Results 1 to 9 of 9

Thread: தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்!!!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6

    தித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்!!!

    கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால், உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்று தெரியுமா?

    பலர் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்று சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். உண்மையில் மாம்பழம் சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் தணியத் தான் செய்யும். அதுமட்டுமின்றி, மாம்பழத்தை நீரிழிவு நோயாளிகள் பலர் சாப்பிடமாட்டார்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால், எங்கு அதில் உள்ள இனிப்புச் சுவையால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடுமோ என்று தான். ஆனால் அதுவும் பொய் தான். மாம்பழம் இதய நோய், புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பட்டுத்தும் தன்மை கொண்டது.சரி, இப்போது அத்தகைய மாம்பழத்தின் நன்மைகள் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாம்பழத்தை ரசித்து சாப்பிடுங்கள்.

    புற்றுநோய்: மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது.

    கண்கள்: மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.

    கொலஸ்ட்ரால்: மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

    நீரிழிவு: மாம்பழம் என்ன தான் இனிப்பாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது. அதாவது மாம்பழத்தை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

    முகப்பரு: மாம்பழமானது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. அதிலும் இவை பருக்களை மட்டுமின்றி, கரும்புள்ளிகளை நீக்குவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் கோடையில் மாம்பழ ஃபேஷியல் மிகவும் பிரபலமானது. ஏனெனில் அவை உடலில உள்ள வெப்பத்தை வெளியேற்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

    பாலுணர்வு: பொதுவாக வைட்டமின் ஈ காதல் வாழ்க்கையை சிறப்பாக வைப்பதற்கு பெரிதும் உதவும். இத்தகைய வைட்டமின் ஈ, மாம்பழத்தில் அதிகம் அடங்கியுள்ளது. எனவே இதனை அதிகம் சாப்பிடுவது, ஒரு நல்ல ரொமான்ஸிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    நோய் எதிர்ப்பு சக்தி: மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.

    ஆரோக்கிய இதயம்: மாம்பழமானாலும் சரி, மாங்காயாக இருந்தாலும், இதனை சாப்பிட்டால் இதயமானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால், இதய நோய், மாரடைப்பு போன்றவை வராமல் இருக்கும்.

    நன்றி: http://tamil.boldsky.com
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  2. Likes sarcharan liked this post
  3. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நான் ஒரு சர்க்கரை நோயாளி. டாக்டர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். பப்பாளி, கொய்யா, ஆப்பிள் , ஆரஞ்சு, நாவற்பழம் போன்ற பழங்களை மட்டும் சாப்பிடலாம் என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள். மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, பலா, திராட்சை, பேரீட்சை போன்ற பழங்களை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள். மாம்பழம் சாப்பிட ஆசைதான் ; என்ன செய்வது?
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #3
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    திருட்டு மாங்காய் சாப்பிட்ட காலமெல்லாம் திரும்ப வாராதா என்னிருக்கிறது!
    எந்த மாம்பழத்தை எப்படி சாப்பிடனும்னு பல கனக்கு இருக்குது
    சின்ன உருண்டையான நீலத்தை நல்லா கசக்கிட்டு தலைல கடிச்சி ஒரு ஓட்டையை போட்டுட்டு அப்படியே உறிஞ்சி சாப்பிடனும்!
    ஒட்ட வெட்டி தட்டுல வச்சிக்கிட்டு ... ஈயக்குண்டான்ல சுடுசாதக் கொட்டி தண்ணிய ஊத்தி..மாம்பழத்துண்டை கடிச்சிக்கிட்டே சாப்பிடனும் ... அது பாதிபமுத்ததுன்னா (செங்காய்)..அதனுடைய டேஸ்டே தனிதான்..... இப்படி பல முறைகளோட அனுபவிச்சது மட்டுந்தான் இப்போ மிச்சம்...
    ஜெகதீசன் ஜயா சொன்னது போல மாம்பழத்தை பார்த்து எச்சு ஊறினாலும்..அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்துதான் ஆகனும்...
    என்றென்றும் நட்புடன்!

  5. Likes sarcharan liked this post
  6. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    பகிர்விற்கு நன்றி அமீன்...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    நான் ஒரு சர்க்கரை நோயாளி. டாக்டர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். பப்பாளி, கொய்யா, ஆப்பிள் , ஆரஞ்சு, நாவற்பழம் போன்ற பழங்களை மட்டும் சாப்பிடலாம் என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள். மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, பலா, திராட்சை, பேரீட்சை போன்ற பழங்களை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள். மாம்பழம் சாப்பிட ஆசைதான் ; என்ன செய்வது?
    அதெல்லாம் சும்மாங்க ஐய்யா...!!!

    ஆசைக்கு எப்போதாவது ஒரு முறை சாப்பிட்டால் தப்பொன்றும் இல்லை...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0
    அமீனுதீன் மாம்பழம் ஆய்வு கட்டுரை அருமை அதிலும் குறிப்பாக மாம்பழத்தில் காதலை வளர்க்கும் பாலுணர்வு இருப்பது சிறப்பு. இதை அறிந்தால் மாம்பழம் சின்னம் மாற்றப்படலாம்.
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  9. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by கும்பகோணத்துப்பிள்ளை View Post
    திருட்டு மாங்காய் சாப்பிட்ட காலமெல்லாம் திரும்ப வாராதா என்னிருக்கிறது!
    எந்த மாம்பழத்தை எப்படி சாப்பிடனும்னு பல கனக்கு இருக்குது
    சின்ன உருண்டையான நீலத்தை நல்லா கசக்கிட்டு தலைல கடிச்சி ஒரு ஓட்டையை போட்டுட்டு அப்படியே உறிஞ்சி சாப்பிடனும்!
    ஒட்ட வெட்டி தட்டுல வச்சிக்கிட்டு ... ஈயக்குண்டான்ல சுடுசாதக் கொட்டி தண்ணிய ஊத்தி..மாம்பழத்துண்டை கடிச்சிக்கிட்டே சாப்பிடனும் ... அது பாதிபமுத்ததுன்னா (செங்காய்)..அதனுடைய டேஸ்டே தனிதான்..... இப்படி பல முறைகளோட அனுபவிச்சது மட்டுந்தான் இப்போ மிச்சம்...
    ஜெகதீசன் ஜயா சொன்னது போல மாம்பழத்தை பார்த்து எச்சு ஊறினாலும்..அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்துதான் ஆகனும்...
    நேக்கு இப்ப்வே நாக்குல ஜலம் ஊர்றது....

  10. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by jayanth View Post
    அதெல்லாம் சும்மாங்க ஐய்யா...!!!

    ஆசைக்கு எப்போதாவது ஒரு முறை சாப்பிட்டால் தப்பொன்றும் இல்லை...!!!
    அண்ணா..பி கேர்புல்!! உங்களுக்கும் சுகர் உண்டுல்ல!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  11. #9
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by அமீனுதீன் View Post

    நோய் எதிர்ப்பு சக்தி: மாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் அதிலும் பச்சை மாங்காய் சளி மற்றும் இருமலுக்கு பெரிதும் சிறப்பான தீர்வைத் தரும்.
    ஆமா ஆமா 'பெரிதும் சிறப்பான' தீர்வைத் தரும்
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  12. Likes sarcharan liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •