Results 1 to 4 of 4

Thread: நாவி - புதிய தமிழ்ச் சந்திப் பிழை திருத்தி.

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0

    நாவி - புதிய தமிழ்ச் சந்திப் பிழை திருத்தி.

    நாவி - புதிய தமிழ்ச் சந்திப் பிழை திருத்தி.


    இணையத் தமிழில் சந்திப்பிழைகள், வாக்கியப்பிழைகள், எழுத்துப் பிழைகள், மரபுப் பிழைகள் உட்பட பலவானவை மலிந்து காணக்கிடைக்கிறது. சிறியவர், பெரியவர், புதியவர், பிரபலமானவர் என எங்கும் பிழைகளைக் காணலாம். சிறந்த எழுத்தாளர்களின் எழுத்திலேயே பிழைகளைக் காணலாம். அவை அப்படைப்பைத் திருத்திய ஆசிரியரின் கவனக்குறைவாகவும் இருக்கலாம். தமிழ்த் தளங்களின், தமிழ்ப் பயனர்களின், தமிழ் வாசகர்களின் பரவலுக்கேற்ப தமிழ் திருத்திகள்(Editor) புழக்கத்தில் அதிகமில்லை. இப்போது சந்திப்பிழைகளைத் திருத்த "நாவி" என்கிற புதுச் செயலி அறிமுகமாகியுள்ளது. தற்போதுவரை கொஞ்சம் மரபுப் பிழைகளைத் திருத்தவும், சந்திப் பிழைகளைத் திருத்தவும், 90% சந்திப்பிழைகளைப் புரிந்து கொள்ளவும் இதன் மூலம் முடிகிறது,

    ஒரு மொழிக்குப் பிழை திருத்தி என்பது 100% செம்மையாக இருக்கமுடியாது, காரணம் தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சிறு புள்ளியோ, சிறு ஒற்றோ பொருளையே மாற்றும் வல்லமை கொண்டது. எப்படி எழுதினாலும் ஏதோ ஒருவிதத்தில் பொருள்படும், எழுதியவர்தான் என்ன பொருளில் எழுதினார் என்பதை அவர்தான் தீர்மானிப்பதாக இருக்கும். இருந்தபோதும் அடிக்கடி புழக்கத்தில் பயன்படும், அடிப்படை உருபுகள், ஒலிக்குறிப்புகள் முதலியவற்றைக் கொண்டு மென்பொருளாலும் ஓரளவிற்குக் கணிக்கமுடியும்.

    இச்செயலியில் வாக்கியத்தைப் போட்டு ஆய்வு செய் பொத்தானைத் தட்டினால். வலிமிகும் இடங்களை ஆராய்ந்து பரிந்துரைக்கும். அதுபோக கணிக்கமுடியாத வார்த்தைகளுக்கு ஏற்ற இலக்கண விதிகளைச் சுட்டிக்காட்டும். வலி மிகாத இடங்களில் தவறாக வலி மிகுந்தாலும் கொஞ்சம் கண்டுபிடித்துக் காட்டும். ஆய்வு செய்து காட்டும் பகுதியில் வலி மிகுமிடங்கள் பச்சை நிறத்திலும், வலி மிகாத இடங்கள் சிவப்பு நிறத்திலும், கணிக்கமுடியாத வார்த்தைகள் தடித்த வடிவத்திலும் இருக்கும். அச்சொற்களைச் சொடிக்கினால்[click] அதற்கான காரணத்தைக் காணலாம். மென் பரிந்துரை கூடுமானவரை பிழையற்று இருக்கும். சந்தேக வார்த்தைகளைக் கீழ் கண்ட விதிகளைப் படித்து நீங்களே உங்கள் விருப்பமான வார்த்தையைத் தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக "சம்மதம்" என்கிற பொத்தானில் சம்மதத்தைக் கொடுத்ததும் வாக்கியங்கள் திருத்தப்பட்டிருக்கும். பிழைகளைத் திருத்தவும், கற்றுக்கொள்ளவும் புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்.

    நாவி - தமிழ்ச் சந்திப் பிழை திருத்தி.

    இந்த தளத்தின் சுட்டியை கீழே தருகிறேன். முயற்சி செய்து பாருங்கள்.

    இச்செயலி பிறமொழிச் சொற்கள்[காபி, கலெக்டர்], உயர்திணைப் பெயர்கள்[கண்ணன், சான்சன்], இடப்பெயர்கள்[பொன்னமராவதி, வத்தலகுண்டு, கானாடுகாத்தான்] போன்ற எண்ணற்ற கணிக்கமுடியாத பெயர்களைக் கண்டுனராது. மற்றத் தமிழ் இலக்கண வரம்பிற்குட்பட வாக்கியங்களைப் பகுத்து சந்திப் பிழைகளைத் திருத்த முயலும்/பரிந்துரைக்கும். சரியான காற்புள்ளி, நிறுத்தப் புள்ளி, கேள்விக்குறி, தகுந்த இடைவெளி, தேவையற்றயிடத்தில் பதம் பிரிக்காமல் என முறையான வாக்கியமாக இருந்தால் சிறப்பு.

    நன்றி : எதிர்நீச்சல்

  2. #2
    புதியவர்
    Join Date
    19 Dec 2012
    Posts
    12
    Post Thanks / Like
    iCash Credits
    9,580
    Downloads
    1
    Uploads
    0
    ராஜேஷ்வரன் அவர்களின் தகவலுக்கு மிக்க நன்றி. இன்றே இதை முயற்சித்து பார்க்கிறேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    மிகவும் பயனுள்ள மென்பொருள். பகிர்வுக்கு நன்றி ராஜேஸ்வரன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பயனுள்ள மென்பொருள். பகிர்ந்தமைக்கு நன்றி இராஜேஸ்வரன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •