Results 1 to 7 of 7

Thread: பிரார்த்தனை

  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    08 Mar 2013
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    10,136
    Downloads
    3
    Uploads
    0

    Post பிரார்த்தனை

    இறைவனுக்கு மலர்தூவி இறைஞ்சலினும் நன்றாம்
    நிறைத்தாலே வீட்டினையே நேசமணம் கொண்டு

    விளக்கேற்றி ஆண்டவனை வணங்குவதின் நன்றாம்
    உளம்நிறைத்த பாபமெனும் இருள்விலக்கி வாழ்ந்தால்

    கடவுளின்முன் சிரம்தாழ்த்தி குழைவதினும் நன்றாம்
    உடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்ந்தால்

    ஈசனின்முன் மண்டியிட்டு இறைஞ்சலினும் நன்றாம்
    நேசமுடன் தாழ்ந்தவரை நாமுயர்த்தி விட்டால்

    பாவங்களை மன்னிக்கும் பிரார்த்தனையை விடவே
    நாம் எதிரிக ளிடம்காட்டும் நட்புமிக நன்றாம்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நேசமனம் கொண்டு வீட்டினை நிறைத்தல், உள்ளத்தில் நிறைந்திருக்கும் பாவமென்னும் இருள்நீக்கி வாழ்தல், உலகோடு உளமொத்து வாழ்தல், தாழ்ந்தவரை உயர்த்திவிடல், எதிரிகளிடம் அன்பு காட்டல் ஆகியவை எல்லாம் உயர்ந்த பிரார்த்தனைகள். கவிதை மிகவும் நன்று. வாழ்த்துக்கள் !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நேசமனம் கொண்டு பாசம் வளர்த்தலும்
    பாபமெனும் இருள்நீக்கி வாழ முடிவதும்
    உடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்தலும்
    தாழ்ந்தவரை உயர்த்தலும் எதிர்களிடம் நட்பும்
    ஆழ்ந்தே நோக்கும் போதவை யனைத்துமே
    ஆண்டவன் கருணையென் றறிவது கடினமோ?

    *****

    Quote Originally Posted by crvenkatesh View Post
    இறைவனுக்கு மலர்தூவி இறைஞ்சலினும் நன்றாம்
    நிறைத்தாலே வீட்டினையே நேசமணம் கொண்டு

    விளக்கேற்றி ஆண்டவனை வணங்குவதின் நன்றாம்
    உளம்நிறைத்த பாபமெனும் இருள்விலக்கி வாழ்ந்தால்

    கடவுளின்முன் சிரம்தாழ்த்தி குழைவதினும் நன்றாம்
    உடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்ந்தால்

    ஈசனின்முன் மண்டியிட்டு இறைஞ்சலினும் நன்றாம்
    நேசமுடன் தாழ்ந்தவரை நாமுயர்த்தி விட்டால்

    பாவங்களை மன்னிக்கும் பிரார்த்தனையை விடவே
    நாம் எதிரிக ளிடம்காட்டும் நட்புமிக நன்றாம்

  4. #4
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    08 Mar 2013
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    10,136
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    நேசமனம் கொண்டு வீட்டினை நிறைத்தல், உள்ளத்தில் நிறைந்திருக்கும் பாவமென்னும் இருள்நீக்கி வாழ்தல், உலகோடு உளமொத்து வாழ்தல், தாழ்ந்தவரை உயர்த்திவிடல், எதிரிகளிடம் அன்பு காட்டல் ஆகியவை எல்லாம் உயர்ந்த பிரார்த்தனைகள். கவிதை மிகவும் நன்று. வாழ்த்துக்கள் !
    mikka nandri sir

  5. #5
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    08 Mar 2013
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    10,136
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post
    (நிலைமண்டில ஆசிரியப்பா)
    நேசமனம் கொண்டு பாசம் வளர்த்தலும்
    பாபமெனும் இருள்நீக்கி வாழ முடிவதும்
    உடன்வாழும் உலகோடு உளமொத்து வாழ்தலும்
    தாழ்ந்தவரை உயர்த்தலும் எதிர்களிடம் நட்பும்
    ஆழ்ந்தே நோக்கும் போதவை யனைத்துமே
    ஆண்டவன் கருணையென் றறிவது கடினமோ?

    *****
    Thanks a lot ramani sir. Naan oru marabu kavignan allan. en kavidhaiyai marabu paduthiyamaiku mikka nandri.

  6. #6
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    இறையுணர்வு கொண்டு வழிபடும் பூஜை சடங்குகள் இவற்றைக் காட்டிலும்,இறைமையின் பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்தலே சிறப்பு!!

    உண்மை வெங்கடேஷ் !

  7. #7
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    08 Mar 2013
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    10,136
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஜான் View Post
    இறையுணர்வு கொண்டு வழிபடும் பூஜை சடங்குகள் இவற்றைக் காட்டிலும்,இறைமையின் பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்தலே சிறப்பு!!

    உண்மை வெங்கடேஷ் !
    nandri john. ungal vaarthaigal ennai urchaagappaduthugindrana

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •