Results 1 to 11 of 11

Thread: என் வீட்டு காகங்கள் கரைவதில்லை

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    என் வீட்டு காகங்கள் கரைவதில்லை




    என் வீட்டு காகங்கள் கரைவதில்லை

    அம்மா சொல்வார் முன்பு ...
    பார் அத்தை வரப்போகிறாள் இன்று
    முன் முற்றத்தில் காகம் கரைகிறதேன்று
    சரியாக அத்தை வருவாள் ... அன்று
    அத்தை கொடுத்த வடையை
    அன்பாய் தருவாள் காக்கைக்கு

    அதே நினைவில் மூழ்கி கிடந்த போது
    வாசல் கதவருகே காக்கையின் சப்தம்
    அம்மாவின் நினைவில் இருந்த நான்
    மனைவியிடம் சொன்னேன்
    பார் உன் அத்தை வரப்போகிறார் இன்று
    காகம் கரைகிறதேன்று

    அவள் கையில் இருந்த கரண்டி
    காகத்தை நோக்கி பறக்க
    காகமும் பறந்தது ..............................
    அன்று தொட்டு இன்றுவரை
    என் வீட்டு காகங்கள் கரைவதில்லை ...
    எவரும் வீட்டுக்கு வருவதில்லை ............

    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    யதார்த்தம்...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இப்போதெல்லாம் காகங்களுடன் அந்த நம்பிக்கையும் காணாமல் போய் விட்டதே....

    அலை பேசி கோபுரங்களால்...!!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் (படம் பிரமாதம்).

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    அழகாய்ச் சொன்னேர்கள் ரவி.

    இப்பொழுதெல்லாம் உறவினர்கள் என்று யார் வருகிறார்கள் வீட்டுக்கு? யார் திருமணத்திலாவது பார்த்தால் தான் உண்டு. பெரும்பான்மையான உறவுகள் இப்பொழுது முகநூலின் 'லைக்'குகளில் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  6. Likes மதி liked this post
  7. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அண்ணே.. எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் கழிச்சு உங்க கவிதை..

    ஒரே ஒரு இடத்துல சின்ன தப்பு பண்ணிட்டீங்க.. "பார் உன் அத்தை" என்பதற்கு பதில் "பார் என் அத்தை வருவார்" என்று நீங்கள் சொல்லியிருந்தால் கரண்டியும் பறந்திருக்காது, காகமும் தப்பித்திருக்கும். உங்கள் வீட்டுக்காகமும் கரைந்திருக்கும்..

  8. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ரவியின் மீள்வரவுக்கு நன்றி. இப்பொழுதெல்லாம் கரண்டிகள் , காக்கைக்கு மட்டும் குறி வைக்கப்படுவதில்லை; எதிர்த்துப் பேசும் கணவனுக்கும் கூட குறி வைக்கப்படுகின்றன.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #8
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அண்ணே.. எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் கழிச்சு உங்க கவிதை..

    ஒரே ஒரு இடத்துல சின்ன தப்பு பண்ணிட்டீங்க.. "பார் உன் அத்தை" என்பதற்கு பதில் "பார் என் அத்தை வருவார்" என்று நீங்கள் சொல்லியிருந்தால் கரண்டியும் பறந்திருக்காது, காகமும் தப்பித்திருக்கும். உங்கள் வீட்டுக்காகமும் கரைந்திருக்கும்..
    ஹ ஹா.. செம மதி அண்ணா!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  10. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அண்ணே.. எப்படி இருக்கீங்க..? ரொம்ப நாள் கழிச்சு உங்க கவிதை..

    ஒரே ஒரு இடத்துல சின்ன தப்பு பண்ணிட்டீங்க.. "பார் உன் அத்தை" என்பதற்கு பதில் "பார் என் அத்தை வருவார்" என்று நீங்கள் சொல்லியிருந்தால் கரண்டியும் பறந்திருக்காது, காகமும் தப்பித்திருக்கும். உங்கள் வீட்டுக்காகமும் கரைந்திருக்கும்..
    ஆமாம் மதி காக்கைக்கும் எனக்கும் பிரியாணி கிடைத்து இருக்கும் .... (காக்கா பிரியாணி இல்லை ) ....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  11. Likes மதி liked this post
  12. #10
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by Ravee View Post
    ஆமாம் மதி காக்கைக்கும் எனக்கும் பிரியாணி கிடைத்து இருக்கும் .... (காக்கா பிரியாணி இல்லை ) ....
    ஏன் ரவி சார், மதி நல்ல மனுஷன்...அவரைப் போய் காக்கைன்னு சொல்றேங்க? பாவம் அவர் நேற்றிலிருந்து சோகத்தில இருக்காராம்!
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  13. Likes மதி liked this post
  14. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    விருந்தோம்பும் பண்பு காலப்போக்கில் நம்மிடையே குறைந்துகொண்டு வருவதைச் சுட்டும் அழகான கவிதை.

    கவிதையைக் காட்சிப்படுத்தும் படம் கூடுதல் அழகு. பாராட்டுகள் ரவி. அடிக்கடி வாங்க.

    (மதியின் பின்னூட்டம் ரசிக்கத்தக்க முன்னோட்டம். )

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •