Page 12 of 23 FirstFirst ... 2 8 9 10 11 12 13 14 15 16 22 ... LastLast
Results 133 to 144 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
  1. #133
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    மூலம், தமிழில்:
    ஶ்ரீகணேஶபுஜங்கம்
    ஆதி ஶங்கராசார்ய


    ரணத்க்ஷுத் ரகண்டா நிநாதா பிராமம்
    . சலத்தாண் டலோத்தண் டவத்பத் மதாளம் |
    லஸத்துந் திலாங்கோ பரிவ்யா ளஹாரம்
    . கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 1 ||

    த்வனித்வம் ஸவீணா லயோல்லா ஸிவக்த்ரம்
    . ஸ்புரச்சுண் டதண்டோல் லஸத்பீ ஜபூரம் |
    கலத்தர்ப் பஸௌகந்த் யலோலா லிமாலம்
    . கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 2 ||

    ப்ரகாஶஜ் ஜபாரக் தரத்னப் ரசூன
    . ப்ரவாலப் ரபாதா ருணஜ்யோ திரேகம் |
    ப்ரலம்போ தரம்வக் ரதுண்டை கதந்தம்
    . கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 3 ||

    விசித்ரஸ் புரத்ரத் னமாலா கிரீடம்
    . கிரீடோல் லஸத்சந் ரரேகா விபூஷம் |
    விபூஷை கபூஷம் பவத்வம் சஹேதும்
    . கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 4 ||

    உதஞ்சத் புஜாவல் லரீத்ருச் யமூலோச்
    . சலத்ப்ரூ லதாவிப் ரமப்ரா ஜதக்ஷம் |
    மருத்சுந் தரீசா மரை:ஸேவ் யமானம்
    . கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 5 ||

    ஸ்புரந்நிஷ் டுராலோ லபிங்காக் ஷிதாரம்
    . க்ருபாகோ மலோதா ரலீலா வதாரம் |
    கலாபிந் துகம்கீ யதேயோ கிவர்யை:
    . கணாதீ ஷமீஸான ஸூனும் தமீடே || 6 ||

    யமேகாக் ஷரம்நிர் மலம்நிர் விகல்பம்
    . குணாதீ தமானந் தமாகா ரஶூன்யம் |
    பரம்பா ரமோம்கா ரமாம்னா யகர்பம்
    . வதந்திப் ரகல்பம் புராணம் தமீடே || 7 ||

    சிதானந் தஸாந்த்ரா யஶாந்தா யதுப்யம்
    . நமோவிஷ் வகர்த்ரே சஹர்த்ரே சதுப்யம் |
    நமோ&னந் தலீலா யகைவல் யபாஸே
    . நமோவிஷ் வபீஜப் ரஸீதே ஶஸுனோ || 8 ||

    இமம்ஸுஸ் தவம்ப்ரா தருத்வா யபக்த்யா
    . படேத்யஸ் துமர்த்யோ லபேத்சர் வகாமான் |
    கணேஶப் ரசாதே னஸித்யந் திவாசோ
    . கணேஶே விபௌதுர் லபம்கிம் ப்ரசன்னே || 9 ||

    *****

    மூலம், English transliteration:
    shrIgaNeshabhuja~ggam
    Adi sha~gkarAchArya


    raNatkShudrakaNThAninAdAbhirAmaM
    . chalattANDalOthtaNDavatpadmatAlam |
    lasattuntilAggOparivyAlahAraM
    . gaNAdIshamIshAnasUnuM tamIDE || 1 ||

    dhvanidhvaMsavINAlayOllAsivaktraM
    . sphurachchuNDadaNDOllasathbhIjapUram |
    galaddarppasaugandyalOlAlimAlaM
    . gaNAdIshamIshAnasUnuM tamIDE || 2 ||

    prakAshajjapAraktaratnaprasUna
    . pravAlaprabhAtAruNajyOtirEkam |
    pralambOdaraM vakratuNDaikadandaM
    . gaNAdIshamIshAnasUnuM tamIDE || 3 ||

    vichithraspurathratnamAlAkirITaM
    . kirITOllasathchanrarEkAvibhUSham |
    vibhUShaikabhUShaM bhavadhvaMsahEtuM
    . gaNAdIshamIshAnasUnuM tamIDE || 4 ||

    udajchatbhujAvallarIdruchyamUlOch
    . chaladbhrUlatAvibhramabhrAjadakSham |
    maruthsundarIchAmarai: sEvyamAnam
    . gaNAdIshamIshAnasUnuM tamIDE || 5 ||

    sphuranniShThurAlOlapigkAkShitAram
    . krupAkOmalOdAralIlAvatAram |
    kalAbindugam gIyatE yOgivaryai
    . gaNAdIshamIshAnasUnuM tamIDE || 6 ||

    yamEkAkSharaM nirmalaM nirvikalpaM
    . guNAtItamAnandamAkArashUnyam |
    paraM pAramOMkAramAmnAyagarbhaM
    . vadanti prakalbhaM purANaM tamIDE || 7 ||

    chidAnandasAndrAya shAntA yatubhyaM
    . namO vishvakartrE cha hartrE cha tubhyam |
    namO&nantalIlAya kaivalyabhAsE
    . namO vishvabhIja prasIdEshasunO || 8 ||

    imaM sustavaM prAtarutthAya bhaktyA
    . paThEdyastu martyO labhEtsarvakAmAn |
    gaNEshaprasAdEna sidhyanti vAchO
    . gaNEshE vibhau durlabhaM kiM prasannE || 9 ||

    *****

    மூலம், சமஸ்கிருதத்தில்:
    श्रीगणेशभुजङ्गम्
    आदि शङ्कराचार्य


    रणत्क्षुद्रकण्ठानिनादाभिरामं
    . चलत्ताण्डलॊथ्तण्डवत्पद्मतालम् ।
    लसत्तुन्तिलाग्गॊपरिव्यालहारं
    . गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ १ ॥

    ध्वनिध्वंसवीणालयॊल्लासिवक्त्रं
    . स्फुरच्चुण्डदण्डॊल्लसथ्भीजपूरम् ।
    गलद्दर्प्पसौगन्द्यलॊलालिमालं
    . गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ २ ॥

    प्रकाशज्जपारक्तरत्नप्रसून
    . प्रवालप्रभातारुणज्यॊतिरॆकम् ।
    प्रलम्बॊदरं वक्रतुण्डैकदन्दं
    . गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ३ ॥

    विचिथ्रस्पुरथ्रत्नमालाकिरीटं
    . किरीटॊल्लसथ्चन्ररॆकाविभूषम् ।
    विभूषैकभूषं भवध्वंसहॆतुं
    . गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ४ ॥

    उदज्चत्भुजावल्लरीद्रुच्यमूलॊच्
    . चलद्भ्रूलताविभ्रमभ्राजदक्षम् ।
    मरुथ्सुन्दरीचामरै: सॆव्यमानम्
    . गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ५ ॥

    स्फुरन्निष्ठुरालॊलपिग्काक्षितारम्
    . क्रुपाकॊमलॊदारलीलावतारम् ।
    कलाबिन्दुगम् गीयतॆ यॊगिवर्यै
    . गणादीशमीशानसूनुं तमीडॆ ॥ ६ ॥

    यमॆकाक्षरं निर्मलं निर्विकल्पं
    . गुणातीतमानन्दमाकारशून्यम् ।
    परं पारमॊंकारमाम्नायगर्भं
    . वदन्ति प्रकल्भं पुराणं तमीडॆ ॥ ७ ॥

    चिदानन्दसान्द्राय शान्ता यतुभ्यं
    . नमॊ विश्वकर्त्रॆ च हर्त्रॆ च तुभ्यम् ।
    नमॊऽनन्तलीलाय कैवल्यभासॆ
    . नमॊ विश्वभीज प्रसीदॆशसुनॊ ॥ ८ ॥

    इमं सुस्तवं प्रातरुत्थाय भक्त्या
    . पठॆद्यस्तु मर्त्यॊ लभॆत्सर्वकामान् ।
    गणॆशप्रसादॆन सिध्यन्ति वाचॊ
    . गणॆशॆ विभौ दुर्लभं किं प्रसन्नॆ ॥ ९ ॥

    --தமிழ் யாப்பு: ரமணி, 20/03/2014, கலி.06/12/5114

    *****

  2. #134
    புதியவர்
    Join Date
    12 Mar 2014
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    335
    Downloads
    0
    Uploads
    0

    Talking Yakkalam?

    Quote Originally Posted by ரமணி View Post
    வணக்கம்.

    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ரமணி
    Thoogamal Thoogi Sugam kanpathu Yakkalam?
    Beautiful verses.
    I really enjoyed that.

  3. #135
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    காலையில் தேதியைக் கிழித்தபோது படித்ததொரு வாசகம்:
    ’அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்’

    மாறுதலை என்பதாலோ ஐங்கரப் பிள்ளைக்கும்
    ஆறுதலை என்பதாலோ ஆறுமுகப் பிள்ளைக்கும்
    தேறிடவே பால்வராதே தேவிநரப் பிள்ளைக்கே
    ஊறியசம் பந்தம் உரை.

    --ரமணி, 09/04/2014

    *****

  4. #136
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதிப் பஞ்சகம்
    (வண்ணச் சந்த வெண்பா: தான தனந்தனனா தன்ன தனந்தனனா)

    ஆல மருந்திடவே யன்னை கரந்தருள்வாள்
    ஞாலம் புரந்திடவே நன்மை விளைந்திடவே
    லீலை புரிந்தவனை யின்மை களைந்திடவே
    ஓல மனந்தொழவே ருண்டு. ... 1

    கால மிகந்தவனே கன்னல் விருந்தெனவே
    சீலம் மிகுந்திடிலே சிந்தை நிறைந்திடுவான்
    கோல தனந்தனையே யுன்னு மனந்தனிலே
    பால மமைந்திடவே ருண்டு. ... 2

    ஏறு சிரந்தனிலே யின்றை யசந்தியிலே
    கூறு வணங்குடனே கொன்றை யதிர்ந்திடுமே
    ஆறு மிழிந்திடுமே அந்த நடந்தனிலே
    தேறு மனந்தனிலே தெம்பு. ... 3

    ஊனி லிழிந்திடவே உண்மை யழிந்திடுமே
    நானு னையுன்னிடவே நன்மை யடைந்திடவே
    ஈன வனந்தனிலே என்னை யுகந்தருள்வாய்
    ஊன மழிந்திடவே யுந்து. ... 4

    தீய துடைந்திடவே மேன்மை யடைந்திடவே
    தாவு மனந்தனிலே தங்கி யகந்தைதனை
    மேவு மனங்கெடவே மந்த மகன்றிடவே
    காவ லயென்மனம் குந்து. ... 5

    பதம் பிரித்து:
    பிரதோஷத் துதிப் பஞ்சகம்

    (வண்ணச் சந்த வெண்பா: தான தனந்தனனா தன்ன தனந்தனனா)

    ஆலம் அருந்திடவே அன்னை கரந்து-அருள்வாள்/கரம்-தருவாள்
    ஞாலம் புரந்திடவே நன்மை விளைந்திடவே
    லீலை புரிந்தவனை இன்மை களைந்திடவே
    ஓல மனந்தொழ-ஏர் உண்டு. ... 1 ... [ஏர்=எழுச்சி, அழகு, நன்மை]

    காலம் இகந்தவனே கன்னல் விருந்தெனவே
    சீலம் மிகுந்திடிலே சிந்தை நிறைந்திடுவான்
    கோல தனம்-தனையே உன்னு மனம்-தனிலே
    பாலம் அமைந்திட-ஏர் உண்டு. ... 2

    [கோலதனம் = சிவனது கோலத்தில் உள்ள செல்வங்களான
    மத்தம், மதியம், நதி, அரவு, தோல் போன்றன.]

    ஏறு சிரம்-தனிலே இன்றைய சந்தியிலே
    கூறு அணங்குடனே கொன்றை அதிர்ந்திடுமே
    ஆறும் இழிந்திடுமே அந்த நடம்-தனிலே
    தேறு மனம்-தனிலே தெம்பு. ... 3

    ஊனில் இழிந்திடவே உண்மை அழிந்திடுமே
    நானுனை உன்னிடவே நன்மை அடைந்திடவே
    ஈன வனம்-தனிலே என்னை உகந்து-அருள்வாய்
    ஊனம் அழிந்திடவே உந்து. ... 4

    தீயது உடைந்திடவே மேன்மை அடைந்திடவே
    தாவு மனம்-தனிலே தங்கி அகந்தை-தனை
    மேவு மனம்-கெடவே மந்தம் அகன்றிடவே
    காவல என்மனம் குந்து. ... 5

    --ரமணி, 10-12/04/2014, கலி.29/12/5114
    (சனிப் பிரதோஷ நாள்)

    *****

  5. #137
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    குறட்பா வித்தகம்: அடிமுடிமுரண் குறள்

    இந்த உத்திக்கு வேண்டுவன மூன்று:
    1. முதற்சீர், ஈற்றுச்சீர் சொற்களில் முரண் அமையவேண்டும்.
    2. இந்த முரண் பொருளில் அமைய வேண்டும்.
    3. இது தவிர, சீர்கள் 1-2, 3-4, 5-6 ஆகியவற்றில் முரண் அமையவேண்டும்.

    (உத்தி அமைப்பு: இலந்தை ராமசாமி:
    https://groups.google.com/forum/#!to...am/SZNKXJpVKOw)


    செல்வம் வருமது தீர்ந்திடும் மீள்வரினும்
    கல்லும் கொழுவற் கடம். ... 1

    [கல்லும் = அரித்திடும்; கொழு = செழித்த; வற்கடம் = வறட்சி என்பது முரண்.]

    உயிரும் உடலும் துயிலும் விழிக்கும்
    கயிற்றில் அரவின் அழிவு. ... 2

    [உயிர் அழிவற்றது என்பதால் இறுதிச் சொல் அழிவு என்பது முரண்.]

    தூளியில் தூங்காக் குழந்தைதன் அன்னையை
    ஏளனத்தில் போற்றத் தெளிவு. ... 3

    [தூளி = குழந்தைத் தொட்டில், புழுதி; எனவே தெளிவு என்பது முரண்.

    அன்னை எவ்வளவுதான் ஆட்டித் தூங்கவைக்க முயன்றாலும் தூங்காத குழந்தை
    தூளியை விலக்கித் தன் அன்னையை ஏளனமாக எட்டிப் பார்க்கிறது. இருப்பினும்
    அதன் பார்வையில் ஏளனத்தை விட அன்னையைப் போற்றும் பாசமே தெரிவதால்
    அன்னைக்கு குழப்பமோ சினமோ விளையாது ஒரு தெளிவு பிறக்கிறது.]

    சிவம்:
    இயைபில் முரணாய் இலங்கி யொடுங்கி
    முயல்விலே நிற்கும் முரண். ... 4

    அலையெலாம் ஓய்ந்தபின் செய்திட எண்ணில்
    நிலையாகிப் போகும் கரை. ... 5

    கணமே யுகமாகிக் காதல் சினமாகும்
    தணத்தல் அணத்தல் தனி. ... 6

    [தணத்தல் = நீங்குதல், பிரிதல்; அணத்தல் = மேலெழும்புதல், பொருந்துதல்;
    கணம் என்றால் கூட்டம் என்னும் பொருளில் தனி என்பது முரண்.]

    நிருத்தத்தில் நிற்கும் இறையினைக் கல்லென்
    றிருந்திடும் போக்கை நிறுத்து. ... 7

    விருத்தம் இளமை விழிப்பினில் ஓய்வு
    அருத்தனை முழுதும் ஒன்று. ... 8

    [விருத்தம் = விருத்தி, மூப்பு. ஓன்று என்பது விருத்திக்கு முரண்.
    அருத்தன் = பாதி உடலோன், எனவே முழுதும் என்றது முரண்.]

    தூங்காமல் தூங்கிடும் தூக்க விழிப்பினில்
    நீங்காமல் நிற்றல் விழிப்பு. ... 9

    [ஈற்றுச் சீரில் விழிப்பு என்பதற்கு எச்சரிக்கை என்னும் பொருள்.]

    மெய்யிது பொய்யெனும் எண்ணம் செயலுறுதல்
    உய்வெனவே ஆழும் உயிர். ... 10

    --ரமணி, 11/04/2014

    *****

  6. #138
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    குறட்பா வித்தகம்: எதிரொலிக் குறள்

    (ஈற்றுச் சொல் ஒரு கேள்வியாக முடிந்து, அதையொட்டியே விடையும் இருக்குமாறு புனைதல்.)

    இணைக்கும் பிரிக்கும் பிணைக்கும் எரிக்கும்
    தணலா வதெது மொழி? ... 1

    சிந்தை சிவனாகி இன்றுநாளை யென்றுதள்ளி
    முந்தாச் சிவநந் தனார்? ... 2

    பரிமேல் அமர்ந்தவண்ணம் பாழியெல்லைக் காவல் ... [பாழி = ஊர்]
    புரந்தருள் செய்யுமைய னார்? ... 3

    வாழ்வில் உறுக்கும் வலிகளின் வீரியம்
    தாழ எதுகா பணம்? ... 4 [காபணம் = ஒத்தடம், காக்கும் பணம்]

    சப்பண மிட்டமர்ந்தே தர்ப்பணம் செய்விக்க
    ஒப்ப-எது வாம்-அர்ப் பணம்? ... 5

    எதுமிக வேண்டியே ஏரம்பன் முன்னால்
    பொதுவில்போ டும்தொப் பணம்? ... 6 ... [தொப்பணம் = தோப்புக்கரணம்]

    மிகுதேவை யாகவெது இன்னாளில் வாழ்வில்
    தகையு றுநிரூ பணம்? ... 7

    தன்மனத்தில் தான்போகத் தன்மணம் ஓங்கிடவே
    முந்தும் எதுர மணம்? ... 8 ... [ரமணம் = ஆனந்தம் தருவது, ரமணரின் வழி]

    வெள்ளைக் கலையுடுத்தி விள்ளாத ஞானத்தை
    உள்ளிடும் பாரதி யார்? ... 9

    சீதைக்கு ராகவன் என்ன உறவென்று
    பேதையே இப்போது கேள்? ... 10

    --ரமணி, 12/04/2014, கலி.29/12/5114

    *****

  7. #139
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி: கேடுதனைக் களைவாயே!
    (அலங்காரபஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம்,
    சந்தவிருத்தம் என ஐந்து பாவின நிரலில் அமைந்தது)


    (வெண்பா)

    எருதேறிக் கொம்பிடையே நின்றாடும் ஈச!
    இருபுருவ மத்தியிலே தீயாய்க் கனன்றென்
    வினையெரிய நன்மை விளைவித்தே ஆன்மத்
    தனகினையே தந்தருள் வாய். ... 1
    [தனகு = தன்+நகு = உள்ளக்களிப்பு]

    (கலித்துறை: மா கூவிளம் விளம் விளம் மா)

    திரண்ட நஞ்சினைத் தீங்கனி யாய்க்கொளும் சிவனே!
    இருண்ட நெஞ்சகத் தீமையைக் கொள்வதும் என்றோ?
    வரண்ட பாலையின் மாயையே வளமெனும் வாழ்வில்
    விருப்பம் குன்றிட விழுமமே தந்தருள் விமல! ... 2

    (அகவல்)

    உமையோர் பாகமா யுகந்தே காக்கும்
    நமச்சி வாயமென் நலிவைப் போக்கும்!
    கணத்தை யாளும் காடுறை யீசன்
    நணுகிட என்னுள் அவிழும் வேசம்!
    செஞ்சடை மீதிழித் தீம்புன லாட
    நெஞ்சகத் தீயதாம் நினைவுக ளோடும்!
    மனத்தெழு நினைவின் மாயையில் ஊனம்
    அனைத்தையும் கொண்டே ஆனேன் ஏனம்!
    வனத்துறை யீசனென் வாழ்வினி லோங்கும்
    அனத்தம் போக்கியே ஆட்கொள வேண்டும்! ... 3

    (அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா விளம் மா தேமா)

    சந்தியில் ஆடல் கண்டே
    . சஞ்சலம் என்னுள் தீர்ந்தே
    வெஞ்சினம் அகத்தில் வீழ்ந்தே
    . எஞ்சுவ தன்பே யாகத்
    தஞ்சமாய் ஈசன் தாளைத்
    . தழுவியே என்னுள் ஓங்கும்
    அஞ்சனம் அகல நானும்
    . அரன்ருள் பெறுவ தென்றோ? ... 4

    (வண்ண விருத்தம்:தந்ததனத் தானதனத் தனதான)

    பந்தமுறக் காமமுறக் கடையேனாய்
    . அந்தகமுற் றாமையெனச் செலும்வாழ்வில்
    சிந்தையறத் தீமையுறத் தனியாகி
    . எந்தையிணைத் தாளணையாப் பதரானேன்
    நந்திதலைக் கோடுமிசைப் பதமேவி
    . அஞ்சலெனச் சூலமெடுத் தழலாடும்
    சந்திரனைச் சூடுதலைச் சடையோனே
    . அந்தநிலைக் கேடுதனைக் களைவாயே. ... 5

    --ரமணி, 26/04/2014, கலி.13/01/5115
    (சனிப் பிரதோஷ நாள்)

    *****

  8. #140
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    தெய்வ தரிசனம்: தில்லைக் கற்பக விநாயகர்
    (விவரம்: http://natarajadeekshidhar.blogspot....blog-post.html)
    (குறும்பா)

    தில்லைமேவும் கற்பகவி நாயகனே
    எல்லையிலாப் பெருவெளியா யானவனே
    . கற்புடைப்புக் கற்பகமாய்ச்
    . சிற்பமான அற்புதமாய்
    அல்லலற அருள்செய்யும் தூயவனே. ... 1

    குடதிசையின் வீதியுன்றன் விழிபடவே
    கடையெல்லாம் செல்வமுற வழிபடுமே
    . கடையாளர் ஏற்றிடுவார்
    . கடன்நீக்கித் தேற்றிடுவாய்
    இடரேது உன்பாதம் வழிபடவே. ... 2

    நள்ளிரவில் துருவாசர் தில்லைவரப்
    பள்ளியது மூடிடவர் தொல்லையற
    . அன்னையவள் அன்னம்தர
    . இன்முகன்நீ முன்னம்வர
    வெள்ளியனின் ஆடலுன்றன் விள்ளலென. ... 3

    பதமாடும் செவியாடும் தலையாடும்
    கதுப்புடலின் வளமெங்கும் அலையோடும்
    . கிண்கிணியும் ஆர்த்திடவே
    . கண்ணிமையாப் பார்த்திடவே
    விதிர்ப்பினிலே களியுண்டார் சிலையாக. ... 4

    சோழனின்பின் பாண்டியனின் திருப்பணியே
    வேழமுகன் தில்லைமேவும் உருவணியே
    . நந்திமுன்னே நடமாடும்
    . தந்தனவன் இடம்நாட
    ஆழமுறும் தரிசனத்தால் செறுத்தணிவே. ... 5

    --ரமணி, 03/05/2014, கலி.20/01/5115
    (சதுர்த்தி தினம்)

    *****

  9. #141
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    ஆன்மீகச் செய்திக் கவிதை
    1. சித்திரை 25
    ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் சித்திரை பிரம்மோற்சவத்தில்
    இன்று உருகு சட்டச் சேவை



    கோயில் விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=132

    ஆறுமுக மங்கல ஆயிரத்தெண் விநாயகர்
    (எண்சீர் விருத்தம்: தேமா விளம் தேமா விளம் அரையடி)

    ஆதி சங்கரர் ஐந்து கரத்தனை
    . அஞ்சு பாடலில் ஏத்தும் தலத்தினில்
    பாதி மேனியர் பாவை யுருத்திரன்
    . பார்க்க அறுமுக மங்க லந்தனில்
    வேதம் ஓதவே வந்த அந்தணன்
    . வேழ முகத்தனாய்க் கோயில் கொள்பவன்
    வீதி வலத்துடன் உற்ச வங்கொள
    . வீழு மனந்தனில் காண இன்பமே.

    --ரமணி, 08/05/2014

    *****

  10. #142
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    ஆன்மீகச் செய்திக் கவிதை 2.
    சித்திரை 26

    வீரபாண்டி ஶ்ரீகௌமாரியம்மன் ஸன்னதித் தெருவில் ரதோத்ஸவம்.


    கோயில் விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=489

    வீரபாண்டி கௌமாரியம்மன்
    (எண்சீர் விருத்தம்: மா தேமா விளம் மா . விளம் தேமா விளம் தேமா)

    அருகம் புல்லால் வைகையின் கரையில்
    . அசுரனைக் கொன்ற அன்னைகௌ மாரி
    அரசன் வீர பாண்டியன் விழியின்
    . பார்வையை மீட்டுத் தந்தகௌ மாரி
    மருந்தாய் மஞ்சள் வேப்பிலை தந்தே
    . மக்களின் நோயைத் தீர்த்தகௌ மாரி
    திருநாள் கொண்டே சித்திரை மாதம்
    . தேரினில் வீதி வலம்வரு வாளே.... 1

    உருவாய்த் தானே லிங்கமாய்த் தோன்றி
    . உடல்வரும் நோயை நீக்குகௌ மாரி
    மருத்து வச்சி யென்றொரு பேரால்
    . மன்பதை யேத்தும் அன்னைகௌ மாரி
    நெருக்கும் துன்பம் தீர்ந்தபின் பலவாய்
    . நேர்கடன் கொள்ளும் அன்னைகௌ மாரி
    அரவும் ஆத பத்திரம் அமைக்க ... [ஆதபத்திரம் = குடை]
    . வருபவள் தாங்கும் பெண்டிரின் தோளே.... 2

    உருத்தி ரன்போல் பிறையுடன் கண்ணும்
    . உடுக்கையும் தோலும் ஆண்டொரு நாளின்
    இரவிற் கொண்டே ஈசனும் தானும்
    . இரண்டல வென்றே தோன்றுகௌ மாரி
    உருவில் தாயாய்க் கனிவுடன் மக்கள்
    . புரந்திடும் வீர பாண்டிகௌ மாரி
    தருவாள் அன்பும் இன்பமும் என்றும்
    . அவள்கழல் தஞ்சம் போக்கிடும் தீதே.... 3

    --ரமணி, 09/05/2014

    *****

  11. #143
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    ஆன்மீகச் செய்திக் கவிதை 3.
    சித்திரை 27

    சோழசிம்மபுரம் ஶ்ரீலட்சுமிநரசிம்மப் பெருமாள் கோவிலில் சித்திரை ரதோத்ஸவம்


    (கோவில்: http://temple.dinamalar.com/New.php?id=542
    தலபுராணம்: http://www.archive.org/download/soli...r015340mbp.pdf)

    அரிமாவரித் துதி
    (அலங்காரப் பஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், வண்ணம்
    என்னும் ஐந்து பாவின நிரலில் அமைந்த அந்தாதி மாலை.)

    (வெண்பா)

    அண்டனும் உண்டெனக் கண்டகன் கண்டிட
    விண்டதோர் கந்தெழு விண்டல முண்டவன்
    மிண்டனின் பிண்டமும் இண்டுகி ழித்துருக்
    கண்டீ ரவங்கொள் களம்.

    [அண்டன் = கடவுள்; கண்டகன் = அசுரன் (இரண்யகசிபு); கந்து = தூண்;
    மிண்டன் = அறிவில்லாதவன்; பிண்டம் = உடல்; இண்டு = ஈண்டு; கண்டீரவம் = சிங்கம்;
    விண்டலம் = ஆகாயம்; விண்டலம் உண்டவன் = ஆகாயம் முழும் வியாபித்திருக்கும் விஷ்ணு]

    (கலித்துறை: புளிமா காய் கூவிளங்காய் விளம் கூவிளங்காய் )

    களந்தென் னகோபிலமே கண்டகன்கொல் லுக்கிர மாவுருவே
    இளையாள் விழிநோக்கப் பூவரசாய்க் காண்முனி சிம்மவுரு
    வளமார் பிறதலத்தில் பல்வகையில் மேவிடும் ஆளியுரு
    உளங்கொள் வரம்தரும் உக்ரசாந்த இருமையில் உறுமுமுரு.

    [களந்தென் னகோபிலம் = தென் தலமாகிய அகோபிலம்; கண்டகன் = அசுரன்;
    இளையாள் = இலக்குமி; பூவரசு = பூவரசம் குப்பம் தலத்துறையோன்; ஆளி = சிங்கம். ]

    (அகவல்)

    உருநர சிம்மமாய் யோகத் தமர்ந்தே
    திருக்கடி கைமலைச் சேத்திரம் மேவி
    வருவினை வல்வினை மனக்குறை தீரத்
    திருவருள் புரியும் தீங்கனி நாதன்
    இரத மிவர்ந்து வீதி வலம்வரத்
    திருநாள் கொள்ளும் சித்திரை யின்னாள்
    பெரிய மலையுறைப் பெருமாள் தாயார்
    சிறிய மலையுறைச் சிறிய திருவடி ... [சிறிய திருவடி = அனுமன்]
    தரிசனம் செய்யத் தகைமை பெற்றே
    கரிசனம் ஓங்கும் களிப்பினில் வாழ்வே.

    (அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா விளம் மா தேமா)

    வாழ்வினில் பெருமாள் நாமம்
    . ஆயிரம் அனைத்தும் ஓத
    தாழ்வெலாம் நலிந்தே மாயும்
    . தன்னலம் விட்டுச் செல்லும்
    பாழ்வினை குறைந்தே மாளும்
    . பற்றிலா அன்பு கொள்ளும்
    வாழ்வளம் பெருகி யோங்க
    . மாயையும் தெளியும் நேரே.

    (வண்ணம்: தானன தானன தான தன்னன)

    நேர்மையில் வாழவும் ஞேயம் தங்கவும் ... [ஞேயம் = நேயம், அறியப்படும் பொருள்]
    பார்வையில் மாயையின் பாதை மங்கவும்
    சோர்வறு நேர்கடன் ஓர்மை வந்திடும் ... [நேர்கடன் = முயற்சி; ஓர்மை = துணிவு, நினைவு]
    ஈர்மையை நான்பெற வேண்டும் அண்டனே. ... [ஈர்மை = நுண்மை, இனிமை, பெருமை.]

    --ரமணி, 10/05/2014, கலி.27/01/5115

    *****

  12. #144
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி: கண்வண்ணம் காட்டி யருள்!
    (அலங்காரப் பஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், வண்ணம்
    என்னும் ஐந்து பாவின நிரலில் அமைந்த அந்தாதி மாலை.)


    வெண்பா
    பால்வண்ண மேனியிலே ஆள்வெண்ணீ றாயவனும்
    நால்வண்ண வேதமிழைக் கால்வண்ணம் ஆடையிலே
    பெண்வண்ணம் வாமமுறப் பேய்வண்ணம் தட்சிணமாய்க்
    கண்வண்ணம் காட்டியருள் வான்.

    (கவித்துறை: காய் காய் மா மா காய்)
    வான்கலந்த விடையவனே அந்தி வண்ண அமைதியிலே
    தேன்கலந்த பண்ணதிலே தேவன் வண்ணம் தீந்தமிழே
    ஊன்கனந்த உயிரினிலே உளமாம் துளிரில் ஒளிதங்கி
    நான்கலந்த இம்மையிலே இன்னல் தீர நாடுவனே.

    (அகவல்)
    நாடுவன் எங்ஙனம் நண்ணுவன் எங்ஙனம்
    காடென வினையெலாம் கவிழும் மனதிலே!
    கூடென வாழும் உடலிதே பீடெனில்
    ஏடெவண் வந்துறும் பீடையே வருமே!
    காடுறும் சாம்பலைக் காமுறும் மேலவன்
    வீடெதும் இலையெனில் வினைகளைக் கொல்லும்
    வேடனாய் வரவே வேண்டுவன் உளத்திலே!
    ஆடலின் நாயகன் அமைவுறும் சந்தியின்
    பாடலில் தீருமே பாடெலாம்
    நாடுவேன் உமையவள் நாயகன் செவ்வணமே.

    (எழுசீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்கள்)
    செவ்வண்ணம் வானுறுமே சிந்தையெலாம் தேனுறுமே
    . செம்மேனி யபிடேகச் சீருறுமே
    செவ்வண்டுக் கூட்டினுள்ளே புழுவாக நிற்குமுயிர்ச்
    . சிந்தையிலுன் மந்திரமே அதிர்வுறுமே*
    இவ்வண்ணம் தங்காதே ஈனத்தில் உளமுறுமே
    . இருமையெனும் மாயையதன் மயலுறுமே
    எவ்வண்ணம் இருந்தாலும் என்னுள்ளம் வந்தருள்வாய்
    . எப்பொழுதும் உன்னாமம் நினைவுறவே.

    [*செவ்வண்டின் இனப்பெருக்கம் பற்றிய குறிப்பு:
    http://sithharwaves.blogspot.in/2011..._archive.html]

    (வண்ணக் கலிவிருத்தம்: தனனன தனனன தனனானன தானன)
    நினைவுறும் உளமதில் நிறைவேறிடும் ஈசனவன்
    வினையுறும் உயிரதன் விழைவேறிட ஈவனவன்
    சுனையுறும் வளமென உயிரேறிடும் ஏகனவன்
    நனைவுறும் அனையென அணுகேனவன் பால்வணமே.

    [நனைவுறும் அனை = ஈரமும் ஊறும் அன்னை]

    --ரமணி, 12/05/2014, கலி.29/01/5115

    *****

Page 12 of 23 FirstFirst ... 2 8 9 10 11 12 13 14 15 16 22 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •