வண்ண வண்ண காற்றாடி விட வேண்டும் என்ற ஆசை சிறு வயது முதலே இருந்து வந்தது.இளைஞ்சனான கணேசனுக்கு
ஆனால் முன்பு நடந்த சம்பவம் அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்ட காரணத்தினால் பயம் வந்து விடும் அவனுக்கு,
கணேசன் சிறுவனாக இருந்த பொழுது பெரியப்பா மகன் ஆதி தான் நண்பன் ஆனாலும் அவன் இளைஞ்சன் இருந்தாலும் ,
கணேசன் மீது ஆதிக்கு பாசம் அதிகம்,பள்ளி விடுமுறையில் என்றால் எங்கையாவது விளையாட்டு என்று கூட்டி கொண்டு போவான்.
அதில் பட்டம் விடுதலில் தன்னை மறந்து போவான்.பறவையின் சிறகை போல ஆகி விடும் அவன் மனம் கணேசனின் மனமும்தான்,
இப்படி சென்று கொண்டு இருந்த நாளில், ஒரு நாள் பட்டம் விட மொட்டை மாடிக்கு சென்று பட்டம் விட்டு கொண்டு இருந்தான்ஆதி .
கணேசன் வேடிக்கை பார்த்து கொண்டும் நூலை பிடித்து கொண்டும் இருப்பான்.கொஞ்ச நேரத்தில்
திடீர் என ஆதியின் பயங்கரமான அலறலை கேட்டு திரும்பினான் பட்டதை மட்டுமே கவனித்து கொண்டு இருந்த கணேசன்.
ஆதி தரையில் விழுந்து கதறி கொண்டு இருந்தான்.இவனும் கதறி அடித்து கொண்டு எல்லோரையும் கூப்பிட்டான்.
ஆதியின் கால் உடைந்து வரும் ரத்தத்தை பார்த்து இதயபடபடப்பில் மயங்கியே விட்டான் கணேசன்.
எலும்பு ஒடிந்து பெரிய கால் கட்டுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,குணம் அடைந்தான் ஆதி ஒரு மாதத்தில்,
ஆனால் கணேசனுக்கு ஆறு மாதம் பயத்திலேயே கழித்தான்.பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக குணம் அடைந்தான்.
இந்த நிகழ்ச்சிகளினால் பெரியவனாகியும் உள் மனதில் இன்னமும் அதன் பயம் இருந்து கொண்டேதான் இருக்கு.
இன்று எதோச்சியாக அந்த ரோட்டின் ஓரம் நடந்து வந்து கொண்டு இருந்தான்.கணேசன்
அப்பொழுது சிறுவர்கள் பட்டம் விட்டு கொண்டு இருந்தார்கள்.அதை பார்த்து ஆனந்த பட்டு கொண்டே
தானே அந்த பட்டம் விடுவதை போன்று நினைத்து கொண்டே வந்தான் கணேசன்
அதுதான் இப்போ பட்டம் விட ஆசை வந்து விட்டது.ஆசை எல்லாம் வந்து என்ன செய்வது,
ஆனால் கணேசனின் மனம் பயம் அடைந்து பழைய நினைவுகளுக்கு சென்று விடுகிறது.இப்படி யோசித்து யோசித்தே இரவு ஆகி விட்டது.
அதை மறந்து விட்டு தூங்க போயி விட்டான் .இப்பொழுது கணேசன் பட்டம் விட்டு கொண்டு இருந்தான் தைரியமாக கனவில்