Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: கோட்சே பேசுகிறேன் -4

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர் maniajith007's Avatar
    Join Date
    16 Dec 2009
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    25,705
    Downloads
    0
    Uploads
    0

    கோட்சே பேசுகிறேன் -4

    ஜனவரி 30, 5.00 மணி

    (பிர்லா பவன் , காவல்துறை அதிகாரி அர்ஜுன் தாஸ் மற்றும் பணியாளர் ஒருவர் மேடையில் தோன்றுகின்றனர் )

    பணியாளர் :இல்லை அவரை தற்பொழுது சந்திக்க இயலாது , ஏற்க்கனவே அவரது மாலை பிரார்த்தனைக்கு தாமதாகி விட்டது,

    அர்ஜுன் தாஸ் :எனக்கு தெரியும் ஆனால் நான் வந்தது மிக முக்கியமான விஷயம் உண்மையில் பாபுஜியின் பிரார்த்தனை குறித்துதான் அவரை காண வேண்டும் ,

    காந்தி :(தோன்றுகிறார்) யாரது மகாதேவபாய் ?

    பணியாளர் :உங்களை காண ஒருவர் வந்துள்ளார் உங்களுக்கு ஏற்க்கனவே தாமதாகிவிட்டது என நான் கூறிவிட்டேன் .

    காந்தி :யார் நீங்கள் ?

    அர்ஜுன் தாஸ் :(வணக்கம் சொல்கிறார் ) நான் DCP அர்ஜுன் தாஸ் பாபுஜி ....

    காந்தி :ஒரு நிமிடம் இருங்கள் , நாம் ஏற்க்கனவே சந்தித்துள்ளோம் , நீங்கள் கூறவேண்டாம் ... நானே நினைவு கூர்கிறேன் . ஆமாம் ஜவஹர் என்னை சந்திக்க ஹைதராபாத் வந்த பொழுது நீங்கள் அவருடன் இருந்தீர்கள் அல்லவா .

    அர்ஜுன் தாஸ் : அபராமான நினைவு திறன் உங்களுடையது , அப்பொழுது நீங்கள் பலவீனமாக இருந்தீர்கள் .

    காந்தி :உண்ணாவிரதம் உடலை மட்டுமே பலவீனபடுத்தும் ஆனால் அறிவு திறனை கூர்மை படுத்துகிறது சரி நீங்கள் இன்று எதற்கு வந்துள்ளீர்கள் ?பிரார்த்தனையில் கலந்து கொள்ளவா?

    அர்ஜுன்தாஸ் :ஆமாம் என்னையும் உங்களுடன் பிரார்த்தனைக்கு அனுமதிக்க வேண்டும் என கோர விரும்புகிறேன் ..........

    காந்தி :எவர் வேண்டுமெனிலும் என் மாலை நேர பிரார்த்தனையில் கலந்து கொள்ளலாம் பிறகு நான் எப்படி உங்களை வேண்டாமென்று கூற முடியும் .

    அர்ஜுன் தாஸ் : சரி நான் என்னுடைய சில ........

    காந்தி :ஆனால் இந்த காக்கி சீருடையில் வேண்டாம் கூடவே உங்கள் இடுப்புபட்டையில் உள்ள ரிவல்வரும் வேண்டாம் ,

    அர்ஜுன்தாஸ் : ஆனால் பாபு

    காந்தி :உங்களுக்கு ஏன் ரிவால்வர் தேவை

    அர்ஜுன் தாஸ் :உங்கள் பாதுகாப்பிற்கு

    காந்தி :எவரேனும் என்னை தாக்கினால் நீங்கள் அவரை இந்த ரிவால்வரால் சுட்டு , பிரார்த்தனையின் நேரத்தில் கொலை செய்வீர்கள் ,

    அர்ஜுன்தாஸ் :ஆனால் பாபுஜி உங்களை எவரேனும் தாக்கினால்

    காந்தி :வரவேற்ப்பேன் என் மரணத்தை பற்றி எனக்கு கவலையில்லை , ஆனால் எனது தோல் உடலை காக்க மற்றவர் மரணிப்பதை நான் விரும்பவில்லை ,

    அர்ஜுன்தாஸ் :பண்டிட்ஜி(நேரு )என்னை அனுப்பி வைத்தார் நான் அவர் மெய்காப்பாளன் ,

    காந்தி :அப்படியெனில் இங்கே என்ன வேலை உங்களுக்கு செல்லுங்கள் சென்று அவர் உடலுக்கு காவல் செய்யுங்கள் ,

    அர்ஜுன்தாஸ் :பண்டிட்ஜி (நேரு )உங்களிடம் பேசியதாக சொன்னார் , சர்தார் படேலும் இது குறித்து உங்களிடம் பேசியுள்ளார் , ஆனால் நீங்கள் இந்த விஷயத்தில் மிக பிடிவாதமாக உள்ளீர்கள் , இன்று புலனாய்வு துறை பண்டிட்ஜிக்கு (நேரு )அனுப்பிய கோப்பு இதை இதை தங்களிடம் காட்ட சொன்னார் , பாபுஜி உங்களுக்கு பாதுகாப்பு தேவை ,

    காந்தி :எனக்கு பாதுகாப்பு தேவையில்லை

    அர்ஜுன்தாஸ் : பாப்புஜி உங்களை எப்படி நான் சம்மதிக்க வைப்பது , வெளியே திரண்டுள்ள கூட்டத்தினை கண்டீர்களா , அவர்களுள் ஒருவன் உங்களை கொலைபுரிய வந்தவனாக இருக்கலாம் பிரார்த்தனைக்கு வரும் அனைவரும் பக்தர்கள் அல்ல ,

    காந்தி :இல்லை பக்தர்கள் மட்டுமே பங்கு கொள்ளும் பிரார்த்தனை அனைவருமே பக்தர்கள்தான் .

    அர்ஜுன்தாஸ்:ஆனால் ஜனவரி 20 உங்கள் மீது வெடிகுண்டு வீசியவர்கள் பக்தர்கள் இல்லை , அவர்கள் யார் என புலனாய்வு துறை கண்டுபிடித்து விட்டனர் அவர்கள் இந்து மகாசபையை சேர்ந்தவர்கள் மதன்லால் மற்றும் ஷங்கர் கிஸ்தைய்யா , அவர்கள் கூறியது அந்த வேடிகூண்டு வீச்சு எதேச்சையான சம்பவமில்லை அது திட்டமிட்ட சதி உங்களை கொள்ள நடந்த முயற்சி .

    காந்தி :ஹிந்து மகா சபை மற்றும் முஸ்லிம் லீக் இரண்டும் எனக்கு ஒன்றுதான்

    அர்ஜுன்தாஸ் :ஆனால் அவர்கள் அதை புரிந்து கொள்ளவில்லையே

    காந்தி :தவறு அர்ஜுன் , நான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவுடன் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருமே ஆயுதங்களை கைவிட்டு விட்டனர் .

    அர்ஜுன்தாஸ் :பாபுஜி துப்பாக்கி தோட்டாவிற்கு துறவியும் ஒன்றுதான் குற்றவாளியும் ஒன்றுதான்,

    காந்தி :ஆனால் அதை கையில் ஏந்தியவன் வித்தியாசத்தை அறிவான் .

    அர்ஜுன் தாஸ் :அகதிகள் கோபத்தில் உள்ளனர் , அவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைக்கு காரணமாக உங்களை சொல்கின்றனர் ,ஹிந்து மகா சபை தேசபிரிவினைக்கு நீங்கள் தான் காரணம் என கூறுகின்றனர் ,சிலர் உங்களை கொள்ளவும் சதி செய்கின்றனர், மக்களினிடையே நீங்கள் செல்வது ஆபத்து சில நாட்கள் பிரார்த்தனையை தாங்கள் தள்ளிவைக்க கூடாதா ,

    காந்தி :நீங்கள் பிரார்த்தனையை தள்ளிவைக்க சொல்கிறீர்களா ?இதற்க்கு முன் ஒரு போதும் அவ்வாறு நடந்தது இல்லை ,அவ்வாறு நடக்கவும் விடமாட்டேன் ,சிறையிலும் சரி, நோயுற்றபோதும் சரி ,தடுப்புகாவலிலும் சரி உண்ணாவிரதத்தின் போதும் எந்த ஒன்றும் எனக்கும் என் பிரார்த்தனைக்கும் இடையில் நின்றதில்லை , என் பிரார்த்தனையின் பொழுது கஸ்தூரிபாய் மிகுந்த கவலைக்கிடமாக இருந்தாள் , அவளை என் அருகில் அமரவைத்தபோது என் கரங்களை இறுக்கமாக ஏந்தி பற்றி கொண்டாள் , கஸ்துரி பாய் மரணத்தை தழுவிய போதும் நான் முதலில் பிரார்த்தனையை முடித்த பிறகே அவளுக்கான என் கண்ணீரை சிந்தினேன் , ஆனால் இன்று நீங்கள் என் ஒருவனின் பொருட்டு பிரார்த்தனையை நிறுத்த சொல்கிறீர்களா ?

    அர்ஜுன்தாஸ் :ஆனால் உங்கள் வாழ்வு எங்கள் அனைவருக்கு முக்கியம் பாபுஜி ,கச்துரிபாய் இறந்த பொழுது சில மணித்துளிகள் ப்ரார்த்தணியை தள்ளிபோட்ட நீங்கள் எங்களுக்காக சில நாட்கள் தள்ளி வையுங்கள் , நீங்கள் விரும்பினால் இங்கயே நாம் பிரார்த்தனை புரியலாம் நீங்கள் நான் மகாதேவ்பாய் பண்டிட்ஜி அனைவரும் இங்கேயே

    காந்தி :வெளியே திரண்டு இருக்கும் மக்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?அவர்களில் ஒருவன் கொலைகாரன் இருக்கலாம் ,ஆனால் மற்றவர்கள் ,அவர்கள் கொலைகாரர்கள் இல்லையே , ஒரு காந்தியின் பொருட்டு நான் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை ,

    அர்ஜுன்தாஸ் :ஆனால் பாபுஜி ......

    காந்தி :ஜவஹர் குழந்தை தனமாக உள்ளார் நீங்களும் தான் அர்ஜுன் , உங்களிடமும் ரிவால்வர் உள்ளது , என்னை கொள்ள செய்ய வந்தவனும் அவனது ரிவால்வர் மீது நம்பிக்கை வைத்துள்ளான் , ஆனால் நான் உங்கள் ரிவால்வர் ஆயுத போரில் கலந்து கொள்ள விரும்பவில்லை , ஏனெனில் என் அஹிசை மீதான நம்பிக்கை உங்கள் ஆயுதங்களின் மீதான நம்பிக்கையை விட வலிமையானது ,

    அர்ஜுன் தாஸ் :ஆயுதங்கள் உருவத்தில் சிறியதாக தோன்றினும் அவை மிக பெரும் சேதத்தை ஏற்ப்படுத்தி விடும் ,

    காந்தி : இது ஆயுதம் ஏந்தியவர்களின் ஒரு தவறான நம்பிக்கை , நான் தென்னாப்ரிக்காவில் இருந்தே பொழுது , என்னை காக்க ஜவஹர் அங்கே இல்லை ,அங்கே காவலர்கள் அடித்தனர் , சிறையிட்டனர் , என்னிடம் ரிவால்வர் இல்லை நம்பிக்கைதான் இருந்தது , இறுதியாக அப்போரில் நானே வென்றேன் ,

    அர்ஜுன்தாஸ் :நான் லத்தியை பற்றி பேசவில்லை துப்பாக்கி தோட்டக்கலை பற்றி பேசுகிறேன்,

    காந்தி :நான் வலிமை வாய்ந்த ஆயுதமான அஹிசையை பற்றி பேசுகிறேன்,

    அர்ஜுன்தாஸ் :இப்பொழுது கேள்வியே சில நாட்கள் பற்றிதான்

    காந்தி :இது கொள்கையை பற்றிய கேள்வி , நான் ஒன்றும் சாகா வரம் பெற்றவன் இல்லை , ஒரு நாள் சாகத்தானே போகிறேன் ,எனது ரத்தம் அவர்கள் ஆத்திரத்தை தனிக்குமானால்,எனது ரத்தம் கலவரத்தையும் தீவைத்தளையும் நிறுத்துமானால் , அவர்கள் குற்றம் சாட்டிய மோகன்தாசின் ரத்தம் அவர்களுக்கு நிறைவை தருமானால் , எனது ரத்தத்தை சிந்த நான் தயாராக உள்ளேன் ,

    அர்ஜுன் தாஸ் :பாபு .........

    காந்தி :நான் ராமனுக்கும் ரஹீமுக்கும் அல்லது கிருஷ்ணனுக்கும் கரிமுக்கும் இடையில் பேதம் பார்ப்பதில்லை ,நான் இந்து என்பதில் அதிக பெருமிதமோ அல்லது இஸ்லாமியராக பிறக்கவில்லை என்பதில் வருத்தமோ கொள்ளவில்லை , நான் நானகவே உள்ளேன் , நான் எனது கொள்கையின் மீதும் உண்மையின் மீதும் நேர்மையுடையுவனாக உள்ளேன் . அர்ஜுன்தாஸ் நீங்கள் சில நாட்கள் பிரார்த்தனையை தள்ளி வைக்க சொன்னீர்கள் அல்லவா , நான் கூறுவதெல்லாம், இன்று கூட கொலையாளி எனக்காக வெளியே காத்திருக்கலாம் , எனினும் அவனை என் இரு கரங்களால் வணங்கி வரவேற்ப்பேன் அவனால் காந்தியை மட்டுமே கொள்ளமுடியுமே தவிர காந்தியத்தை அல்ல ,

    பணியாளர் :பாபுஜி

    காந்தி : ஆமாம் இன்று பிரார்த்தனைக்கு தமாதபடுத்திவிட்டேன் அர்ஜுன் தாஸ் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா ,

    அர்ஜுன்தாஸ் :ஆனால் ,கண்டிப்பாக

    காந்தி :வாருங்கள் , மன்னிக்கவும் உங்களுடைய ரிவால்வரை இங்கேயே என் ராட்டை அருகில் வைத்து விட்டு வாருங்கள் ,

    அரங்கத்தில் இருள் சூழ்கிறது ,

    (பிர்லா பவன் , பிரார்த்தனை பகுதி காட்டபடுகிறது , சதுர வடிவான சிமெண்ட் திண்ணை உள்ளது , இடது பக்கம் சிறிய ஏரி அதன் மீது வளைவான ஒரு மரப்பாலம் உள்ளது காந்தி அமரும் இடம் அதற்க்கு நேரெதிராக அமைந்துள்ளது )

    நாதுராம் :பிர்லா பவன் வாசலை அடைந்த பொழுது நேரம் மலை 4.45, வாசல் காவலாளி உள்ளே நுழைபவர்களை நன்றாக சொத்த பின்னே நுழைய விட்டது எனக்கு சிறிது கலக்கத்தை தன தந்தது , ஒரு சிறிய குழுவினருடன் இணைந்து உள்ளே சென்று விட்டேன் , 5.10 மணியளவில் காந்தியும் ஏனையவர்களும் பிரார்த்தனை பகுதிக்கு அறையில் இருந்து வருவதை கவனித்த நான் , அவர் தோட்டத்திற்க்கு செல்ல படியேறும் வழியை அடைந்தேன் , என்னை சுற்றி சில மக்கள் மறைத்தவாறு இருந்தனர் .

    காந்தி படிகளை கடந்து முன்னேறி வந்துகொண்டிருந்தார் , இரண்டு இளம்பெண்களின் தோள்களில் ஆதரவாக தனது கரங்களை பற்றியிருந்தார் .

    என் பையில் இருந்த ரிவால்வரின் பாதுகாப்பு விசையை விடுவித்தேன் ,காந்தியை சுற்றிலும் மக்கள் கூட்டமாக இருந்தனர், நான் சற்று திறந்த பகுதியை தேடினேன் , எனக்கு இன்னும் மூன்று வினாடிகள் தேவைப்பட்டது , காந்தியை நோக்கி இரண்டடி முன்னேறி அவரை எதிர்கொண்டேன் , இப்பொழுது என் ரிவால்வரை கையிலெடுத்து கொண்டு வணங்கினேன் அவர் இதுவரை தேசத்திற்கு செய்த சேவை மற்றும் தியகத்திர்க்காக வணங்கினேன் , அவருடன் வந்த பெண்களில் ஒருவர் காந்தியுடன் மிக அருகில் இருந்ததால் துப்பாக்கி சூட்டில் அவருக்கு ஏதும் நிகழுமோ என அஞ்சி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்னும் ஒரு அடி முன் சென்று அந்த பெண்ணை சுடுவதற்கு தெதுவாக அப்புறபடுத்தி அவரை வணங்கினேன் ,

    அடுத்த நொடி காந்தி உடலில் துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சினேன் பலவீனமடைந்திருந்த காந்தி ஆஹ் என்றவாறே விழுந்தார் , அன் அருகில் இருந்தவர்கள் என் கைகளில் ரிவால்வரை கண்டு அவ்விடத்தை விட்டு அப்பால் சென்றனர் மக்கள் என்னையும் காந்தியையும் சுற்றி நின்று கொண்டனர் .

    துப்பாக்கி சூட்டிற்கு பின்னர் துப்பாக்கியுடன் என் கரங்களை உயர்த்தி போலிசை அழைத்தேன் , அடுத்த 30 வினாடிகள் என் அருகே எவரும் வரவில்லை ,கூட்டத்தினரிடையே ஒரு போலிடை கண்ட நான் அவரை என்னை கைது செய்யுமாறு சைகை செய்தேன் , அவர் என் கைகளை பிடித்தது இரண்டாவது ஒருவர் ரிவால்வரை தொட்டார் , நான் அவர்களுடன் சென்றேன் .

    (அரங்கம் முழுவதும் இருள் , பீப் சப்தம் ஒலிக்கிறது " ஹலோ ஹலோ நான் விக்டர் பேசுகிறேன் , காந்தி சுட்டுகொல்லப்பட்டார் , IGP மற்றும் உள்துறை மந்திரி பிர்லா பவனுக்கு வருகிறார்கள் , பிரதமருக்கு தெரிவியுங்கள் ")

    நன்றி ரீடிப் இணையம் மற்றும் கோட்சே இணைய தளம்

  2. Likes sarcharan liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    நல்ல முயற்சி. மொழியாக்கம் அருமை. வாழ்த்துக்கள் மணி.

    இந்தப் பதிவு முழுவதும் கோட்சே வின் பார்வையிலேயே இருக்கிறது. காந்தியத்தைப் பற்றியும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம்.

    இதே சம்பவத்தை மையமாகக் கொண்டு திரு,மாலன் அவர்கள் எழுதிய 'ஜன கண மன' நாவல் ஒன்று உள்ளது. விரும்பினால் வாங்கிப் படியுங்கள். காந்தியைக் கொல்லும் காட்சி சிறப்பாக விளக்கப்பட்டிருக்கும் அதில். காந்தியப் பார்வையில் எழுதப்பட்டிருக்கும்.

    ஆசிரியர்: திரு.மாலன்
    விலை: ரூ.60/-
    பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன்
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  4. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    வரலாறு, அது நிகழ்ந்த அளவில் வருங்காலச் சந்ததியர்க்கு எடுத்துச்செல்லப்படுவதில்லை என்பதை மெய்ப்பிக்கும் இன்னொரு சம்பவம்..

    பாராட்டுகள் மணி அஜித்..!

  5. #4
    புதியவர் பண்பட்டவர் maniajith007's Avatar
    Join Date
    16 Dec 2009
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    25,705
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி ராஜி சங்கர் அண்ணா நிச்சயமாக அந்த புத்தகத்தை படிக்கிறேன் , நன்றி ராஜா அண்ணா

  6. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by maniajith007 View Post
    நன்றி ராஜி சங்கர் அண்ணா நிச்சயமாக அந்த புத்தகத்தை படிக்கிறேன் , நன்றி ராஜா அண்ணா
    ராஜி அக்கா
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  7. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0

  8. #7
    புதியவர் பண்பட்டவர் maniajith007's Avatar
    Join Date
    16 Dec 2009
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    25,705
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by இராஜிசங்கர் View Post
    ராஜி அக்கா
    எப்படி இருந்தாலும் சகோதர பாசம்தானே அக்கா

  9. #8
    புதியவர் பண்பட்டவர் maniajith007's Avatar
    Join Date
    16 Dec 2009
    Posts
    25
    Post Thanks / Like
    iCash Credits
    25,705
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    உருண்டு உருண்டு சிரிக்கிறீங்க

  10. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ஆமாம் மணி..

    நானும் அவங்க ஆண் என்று நினைத்து, சார்ன்னு சொன்னேன்.. இங்க வந்து பார்த்தா, நீங்களும் அப்படியே..

    அதான்..!

  11. #10
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by maniajith007 View Post
    எப்படி இருந்தாலும் சகோதர பாசம்தானே அக்கா
    பாசம் ரொம்ப 'வலு'க்குதுங்கோ தம்பி..
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  12. #11
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    ஆமாம் மணி..

    நானும் அவங்க ஆண் என்று நினைத்து, சார்ன்னு சொன்னேன்.. இங்க வந்து பார்த்தா, நீங்களும் அப்படியே..

    அதான்..!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  13. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •