Results 1 to 9 of 9

Thread: சற்றே என்னை மிதி !

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    சற்றே என்னை மிதி !

    ஆறடி கூந்தலை அவிழ்த்துக் கொட்டி
    அழகு காட்டும் ஆரணங்கே ! அற்புதமே !
    உந்தன்
    கார்குழலால் கட்டுண்ட
    காளையரோ ஆயிரம்பேர் !
    ஆயிரம்பேர் ஆனாலும்
    அடுத்துன்னைக் கரந்தொட்டு
    மாலையிடப்போகும் மன்மதன் யாரென்று
    வாலைக் குமரியே !
    வாய்திறந்து கூறிடுவாய் !

    கண்ணிமைத்துக் காளையரைக்
    கைதுசெய்யும் காரிகையே!
    உந்தன்
    கண்ணிமைக்குள் சிறைப்பட்டக்
    காதலன் யாரெனவே
    என்னிடம் செப்பிடுவாய்
    ஏந்திழையே ! என்னுயிரே !

    அன்று
    கல்செய்த தவமன்றோ இராமனின்
    காலடி பட்டது.

    ஒரு
    செல்லாய்ப் பிறந்திருந்தாலாவது உன்
    செவ்விதழ் என்மீது பட்டிருக்குமே!
    என் செய்வது ! அந்தப்
    பொல்லாப் பிரமன் என்னை ஒரு
    புல்லாகவன்றோ இந்தப்
    புவிமீது படைத்துவிட்டான்.
    நில்லாய் ! இளங்கொடியே !
    நீ உந்தன் பட்டுக் கால்விரலால்
    சற்றே என்னை மிதித்துவிட்டுப் போ !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    ஆத்மார்த்தமான வரிகள்....

    ஆழ்ந்த நேசத்தின் வெளிபாடு....

    மதிக்கவில்லை என்று கூப்பாடு போடவில்லை....

    மிதிக்கவாவது செய்யேன் என்று கெஞ்சும் வரிகள்.....

    புல் தானா இப்படி எல்லாம் நினைப்பது?? க்யூட்....

    அழகிய கவிதை வரிகள்....

    உள்ளார்ந்த சிந்தனைகள்....

    மனம் தொட்ட பகிர்வு....

    அன்பு வாழ்த்துகள் ஐயா....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சுபாஷிணி அவர்களின் பாராட்டுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    03 May 2012
    Location
    Bangalore
    Posts
    860
    Post Thanks / Like
    iCash Credits
    24,112
    Downloads
    7
    Uploads
    0
    'புல் தரையில் நடக்காதே' என்ற போர்டை படித்திருப்பாள் போல, அதான் மிதிக்காமல் செல்கிறாள்.
    வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்க்கே!

  5. #5
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    மனிதனின் காலடிபட்டால் அத்தரையில் புல் மடிந்துபோகும் கட்டாந்தரையாகிவிடும்
    தன் காதலன் அழிந்துவிடக் கூடாதென விலகினாள் போலும்!
    என்றென்றும் நட்புடன்!

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    புல்லானாலும் புருஷன் என்பதை தவறாகப் புரிந்துகொண்டாளோ? கற்பனையும் அதைக் கவிதையாக்கிய அழகும் வியக்கவைக்கின்றன. பாராட்டுகள் ஐயா.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    இனிய தமிழில் ஏந்திழையைப் பாராட்டி அவள்மேல் தான் கொண்ட காதலைச் செப்பி என்னை மிதிக்கவாவது செய்யேன் என்று அழகாய்க் கோரும் அற்புதக் கவிதை ஐயா. பாராட்டுகள்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    இராஜி சங்கர், கு.பிள்ளை, கீதம், கலைவேந்தன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    25 Dec 2012
    Location
    கோவை
    Posts
    147
    Post Thanks / Like
    iCash Credits
    20,192
    Downloads
    2
    Uploads
    0
    அற்புதத்தையும் தாண்டிய நிகற்புதம் உங்கள் கவிதை!

  10. Likes prakash01 liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •