Results 1 to 11 of 11

Thread: தலைப்பில்லாத கவிதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    தலைப்பில்லாத கவிதை

    உனது கண்கள் உதிர்க்கும்
    செம்பவழ*ப்பூவை
    பொருக்கி வைத்தேன்
    எனது உள்ளங்கையில்
    அது பனித்துளியென உருகி
    நதியென மினுமினுப்பாய் ரேகைகோடுகளில் பாய்ந்து
    வழிகிறது

    சலனம் நிறைய என் இதயத்தின் கடல்
    வேட்கையோடு ஒரு பேரலையென*
    உனை நோக்கி புரள

    உனது கால்சுவட்டின்
    கட்டைவிரல் குழியில் அதனை அடைத்து
    ஒரு சூரியனை அதில் மிதக்கவிடுகிறாய்
    அது பறவையென பரிணமித்து
    முக்குளித்து மீன் கவ்வி
    ஒரு இறகு சிலிர்ப்பில்
    என் மொத்தக்கடலையும் சிதறடித்து
    பறக்கிறது தன் திசை நோக்கி
    சிதறிய கடல் உன் கால்சுவட்டின்
    மற்றப்பள்ளங்களிலும் பரவி
    உறைகிறது ஒரு பனிப்பாறையாய்
    அன்புடன் ஆதி



  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தலைபற்ற கவிதை கூறும் தலைபற்ற செய்தியினை உணரும் கவி அல்ல இச்சிறுவன் மன்னிக்க ..காதலில் மூழ்கிவிட்ட கவியின் சிந்தையில் உதித்த செம்மை கவியோ ..தொடரட்டும் ஆதி
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதி View Post
    உனது கண்கள் உதிர்க்கும்
    செம்பவழ*ப்பூவை
    பொருக்கி வைத்தேன்
    கண்கள் உதிர்க்கும் செம்பவழப்பூவா? அது என்ன?

    Quote Originally Posted by ஆதி View Post
    எனது உள்ளங்கையில்
    அது பனித்துளியென உருகி
    நதியென மினுமினுப்பாய் ரேகைகோடுகளில் பாய்ந்து
    வழிகிறது
    ஓ... அவளை அழவிடுறதைத்தான் இப்படிக் கவித்துவமா வர்ணிக்கிறீங்களோ?

    Quote Originally Posted by ஆதி View Post
    சலனம் நிறைய என் இதயத்தின் கடல்
    வேட்கையோடு ஒரு பேரலையென*
    உனை நோக்கி புரள
    இப்படி சுனாமியாய்ப் பொங்கினால் அழமாட்டாளா என்ன?

    Quote Originally Posted by ஆதி View Post
    உனது கால்சுவட்டின்
    கட்டைவிரல் குழியில் அதனை அடைத்து
    ஒரு சூரியனை அதில் மிதக்கவிடுகிறாய்
    எப்படியோ மனசைத் தேத்திக்கொண்டு உங்க கோபத்தையெல்லாம் தன் காலடியில் போட்டு ஒரே மிதி!

    அப்படியும் ஓடிடாமலிருக்க டேபிள்வெயிட் மாதிரி சூரியன்!

    Quote Originally Posted by ஆதி View Post
    அது பறவையென பரிணமித்து
    முக்குளித்து மீன் கவ்வி
    ஒரு இறகு சிலிர்ப்பில்
    என் மொத்தக்கடலையும் சிதறடித்து
    பறக்கிறது தன் திசை நோக்கி
    அதாலயும் தாங்க முடியலயாம். இரண்டுபேருக்கு நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதே...தப்பிச்சு ஓடும் வழியைத் தானே பார்க்கணும்...

    Quote Originally Posted by ஆதி View Post
    சிதறிய கடல் உன் கால்சுவட்டின்
    மற்றப்பள்ளங்களிலும் பரவி
    உறைகிறது ஒரு பனிப்பாறையாய்
    நல்லாப் பாருங்க.. கடலா? மிதித்த மிதியில் வெளிவந்த குடலா என்று...

    கவிதையும் புரியாமல், காதலும் புரியாமல் நீங்க எல்லாம் எதுக்கு காதல் கவிதைகள் பக்கம் வரீங்க என்று ஆதி பல்லை நறநறப்பது மனக்கண்ணில் தெரிகிறது.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    @ஜெய், சில நேரம் நானும் இப்படித்தான் குழம்பிடுறேன், பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்


    //கவிதையும் புரியாமல், காதலும் புரியாமல் நீங்க எல்லாம் எதுக்கு காதல் கவிதைகள் பக்கம் வரீங்க என்று ஆதி பல்லை நறநறப்பது மனக்கண்ணில் தெரிகிறது. //

    கீதம் அக்கா, இந்த கோவம் தலைப்பை காவு கொடுத்ததால் தானோ

    விளக்கம் நல்லா இருங்க அக்கா, பின்னூட்டத்துக்கு நன்றி
    அன்புடன் ஆதி



  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதி View Post
    //கவிதையும் புரியாமல், காதலும் புரியாமல் நீங்க எல்லாம் எதுக்கு காதல் கவிதைகள் பக்கம் வரீங்க என்று ஆதி பல்லை நறநறப்பது மனக்கண்ணில் தெரிகிறது. //

    கீதம் அக்கா, இந்த கோவம் தலைப்பை காவு கொடுத்ததால் தானோ

    விளக்கம் நல்லா இருங்க அக்கா, பின்னூட்டத்துக்கு நன்றி
    அது என் கோவம் என்றா நினைத்தீங்க... என் மனக்கண்ணில் தெரியும் உங்க முகத்தைத்தான் அங்கே காட்டியிருக்கிறேனாக்கும்.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    பிரம்மாண்டமான காதலி!
    கால் கட்டைவிரல் குழியில் சூரியனா!
    யப்பா! எத்தேதண்டி!
    என்றென்றும் நட்புடன்!

  7. Likes கோபாலன் liked this post
  8. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    கவிதை நன்றாக இருக்கிறது.

  9. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    அது என் கோவம் என்றா நினைத்தீங்க... என் மனக்கண்ணில் தெரியும் உங்க முகத்தைத்தான் அங்கே காட்டியிருக்கிறேனாக்கும்.
    அன்புடன் ஆதி



  10. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    பிரம்மாண்டமான காதலி!
    கால் கட்டைவிரல் குழியில் சூரியனா!
    யப்பா! எத்தேதண்டி!
    பிரமாண்டமான காதலி கும்பகோணத்துப்பிள்ளை

    கால்சுவடு ஒரு படிமம்

    சூரியனும் ஒரு படிமம்
    அன்புடன் ஆதி



  11. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by ஆர்.ஈஸ்வரன் View Post
    கவிதை நன்றாக இருக்கிறது.
    வாங்க ஈஸ்வரன் ரொம்ப நாளாச்சே உங்களை மன்றத்தில் கண்டு, பழையபடி தங்களின் கவிதைகளை மன்றத்தில் தவழவிடுங்கள்
    பின்னூட்டத்துக்கு நன்றி
    அன்புடன் ஆதி



  12. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    நல்ல கவிதை.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •