Results 1 to 3 of 3

Thread: அறியேன் நான்.

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0

    அறியேன் நான்.

    கண்டிருந்தாலும் உன்னை
    கவனித்ததில்லை நின்று.
    கண்பார்வையில் என்ன
    கணித்ததில்லை நான்.

    உடனிருந்த பூவையரோடு
    உன்பேச்சு மெல்ல காதோரம்
    உணர்த்தியது என்னை.
    உன்னோடு எனக்கிருந்த ஒத்துணர்வை.

    நான் வெறுங்கையனல்ல..
    நாணிப்போகவில்லை
    நான்கொண்ட என்னுணர்வை.
    நானாக உனக்குனர்த்த

    மெல்லிய நடுக்கம்
    மெல்ல சிதறவிட்ட பார்வை.
    மென்சிரிப்பு மேவ
    மென்னடை..விடையில்லை..

    ஒருவார்த்தை பேசாது
    ஒருவனான நினைவோடு
    ஒரு திங்கள் காத்திருந்து
    ஒப்பவில்லை உன்மனம்

    எனக்கானது இல்லையென
    என்னோடு சமர்செய்து
    என்னெஞ்சு விம்ம
    எதிர்வந்தாய் புன்னகையாய்.

    ஆகாயம் சாட்சியில்லை.
    ஆதவனும் பங்கில்லை.
    ஆர்ப்பாட்டம் மிகையில்லை
    ஆனாலும் காதலில் நாம்.

    பேசியது கடுகாயினும்
    பேச்செதுவும் வீணில்லை.
    பேசாமல் அருகிருந்த
    பேரின்ப நாட்களது.

    எனக்கான வேலையது
    எனைப் பரதேசி ஆக்கிவிட
    என்னிலே உன்னையூன்றி
    எல்லைகளைத் தாண்டினேன் நான்.

    நிறைவேறிய கடைமைகளால்
    நிதான எண்ணம்கொண்டு
    நில்லாத மனதோடு -அகவைகள் சிலகடந்து
    நின்றேன் தூரமாய் அவளெதிரில்

    அதே மென்னடை - என்னிலுறைந்த
    அதே உருவம், சிரிப்பில்லை.
    அவள் விரல்பிடித்து - யாரது..
    அவளின் ...???

    ஏமாற்றுக்காரியில்லை அவள்.
    ஏமாந்திருப்பாளோ -வேண்டாம்
    ஏனிந்த துர் எண்ணம்
    ஏழெழுபது ஆண்டுகள் நன்றாக வாழட்டும்
    ஏனிந்த பெருமூச்சும் பார்வை மங்கலும்
    ஏனென்றால்..அறியேன் நான்.

  2. #2
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Oct 2012
    Location
    sharjah
    Posts
    34
    Post Thanks / Like
    iCash Credits
    23,590
    Downloads
    2
    Uploads
    0
    காதல் என்பது வேலையின் எல்லையையும் இன்பத்தின் எல்லையையும் உணர்த்தும்..... என் வாழ்நாளில் நான் இரண்டையும் பார்த்துவிட்டேன்..... நான் ஏன் மானுடனாகப் பிறந்தேன்..... மானுடனாக பிறந்த நான் ஏன் பருவம் கண்டேன்..... மழலையாகவே இருந்திருக்கக் கூடாதா.... மறுஜென்மம் இருந்தால் என் தாயை மட்டுமே நேசிக்கும் குழந்தையாக வாழ்ந்து இறக்க விரும்புகிறேன்....
    Last edited by கீதம்; 19-04-2013 at 02:36 AM. Reason: தமிழில் மாற்ற....

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    காதல் நிதானமாய்த் தொடரலாம். காலம் நிதானமாய்க் கடக்குமா?

    காதல் துளிர்த்தத் தருணங்களை அழகாய்ச் சொல்லிச் சென்ற கவிதை, பிரிவின் துயர் சொல்லி முடிந்தபோது மனம் கனத்தது.

    நீ, உன் என்று காதலியைப் பார்த்துச் சொல்வதான தோரணையில் துவங்கிய கவிதை, அவளென்று பாதியில் பாதை மாறுவது ஏனோ?

    தன்னவள் என்ற நினைப்பின்போது முன்னிலையிலும் பிறருக்குரியவள் என்று அறியும்போது படர்க்கையிலும் குறிப்பிடுவது குறிப்பாய்த்தானோ?

    பாராட்டுகள் டெல்லாஸ்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •