Results 1 to 6 of 6

Thread: பிள்ளைகள் படுத்தும் பாடு (சிறுகதை)

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0

    பிள்ளைகள் படுத்தும் பாடு (சிறுகதை)

    வேலப்பனுக்கு அதிக சொத்து அந்த ஊரில் இருந்தது. வேலப்பனுக்கும் சரசுக்கு கல்யாணமாகி இரண்டாவது வருடமே ஆகி இருந்தது. அவளுக்கு வயிற்றில் பயங்கர வலி உடனடியாக பல வைத்தியர்களையும் பல்வேறு டெஸ்ட்களையும் எடுத்து பார்த்ததில் சரசுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருக்கு கர்ப்பபையையே எடுத்தே ஆக வேண்டும் இல்லைஎன்றால் உயிருக்கே ஆபத்து என்று வைத்தியர்கள் சொல்லி கர்ப்பபையை அகற்றி விட்டனர். இதனால் குழந்தை பாக்கியம் இல்லமால் போனது அந்த தம்பதிகளுக்கு, பின்பு எல்லா சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் ஏன் குழந்தை இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லியே அலுத்து அழது விட்டனர்.ஒரு நாள் இரவு அழுது கொண்டு பேசினாள் சரசு கணவனிடம் இன்னொரு திருமணம் செய்ய சொல்லி ஆனால் வேலப்பனோ முடியவே முடியாது என்று மறுத்து விட்டான் இருக்கும் வரை நான் உனக்கு குழந்தை நீ எனக்கு குழந்தையாக இருப்போம் பேசமால் படு என்று சொல்லி விட்டு தூங்கி விட்டான் வேலப்பன். மறு நாள் காலையில் சரசு, வேலப்பனிடம் சொன்னாள்.கொஞ்ச நாள் நாம் பக்கத்துக்கு ஊரில் சம்பு அக்கா(சரசுவின் கூட பிறந்த அக்கா) வீட்டின் அருகில் இருக்கும் நம் வீட்டிற்க்கு போயி இருக்கலாம்.என்றாள்.சரி என்றான்.வேலப்பன் எப்படியோ சரசு நிம்மதியாக இருந்தால் சரி என்ற நோக்கத்துடன்,இப்போது குடி வந்து விட்டனர்.அவளின் அக்காவிற்கு முத்து ரங்கு என்று இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் உஷா ,சித்ரா என்று இரண்டு பெண் குழந்தைகள் எப்பொழுதும் அந்த குழந்தைகள் இவர்களின் வீட்டில்தான் விளையாடி கொண்டிருப்பார்கள்.சரசுவும் இப்பொழுது மிக உற்சாகமாக குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள்.இதை பார்த்து சந்தோசம் அடைந்தான் வேலப்பன் அவனும் தன் பிள்ளைகளை போல் பாசமாக வெளிய அழைத்து செல்வது எல்லாம் வாங்கி தருவது எல்லாமும் செய்தான்.
    வருடங்கள் பல ஓடின பெண்குழந்தைகளுக்கு திருமணம் ஆனது.ஆண் குழந்தைகள் பெரியவன் சூதாடியகவும்.சிறியவன் குடிகாரனாகவும் ஆகி விட்டனர் அவர்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.இன்னும் காலங்கள் ஓட ஓடஅக்காவின் மரணம் அன்று, சிறியவள் சித்ரா நம் பங்கு அம்மா என்ன வைத்துள்ளாள் என்று பெரியவள் உஷாவிடம் கேட்க மொத்தத்தில் இருவரும் அம்மாவின் நகை எவ்வளவு என்பதிலேயே குறியாக இருப்பது அம்மாவின் சாவு அவர்களை ஒன்றும் செய்யவில்லை என்பது சரசுவை மனம் கலங்க செய்தது.எப்படியோ ஒரு வழியாக காரியம் முடிந்து எல்லாரும் அவர் அவர் வீட்டிற்க்கு சென்று விட்டனர்.சரசுவின் அக்காவின் கணவனோ அந்த மகனிடமும் இந்த மகனிடமும் திட்டு வாங்கி கொண்டே வயிற்றை கழுவினர் சரசு பல முறை சொல்லியும் அவள் வீட்டிற்க்கு சாப்பிட செல்லவே இல்லை.ஒரு சில வருடங்களில் அக்காவின் கணவரும் (சுபரமணி)இறந்து விட்டார்.அன்றைய தினம்தான் அதிர்ச்சியில் உறைந்தே போயி விட்டாள் சரசு.பிணத்தை எடுக்க விடமால் சிறியவன் தண்ணியை போட்டு கொண்டு வந்து தகராறு செய்து கொண்டு இருந்தான்.அண்ணன் தம்பி இருவருக்கும் அடிதடியில் அந்த சொத்தை எனக்கு தராவிட்டால் பிணத்தை எடுக்க விட மாட்டேன் என்றான் ரங்கு.அப்புறம் சரசு அழது கொண்டே சமாதனம் செய்தாள் ரங்கு கேட்கவே இல்லை.சரிடா பக்கத்தில் இருக்கிற என்னுடைய அந்த ஐந்து எக்கரவை நீ எடுத்துகடா முன்னே காரியம் நடக்க விடு என்று வழிந்தது கொண்டு இருந்த கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் சரசு .சித்திக்காகதான் விடுறேன் என்றான் நல்லவனை போல் ரங்கு.எல்லாம் முடிந்தது.அதற்க்கு பின் யார் முகத்தையும் (சம்பு குழந்தைகளை)பார்க்கவில்லை.சில நாள்கள் மௌனத்துடன் கழிந்தது ஒரு இரவில் சாமி படத்தின் முன் சரசு கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.வேலப்பன் சரசுவின் கையை பிடித்து கொண்டு ஏன் அழுகிறாய்.
    "நம்மக்குன்னு யாரும் இல்லை கொள்ளி போட குழந்தைகள் இல்லை என்று அழுகிறிய" கேட்டான் வேலப்பன.இல்லைங்கே
    அந்த கவலையே இல்லைங்கே சம்பு அக்காவின் பிள்ளைகளை செய்ததை பார்த்த பின் எனக்கு கொஞ்ச நஞ்ச இருந்த ஏக்கம் எல்லாம் போயிடிச்சிங்க.பிள்ளைகள் இல்லமால் இருப்பது எவ்வளவோ பரவா இல்லை நிம்மதியகவாது போயி சேரலாம். நமக்கு குழந்தைகள் இல்லமால் செய்த கடவுளுக்கு நன்றிகள் சொல்றேன்.நம்மிடம் இருக்கும் சொத்தையெல்லாம் அனாதை ஆசிரமதிற்க்கு எழுதி வைத்து விடுங்கள்.இனி இங்கு இருப்பது வேண்டாங்க வேறு எங்காவது போயிடலம்ங்க என்று வேலப்பனிடம் சொன்னாள் சரசு. வேலப்பனும் சரி என்றான்.விடியல் அவர்களுக்காக காத்திருந்தது.

  2. #2
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    குழந்தை இல்லை எனும் அவஸ்தை படவேண்டாம் இப்படி பிள்ளைகளை பெற்றுக்கொள்வதை விட என்று பாடம் சொன்ன அருமையான கதை பகிர்வு....

    அன்பு வாழ்த்துகள் நந்தகோபால்.
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    கதை போக்கு நன்றாக இருந்தது. அழகாக சொல்கிறீர்கள். வாழ்த்துகள் நந்தகோபால் .

    இன்னும் நிறைய கொடுங்கள். நன்றி

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வணக்கம் திரு. நந்தகோபால்.

    இந்த விமரிசனத்தை/பரிந்துறையை சரியான கோணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்:

    'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்...' என்ற பாணியில் கதை சொல்வதை விட, கதையின் ஒரு பாத்திரம் மூலம் சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

    அன்புடன்,
    ரமணி

  5. Likes முரளி liked this post
  6. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் பிள்ளை இல்லாதவர்களுக்கு ஒரு கவலை. பிள்ளை உள்ளவர்களுக்கோ அத்தனையும் கவலை. மிகவும் அழகாக கதையைக் கொண்டுசென்றுள்ளீர்கள். பாராட்டுகள்.

    தமிழ்மன்றத்தில் இது தங்கள் முதல் கதை என்று நினைக்கிறேன். சில இடங்களில் எழுத்தில் மெல்லிய தடுமாற்றம் தெரிகிறது. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள். எழுத எழுதத்தான் எழுத்து வசப்படும். வசப்படுத்த நம் மன்ற உறவுகளும் துணைநிற்பர். அந்தவகையில் ரமணி அவர்களின் கருத்து ஏற்கத்தக்கது.

    தொடர்ந்து எழுதுங்கள். சிகரம் தொடுவீர்கள்.

  7. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Nov 2012
    Posts
    142
    Post Thanks / Like
    iCash Credits
    12,913
    Downloads
    2
    Uploads
    0
    நன்றிகள் நண்பர்களே அனைவரின் கருத்திற்கும் ,கண்டிப்பாக இன்னும் சிறப்பாக முயற்சிக்கிறேன்
    அன்புடன்
    த.நந்தகோபால்

  8. Likes கீதம் liked this post

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •