Results 1 to 5 of 5

Thread: சிலம்பு காட்டும் ராமர்!

  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    22 Aug 2010
    Posts
    168
    Post Thanks / Like
    iCash Credits
    34,435
    Downloads
    1
    Uploads
    0

    சிலம்பு காட்டும் ராமர்!

    சிலம்பு காட்டும் ராமர்!

    "தாதை ஏவலின் மாதுடன் போகி'' என்று தொடங்கும் பாடல் சிலப்பதிகாரத்தில் ஊர்காண்காதை (46-49) படலத்தில் வருகிறது.

    அதாவது கோவலன் கண்ணகியுடன் மதுரையை நோக்கி நடந்து செல்கிறான். இருவருக்கும் துணையாக கவுந்தியடிகள் உடன் வருகிறார். தனது ஊரை விடுத்து தன் மனைவியுடன் காட்டு வழியில் நடந்துவரும் கோவலனுக்கு தன் நிலையை நினைத்து வருத்தம் ஏற்படுகிறது. இதையறிந்த கவுந்தியடிகள், ""கோவலா! உலகில் துன்பம் வருவது இயற்கை. வேத முதல்வராகிய திருமால் இராமராக அவதாரம் செய்தபொழுது தமது மனைவியாகிய சீதையைப் பிரிந்து வருந்தினார். அது எதற்காக? மக்களுக்கு துன்பம் வருதல் இயற்கை என்பதை விளக்குவதற்குத்தானே! ஆகவே நீ வருத்தப்படாதே'' என்று தேற்றுகிறார். இதன் மூலம் ராமனின் புகழை விளக்குகிறார் இளங்கோவடிகள்

    nandri;kadhir

  2. Likes ரமணி liked this post
  3. #2
    புதியவர்
    Join Date
    20 Jul 2016
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    222
    Downloads
    7
    Uploads
    0

    Arrow ராமன் நல்லவனாக சித்தரிக்கப் பட்டான்:

    ராமன் நல்லவனாக சித்தரிக்கப் பட்டான்:
    ராமன் கடவுளா இல்லையா என்ற வாதத்திற்கு செல்ல விரும்ப வில்லை,ஆனால் ராமன் புகழ் பாட தகுதி உள்ளவனா என்பது தான் என் கேள்வி?ராமனை நல்லவனாக, ஒழுக்கமானவனாக தமிழ்நாட்டிற்கு அறிமுக படுத்தியது கம்பர், கம்பரின் தாக்கம்தான் இளங்கோ வை இப்படி எழுத தூண்டியது என்பது தான் என் பார்வை. தமிழர் கலாச்சாரத்துக்கும் , ஆரிய கலாச்சாரத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது, நமது பண்பாட்டு அடையாளம் வேலும், வாளும் தான், மாறாக ராமன் வில்லை பயன்படுத்துவான்,திருவள்ளுவர் முதற்கொண்டு பல புலவர்கள் தான் பாடலின் வாயிலாக திராவிட அடையாளத்தை பறைசாற்றி இருப்பதை காணமுடிகிறது.ராமனை நல்லவனாகப் பார்ப்பதே பார்ப்பனியப் பற்று கொண்ட பார்வையாகப் பார்க்கத் தோன்றுகிறது.

  4. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    இளங்கோவடிகளின் காலம் முந்தையது. இளங்கோவடிகளின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். அந்தச் செங்குட்டுவனின் தம்பி என்பதால் அடிகளாரும் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரே.

    கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். வெண்ணைநல்லூரைச் சேர்ந்த சடையப்ப வள்ளல் என்ற ஓரு செல்வந்தரால் இவர் வளர்க்கப்பட்டார்.

    1000 ஆண்டுகளுக்குப் பிந்திப் பிறந்த கம்பனைப் பார்த்து இளங்கோ கம்பரின் தாக்கத்தினால் எழுதினார் என்று எழுதுவதைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. Likes முரளி liked this post
  6. #4
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    அருமையான பதில் தாமரை. இந்த காப்பியத்தில், ராமனை மட்டுமல்ல, மற்ற அவதாரங்களையும் சித்தரிக்கிறார், ஆசிரியர் இளங்கோவடிகள். இவர் ஒரு சமண முனிகள். இருப்பினும் அவர் இந்த பாடலின் மூலம் திருமாலின் (கண்ணனின்) புகழை மிக அழகாக ( மதுரை ஆய்ச்சியர் மாடு மேய்க்கும் பெண்கள்மூலமாக) புனைந்திருக்கிறார். நிறை எங்கிருந்தாலும் அதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ! இராமனாக இருந்தாலும் சரி, கண்ணானாக இருந்தாலும் சரி !

    சிலப்பதிகாரத்தில் இரண்டாம் மதுரை காண்டத்தில் ஒரு காட்சி : கோவலன் மதுரையில் கண்ணகியை மாடு மேய்க்கும் இடைச்சி மாதரியின் பால் விட்டு சிலம்பை விற்க நகர் செல்கிறான். அரசன் ஆணையால் திருடன் என பழி சுமத்தப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.

    அதே நேரம் மாதரிக்கு சில துர் சகுனங்கள் தெரிகிறது. பசுக்களின் கழுத்து மணி கழன்று விழுவது போல, பால் திரிவது போல. நடக்கப் போகும் நிகழ்வை தடுக்க வேண்டி இறைவனிடம் இறைஞ்சுவதாக , ஆய்ச்சியர் குரவைக் கூத்தாக அமைந்திருக்கிறது., இப்பாடல், சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையின் ஒரு பகுதியாக . ( நன்றி கூகுல், விக்கி தமிழ் )

    என்ன ஒரு எளிமையான பாடல் ? இளங்கோவடிகள் கண்ணனை மாயன் என்றே அழைக்கிறார். அவரது பாடலை, மாயனை வழுத்தி மனதை மயக்கும் குரலில் எம் எஸ் அவர்கள். "வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி .." எனும் பாடல் https://www.youtube.com/watch?v=ogm5odfetE4
    Last edited by முரளி; 21-07-2016 at 04:12 PM.

  7. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    23 Oct 2013
    Posts
    69
    Post Thanks / Like
    iCash Credits
    9,387
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    இளங்கோவடிகளின் காலம் முந்தையது. இளங்கோவடிகளின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. சேரன் செங்குட்டுவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். அந்தச் செங்குட்டுவனின் தம்பி என்பதால் அடிகளாரும் 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரே.

    கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். வெண்ணைநல்லூரைச் சேர்ந்த சடையப்ப வள்ளல் என்ற ஓரு செல்வந்தரால் இவர் வளர்க்கப்பட்டார்.

    1000 ஆண்டுகளுக்குப் பிந்திப் பிறந்த கம்பனைப் பார்த்து இளங்கோ கம்பரின் தாக்கத்தினால் எழுதினார் என்று எழுதுவதைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
    காய்தல் உவத்தல் இன்றி ஒருபொருட்கண்
    ஆய்தல் அறிவுடையார்க்கண்ணதே காய்வதன்கண்
    உற்றகுணம் தோன்றாதாகும் உவப்பதன்கண்
    குற்றமும் தோன்றாக்கெடும்

    ஒரு பதிவையும் இந்த செய்யுளின் அடிப்படையில் தான் காணவேண்டும். இதை புரியவைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •