Results 1 to 8 of 8

Thread: உன் எழுத்தின் காடு

                  
   
   
 1. #1
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,803
  Post Thanks / Like
  iCash Credits
  66,907
  Downloads
  57
  Uploads
  0

  உன் எழுத்தின் காடு

  பூக்காரியின்
  லாவகமான விரல்களை போல*
  மெல்லிய மயிலிறகால்
  உன் நறுமணம் கமழும் சொற்களை
  வெகு நேர்த்தியாய் கட்டிக் கொண்டிருக்கிறாய்

  தூக்கனாங்குருவியின் கூட்டை போல*
  நுட்பமானதாகவும்
  நுண்பின்னல்கள் உடையதாகவும்
  வேலைப்பாடு மிகுந்தவையாகவும் இருக்கும்
  உன் சொற்கோர்வை

  பள்ளி குழந்தையின்
  பஞ்சுக்கைகளிலிருந்து உயர்கிற*
  மலைகளையும் அதன் காட்டையும்
  அதன் ரகசியங்களையும் அதனூடே
  அரவமின்றி பாய்கிற நதிகளையும்
  உன்னெழுத்துக்களின் இடுக்குகளில்
  மிக சாமர்த்தியமாய் பதுக்கி வைப்பாய்

  பெயரறியாத
  பல பறவைகள் பறப்பதாகவும்
  வண்ண மலர்கள் பூத்திருப்பதாகவும்
  ஒரு அபூர்வ நட்சத்திரத்தினொளி படர்ந்திருப்பதாகவும்
  புதிர்கள் பல நிறைந்திருப்பதாகவும் இருக்கும்
  உன் எழுத்தின் காடு
  அதிலொரு தேவதையாக*
  நீ நடமாடி கொண்டிருப்பாய்

  அதிகப்படியான ஜாக்ரதையோடு
  உன் எழுத்தின் காட்டில் உலாவ ஆயத்தமாகிறேன்
  அதன் ஒவ்வொரு தாழ்பாளையும் திறந்து
  தேட காத்திருக்கிறேன்
  ஏதேனும் ஒரு சொல்லில் எனக்கான*
  அழைப்பு இருக்க கூடுமென*
  Last edited by ஆதி; 03-05-2013 at 06:31 AM.
  அன்புடன் ஆதி 2. #2
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  36,085
  Downloads
  146
  Uploads
  3
  கடிதம் வரைவது கூட கவியாகிறதே கவிக்கு ..தொடரட்டும் ஆதி..
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

 3. #3
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
  Join Date
  31 Oct 2007
  Posts
  6,803
  Post Thanks / Like
  iCash Credits
  66,907
  Downloads
  57
  Uploads
  0
  நன்றி ஜெய், ஒரு படத்துக்கு எழுதிய கவிதை, இரவு படதையும் இணைக்கிறேன்
  அன்புடன் ஆதி 4. #4
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  27 Mar 2011
  Location
  madurai
  Age
  55
  Posts
  539
  Post Thanks / Like
  iCash Credits
  32,604
  Downloads
  2
  Uploads
  0
  புதிய புதிய வார்த்தைக் கோர்ப்புகள்

  அழகிய பிரயோகங்கள்

 5. #5
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  30 Jul 2012
  Location
  லியோன்
  Age
  40
  Posts
  487
  Post Thanks / Like
  iCash Credits
  13,644
  Downloads
  0
  Uploads
  0
  ஒரு எழுத்தின் காடு ஒரு இன்பக் கவிக்காடு, அழகு சொற்களால் பூத்து குலுங்குகிறது. வாழ்த்துக்கள் ஆதி.
  தோழமையுடன்
  ஆ. தைனிஸ்

  உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
  உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

 6. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  39
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  282,120
  Downloads
  151
  Uploads
  9
  வைரமுத்துவின் வரிகள் என்று நினைக்கிறேன்..

  காட்டைத் திறக்கும் சாவிதான் காற்று..

  இந்தக் காட்டிலும் ஊடுருவி
  எங்கும் நிறைந்த பரம்பொருளாய் காற்று..
  காட்டைத் திறந்த காற்றா..
  காட்டால் அடையுண்ட காற்றா?

  தேடல் சுகம் ஆதி.

 7. #7
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  21 Dec 2006
  Posts
  269
  Post Thanks / Like
  iCash Credits
  17,327
  Downloads
  7
  Uploads
  0
  ///பூக்காரியின்
  லாவகமான விரல்களை போல*
  மெல்லிய மயிலிறகால்
  உன் நறுமணம் கமழும் சொற்களை
  வெகு நேர்த்தியாய் கட்டிக் கொண்டிருக்கிறாய்

  தூக்கனாங்குருவியின் கூட்டை போல*
  நுட்பமானதாகவும்
  நுண்பின்னல்கள் உடையதாகவும்
  வேலைப்பாடு மிகுந்தவையாகவும் இருக்கும்
  உன் சொற்கோர்வை///

  தங்களின் வார்த்தைகளிலேயே சொல்லாம்..

  நுட்பான நுண்பின்னல் சொற்களில் நுண்ணுர்வுகளை இனிதாக உணர முடிகிறது.

  //உன் எழுத்தின் காட்டில் உலாவ ஆயத்தமாகிறேன்//
  நல்ல சொல்மாட்சிமை..

 8. #8
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  49
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  97,876
  Downloads
  21
  Uploads
  1
  ஓராயிரம் புதிர்களோடு காத்திருக்கும் எழுத்தின் காட்டுவழி தேடி எப்படியும் தன்னை வந்தடைவான் தனக்கான தேவன் என்னும் அதீத நம்பிக்கையோடான முறுவலோடு காத்திருக்கிறாள் அத்தேவதை. சொற்பின்னலின் நுட்பமறிந்த மனத்துக்கு தனக்கான அழைப்பு எவ்வார்த்தையிலிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதா கடினம்? வாழ்த்துக்கள் ஆதி.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •