Page 3 of 23 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast
Results 25 to 36 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
  1. #25
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஜானகி அம்மாவின் கருத்தே என்னுடையதும் ரமணி ஐயா.

    தங்கள் கவிதைகளை ஆவென வாய்பிளந்தபடி ரசித்துப் பாராட்டுகிறேன்.

    தொடரட்டும் தங்கள் இன்கவிமொழியாவும் வான்கவிமழையெனவே.

  2. Likes ரமணி liked this post
  3. #26
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    என் கவிதைகளை ரசித்துப் பாராட்டும் திருமதியோர் ஜானகி கீதம் இருவருக்கும் நன்றிகள் பல.

    சமீப காலம்வரை கவிதையின் பக்கமே தலைகாட்டாது இருந்தேன். யாப்பு பயிலத் தொடங்கிய பின்னரே கவிதையைச் செய்யுளாகச் செய்வதில் ஆர்வம் தோன்றி முனைந்து வருகிறேன். எனவே ஆர்வமும் கற்பனை வளமும் உள்ள எவரும் எளிதில் கவிதைச் செய்யுள் இயற்ற முடியும் என்பது என் கருத்து.

    அன்புடன்,
    ரமணி

  4. #27
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    17. பிரிவினை மனிதர்கள்!
    (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

    நாற்றுகள் நின்ற நிலத்தைக் கூறிட்டார் நாகரிகம் விளைக்க!
    ஆற்றினைக் கூறிட்டு ஆணைமீறி அணைகளில் தேக்கினார் -- நல்லவேளை
    காற்றினைக் கூறிடக் கருதவில்லை கருதினும் கருவி யில்லை!
    ஆற்றலின் மூலம் ஆதவன் ஒளியைக் கூறிட முடிந்திலை!

    உடலைக் கூறிட்டார் உயரமும் வண்ணமும் வளர்ச்சியும் கொண்டு!
    சுடலையும் கூறிட்டார் சுடவோ புதைக்கவோ இறந்து போனதை!
    அடலைத் தலைப்பட்டார் நடலையர் வார்த்தைகள் தடித்த போது!
    முடலை மைந்தர் விடவில்லை எதுவும் எல்லாமும் கூறுகளே!

    [அடலை=போர்(க்களம்), துன்பம்; நடலை=வஞ்சனை, பொய்;
    முடலை=உருண்டை (இங்கு globe--உலகம்]

    மண்ணைத் தோண்டினார் எண்ணெய் விளைத்து இன்பமாய் வாழ!
    விண்ணைத் தோண்டினார் விளைவுகள் அறிந்து வலிமை சேர்க்க!
    திண்ணைப் பேச்சுகளில் தீமை விளைக்கத் தவறாது தலைப்படுவார்!
    தன்னைத் தோண்டி மெய்ஞ்ஞானம் தழைக்கச் செய்வது வெகுசிலரே!

    [திண்ணைப் பேச்சு=lobbying]

    கலிகாலம் கலிகாலம் கொண்டதே கோலம் காண்பதே கோலாகலம்!
    வலிமை விளைக்கும் வலிகளில் மெலியோர் நலிவுறுங் காலம்!
    புலமைகள் பொழுது போக்கிட புன்மைகள் பூமி யாண்டிட
    தலைமை தாங்கி தர்மம் தழைக்கச் செய்வோர் எங்குளரோ?

    இறையே வந்தாலும் கறைபட்ட உலகின் குறைகள் தீருமோ?
    முறைகள் பிறழும் போது இறையும் முனியும் என்செயும்?
    உறைகளே உண்மையென உவந்திடும் மாந்தர் உரைப்பது கேட்பாரோ?
    இறையது உறைவது எழுவது தன்னுள்ளென உணர்ந்தால்தான் விடிவு!

    --ர்மணி, 13/01/2013

    *****

  5. Likes ஜானகி liked this post
  6. #28
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்கிறேன் ஐயா....

    தங்களின் எல்லாப் பதிவுகளுக்குமே லைக்ஸ் இட வேண்டும்

  7. Likes ரமணி liked this post
  8. #29
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    மிக்க நன்றி ஜான் அவர்களே!

    அன்புடன்,
    ரமணி


    Quote Originally Posted by ஜான் View Post
    கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்கிறேன் ஐயா....

    தங்களின் எல்லாப் பதிவுகளுக்குமே லைக்ஸ் இட வேண்டும்

  9. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    ரமணியின் குறள் வெண்பாக்கள்
    உத்திக் குறள்: முடிபிறழ் அடி
    (முதலிரு எழுத்துகள் மாறி ஈற்றுச் சீரிலோ அல்லது ஈற்றயல் ஈற்றுச்சீர் தொடர்ச்சியிலோ வருவது)
    26/01/2013

    தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
    ஆத்தா தடியெடுத் தா. ... 1

    உமாவீட்டு இட்டிலி மல்லிகைப் பூவென
    மையாய் அரையுமே மாவு. ... 2

    சுவாசப் பயிற்சிகளில் தேர்ந்து மனதை
    சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3

    சுகாதாரம் சிங்கார வஸ்துக்கள் அல்ல
    விகாரம் விளைப்பதே காசு. ... 4

    வாசிக்கப் பேப்பரைக் கேட்டதுதான் தாமதம்
    ஓசியா என்றான் சிவா. ... 5

    விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
    நிகழ்ச்சிகள் செய்தார் ரவி. ... 6
    [தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்.]

    புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
    தன்னலம் இல்லாத அன்பு. ... 7

    திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
    உறவாவார் பார்த்’சா ரதி. ... 8

    புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
    அறியுமோ வாழ்வில் இரிபு? ... 9
    [இரிபு=தோல்வி, வெறுப்பு]

    குலவும் கலியில் கலித்துக் களித்துப்
    பலவிதமாய் வாழும் உலகு. ... 10

    *****

  10. #31
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ரமணி View Post
    ரமணியின் குறள் வெண்பாக்கள்
    உத்திக் குறள்: முடிபிறழ் அடி
    (முதலிரு எழுத்துகள் மாறி ஈற்றுச் சீரிலோ அல்லது ஈற்றயல் ஈற்றுச்சீர் தொடர்ச்சியிலோ வருவது)
    26/01/2013

    தாத்தா தடியெடுத்தால் தண்டல ராவாரோ?
    ஆத்தா தடியெடுத் தா. ... 1

    உமாவீட்டு இட்டிலி மல்லிகைப் பூவென
    மையாய் அரையுமே மாவு. ... 2

    சுவாசப் பயிற்சிகளில் தேர்ந்து மனதை
    சுவாசத்தால் கட்டினான் வாசு. ... 3

    சுகாதாரம் சிங்கார வஸ்துக்கள் அல்ல
    விகாரம் விளைப்பதே காசு. ... 4

    வாசிக்கப் பேப்பரைக் கேட்டதுதான் தாமதம்
    ஓசியா என்றான் சிவா. ... 5

    விரல்களில் மோதிரம் மின்னிடத் தொக்கா
    நிகழ்ச்சிகள் செய்தார் ரவி. ... 6
    [தொக்கா=தொலைக்காட்சி என்பதன் சுருக்கம்.]

    புன்னகை இன்முகம் போதாது வேண்டுவது
    தன்னலம் இல்லாத அன்பு. ... 7

    திரமுள்ள பக்தியில் தீராது நின்றால்
    உறவாவார் பார்த்’சா ரதி. ... 8

    புரிந்து செயலாற்றின் போய்விடும் அச்சம்
    அறியுமோ வாழ்வில் இரிபு? ... 9
    [இரிபு=தோல்வி, வெறுப்பு]

    குலவும் கலியில் கலித்துக் களித்துப்
    பலவிதமாய் வாழும் உலகு. ... 10

    *****

    இவ்ளவு எளிதாக இருக்கிறதா என்று எனக்கும் கூட வெண்பா எழுத கை பரபரக்கிறது.

    மரபான விசயங்களை நவீன வார்த்தைகளோடு எளிமைபடுத்தியிருப்பது சமயோசித சிந்தனை.
    மிகவும் அருமையான கவிதைகள் ரமணி அவர்களே

  11. #32
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    02 Oct 2012
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    37,480
    Downloads
    0
    Uploads
    0
    மேலும் சிலவற்றை ஆழப்படித்ததில் மிக இயல்பாக நாம் பேசும் வஸனங்களிலிருந்து வெண்பா எடுப்பது மிக கடினம் என்றே தோண்றுகிறது. உதா,

    வாசிக்கப் பேப்பரைக் கேட்டதுதான் தாமதம்
    ஓசியா என்றான் சிவா. .

    இதற்குள்ளேயே மூழ்கிக் கிடந்தாலொழிய இப்படிஎழுத முடியாது என நினைக்கிறேன்.

    மற்றய கவிதைகளும் பிரமாதமானவைகளே..

    எனக்கொரு ஆசை.

    ஒரு நவீனகவிதை (அதாவது ஒன்றின் அடுக்கில் ஒன்று) வெண்பாவின் படி எழுதவேண்டுமென.
    ஒரு கட்டுக்குள் மொழியை கொண்டுவர இது ஒரு பயிற்சியாக இருக்குமல்லவா

    தொடர்ந்து எழுதுங்கள் ரமணி

  12. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    வணக்கம் விஜய்.

    வெண்பாவின் இலக்கணம் கைவந்தால், இன்றைய பேச்சு வழக்கில் வெண்பா எழுதுவது அப்படி ஒன்றும் கடினமல்ல. கீழே நேற்று நான் எழுதிய ’வெண்பாவில் கடிஜோக்ஸ்’ பாருங்கள்! நீங்களும் எளிதில் முயலாம், செந்தமிழ், பேச்சு வழக்கில்.

    உங்கள் நவீன கவிதை உத்தி சரியாகப் புரியவில்லை. ஒரு உதாரணம் மூலம் விளக்கவும்.

    அன்புடன்,
    ரமணி


    Quote Originally Posted by veruppuvijay View Post
    மேலும் சிலவற்றை ஆழப்படித்ததில் மிக இயல்பாக நாம் பேசும் வஸனங்களிலிருந்து வெண்பா எடுப்பது மிக கடினம் என்றே தோண்றுகிறது. உதா,

    வாசிக்கப் பேப்பரைக் கேட்டதுதான் தாமதம்
    ஓசியா என்றான் சிவா. .

    இதற்குள்ளேயே மூழ்கிக் கிடந்தாலொழிய இப்படிஎழுத முடியாது என நினைக்கிறேன்.

    மற்றய கவிதைகளும் பிரமாதமானவைகளே..

    எனக்கொரு ஆசை.

    ஒரு நவீனகவிதை (அதாவது ஒன்றின் அடுக்கில் ஒன்று) வெண்பாவின் படி எழுதவேண்டுமென.
    ஒரு கட்டுக்குள் மொழியை கொண்டுவர இது ஒரு பயிற்சியாக இருக்குமல்லவா

    தொடர்ந்து எழுதுங்கள் ரமணி

  13. #34
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    22. வெண்பாவில் கடிஜோக்ஸ்!

    கருப்பையா: ஜிம்மி குறைப்பதில் சிக்கல்!
    மிருக மருத்துவர்: ஐநூறு ஆகுமே?
    ஏன்டாக்டர் கொஞ்சம் குறைக்கலாமே கட்டணம்?
    நான்குறைத்தால் நாய்குரைக் காது! ... 1

    தமிழா சிரியர் தடியடிஏன் பட்டார்?
    தமிழா சிரியர் எவரெனக் கேட்க
    அடியேன் எனச்சொன்ன தால்! ... 2

    புத்தகம் அஞ்சல் கடிதம் இரண்டுக்கும்
    வித்தியாசம் என்ன தெரியுமா தோழா?
    படித்துக் கிழிப்பாயே புத்தகம் ஒன்றை!
    கடிதம் கிழித்துப் படி. ... 3

    ஒருசிறுவன் இன்னோர் சிறுவனிடம் சொன்னான்:
    திருமுருகா, எங்கப்பா ரொம்ப பயங்கொள்ளி!
    இன்னைக்கு சாலையை க்ராஸ்செய்தார் பாருடா
    என்கையை நல்லாப் பிடிச்சு! ... 4

    --ரமணி, 07/02/2013

    *****

  14. Likes முரளி liked this post
  15. #35
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    22. வெண்பாவில் கடிஜோக்ஸ்!

    கண்ணிரண்டும் பேசினால் காதல் உருவாகும்
    கண்ணீரே பேசினால் நட்பாகும் -- பண்ணும்
    பணமது பேசினால் யார்யாரோ சொந்தம்
    அனைவரும் பேசினால் இவ்வுலகம் -- நீயே
    தனியாகப் பேசினால்நீ லூசு! ... 5

    பாட்டீநான் பள்ளியில் ஓட்டப்பந்த் யத்திலே
    ஸ்மார்ட்டாக வின்பண்ண உன்னாசி வேணுமே!
    பையவே ஓடுகண்ணா வேகமாக ஓடினா
    கைகால் ஒடிஞ்சிடு மே! ... 6

    வகுப்பறையில் மாணாக்கன்: போடாநீ முட்டாள்!
    வகுப்பிலேயே நீதான் வடிகட்ன முட்டாள்!
    வரலாற்று வாத்தியார்: என்னசத்தம்? நாஅன்
    ஒருத்தன் இருக்கேனில் ல? ... 7

    என்னதான் சார்நீங்க சென்டிமென்ட் பாத்தாலும்
    முன்னால் எலுமிச்சை வைக்க முடியாது
    கப்பல் கிளம்பிடும் நேரம் வரும்போது
    தப்பாமல் ஊதுவது சங்கு! ... 8

    ’தன்கட்சி ஆட்சி தலைவருக்கே சந்தேகம்!’
    ’என்னையா சொல்லவறே? கன்னையா கீர்த்தி
    தெரியாதா?’ ’தான்ஜெயித்தால் ஊழலற்ற ஆட்சி
    தருவோம்னு சொல்றார் அவர்!’ ... 9

    என்கணவர் எப்போதும் டாக்டரின் அட்வைஸை
    நன்றாகக் கேட்டு நடப்பார் நளினி!
    அடேடே மருத்துவர் அட்வைஸா, காலால்
    நடப்பதற்குக் கூட அவர்! ... 10

    --ரமணி, 07/02/2013

  16. Likes முரளி liked this post
  17. #36
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    20. இறைவன் அருள்!
    (நிலைமண்டில ஆசிரியப்பா)

    அனைத்தும் இறைவன் அருளே என்று
    அரசனின் ஏவலன் ஒருவனெப் போதும்
    பணிகள் யாவும் புரிந்திடும் போது
    முணுமுணுத் தவாறே வணங்கிச் செய்தான். ... 1

    எரிச்சல் அடைந்த அரசன் அவனை
    நெரித்த புருவம் காட்டிக் கடிந்தும்
    முணுக்கும் வாயை மூடுதல் இன்றிப்
    பணித்தது புரிந்து வந்தான் பணியாள். ... 2

    ஒருநாள் ஏவலன் ஓய்வில் தன்னூர்
    விரும்பிச் சென்று திரும்பிய போது
    அரண்மனைத் தோப்பில் பறித்த திராட்சைகள்
    புரவலன் முன்பு பணிவுடன் வைத்தான். ... 3

    பழங்களைப் புரவலன் புசிக்கா(து) அவன்மேல்
    விழுமா றொவ்வொன் றாக எறிந்து
    விளையாடப் போக ஏவலன் தன்மேல்
    விழுந்த அடிகளை விருப்புடன் ஏற்றான். ... 4

    அரசன் கடைசிப் பழத்தை ஏறிந்து
    சிரித்துக் கொண்டே சொன்னான் அவனிடம்
    அடிகள் வாங்கிய இந்தச் சமயம்
    கடவுள் அருள்தான் காணாமற் போனதோ? ... 5

    ஏவலன் சொன்னான் ஏற்ற பதிலாய்:
    காவல! கடவுள் அருளால் அன்றோ
    நன்மை யாக முடிந்ததிப் போது!
    மன்னவன் முகத்தில் புரியா வியப்பு! ... 6

    விழும! உங்கள் தோப்பில் கண்ட
    பழுத்த விளாமரப் பழங்களை நானும்
    கொண்டு வந்து கொடுத்திருந் தாலெனக்கு
    உண்டு இல்லையன ஆயிருக்கு மன்றோ? ... 7

    ஏவலன் புத்தியும் பக்தியும் மெச்சிக்
    காவலன் தக்க பரிசுகள் தந்தனுப்பித்
    தன்னுள் புதிதாய் மன்னிய வித்தினை
    உன்னிப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தான். ... 8

    --ரமணி, 29/01/2013
    [கதை: பழைய குமுதம் பக்தி இதழில் இருந்து.]

    *****

Page 3 of 23 FirstFirst 1 2 3 4 5 6 7 13 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •