்

    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    தங்களுடைய தூய தமிழ்ப் பெயரே , தங்களுடைய தமிழார்வத்தைப் பறைசாற்றுகிறது. வருக நண்பரே ! வணக்கம்.

    "தமிழ் மன்றத்திற்க்கு வணக்கம் " என்று எழுதியுள்ளீர்கள். வல்லின " ற் " வந்தால் அடுத்து " க் " வராது. " தமிழ் மன்றத்திற்கு வணக்கம் " என்று எழுதினாலே போதுமானது.

  10. #10
    புதியவர்
    Join Date
    09 May 2013
    Location
    A, A
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    9,907
    Downloads
    4
    Uploads
    0
    அன்பார்ந்த உறுப்பினர்களுக்கு,

    நன்றி.

    எனது பெயர் என் தந்தையும், பாட்டனாரும் எனக்கு வைத்த பெயர். இது எனது பாட்டனாரின் பெயரும் கூட. பல சந்தர்ப்பங்களில் எனது பெயரை தவறாக “இளங்கோவேல்” என்று பலரும் குறிப்பிடும்போது, அதனை சரி செய்யும் பணி சற்று அதிகம்.

    பெயர்க்காரணத்தை என் பாட்டனாரிடம், நான் ஆரம்ப பாடசாலை மாணவனாக இருந்த போது கேட்ட போது பல செய்திகள், வரலாற்று சம்பவங்கள் அறிந்து கொண்டேன்.

    அன்பர்கள் வரவேற்பு சற்று மிரட்சியையும் அளிக்கிறது.

    நான் சான்றோன் அல்ல, மாணவனே.

    விரைவில் மீண்டும் வருகிறேன்.

    வணக்கத்துடன்,
    அ போ இருங்கோவேள்.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    வாருங்கள் நண்பரே.

    தமிழ் மன்றத்திலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    தாங்களை இங்கு வருக வருக என மனமார வரவேற்கிறோம்
    அன்பரே,
    தாங்களின் சுய ஆறிமுகம் இங்குள்ளோரின்
    எதிர்பார்ப்புக்களை அதிகபடுத்தியுள்ளது. மன்றத்தை உலா வந்து உங்கள் படைப்புக்களை எங்களோடு பகிர்ந்து கொள்வதை எதிர்பார்க்கிரோம்

    வெளிநாட்டவன் ஆன நான் உங்கள் கண் மருத்துவமனைக்கு இருமுறை பரிசோதனை செய்ய வந்துள்ளேன் அதோடு இம்மருத்துவ மனையின் சேவையை கண்டு வியந்திருக்கிரேன் .
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •