Results 1 to 6 of 6

Thread: முழுமையாக மனம் இசைந்து படித்தால்... பரீட்சை சுலபமாகும், சுகமாகும்! ! 100-100 வாங்கித் தரும் பத்துக் க

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6

    முழுமையாக மனம் இசைந்து படித்தால்... பரீட்சை சுலபமாகும், சுகமாகும்! ! 100-100 வாங்கித் தரும் பத்துக் க

    முழுமையாக மனம் இசைந்து படித்தால்... பரீட்சை சுலபமாகும், சுகமாகும்! !100-100 வாங்கித் தரும் பத்துக் கட்டளைகள்

    எக்ஸாம் சீஸன் ஸ்டார்ட்ஸ்...

    வருடம் முழுக்க விழுந்து விழுந்து படித்தாலும், தேர்வுக் காலத்தை ஒட்டிய இந்த முக்கிய நாட்களில் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படிப்பதன் பலனை ரிசல்ட்டில் உணரலாம்... மகிழலாம்! ஆனால்... குழப்பம், பதற்றம், கவலை, பயம் என்று அனைத்தும் சேர்ந்து மாணவர்களை சுழற்றியடிப்பதும் இந்த நாட்களில்தான்.


    ''நன்றாகப் படிப்பவர், சுமாராகப் படிப்பவர், இத்தனை நாளாக நத்தையாக இருந்துவிட்டு, இனிமேல்தான் வேகம் கூட்டப் போகிறவர்... என மாணவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி... குழப்பம், பதற்றம் போக்கும் வழிகளையும், தேர்வுக்கான சரியான பிரிபரேஷன் முறைகளையும் தெரிந்து கொண்டால், நிச்சயம் கணிசமான மதிப்பெண்களைக் கூடுதலாகப் பெறலாம். போட்டிகள் நிறைந்த உலகில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் தங்கமாச்சே!'' அந்த 'தங்க’ சேமிப்புக்கான பத்து வழிமுறைகள்!

    1. Day’s Schedule: உணவு, படிப்பு, எழுத்து, தூக்கம் அனைத்துக்குமான நேரத்தை பிரித்து வைத்துக்கொண்டு அதை ஃபாலோ செய்வதுதான் இந்த தினசரி அட்டவணை. இத்தனை நாட்கள் படித்ததில் அறிந்தோ... அறியாமலோ ஒரு அஜாக்கிரதை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால், கவுன்ட் டவுன் துவங்கிவிட்ட கடைசி கட்டத்தில், ஒவ்வொரு மணித்துளியையும் இப்படி திட்டமிடலுக்குள் கொண்டுவந்து விடுவது, நேரத்தின் இழுபறியால் ஏற்படும் பதற்றத்தை முளையிலேயே கிள்ளியெறியும்.

    2. Time Management: நேர நிர்வாகம் என்பது திட்டமிடுதலை தொடர்ந்ததுதான். எது முக்கியம், எது அவசரம் என்ற அலசலுடன் கூடிய இந்த நேர நிர்வாகம்... அமைதியையும், நிதானத்தையும் தரும்.

    3. Material Collection: முந்தைய வருடங்களின் வினாத்தாள்களை சேகரித்து ஆராய்ந்து, அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பது, நிச்சயம் ஏமாற்றாது.

    4. Blue Print: அரசே தயாரித்து வழங்கும் இந்த முதனிலை திட்டப்படிவம், அதிக மதிப்பெண் எடுக்க விரும்புபவர்களுக்கு முக்கியமானது. எந்தப் பாடத்திலிருந்து... எந்த மார்க் கேள்வி எத்தனை வரும் என்ற தெளிவை இந்த 'Blue Print’ தரும்.

    5. Model Paper: வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவனின் விடைத்தாள், அல்லது ஆசிரியரின் கோப்பிலிருக்கும் முன்னாள் 'டாப்பரி’ன் விடைத்தாள் போன்றவற்றை பார்வையிட்டு, தன்னைத் திருத்திக் கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதும் நல்லதொரு வழிமுறை.

    6. Self Test: வீட்டிலேயே சில வினாத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எழுதிப் பார்க்கும் சுயபரிசோதனை, சிறப்பானதொரு பயிற்சி. அந்த வினாத்தாள்கள் மூன்று ஆண்டுகளுக்கு உள்ளானதாக இருப்பது நல்லது.

    7. Presentation: உயிரை உருக்கி படித்தவற்றை எல்லாம் கொடுக்கப்பட்ட நேரம், கேள்விகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான மதிப்பெண்கள் என்ற வரையறைகளுக்குள் தேர்வுத்தாளில் நிரூபிக்கும் தருணம் இது. தேர்வுக்கான 180 நிமிடங்களில் 170 நிமிடங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்தந்த பகுதியை இத்தனை நிமிடங்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். முதலாவது... போதுமான இடம் விடுவது, அடிக்கோடிடுவது, விடைத்தாள் பக்கங்களை மாற்றி, இறுக்கமாக இணைத்துவிடாமல் சரியாகச் செய்வது... போன்றவை (Physical Presentation). இரண்டாவது... விடைத்தாள் திருத்துபவர் எதிர்பார்ப்பதை கேள்விக்கேற்றவாறு சரியாக அனுமானித்து, அதை விடைத்தாளில் தெளிவாக வெளிப்படுத்துவது (Mental Presentation)

    8. Paper Analysis: தன்னுடைய விடைத்தாளை தானே அலசி ஆராய்ந்து பகுத்தறியும் மாணவனுக்கு தனது நிறை, குறைகள் தெளிவாகத் தெரிந்துவிடும். தன்னால் எந்த கேள்விகளுக்கு மதிப்பெண் அள்ள முடிகிறது, வழக்கமாக தான் சொதப்பும் பகுதி எது என்ற இந்த பகுப்பாய்வு, பறிபோகும் மதிப்பெண்களை மீட்க உதவும். உதாரணத்துக்கு, ஒரு சிலர் பெரிய வினாக்களுக்கு பர்ஃபெக்ட்டாக விடையளிப்பார்கள். ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்களில் தடுமாறுவார்கள். ஆக, தாங்கள் கவனம் செலுத்த வேண்டியது ஒரு மதிப்பெண் வினாக்களில்தான் என்ற உண்மை அவர்களுக்கு புரிபட இந்த 'பேப்பர் அனாலிஸிஸ்’ உதவும்.

    9. SWOT: Strength (பலம்), Weakness (பலவீனம்), Opportunities (வாய்ப்புகள்), Threat(அச்சுறுத்தல்) இந்த நான்கு ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்தைச் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இது, தன்னை உணர்வதற்கான நான்கு படிகளைக் குறிக்கிறது. படம் வரைவது, ஈக்குவேஷன் சால்வ் செய்வது என்று தன் பலத்தைப் பொறுத்து கேள்விகளைத் தேர்வு செய்வது, தன்னுடைய பலவீனங்கள் எந்த வகையிலும் விடைத் தாளில் வெளிப்படாதபடி பார்த்துக்கொள்வது, டியூஷன், ஆசிரியர், நண்பர், கைடு என்று தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, கவனச் சிதறலுக்கான வாய்ப்புகள், தனது குறைகள் போன்ற அச்சுறுத்தல்களைத் அறிந்து தவிர்ப்பது.

    10. Food And Relaxation: தேர்வு சமீபமாகப் பார்த்து, உடலைத் தேற்றுகிறேன் என்று எசகுபிசகாக சாப்பிட்டு முதலுக்கு மோசம் செய்யக்கூடாது. அசைவம், ஆயிலி அயிட்டங்கள், செரிமானத்துக்குத் தொந்தரவானவை போன்றவற்றை பரீட்சை நாட்களில் தவிர்த்துவிட வேண்டும். தினமும் இரவு போதிய உறக்கம் அவசியம். ஆனால், பகலில் தொடர் படிப்பின் இடையே தூக்கமோ, ஓய்வோ தேவை இல்லை. காலாற நடப்பது, சப்ஜெக்ட்டை மாற்றிப் படிப்பது போன்றவை இறுக்கத்தைத் தவிர்க்கும்.

    இறுதியாக, ஆசிரியர், பெற்றோர் இவர்களுக் காகவோ... வேலை, சம்பாத்தியம் இவற்றுக்காகவோ வெற்று இயந்திரமாக படிக்க முயற்சிக்காமல்... தனக்காக, தன் மேம்பாட்டுக்காக என்ற அர்ப்பணிப்புடன் முழுமையாக மனம் இசைந்து படித்தால்... பரீட்சை சுலபமாகும், சுகமாகும்!

    நன்றி: http://pettagum.blogspot.in/search/l...AE%BE%E0%AE%95
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  2. Likes prakash01 liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    படிக்கிற குழந்தைகளுக்கு இந்த எக்சாம் நேரத்தில் மிக மிக அவசியமான பயனுள்ள பகிர்வாகும்பா இந்த பதிவு....

    அன்பு நன்றிகள் அமீனுதீன்...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  4. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றிகள் அமீனுதீன்...
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  5. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    அருமையான பகிர்வு ...

    நன்றி அமீன்...
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  6. #5
    புதியவர்
    Join Date
    04 May 2013
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    27,112
    Downloads
    17
    Uploads
    0
    migavum ubayogamana tips.thank you.

  7. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    பயனுள்ள பதிவு அமீன்!
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •