Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 42

Thread: சிறுகதை உத்திகள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0

    சிறுகதை உத்திகள்

    சிறுகதை உத்திகள்

    ந்த மன்றத்தில் சிறுகதை எழுதும் ஆர்வம் பலருக்கு அதிகம் இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் ஏதோ பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, உத்திகள் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த இழையின் நோக்கம்.

    சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் கதையைப் படித்து, ஒரு கதாசிரியர் பார்வையில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை, எண்ணங்களை இந்கு பதியுங்கள். ஒன்றிரண்டு பதிவுகள் ஆனதும் என் கருத்துக்களைப் பதிகிறேன்.

    குழந்தைக்கு ஜுரம்
    தி.ஜானகிராமன்

    http://azhiyasudargal.blogspot.in/20...g-post_28.html

    *****
    Last edited by மதி; 25-03-2013 at 09:26 AM. Reason: தலைப்பு திருத்தம்

  2. Likes barath, முரளி liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post
    சிறுதை உத்திகள்

    ந்த மன்றத்தில் சிறுகதை எழுதும் ஆர்வம் பலருக்கு அதிகம் இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் ஏதோ பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, உத்திகள் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த இழையின் நோக்கம்.

    சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் கதையைப் படித்து, ஒரு கதாசிரியர் பார்வையில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை, எண்ணங்களை இந்கு பதியுங்கள். ஒன்றிரண்டு பதிவுகள் ஆனதும் என் கருத்துக்களைப் பதிகிறேன்.

    குழந்தைக்கு ஜுரம்
    தி.ஜானகிராமன்

    http://azhiyasudargal.blogspot.in/20...g-post_28.html

    *****
    பயனுள்ள திரி. மிக்க நன்றி சார்

    அந்த இணைப்பைப் பின்னர் படித்துக் கருத்திடுகிறேன்.

    //சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன்.// - என் குருநாதர் கூட இதையே தான் சொல்வார். சிறுகதை எழுதும் வடிவம் தெரிவதற்கு தி.ஜா படிக்க வேண்டும். வாதிடும் ஆற்றல் அறிவதற்கு புதுமைப் பித்தன் படிக்க வேண்டும் என்று.

    அதிலும் தி.ஜா அவர்களின் 'சிலிர்ப்பு' அப்பப்பா என்னவொரு கதை! அதை நினைத்தாலே சிலிர்க்கும்
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  4. Likes ரமணி liked this post
  5. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வணக்கம் இராஜி சங்கர் அவர்களுக்கு.

    உங்களது மடல் கண்டபிறகு இப்போதுதான் இந்தக் கதையைப் படித்தேன். என்னிடமுள்ள தி.ஜா.வின் இரண்டு சிறுகதைத் தொகுதிகளில் இதைப் பார்த்த நினைவில்லை. மிக்க நன்றி.

    தி.ஜா.வின் ’சிலிர்ப்பு’ வாசக, ஆசிரிய மனங்களில் பலவித உணர்ச்சிகளை அலைமோதவிட்டுக் கண்ணீர் துளிக்கச் செய்து சிலிர்க்கச் செய்யும் கதை:
    http://azhiyasudargal.blogspot.in/20...post_2831.html

    தாயை விடுமுறையில் பிரிந்த குழந்தையொன்று தந்தையின் அரவணைப்பில் தன் தாயிடம் மீண்டும் செல்கிறது. இன்னோரு ஏழைக் குழந்தை தன் தாயைப் பிரிந்து வேறோர் பணக்காரக் குடும்பத்தின் குழந்தைக்குத் தாய்மை சேவை செய்யச் செல்கிறது. இந்த இரண்டு குழந்தைகளுடனும் தொடர்பு கொண்ட பெரிய மனித உள்ளங்களின் கயமை, கையாலாகாத்தனம்...

    சிறுகதை எழுத்தாள ஆர்வலர்களே, அவசியம் இந்தக் கதையையும் படியுங்கள். பின்னர் நாம் இவ்விரு கதைகளிலும் பயிலும் உத்திகளை சேர்ந்தே அலசுவோம்.

    *****

  6. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post
    சிறுகதை உத்திகள்

    ந்த மன்றத்தில் சிறுகதை எழுதும் ஆர்வம் பலருக்கு அதிகம் இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் ஏதோ பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, உத்திகள் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த இழையின் நோக்கம்.

    சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் கதையைப் படித்து, ஒரு கதாசிரியர் பார்வையில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை, எண்ணங்களை இந்கு பதியுங்கள். ஒன்றிரண்டு பதிவுகள் ஆனதும் என் கருத்துக்களைப் பதிகிறேன்.

    குழந்தைக்கு ஜுரம்
    தி.ஜானகிராமன்

    http://azhiyasudargal.blogspot.in/20...g-post_28.html

    *****



    குழந்தைக்கு ஜூரம் பற்றி என் பார்வை:




    சிறுகதைகளில் தனி முத்திரை பதித்தவர் தி.ஜா அவர்கள். மற்ற சிறுகதைளின் தரம் குறித்து ஒப்பிட்டுச் சொல்வதற்கான அளவுகோலை உருவாக்கியவர் என்றே சொல்லலாம். இவரைப் பற்றிக் கொஞ்ச நாளாகத் தான் - 3 மாதங்களாகத் தான் *- எனக்குத் தெரியும். அதற்கு முன் இவர் பெயரைத் தவிர மற்ற ஒன்றும் தெரியாது. தி.ஜா வை எனக்கு அறிமுகப்படுத்திய என் குருநாதர் மாலன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.*




    'குழந்தையின் ஜூரம்' என்ற இச்சிறுகதையின் தலைப்பிலிருந்தே பாதி கதைக்கரு புரிகிறது. தலைப்பைப் பார்த்தவுடன் மனதில் தோன்றும் விஷயங்கள் - குழந்தைக்கு ஜூரம் அடிக்கிறது, ஏதேனும் ஏழ்மையைச் சொல்லும் கதைக்களமாக இருக்கலாம், எதை நோக்கிக் கதை நகரப் போகிறது, ஏன் ஜூரம் அடிக்கிறது?, சரியாகி விட்டதா கடைசியில், இது போன்ற பல கேள்விகளை இந்தத் தலைப்பு எழுப்புகிறது. ஒவ்வொரு சிறுகதைக்கும் தலைப்பிடுவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கதைகள் எழுத்து வடிவம் எனும் போது வாசகன் மனதில் முதல் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்டவை தலைப்புகள். அவை சுருக்கமாக, வித்தியாசமாக, ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைய வேண்டும். (இதைப் பற்றி விளக்கமாக ரமணி சார் சொன்னால் பொருத்தமாக இருக்கும்)




    இக்கதையின் முதல் பத்தி:
    //மனைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது.// - இந்த முதல் பத்தியிலிருந்தே தெரிகிறது. கதையின் நாயகன் வாத்தியார் உத்யோகம் பார்க்கும் சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர், குழந்தையின் வியாதிக்கு செலவளிக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. பெரும்பாலான கதாபாத்திரங்களை இந்த முதல் பத்தியிலேயே அறிமுகப்படுத்தி விட்டார். அது இக்கதையின் தனிச்சிறப்பு. வள வள வென்று இழுக்காமல் மெயின் கதைக்குள் நுழைந்திருப்பது அழகு.*




    ஒரு சாதாரண நடுத்தர வர்க்க வாத்தியாரின் குணாதிசயங்களை அப்படியே காட்டும் விதமான கதையமைப்பு. எந்த இடத்திலும் இப்டிலாமா நடக்கும் என்று சலித்துக் கொள்ளவோ, நம்பிக்கையில்லாமலோ படிக்க வேண்டியதில்லை. அத்தனையும் யதார்த்தம். இந்த கதை மாந்தர்கள் யாரோ ஒருவரில்லை. நாம் தினம் பார்க்கும், நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் சாமானியர்கள். கதையின் சில இடங்களில் நாம் நம்மையே பார்க்கலாம்.*




    சரவண வாத்தியாரின் வெகுளித்தனம், 'இனி இந்த வீட்டுக் குத்துச் செங்கலை மிதிக்க மாட்டேன் என்ற வீராப்பு, சூழ்நிலையின் காரணமாகப் பஞ்சுவிடம் மீண்டும் நிற்க வேண்டிய நிலை வந்ததும் என்ன காரணம் சொல்லிப் போவது என்ற யோசனை, சின்ன ஈகோ, பஞ்சு மனைவிக்கு மருத்துவம் பண்ண டாக்டருக்காகத் தேடி அலையும் மனசு, டாக்ஸிக்குப் பணம் பற்றார்க்குறையான போது குழந்தைக்கு பார்லி வாங்க வைத்திருந்த காசை, (பஞ்சுவை மனதிற்குள் திட்டாமல்) கொடுத்தது, மருத்துவ நண்பரிடம் மாத்திரை கடன் வாங்குவது, ரிக்க்ஷாவில் வருவதற்குக் கூடக் காசில்லாமல் இருளில் நடந்து வருவது, குதிரை கனைப்பது கண்டு அத்தனை துயரத்திலும் வீடு வரும் வரை சிரித்துக் கொண்டே வருவது என்று கதையின் அத்தனை சம்பவங்களிலும் இவர் நம்மில் ஒருவராகத் தான் எனக்குத் தெரிகிறார்.




    இந்தக் கதைக்கருவை வைத்தே மூக்குச் சிந்திச் சிந்தி அழ வைக்கும் அளவுக்கு ஒரு கதை எழுதியிருக்கலாம். ஆனாம் தி.ஜா அப்படிச் செய்யவில்லை. கஷ்ட நஷ்டங்களையும் வாழ்வின் அழகியலில் ஒன்று என்று சிந்தித்து எழுதியிருப்பது போல் தான் எனக்குப் படுகிறது. கேரக்டர் இது தான் என்று முடிவு செய்த பின்னர், அதைக் கதையின் எந்தவொரு இடத்திலும் மாற்றாமல் அப்படியே கொண்டு செல்வது தான் குழப்பமில்லாத கதைக்கு அழகு. கதையில் ட்விஸ்ட் இருக்கலாம். அதற்காகக் கதாபாத்திரங்களின் அடிப்படைக் கேரக்டர்களைச் சில கதைகளில் மாற்றியிருப்பர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த விதத்தில் இது என்னை 100 சதவீதம் திருப்திப்படுத்தியிருக்கும் கதை.




    எங்கள் மாலன் சார் ஒரு கதையில் சொல்வார்: 'புத்தகத்தில் படித்த தத்துவங்கள் என்னைப் போராடத் தூண்டவில்லை. சட்டையைச் சுண்டி இழுத்த வாழ்க்கைதான் என்னை ஏதாவது செய் என்று உந்தியது' என்று. அதே போல்தான், கதைகள் வெறும் கதைகளாக இருந்து விடுவதில் எனக்கு சம்மதமில்லை. அவை நாம் தினமும் சந்திக்கும் சம்பவங்களாக, மாற்ற நினைக்கும் செயல்பாடாக, யோசிக்க மறுத்த எண்ணகளாக, புதிய சிந்தனைகளைத் தூண்டுவதாக, மனதோடு சண்டையிடுவதாக, என் நீண்ட நாள் கேள்விகளுக்கான விடையை நோக்கி என்னைக் கூட்டிச் செல்வதாக, என் உறக்கங்களைத் திருடுவதாக இருக்க வேண்டும். பொதுவாக நான் படித்தது வரையில் (கொஞ்ச நாட்களாகத் தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்) தி.ஜாவின் கதைகள் இப்படியானவை தான் என்பது என் எண்ணம்.




    பின் குறிப்பு:
    தி.ஜா, புதுமைப்பித்தன், மாலன் சார் ஆகியோரின் சிறுகதைகளைப் படித்த பிறகு தான் நான் சிறுகதை என்ற பெயரில் காமெடி பண்ணுவதை நிறுத்தி விட்டேன். நிறுத்தி விட்டேன் என்றால் கைவிட்டு விட்டேன் என்ற அர்த்தம் கிடையாது. அடுத்து, சிறுகதை என்ற ஒன்று எழுதினால் மேற்சொன்னவர்களின் கதைகளில் இருக்கும் அழகியலில் ஒன்றிரண்டாவது இருக்க வேண்டும். என்றைக்கு என்னால் அப்ப்டி முடியுமென்ற நம்பிக்கை வருகிறதோ, அப்பொழுது தான் பேனாவைத் தொடுவது என்றிருக்கிறேன். என் விருப்பத்திற்கு ரமணி சாரின் வழிகாட்டுதல் இருக்கும் என நம்பிகிறேன். மிக்க நன்றி ரமணி சார்!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  7. Likes ரமணி liked this post
  8. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சிறுகதை யென்பது

    சின்னதாக அமையும் கதைகளில் பல ரகங்கள் உள்ளன. சொந்த அனுபவங்களை ’டயரி’யில் பதிப்பதோர் கதை. பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வருணிப்பது கதை. குழந்தைகள் பேசுவதே ஒரு கதை. இன்னும் காதலன்-காதலி பேச்சு, நண்பர்கள் அரட்டை போன்ற சமாசாரங்களில் கதைகளைப் பெரிதும் காணலாம். இது போன்ற சின்னக் கதைகளுக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு?

    ஒரு சிறுகதையில் முக்கியமாக மூன்று கூறுகள் இருக்கவேண்டும்: conflict, crisis, resolution (epiphany) என்று இவற்றை ஆங்கிலத்தில் சொல்வதைத் தமிழில் முரண்பாடு, உச்ச நெருக்கடி, இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு) என்று சொல்லலாம். மேற்சொன்ன சின்னக் கதை ரகங்களில் இந்த மூன்றும் இருந்தால் அவை சிறுகதை வடிவும் பெறக்கூடும்.

    முரண்பாடு

    முரண்பாடு என்பது வேறொன்றுமில்லை: கதையின் முக்கிய பாத்திரம் ஒன்றை ஆவலுடன் விழைந்து அது நிகழ நிகழலிருக்க சாத்தியக் கூறுகள் இருப்பதுதான். அந்த விழைவு வன்முறையைச் சார்ந்ததாகவோ பகட்டாகவோ இருக்க வேண்டுவதில்லை. விழைவின் திண்மையே முக்கியம்.

    முரண்பாடுகளைப் பொதுவாக இப்படிப் பாகுபடுத்தலாம்:

    மனிதன்-மனிதன் முரண்பாடு
    மனிதன்-இயற்கை முரண்பாடு
    மனிதன்-கடவுள் முரண்பாடு
    மனிதன் தனக்குள் முரண்பாடு
    மனிதன்-சமூகம் முரண்பாடு
    மனிதன்-இயந்திரம் முரண்பாடு

    முரண்பாடு கதையின் தொடக்கத்திலேயே ஏற்படுத்தப்படுகிறது. கதையோட்டத்தில் அது விரிக்கப்படுகிறது. ஓர் உச்ச நெருக்கடி நிலையை அடைகிறது. கடைசியில் தீர்வு காணப்படுகிறது.

    உச்ச நெருக்கடி

    முரண்பாட்டைத் தீர்க்கக் கதையின் முக்கிய பாத்திரம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், செய்யும் காரியங்கள் போன்றவை அதை ஓர் உச்ச நெருக்கடியை நோக்கிச் செலுத்துகின்றன. இந்த உச்ச நெருக்கடி வெளியிலிருந்து வருவதாக இருக்கலாம், அல்லது மனதில் நிகழ்வதாக இருக்கலாம். எப்படியாயினும் இது இயல்பாக நிகழ வேண்டும், கதாசிரியர் திணித்ததாக இருக்கக் கூடாது. இது கதாபாத்திரங்களின் ஒருவருக்கொருவர் உடாடிச் செயல்படுவதன் விளைவாக நிகழ வேண்டும். சில சமயங்களில் இது இயற்கையால் கடவுளால் ஏற்படுத்தப் பட்டதாக இருக்கலாம், ஆனால் அப்போதும் அது இயல்பாக நிகழ வேண்டும். இயல்பாக என்றால் இப்படி நிகழ்ந்தது நியாயமே அல்லது தவிர்க்க முடியாததே என்ற எண்ணத்தை, உணர்வை கதையின் முக்கிய பாத்திரத்திடமும் வாசகன் மனதிலும் தோன்றச் செய்வது.

    இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு)

    இறுதித் தீர்வு கதையின் முக்கிய பாத்திரம் விழைந்தது நிகழ்வதாக இருக்கலாம். நிகழாமல் போவதாக இருக்கலாம். நிகழ்ந்ததன் விளைவுகளாக இருக்கலாம். நிகழாததன் காரணத்தை முக்கிய பாத்திரம் புரிந்துகொள்வதால் அதன் மனதில் தங்கும் இறுதியான புரிதல் உணர்ச்சியாக இருக்கலாம்.

    இன்றைய கதைகளில் பல சமயம் இறுதி தீர்வினை வாசகனிடமே விட்டுவிடுவது உண்டு. அப்படி வரும்போது அந்தப் புரிதல் உணர்வு வாசகனுக்கு ஏற்படுகிறது.

    முதலில் ஏற்பட்ட முரண்பாடு ஓர் உச்ச நெருக்கடியை அடைந்ததும் தீர்வாக ஒரு மாற்றம் கதையில் நிகழவேண்டும், இது முக்கியம். அல்லது இந்த மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு முடிவு அல்லது அதற்கான வாய்ப்பு கதையின் முக்கிய பாத்திரத்துக்கோ வாசகனுக்கோ பிரத்யட்சமாக வேண்டும்.

    எனவே, சிறுகதை திடீரென்று நடுவில் தொடங்கி, ஒரு முரண்பாட்டையும் அதன் விளைவான அழுத்த உணர்வுகளையும் ஏற்படுத்தி விரைவாக அது ஓர் உச்ச நெருக்கடியை நோக்கிச் சென்று பின்னர் அதற்கொரு தீர்வினை (அல்லது தீர்வுக்கான வாய்ப்பினை) ஏற்படுத்தி முடிகிறது.

    இந்த மூன்று கூறுகளையும் சிறுகதையில் அமைக்க உதவும் உத்திகள் பற்றி அடுத்த பதிவுகளில் பார்க்கலாம். இடைப்பட்ட நேரத்தில், இவற்றை தி.ஜா.வின் ’குழந்தைக்கு ஜுரம்’, ’சிலிர்ப்பு’ கதைகளில் அடையாளம் கண்டு இந்த இழையில் பதிய ஆர்வலர்கள் முனையலாம்.

    மேலே உள்ள சுட்டிகளில் கதைகளைப் படிக்க இயலாவிடில், இந்தச் சுட்டிகள் உதவும்:

    ’குழந்தைக்கு ஜுரம்’
    http://solvanam.com/?p=15165

    ’சிலிர்ப்பு’
    http://www.openreadingroom.com/wp-co...2/Silirppu.pdf

    *****
    Last edited by ரமணி; 28-03-2013 at 12:36 PM.

  9. Likes prakash01, முரளி liked this post
  10. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    தி.ஜா.வின் இந்த இரண்டு கதைகளிலும் சிறுகதையின் மூலக்கூறுகளை இப்படி அடியாளம் கண்டுகொள்ளலாம்:

    ’குழந்தைக்கு ஜுரம்’
    முரண்பாடு கதைத் தலைப்பிலேயே சுட்டப்பட்டு முதல் பத்தியில் சின்ன வாக்கியங்களில் வினைச்சொற்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது:

    "மனைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது."

    "இனிமே இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவனா!" என்று சூளுரைத்துவிட்டு வந்த புத்தகம் பிரசுரிக்கும் பஞ்சாபகேசனை குழந்தையின் வைத்தியச் செலவுக்குப் பணம்தேடி நாட வேண்டும் என்கிற கட்டாயம் வரும்போது, அப்படிச் சூளுரைத்த நிகழ்ச்சியில் பஞ்சுவின் பித்தலாட்டம் ஞாபகம் வர வாத்தியார் தயங்குவதில் உச்ச நெருக்கடி அறிமுகப்படுத்தப் பட்டு, மனைவியின் பரிந்துரையில் பஞ்சு இன்னும் பிரசுரிக்க வேண்டிய வாத்தியாரின் ஒரு புத்தகத்தைத் திருப்பி வாங்கும் சாக்கில் அவர் ஏதேனும் ’அட்வான்ஸ்’ பணம் தருவாரா என்று ’பஸ்’ பிடித்துச் செல்லும்போது நெருக்கடி விரிக்கப்பட்டு, பஞ்சுவின் வீட்டில் அவர் மனைவியே வியாதியில் படுத்த படுக்கையாக இருக்கிறாள் என்று அறியும் போது, சிறுகதையின் முக்கிய அம்சமான அந்தத் திருப்பம் நிகழ்கிறது.

    தன் குழந்தையை மறந்துவிட்டு வாத்தியார் பஞ்சுவின் மனைவியை வைத்தியரிடம் அழைத்துச் செல்ல முனையும் நிகழ்ச்சிகளில் கதையின் இறுதித் தீர்வு அறிமுகப் படுத்தப்பட்டு அதன்பின் தனக்குத் தெரிந்த ஒரு வைத்தியரிடம் குழந்தையின் ஜுரம்போக்கும் மாத்திரைகளைக் கடனில் வாங்கிக்கொண்டு பின்னிரவில் தன் வீட்டை நோக்கி நடந்தே செல்லும்போது வாத்தியார் மனதில் எழும் உணர்வுகளில் அவருக்கு எழும் புரிதல் உணர்வு விவரிக்கப்படுகிறது.

    *****

    ’சிலிர்ப்பு’

    கதையின் முரண்பாடு மறைமுகமாக முதல் பத்தியின் கடைசி வாக்கியத்தில் அறிமுகப்படுத்தப் படுகிறது:
    "ரயில் ஜாதியில் கூட ஏழை, பணக்காரன் உண்டு போல் இருக்கிறது."

    கதையின் கரு இது:
    தாயை விடுமுறையில் பிரிந்த குழந்தையொன்று தந்தையின் அரவணைப்பில் தன் தாயிடம் மீண்டும் செல்கிறது. இன்னோரு ஏழைக் குழந்தை தன் தாயைப் பிரிந்து வேறோர் பணக்காரக் குடும்பத்தின் குழந்தைக்குத் தாய்மை சேவை செய்யச் செல்கிறது. இந்த இரண்டு குழந்தைகளுடனும் தொடர்பு கொண்ட பெரிய மனித உள்ளங்களின் கயமை, கையாலாகாத்தனம்... வறுமையின் கௌரவம், மனிதாபிமானம்...

    தன் குழந்தையை வீட்டுக்கு ரயிலில் அழைத்துச் செல்லும் தந்தையின் பார்வையில், ’தன்மை இடத்தில்’ (first person) கதை நகரும் போது வறுமையில் வாடும், வயதில் இளைய, அனுபவத்தில் முதிர்ந்த அந்த இரண்டாவது குழந்தையைத் தந்தை ரயிலில் சந்திக்கும்போது கதை உச்ச நெருக்கடியை நோக்கிச் செல்கிறது.

    கதையின் இறுதித் தீர்வாக ஏதும் சுட்டப் படாததே இந்தக் கதையின் சிறப்பு. வறுமையின் கௌரவமும் மனிதாபிமானமும் திறமையும் கயமை நிறைந்த பணக்காரப் பெரிய மனிதர்களைப் பிழைப்புக்கு நம்பியிருக்கும் போது வறுமைக்கு என்ன தீர்வு கிடைக்க முடியும்? தன் வாழ்வில் வறுமையை இன்னும் போதிய அளவு தாண்டாத தந்தைக்கு இந்த ரயில் பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தில் அவர் வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதனால் அவருக்குத் தன் குழந்தை மீது பீறிடும் பாச உணர்வில் கதையின் புரிதல் உணர்வு விவரிக்கப் படுகிறது.

    தந்தையுடன் வாசகன் தன்னை முழுவதும் ஐக்கியப் படுத்திக்கொண்டு கதையைப் படிக்க வைத்ததால் தந்தைக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு வாசகனுக்கும் ஏற்படுகிறது.

    *****

  11. Likes prakash01, முரளி liked this post
  12. #7
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    ரமணி, மிக்க நன்றி.

    மிகவும் அழகாக, ஒரு கதை எப்படி அமைய வேண்டும் என்பதை பகுத்துக் காட்டியுள்ளீர்கள். எங்களை போன்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் சொல்லவும்..

    என்னை பொருத்தவரை, ஒரு சில சந்தேகங்கள் உள்ளன. கொஞ்சம் கேவலமாக கூட இருக்கலாம்.

    மேலே சொன்ன இரண்டு கதைகளும் எனக்கு ஓகே. ஆனால், ஓஹோ என்று என்னால் சொல்ல முடியவில்லை. சொல்லப் போனால், சுஜாதாவின் ஈர்ப்பு எனக்கு இந்த கதைகளில் ஏற்படவில்லை. கரு காரணமாக இருக்கலாம். அல்லது, எனது புரிதலில் குறை இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சுஜாதா கொஞ்சம் அதிகமாகவே நக்கல் செய்வதால், எனக்கு அவரும் அவ்வளவாக பிடிக்காது என்றே சொல்லலாம். ஆனால் அவரது நகைச்சுவை, ஜெப்ரி ஆர்ச்சர் கதை போன்ற எதிர்பாராத திருப்பம், நச்சென்ற எழுத்து மிகவும் பிடிக்கும். இதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

    எனது கேள்வி :

    1. எதிர்பாராத திருப்பங்கள் சிறுகதைக்கு மிக அவசியமா? அவசியமா? அல்லது தேவையற்றதா? அதேபோல், நகைச்சுவை சிறுகதையின் வேகத்தை தடுக்குமா?

    2. ஒரு சிறுகதை என்பது ஓரிரு பக்கம்தான் இருக்கணுமா அல்லது 7 -8 பக்கங்கள் இருக்கலாமா?

    3. சிறுகதையில் மெசேஜ் கொடுப்பது பற்றி உங்கள் கருத்தென்ன? கருத்து கந்தசாமி என பேர் வாங்காமல் தப்பிக்க என்ன வழி?

    4. ஒரு பயலும், புதுமுக எழுத்தாளர் கதையை பிரசுரிக்க மாட்டேன் என்கிறார்களே, என்ன காரணம்? மன்னிக்க வேண்டுகிறேன், ரொம்ப சில்லறைத்தனமான கேள்வி. எனக்கே பதில் தெரியும். "Proof of the pudding is in the eating". ஒரு தடவை கடுப்பில் இப்படி எழுதியிருந்தேன் ஒரு கதையில் "விஜயனுக்கு கதை எழுத ஆசை! ஆனால் கற்பனை எழும்ப வில்லை. கவிதை வடிக்க ஆசை! ஆனால், கருத்து வழிய வில்லை. அவன் எழுதி அனுப்பியிருந்த ஏழு எட்டு கதைகளை ஒரு பத்திரிகை கூட பிரசுரிக்க வில்லை. எப்படி போடுவார்கள், புரியாத விஷயங்களை சொன்னால்? யாருக்கு வேண்டும் இவனது வெட்டி வேதாந்தமும், வறட்டு நடையும். இவனது கதைகளை, இவனாலேயே படிக்க முடியவில்லை. அவ்வளவு வள வள.! இவனது கவிதையை திட்டி அனுப்பியிருந்தார்கள், அடிக்காத குறைதான். அபத்த களஞ்சியம்.". இது என்னை பற்றிதான். கொஞ்சம் ரீல் சேர்த்து .

    நாங்கள் கதை எழுதி தான் தீர வேண்டும் என யாரும் அடிக்கவில்லை. ஆனாலும், ஒரு ஆசை, நமக்கு தெரிந்ததை சொல்ல ! கேக்க மாட்டேன்கிறாங்களே? விடறதில்லை. உங்க ஆலோசனை கேட்டு, ஒரு வழி பண்ணிடறேன்.

    நன்றி ரமணி....

  13. Likes ரமணி liked this post
  14. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வணக்கம் முரளி.

    நல்ல சிறுகதைகள் எழுத முயலும் ஆர்வம் உங்களது இந்தப் பதிவில் தெரிகிறது. எனக்கும் சுஜாதாவின் கதைகளை அவை வெளியான போதே படிக்கும் ஆர்வமும் ஈர்ப்பும் இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்துச் சிலவற்றை இப்போது மீண்டும் படிக்கும் போது, (என் கருத்தில்) சுஜாதாவின் தொண்ணூறு சதவிகித எழுத்துகளில் இலக்கியத்தரத்தை விட வணிகத்தரமே மேலோங்கியிருப்பது பளிச்செனத் தெரிகிறது. ஆயினும் அந்தப் பத்து சதவிகித எழுத்து தமிழ் இலக்கியத்தின் சிகரங்களில் ஒன்றாக விளங்குகிறது என்றும் நான் உணர்கிறேன். சமயம் வரும்போது சுஜாதாவின் சில கதைகளை என் பார்வையில் அலச முயல்கிறேன்.

    நான் எழுதியுள்ள ஐந்தாறு சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு முழு நாவல் இவற்றில் மூன்று சிறுகதைகளே அச்சேறிய எழுத்தாளனாக இருக்கும் என்னிடம் சில ஆழமான கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். தெரிந்தவரை பதில்சொல்ல முயல்கிறேன்.

    01. எதிர்பாராத திருப்பங்கள் சிறுகதைக்கு மிக அவசியமில்லை. அவசியமாக இருக்கும்போது கதைகள் சிறக்க முடியும். தேவையற்றது என்று ஒதுக்க வேண்டுவதில்லை. ஓர் எதிர்பாராத திருப்பம் கதையில் நிகழும் போது அதுபற்றிய சாத்தியம் கதையில் முன்னர் சுட்டப்பட்டிருப்பது வாசகனுக்குத் திருப்தியளிக்கும்.

    அதே சமயம் வாசகன் எதிர்பார்த்த முடிவைத் தருவதிலும் ஒரு சிறுகதை சிறக்க முடியும். உதாரணமாக, என்னுடைய ’முகம் தெரியாப் பகைவர்கள்’ கதையில் அந்த சீக்கிய இளம் வன்முறையாளன் அவதார் சிங்கின் மரணம் வாசகன் எதிர்பார்க்கும் முடிவுதான். அவன் ஒன்றும் ஆகாமல் பிழைத்திருந்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருந்தால் அது எதிர்பாராத முடிவு. இது போன்று எதிர்பார்த்த முடிவுகளைத் தரும்போது கதையில் மாற்றம் அதன் முக்கியப் பாத்திரத்தின் படைப்பில் நிகழ்வது திருப்தியளிக்கும்.

    இயல்பாக, நாம் தினமும் சந்திக்கும் விதமாக உள்ளவரை, ஓரளவு நகைச்சுவை எல்லா வித சிறுகதைகளிலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    02. ஒரு சிறுகதையின் நீளம் அது ஒரே மூச்சில் படிக்க முடிவதாக இருக்க வேண்டும். ஆங்கிலச் சிறுகதை இலக்கணத்தில் அதன் நீளம் பொதுவாக 1,000 முதல் 9,000 வார்த்தைகளில் இருக்கலாம், எப்படியாயினும் அது 20,000 வார்த்தைகளைத் தாண்டக்கூடாது என்பர்.

    பத்திரிகைகளில் வெளியாகும் தமிழ்ச் சிறுகதைகளின் அளவு போதுவாக நாலைந்து அல்லது ஐந்தாறு பக்கங்களுக்குள் இருக்கும். இரண்டு நெடுவரிசை (column) களில் பிரசுமாகும் கதைகளில் ஒரு வரிசை ஒரு முழுத்தாளில் (A4 sheet) அடங்கும் என்று நினக்கிறேன். ஒரு வரிசையைத் தாளில் எழுதிப் பார்த்து இதனை அறியலாம். இதுபோல ஒரு பத்திரிகையில் வரும் சிறு கதைகளின் நீளத்தை அவை பிரசுமாகியுள்ள நெடுவரிசைகளை (துணுக்குகள் கழித்து) எண்ணி அறியலாம். போட்டிக் கதைகளில் நீளம் அவற்றின் விதிகளில் நிர்ணயிக்கப் பட்டு விடும்.

    ஆயிரம் வார்த்தைகளுக்குள் உள்ள கதைகளை விக்கிபீடியா short short stories or flash fiction என்று பெயரிடுகிறது:
    http://en.wikipedia.org/wiki/Short_story

    03. சிறுகதைகளில் மெஸேஜ் கொடுக்கலாம், தவறில்லை. எல்லோரும் அறிந்து காலத்தால் தேய்ந்த ஒரு நீதிபோதனையாக அது இருந்தால், அதுவும் கதையின் இறுதியில் இருந்தால், மிகவும் செயற்கையாக இருக்கும்.

    என்னுடைய ’மு.தெ.ப.’ கதையின் முடிவில் ஒரு மெஸேஜ் அமைத்துள்ளேன்:

    சட்டென்று முளைத்தது அந்தக் கேள்வி. ’இறைவன் ஒருவனே என்று கரடியாகக் கத்தும் மதங்கள் யாவும் மனிதன் ஒருவனே என்று ஏன் போதிக்கத் தவறிவிட்டன?’

    இந்த மெஸேஜ் கதையின் இறுதியில் இருந்தாலும் இது முற்றிலும் புதிய கோணம் உள்ள பார்வை என்பதாலும் கதையுடன் அது மிகவும் இழைவதாலும் ’கருத்து கந்தசாமி’ என்ற பட்டத்தில் இருந்து தப்பிக்கிறேன் என்று நினைக்கிறேன்!

    04. புதுமுக எழுத்தாளரின் கதை ஒரு பத்திரிகையில் வெளியாவது மிக மிகக் கடினமே! இதன் மூல காரணம் (அவர்கள் எதிர்பார்க்கும்) கதைத்தரம் இல்லாததும் பத்திரிகையின் வணிக நோக்கமுமே. மேலும் ஒரு கதையை ஏற்றுக்கொள்ளும்/கொள்ளாத முடிவைச் சொல்வதற்குப் பல பத்திரிகைகளில் நீண்டநாள் (சில மாதங்கள்) எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கு ஒரு காரணம் அவர்களிடம் வரும் நூற்றுக்கணக்கான கதைகள் என்று எழுத்தாளர் ஒருவர் சொன்ன ஞாபகம்.

    இன்னொன்று. சொன்னால் பயந்து விடுவீர்கள்: வரும் கதைகளின் அபரிமித எண்ணிக்கை காரணமாகக் கதையைப் படித்து முடிவைக் குறிக்கும் பொறுப்பை பத்திரிகை அலுவகத்தில் உள்ள உதவி ஆசிரியர்கள் குழு தவிர அவர்களுக்கு உதவும் தட்டெழுத்தாளர்கள் (ஆஃபீஸ் பியூன்கூட என்றாலும் எனக்கு ஆச்சரியம் அளிக்காது!), மற்ற எழுத்தர்கள் போன்றோரும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்று யாரோ சொன்ன ஞாபகம்! கதையை முதலில் படிப்பவர் அதை நிராகரித்து விட்டால் அதை மற்றவர்கள் படிக்கும் வாய்ப்பு குறைவு. கீழுள்ள ஒருவருக்குப் பிடித்திருந்தால் கதையை மற்றவர்களில் சிலர் படித்துக் குறிப்பெழுதி அது உதவி ஆசிரியர் மேசைக்கு வந்துசேரும்.

    பொதுவாகக் கதையை ஒரு அறிமுகக் கடிதத்துடன் புதுமுக எழுத்தாளர்கள் அனுப்புவார்கள். இதில் பத்திரிகையையும் அதன் தலைமை ஆசிரியரையும் ஓஹோ என்று புகழ்ந்தாலும் பல சமயம் ஒன்றும் நடக்கப் போவதில்லை. என் ’புதிய கோணங்கி’ நகைச்சுவைக் கதையைச் ’சாவி’ பத்திரிகைக்கு முதலில் அனுப்பியபோது என் அறிமுகக் கடிதத்தை நான் இப்படி முடித்திருந்தேன்: "சாவி போட்டு ஓடிய பல அறிமுக எழுத்தாளர்களின் கார்கள் இன்று ரேஸ் கார்களாக ஓடிக் கொண்டிருக்கின்றன. என்னுடைய இந்தக் காரையும் சாவி போட்டு ஊக்குவித்தால் கொஞ்ச தூரமாவது ஓடி நானும் ஓட்டத்தில் பங்கேற்க முடியும்" என்று எழுதியிருந்தேன். மனுஷன் அசரவில்லை! அவரிடம் இருந்து திரும்பி வந்ததும் கதையை வேறெங்கும் அனுப்பவில்லை. இதேபோல் நான் மிகவும் ரசித்து எழுதிய ’மானுடம் போற்றுதும்’ கதையை அனுப்பிய முதல் பத்திரிகை அதைத் திருப்பி அனுப்பிவிட்டபோது, என் கதைகளைப் பிரசுரிக்க பத்திரிக்கைகளுக்குத் தகுதியில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்!

    இணையதள மன்றங்களும் குழுமங்களும் பத்திரிகைகளும் உள்ள இந்த நாளில் கதைகள் அச்சேறாதது குறித்து அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை என்று தோன்றுகிறது. நம் சரக்கு நமக்கே முதலில் தெரிவதால் நாம் பிரபல எழுத்தாளர் ஆவாமோ மாட்டோமா என்பது நமக்குத்தானே முதலில் தெரியும்?! ஆர்வம் உள்ள வரையில் இடைவிடாது படிக்க, எழுத முயற்சி செய்யவேண்டியதுதான்.

    நான் இங்கு படித்த உங்கள் கதைகளில் கதாசிரியர் குறுக்கீடும் படிப்பினை ஒன்றைச் சொல்லும் கட்டாயமும் கொஞ்சம் தூக்கலாக உள்ளதுபோல் எனக்குப் படுகிறது. ’அழியாச் சுடர்கள்’ போன்ற வலைதளங்களில் உள்ள தரமான கதைகளை நிறையப் படிப்பதன் மூலமும் சிறுகதை இலக்கணம் பற்றி ஆங்கில, தமிழ் இணையப் பதிவுகளைப் படிப்பதன் மூலமும் உங்கள் உள்ளீட்டை (potential) வளர்த்துக்கொண்டு கதைகளை மேலும் மெருகுடன் எழுதலாம் என்று தோன்றுகிறது. (இந்தப் பரிந்துரை மற்ற ஆர்வலர்களுக்கும் பொருந்தும்).

    *****
    Last edited by ரமணி; 29-03-2013 at 06:35 AM.

  15. Likes prakash01 liked this post
  16. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post
    ’அழியாச் சுடர்கள்’ போன்ற வலைதளங்களில் உள்ள தரமான கதைகளை நிறையப் படிப்பதன் மூலமும் சிறுகதை இலக்கணம் பற்றி ஆங்கில, தமிழ் இணையப் பதிவுகளைப் படிப்பதன் மூலமும் உங்கள் உள்ளீட்டை (potential) வளர்த்துக்கொண்டு கதைகளை மேலும் மெருகுடன் எழுதலாம் என்று தோன்றுகிறது. (இந்தப் பரிந்துரை மற்ற ஆர்வலர்களுக்கும் பொருந்தும்).

    *****
    நன்றி ரமணி சார்.

    என் குருநாதர் கூட இதையே தான் சொல்வார்: 'பார்த்ததைப் படிப்பவன் வாசகனாகிறான். படித்ததை யோசிப்பவன் எழுத்தாளனாகிறான்' என்று

    நிறைய படிக்கப் படிக்க நாம் நிறைய யோசிப்போம். அதிலேயே கிடந்து உருளும் போது விரைவில் புரிபட்டு விடும், எப்படி எழுத வேண்டும் என்று. அதோடு (எழுத்து நடையில்)நமக்கென்று சில பலங்கள், பலவீனங்கள் இருக்கும். அதை அறிந்து ஏற்றுக் கொள்ளும் போது சிறப்பாக எழுதலாம்.

    சரி தானே ரமணி சார்?
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  17. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வணக்கம் இராஜிசங்கர்.

    ரொம்ப சரி. இவ்வளவு தூரம் படிப்பதையும் எழுதுவதையும் ரசிக்கும் உங்களிடமிருந்து ஒரு சிறுகதை எதிர்பார்க்கிறேன். நேரம் கிடைக்கும் போது முயலுங்கள்.


    Quote Originally Posted by இராஜிசங்கர் View Post
    நன்றி ரமணி சார்.

    என் குருநாதர் கூட இதையே தான் சொல்வார்: 'பார்த்ததைப் படிப்பவன் வாசகனாகிறான். படித்ததை யோசிப்பவன் எழுத்தாளனாகிறான்' என்று

    நிறைய படிக்கப் படிக்க நாம் நிறைய யோசிப்போம். அதிலேயே கிடந்து உருளும் போது விரைவில் புரிபட்டு விடும், எப்படி எழுத வேண்டும் என்று. அதோடு (எழுத்து நடையில்)நமக்கென்று சில பலங்கள், பலவீனங்கள் இருக்கும். அதை அறிந்து ஏற்றுக் கொள்ளும் போது சிறப்பாக எழுதலாம்.

    சரி தானே ரமணி சார்?

  18. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சிறுகதை எழுத விரும்பும் ஆர்வலர்கள் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை:

    சிறுகதை ஒரு சமையல்குறிப்பு
    ஜெயமோகன்
    http://www.jeyamohan.in/?p=336

    இந்தக் கட்டுரையில் உள்ள பரிந்துரைகளைவிடச் சொல்வதற்கு அதிகம் இல்லை யென்று தோன்றுகிறது. பல கதைகளை அலசுவதன் மூலம் ஆர்வலர்கள் இந்த உத்திகளைத் திறம்படக் கையாளாலாம்.

  19. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post
    வணக்கம் இராஜிசங்கர்.

    ரொம்ப சரி. இவ்வளவு தூரம் படிப்பதையும் எழுதுவதையும் ரசிக்கும் உங்களிடமிருந்து ஒரு சிறுகதை எதிர்பார்க்கிறேன். நேரம் கிடைக்கும் போது முயலுங்கள்.
    எழுதும் ஆர்வம் இருக்கிறது சார். நான் முன்னமே சொன்ன மாதிரி அடுத்து எழுதினால் கொஞ்சமாவது சிறுகதைத் தொனியில் வர வேண்டும். முன்பு போல் முட்டாள்தனமாய் எழுதக் கூடாது என்பது என் எண்ணம். காதலைப் போல் தான் எழுதும் கலையும். திடீரென்று தோண வேண்டும். அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு எழுத வேண்டும்.

    தங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள் சார். ஒரு வேளை நான் ஜெயித்தால் அதில் தங்களுக்கும் பங்குண்டு.

    Quote Originally Posted by இராஜிசங்கர் View Post
    பின் குறிப்பு:
    தி.ஜா, புதுமைப்பித்தன், மாலன் சார் ஆகியோரின் சிறுகதைகளைப் படித்த பிறகு தான் நான் சிறுகதை என்ற பெயரில் காமெடி பண்ணுவதை நிறுத்தி விட்டேன். நிறுத்தி விட்டேன் என்றால் கைவிட்டு விட்டேன் என்ற அர்த்தம் கிடையாது. அடுத்து, சிறுகதை என்ற ஒன்று எழுதினால் மேற்சொன்னவர்களின் கதைகளில் இருக்கும் அழகியலில் ஒன்றிரண்டாவது இருக்க வேண்டும். என்றைக்கு என்னால் அப்ப்டி முடியுமென்ற நம்பிக்கை வருகிறதோ, அப்பொழுது தான் பேனாவைத் தொடுவது என்றிருக்கிறேன். என் விருப்பத்திற்கு ரமணி சாரின் வழிகாட்டுதல் இருக்கும் என நம்பிகிறேன். மிக்க நன்றி ரமணி சார்!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •