எப்படிச் சொல்வேன்?
------------------------------------
புதிய சொற்கள் தேடியெடுத்து
பாடல் பல எழுதுவேன்
இதயத்திலே அவள் பெயரை
எப்படி நான் எழுதுவேன்
ஊடலையும் கூடலையும்
எளிதில் நான் சொல்லுவேன்
பாடலிலே காதலை
எப்படி நான் சொல்லுவேன்
மேனியின் நிர்மலத்தை
எப்படி நான் சொல்லுவேன்
மூச்சின் பரிமளத்தை
எப்படி நான் சொல்லுவேன்
தேனூறும் இதழமுதம்
எப்படி நான் பாடுவேன்
தினவெடுத்த இளமையை
எப்படி நான் சொல்லுவேன்
அத்தான் எனசரிந்ததை
எப்படி நான் சொல்லுவேன்
அத்தனையும் எனதானத்தை
எப்படி நான் சொல்லுவேன்
இத்தனை அமர்களத்தை
எப்படி நான் சொல்லுவேன்
இரண்டொரு சொற்களிலே
எப்படி நான் சொல்லுவேன்
Bookmarks