Results 1 to 2 of 2

Thread: ஆபிரஹாம் லிங்கன் ,தன் மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு வேண்டுகோள

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0

    ஆபிரஹாம் லிங்கன் ,தன் மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு வேண்டுகோள



    எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்--இதை அவனுக்குச் சொல்லுங்கள்.
    தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.
    பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
    மனம் விட்டுச் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.
    டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.
    புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.
    இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.
    பிறரை ஏமாற்றுவதை விட ,தோற்பது கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.
    எத்தனை பேர் கூடி 'தவறு'என்றாலும்,சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
    மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.
    துன்பத்தில் அவன் சிரிக்கட்டும்.அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.
    குற்றங்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாகவும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.
    உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன் செவி சாயாமல் இருக்கட்டும்.தன மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
    அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக் கட்டித் தழுவாதீர்கள்.
    எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க விடாமுயற்சியைக் கற்றுக் கொடுங்கள்.
    தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.அப்போது அவன் மனித சமுதாயம்,அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.
    இவையெல்லாம் மிகப்பெரிய ,கடினமான நடைமுறைகள்தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்.

    ********இதே நம் அரசியல்வாதிகள் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதி இருந்தால் எப்படி இருந்து இருக்கும்?

    நல்ல ஒரு நகைசுவையாக இருந்து இருக்கும்

  2. Likes ஜானகி liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by nandagopal.d View Post
    இதே நம் அரசியல்வாதிகள் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதி இருந்தால் எப்படி இருந்து இருக்கும்?

    எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்-பின் நாம் மட்டும் ஏன் நேர்மையாக உண்மையாக இருக்க வேண்டும்?-இதை அவனுக்குச் சொல்லுங்கள்.
    தோல்வியை மறைக்கவும் வெற்றியைப் பிரகடனப்படுத்தவும் கற்றுக் கொடுங்கள்.
    பெருமையிலிருந்து அவன் சேர்ந்தே இருக்கட்டும்
    குற்றமிழைத்து விட்டாலும் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.
    டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.
    நல்ல புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.
    இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள். அதனால் அவன் வகுப்பறைக்கு வராமல் போனாலும் பாராட்டுங்கள்.
    பிறரை தோற்பதை விட ,ஏமாற்றுவது கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.
    எத்தனை பேர் கூடி 'தவறு'என்றாலும்,விடாப்பிடியாக அதைச் செய்யக் கற்றுக்கொடுங்கள்
    மென்மையானவர்களிடம் வலிமையாகவும்,காசு பணம் உள்ளவர்களிடம் மென்மையாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்
    துன்பத்தில் அவன் சிரிக்கட்டும்.அத்துடன் ஊடகங்களில் தேர்தல் காலங்களில் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.
    குற்றங்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் அடிமையாகவும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.
    உரக்கக் கத்தும் மக்கள் கூட்டத்திற்கு அவன் செவி சாயாமல் இருக்கட்டும்.தன மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
    அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக் கட்டித் தழுவவும் தயங்காதீர்கள்.
    எப்போதும் பணம் மீது ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க ஊழல் முயற்சியைக் கற்றுக் கொடுங்கள்.
    தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்-அது தவறாய் இருக்கும் பட்சத்திலும் கூட.அப்போது அவன் மனித சமுதாயம்,அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.
    இவையெல்லாம் மிகப்பெரிய ,கடினமான நடைமுறைகள்தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் என்னைப் பார்த்தே வளர்ந்தவன்.ஆதலால் இதெல்லாம் இயற்கையாகவே அவனுக்கு வந்து விடும்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  4. Likes aren liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •