Page 11 of 23 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 ... LastLast
Results 121 to 132 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
  1. #121
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி 5.
    தேட்டளவில் வேற்றுமையே!
    (குறும்பா)

    கருவறையில் அபிடேக மூலவன்
    பிரகாரம் உலவுகையில் மேலவன்
    . . பாதந்தோள் அழுத்திடவே
    . . வேதவொலி வழுத்திடவே
    வருவானே மேனியிரு பாலவன். ... 1

    பாற்கடலில் ஓங்கியெழு நஞ்சினை
    நாற்கரத்தில் ஓர்கரத்தில் பஞ்சென
    . . ஏந்தியவன் உண்டிடவே
    . . ஏந்திழையாள் கண்டிடவே
    மேற்கழுத்தில் வடுநிற்கும் பிஞ்சென. ... 2

    நந்தியிரு கொம்பிடையே ஆடுவான்
    பந்தமெலாம் நலிந்திடவே சாடுவான்
    . . திருமறைகள் போற்றியவன்
    . . அருமறைகள் ஆற்றியவன்
    சந்தியிலே ஊர்வலமும் நாடுவான். ... 3

    வானவரும் காணாத பிரமமாம்
    நானிலத்தை இயக்குகின்ற தருமமாம்
    . . கருமபல தாதனவன்
    . . உருவுலக நாதனவன்
    மானிடர்க்கோ விளங்காத மருமமாம். ... 4

    ஏட்டளவில் மனதினிலே ஏற்றியுமே
    பாட்டளவில் எழுதியுமே போற்றியுமே
    . . காற்றினிலே போனதுவாய்
    . . நேற்றெனவே ஆனதுவாய்
    தேட்டளவில் தெரிவதெலாம் வேற்றுமையே. ... 5

    --ரமணி, 28/01/2014

    *****

  2. #122
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    தெய்வ தரிசனம்: எண்கண் சுப்ரமண்ய சுவாமி
    (விவரம்: http://temple.dinamalar.com/New.php?id=741)
    (குறும்பா)

    எண்கண்ணூர் சுப்ரமண்ய சுவாமியே
    நண்ணுவோரை நல்லறத்தில் நேமியே ... [நேமித்தல்=நியமித்தல்]
    . . மயில்போலே மனையொன்று
    . . குயில்போலே இனுமொன்று
    அண்ணலவன் அன்னையவள் வாமியே. ... 1 ... [வாமி=பார்வதி]

    பிரணவத்தின் பொருளறியா திருளினால்
    பிரமனிடம் படைத்தலையே உருவினாய்
    . . எண்கண்ணன் வழிபடவே ... [என்கண்ணன் = பிரம்மன்]
    . . எண்தோளன் வழிவிடவே ... [எண்டோளன் = சிவன்]
    பிரணவமும் படைத்தலுமே அருளினாய். ... 2

    ஆறுமுகன் மூலவனின் சிற்பமதே
    வேறெங்கும் காணாத அற்புதமே
    . . வேலவனின் எடைமுழுதும்
    . . கோலமயில் இடையழுந்தும்
    ஓர்காலில் மயிலதுவும் நிற்பதுவே. ... 3

    முன்புறமும் பின்புறமும் மூன்றுமுகம்
    பன்னிருகை ஆயுதங்கள் தோன்றுமுகம்
    . . வேலுடனே சக்கரமும்
    . . சூலமும்சே வற்கொடியும்
    உன்னடியார் உள்நிறைந்தே யூன்றுமுகம். ... 4

    சிக்கலெட்டுக் குடியெண்கண் மூவிடமே ... [சிக்கல், எட்டுக்குடி, எண்கண் என்ற மூன்று தலங்கள்]
    தக்கணனின் மகன்நீயும் மேவிடவே ... [தக்கணன் = தட்சிணாமூர்த்தி]
    . . ஒருசிற்பி ஓரமைப்பில்
    . . திருவுருவைச் சீரமைக்க
    சக்திமகன் அருளும்வழி கோலிடுமே. ... 5

    இரண்டாவது குலோத்துங்கச் சோழனுமே
    அரன்கோவில் என்றமைத்த பாழியிதே
    . . எண்டோளன் அரனனெனினும்
    . . எண்கண்ணூர் அரன்மகனே
    பிரதானம் வழிவந்த வாழையென. ... 6

    பிருகுமுனி சாபத்தினால் கொற்றவனும்
    உருவத்தில் சிம்மமுகம் பெற்றனனே
    . . தைத்திங்கள் அருதினமுன்
    . . கைத்தலமும் தரிசனமும்
    அரசனவன் தன்முகமும் பெற்றனனே. ... 7

    உறுகோளாய் உருத்துவரும் வேதனையா?
    அறுமுகனுக் கபிஷேகா ராதனையே
    . . இளநீரும் சந்தனமும்
    . . உளமாறும் வந்தனையில்
    குறைநீங்கி உள்ளோங்கும் சாதனையே. ... 8

    பன்னிருகை வேலவனின் தாள்பணிந்தே
    அன்னவனின் நலம்விளைக்கும் நீறணிந்தே
    . . விரதமுடன் வழிபடவே
    . . வருவினைகள் வழிவிடுமே
    உன்னதமாய் உயர்ந்திடுவோ மேதுணிந்தே. ... 9

    தக்கணனின் மகனெனவே தேவனிவன்
    தெக்குநோக்கி யருள்செய்யும் வேதமகன்
    . . அறிவாயுள் உடல்நலனும்
    . . செறிஞானம் திடமனமும்
    எக்கணமும் நலம்வரவே ஓதுவமே. ... 10

    --ரமணி, 05/02/2014, கலி.23/10/5114

    *****

  3. #123
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஶத் துதி: குஞ்சிதபாதன் பஞ்சகம்

    (தனத்தன தானன தானன தனந்தனதானா)

    புனற்சடை யாறது போகமும் புரந்தருளாதோ?
    அனற்கர சோதியு மேகமுஞ் கரந்தரளாதோ?
    கனற்றிடும் பார்வையே காதலுஞ் சுரந்தருளாதோ?
    வனத்தினி லாடிடும் வானவன் நிரந்தருள்வானே. ... 1

    தனத்தன தானன தானன தன்னனதன்ன

    இடப்புற மாதவ ளீதலு மன்னையைவிஞ்சும்
    சடைத்தலை மேவிடுந் தானவன் வின்னமென்றெஞ்சும்
    மிடற்றினில் நீலவன் மேவிட வென்மனம்கெஞ்சும்
    விடைப்புற மேறிடும் வேடனும் முன்னுறுநெஞ்சம். ... 2

    தனத்தன தானன தானன தன்னனதான

    உருத்திரன் மேனியி லூர்வது நஞ்சரவாகும்
    குருத்துவ மாள்பவன் கோபதி பிஞ்ஞகனாவன்
    தரித்திடும் நீறினில் தாபமு மெஞ்சிலதாகும்
    சிரித்தவன் மூவெயி லேமனே குஞ்சிதபாதன். ... 3

    தகித்திடும் தீயுட னாடிடும் நஞ்சுணிநாமம்
    அகத்தினி லேறிடி லாடுமே குஞ்சிதபாதம்
    இகத்தினில் வேறெதும் வேண்டல நெஞ்சினராகில்
    பகுத்திடும் ஞானமும் பாய வெஞ்சினம்போமே. ... 4

    தத்தன தானன தானன தாந்தனதானா

    இத்தனை காலமு மீசனை யோர்ந்திலனானேன்
    அத்தனின் பாதமு மாரவே சேர்ந்திலனானேன்
    மத்தமும் போகவே மாதவள் சேர்ந்திடும்தேனே
    சித்தினுள் ளையன் சேவடி நேர்ந்தருள்வாயே. ... 5

    --ரமணி, 10-12/02/2014, கலி.30/10/5114

    *****

    பதம் பிரித்து:
    பிரதோஶத் துதி: குஞ்சிதபாதன் பஞ்சகம்


    (தனத்தன தானன தானன தனந்தனதானா)

    புனற்சடை ஆறது போகமும் புரந்து-அருளாதோ?
    அனற்கர சோதியும் ஏகமும் கரந்து-அரளாதோ? ... [ஏகம்=முக்தி, வீடு]
    கனற்றிடும் பார்வையே காதலும் சுரந்து-அருளாதோ?
    வனத்தினில் ஆடிடும் வானவன் நிரந்து-அருள்வானே. ... 1

    தனத்தன தானன தானன தன்னனதன்ன

    இடப்புற மாதவள் ஈதலும் அன்னையைவிஞ்சும்
    சடைத்தலை மேவிடும் தானவன் வின்னமென்று-எஞ்சும் ... [தானவன்=சந்திரன்]
    மிடற்றினில் நீலவன் மேவிட என்மனம்கெஞ்சும்
    விடைப்புறம் ஏறிடும் வேடனும் முன்னுறுநெஞ்சம். ... 2 ... [விடைப்புறம்=எருதின் முதுகு]

    தனத்தன தானன தானன தன்னனதான

    உருத்திரன் மேனியில் ஊர்வது நஞ்சரவு-ஆகும்
    குருத்துவம் ஆள்பவன் கோபதி பிஞ்ஞகன்-ஆவன் ... [குருத்துவம்=ஆசாரியத்தன்மை]
    தரித்திடும் நீறினில் தாபமும் எஞ்சு-இலது-ஆகும்
    சிரித்தவன் மூவெயில் ஏமனே குஞ்சிதபாதன். ... 3 ... [ஏமன்=எமன்]

    தகித்திடும் தீயுடன் ஆடிடும் நஞ்சுணிநாமம்
    அகத்தினில் ஏறிடில் ஆடுமே குஞ்சிதபாதம்
    இகத்தினில் வேறெதும் வேண்டல நெஞ்சினர்-ஆகில்
    பகுத்திடும் ஞானமும் பாய வெஞ்சினம்போமே. ... 4

    தத்தன தானன தானன தாந்தனதானா

    இத்தனை காலமும் ஈசனை ஓர்ந்திலன்-ஆனேன்
    அத்தனின் பாதமும் ஆரவே சேர்ந்திலன்-ஆனேன்
    மத்தமும் போகவே மாதவள் சேர்ந்திடும்தேனே ... [மத்தம்=மயக்கம்]
    சித்தினுள் ஐயன் சேவடி நேர்ந்து-அருள்வாயே. ... 5

    --ரமணி, 10-12/02/2014, கலி.30/10/5114

    *****

  4. #124
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    அன்புடையீர்!

    வெகுநாட்களாக இந்தத் துதியைத் தமிழில் முயலும் ஆர்வமிருந்ததில்
    கணபதி அருளால் இன்று அது நிறைவேறியது.

    அறிஞர்களும் அன்பர்களும் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    ரமணி

    *****

    5. தெய்வ தரிசனம்: ஸங்கடநாசன கணேச ஸ்தோத்திரம்
    (நாரதமுனி அருளிச்செய்த மூலத்தின் தமிழாக்கம்)
    (குறும்பா)

    தலைசாய்த்தே முதல்வணங்க வானவனே
    மலைமகளின் மகனாம்வி நாயகனே
    . . பத்தருளம் கொண்டவனை
    . . நித்தியமும் அண்டிடுவோம்
    நிலையாயுள் விழைபொருளும் ஈபவனே. ... 1

    முதற்பேரே வளைதுதிக்கை யன்னாக
    அதற்கடுத்து ஒருகோடன் என்றாக
    . . மூன்றாவது கறைபழுவாய்த் ... [கறைபழு = கரும்பழுப்பு]
    . . தோன்றுகின்ற கருவிழியன்
    அதன்பின்னே ஆனைமுகன் என்றாகும். ... 2

    பகடுவயி னென்பதுவே ஐந்தாம்பேர்
    பகடுடல னென்பதுவே ஆறாம்பேர்
    . . ஊறுகளை வேரறுக்கும்
    . . ஊறழிமன் ஆறடுத்தே ...
    புகைவண்ணன் என்பதுவே எட்டாம்பேர். ... 3

    [பகடு = பெருமை, பரப்பு, வலைமை; வயின் = வயிறு;
    ஊறு = இடையூறு; மன் = மன்னன்]

    ஒன்பதாகும் பேரெனவே பிறைநுதலோன்
    ஒன்பதின்பின் பத்தெனவே குறைகளைவோன்
    . . கணக்குழுமம் அதிபதியாம்
    . . கணபதிபேர் பதினொன்றாம்
    பன்னிரண்டாம் பேராகும் கறையடிவாய். ... 4

    [கறையடி = (உரல் போன்ற அடியுடைய) யானை]

    பன்னிரண்டு பெயர்களுடன் முச்சந்தியில்
    நன்முறையில் துதிப்போர்க்கே இச்சந்தகம்
    . . இடையூறு பயமின்றி
    . . இடையில்லா நயமென்றே
    உன்னுவதும் உவப்பதுமே நிச்சந்தகும். ... 5

    [முச்சந்தி = காலை, உச்சி, மாலை என்னும் மூன்று பொழுதுகள்;
    இச்சந்தகம் = இந்த மகிழ்ச்சி; நிச்சம் = நிச்சயம்]

    அறிவிழைவோர் பெற்றிடுவார் அறிவெல்லாம்
    வெறுக்கையெனில் உறும்செல்வச் செறிவெல்லாம்
    . . புத்திரனை விழைந்திடிலோ
    . . அத்திறமும் தழைந்திடுமே
    பிறவன்றி முத்திவேண்டிற் பரமெல்லாம். ... 6

    [அறி = அறிவு; வெறுக்கை = செல்வம்; அத்திறம் = அத்தகைய மேன்மை, குலம்;
    பரமெல்லாம் = எல்லாவற்றிலும் மேலான பரம் என்னும் முக்தி]

    கணபதியின் துதியிதுவே ஆறுமாதம்
    உணவெனவே கொண்டிடவே ஊறுபோகும்
    . . ஒருவருடம் வேண்டிடினே
    . . விரும்புவதே ஆண்டுவரும்
    திணமாக வேதுமையக் கூறேகும். ... 7

    [திணமாக = திண்ணியமாக; ஏதும்-ஐயக்கூறு = எதேனும் ஐயத் தன்மை]

    எவரொருவர் இத்துதியை எழுத்தாலே
    சிவம்விழையும் எட்டுபேர்க்கே அளித்தாலே ... [சிவம் = மங்களம், நன்மை]
    . . நீக்கமற நிறைந்திருக்கும்
    . . ஆக்கம்வர அறிந்திருப்பர்
    சிவமைந்தன் கணபதியின் அருளாலே. ... 8

    --ரமணி, 18/02/2014, கலி.06/11/5114

    குறிப்பு:
    மூல ஸ்தோத்திரம் குறிக்கும் பன்னிரண்டு கணபதி பெயர்களும் தமிழாக்கமும் (முறையே):

    01. வக்ரதுண்ட: = வளைதுதிக்கையன்
    02. ஏகதந்த: = ஒருகோடன்
    03. கிருஶ்ணபிங்காக்ஷ: = கரும்பழுவிழியன்
    04. கஜவக்த்ர: = ஆனைமுகன்
    05. லம்போதர: = பகடுவயினன்
    06. விகட: = பகடுடலன்
    07. விக்னராஜா = ஊறழிமன்
    08. தூம்ரவர்ண: = புகைவண்ணன்
    09. பாலசந்த்ர: = பிறைநுதலோன்
    10. விநாயக: = குறைகளைவோன்
    11. கணபதி = கணபதி
    12. கஜானன: = கறையடிவாய்

    ஸமஸ்கிருத மூலம்:
    http://www.greenmesg.org/mantras_slo...hak_stotra.php
    http://blog.practicalsanskrit.com/20...a-stotram.html

    *****

  5. #125
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    4. தெய்வ தரிசனம்: ஐயப்பன் துதி
    (விவரம்: http://www.ayyappatemple.in/)
    (குறும்பா)

    சபரிமலை நாயகனே ஐயப்பா
    உபரியெலாம் நீங்கவருள் செய்யப்பா ... [உபரி = ஆன்மாவைப் பற்றியுள்ள உடல், மனம் போன்றன]
    . . பதினெட்டாம் படிநிற்கும்
    . . மதிமட்டும் உடன்நிற்க
    உபநிடதச் சொல்லுணர வையப்பா. ... 1 ... [உபநிடதச் சொல் = ’தத்வமஸி’]

    மகிடாசுர மர்த்தினியே சிரம்பெற்றாள்
    மகிடியவள் தவவலிமை உரம்பெற்றாள்
    . . ஹரிஹரனது மகனாகில்
    . . ஒருகாலது தகவாகில்
    உகந்திடுவேன் மரணமென வரம்பெற்றாள். ... 2

    ஹரிஹரனின் புத்திரனாய் மணிகண்டா
    உருவெடுத்தாய் அவதாரப் பணிகொண்டே
    . . பந்தளவம் சத்தினிலே
    . . வந்துதித்த சத்தெனவே
    அரக்கிவதம் செய்தவளின் பிணிகொண்டாய். ... 3

    ஹரிஹரனின் ஐக்கியமாம் தத்துவமாய்
    உருவெடுத்தே சேர்க்குமந்த உத்தமமே
    . . சாதிமதம் எதுவெனினும்
    . . பாதவிணை பொதுவெனவே
    தருமமுறச் செய்யுமொரு வித்தகமே. ... 4

    குந்திநீயும் நோக்கவந்த முகமேதான்
    சிந்தனையை யீர்க்கும்பக்தர் அகமேதான்
    . . சின்முத்தி ரைதாங்கி
    . . தன்னலத்தை யேவாங்கித்
    தந்தருள்வாய் ஞானமிந்த இகமேதான். ... 5

    மெய்யடியார் உளமேறும் அச்சநமன் ... [நமன் = யமன்]
    ஐயனாராய் சாஸ்தாவாய் அச்சனுமாய்
    . . துச்சமென நீக்கிடுவாய்
    . . இச்சைகளைப் போக்கிடுவாய்
    மெய்யுணர்வைத் தந்திடுவாய் உச்சமென. ... 6

    பிரம்மசர்ய கோலத்திலே ஆடவனும்
    இருமனையாள் கோலத்திலே ஆடவளும் ... [ஐயப்பனின் இரு மனைவியர் பூரணா, புஶ்கலா]
    . . தரிசனமும் பெற்றிடவே
    . . திரிசமமும் வற்றிடுமே
    இருமுனைகள் நீங்கிடவே தேடுமுளம். ... 7

    இருமுடியும் ஒருமுடியில் சூட்டினரே
    பருவுடலும் பலதினுசாய் வாட்டினரே
    . . நாடுதலைக் கடந்தாரே
    . . காடுமேடு நடந்தாரே
    ஒருமண்டல விரதமென நாட்டினரே. ... 8

    நெய்யபிடே கத்தினிலே தேவனுடன்
    மெய்யடியார் சேர்ந்தனரே சீவனுடன்
    . . தானென்பது குன்றிடவே
    . . ஆன்மவொளி நின்றிடவே
    பொய்நீங்க வேட்டனரே ஆவலுடன். ... 9

    சபரிமலை சென்றதிலை ஐயப்பா
    கபடவழி நின்றதிலை ஐயப்பா
    . . நல்லகதி பெற்றிடவே
    . . வல்வினைகள் அற்றிடவே
    அபலையெனக் கொண்டருள்வாய் மெய்யப்பா. ... 10

    --ரமணி, 07-10/02/2014, கலி.28/10/5114

    *****

  6. #126
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சிவராத்திரி துதி
    (எண்சீரடி விருத்தம்: புளிமாங்காய் மா காய் காய் மா கூவிளம் கூவிளம்)

    பகலாகும் சக்தி யிரவாகும் சிவமே
    . அவைசேரும் தினமே - அர்த்தநா ரீசிவன்!
    புகலாகும் சக்தி வுயிராகும் சிவமே ... [புகல் = உடம்பு]
    . உருவாகும் மனிதன் - அர்த்தநா ரீசிவன்!
    இகலாகும் நெஞ்சில் ஒன்றாகும் எண்ணத்
    . தெளிவாகும் உள்ளம் - அர்த்தநா ரீசிவன்!
    உகவாயோ நெஞ்சே உனைநீயும் கொண்டே
    . உன்மூலம் காண - அர்த்தநா ரீசிவன்! ... 1

    இடமாடும் பாதம் வலமாடும் போது
    . எழுலோகம் மாறும் - அர்த்தநா ரீசிவா!
    விடையாடப் பிறையோ டலைபாயு மாறும்
    . இடையாடும் உரிவை - அர்த்தநா ரீசிவா!
    படையாவும் ஆடக் காலங்கள் மாறும்
    . பரிணாமம் நேரும் - அர்த்தநா ரீசிவா!
    தடையாவும் விள்ளும் பரிமாணம் மாறும்
    . சடையாகப் பின்னும் - அர்த்தநா ரீசிவா! ... 2

    இறவாத வாழ்வும் பிறவாத நிலையும்
    . பெறுவேனோ நானும் - அர்த்தநா ரீசிவா!
    குறையாத ஞானம் குன்றாத அன்பில்
    . உறைவேனோ நானும் - அர்த்தநா ரீசிவா!
    மறையாவும் போற்ற மன்றாடும் தேவா
    . மனம்வந்தே ஆடு - அர்த்தநா ரீசிவா!
    திறையாவும் தீர்ந்த நிறையாக்கி யென்னைப்
    . பிறையாகச் சூடாய் - அர்த்தநா ரீசிவா! ... 3

    --ரமணி, 27/02/2014, கலி.15/11/5114
    (சிவராத்திரி தினம்)

    *****

  7. #127
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    தெய்வ தரிசனம்: அரங்கன் பஞ்சகம்
    (கலிவிருத்தம்)

    குரங்காட்ட வாழ்வில் கோணல்கள் தானே?
    அரங்காட்டு வாரே அரங்கத்தி லாள ... [அரம் = கூர்மை/கருவி]
    உரங்காட்டி எம்மை உய்விப்போர் ஆரே? ... [உரங்காட்டுதல் = அன்பு பாராட்டுதல்]
    அரங்காவுன் கண்ணால் ஆட்கொண்ட ருள்வாய்! ... 1

    குரங்காயுன் தோழர் வலங்காட்டி மனையாள் ... [வலம் = வெற்றி]
    உரங்காட்டிக் காத்தே உன்பாதம் கொண்டார்
    சிரங்காளு மேனி சிரஞ்ஜீவி யாமோ?
    அரங்காவுன் கழலால் ஆட்கொண்ட ருள்வாய்! ... 2

    எரங்காட்டில் வீழ்ந்தே எரியுண்ணும் மேனி ... [எரங்காடு = பாழ்நிலம்]
    திரங்காட்டிக் காத்தே தீமைகள் சேர்த்தேன் ... [திரம் = உறுதி]
    சிரங்காட்டு மனமுள் சிங்காரம் குன்ற
    அரங்காவுன் கையால் ஆட்கொண்ட ருள்வாய்! ... 3

    அறங்காட்டும் வழியில் ஆளாகிப் போகேன்
    திறங்காட்டி வாழ்வில் தீவாகிப் போனேன்
    உறங்காமல் உறங்கி உரகமணை யண்ணல் ... [உரகம் = பாம்பு]
    அரங்காவுன் அருகே ஆட்கொண்ட ருள்வாய்! ... 4

    சிரங்காட்டிக் கரங்காட்டிக் குரங்காட்டி யாகி
    உரங்காட்டி யறங்காட்டி மறங்காட்டி யென்னை
    பரங்காட்டித் துரங்காட்டித் துறங்காட்டி யென்றும் ... [துரம் = சுமை/பொறுப்பு; துறம் = துறவு]
    அரங்காவுன் னுடனே ஆட்கொண்ட ருள்வாய்! ... 5

    --ரமணி, 23/02/2014, கலி.11/11/5114

    *****

  8. #128
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    ஞானம்
    (தரவுக் கொச்சகக் கலிப்பா)

    காலையில் கண்விழித்தே கடவுளைக் கிழிப்பேனே
    வேலையில் பொட்டலமாய் மேலவனைக் கட்டுவனே
    சாலையில் செருப்பவிழ்த்தே சாற்றுவனே தெருவோரம்
    மாலையில் கடவுற்பேர் மரித்திடும் அணங்குடனே.

    --ரமணி, 13/03/2014

    *****

  9. #129
    புதியவர்
    Join Date
    12 Mar 2014
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    335
    Downloads
    0
    Uploads
    0
    I want to learn Marabu Kavithaigal.

  10. #130
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    அன்புடையீர்!

    மரபுக் கவிதை எழுத யாப்பிலக்கணம் கற்கவேண்டும். எளிதில் யாப்பிலக்கணம் கற்கக் கீழ்க்கண்ட நூல்கள் உதவும்:

    கி.வா.ஜகந்நாதன்: கவி பாடலாம்
    http://thamizhagam.net/nationalized%...20PAADALAM.pdf

    விசாகப் பெருமாளையர்: யாப்பிலக்கணம்
    http://noolaham.net/project/50/4950/4950.pdf

    பசுபதி: கவிதை இயற்றிக் கலக்கு
    http://s-pasupathy.blogspot.in/

    இவற்றுடன், நான் இந்த மன்றத்தில் தொடர்ந்து வரும் ’கவிதையில் யாப்பு’ தொடரையும் படித்தறியலாம்:
    http://www.tamilmantram.com/vb/showt...ப்பு

    அன்புடன்,
    ரமணி

    *****

    Quote Originally Posted by arulmozhi View Post
    I want to learn Marabu Kavithaigal.

  11. #131
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி: தேமதுரச் சுவையார...
    (தந்ததனத் தானதனத் தனதான)

    [’உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி...’--திருப்புகழ் 3.]

    உந்துகடற் பாலலையைக் கடைகோலால்
    . உம்பருடற் றானவர்கைக் கடைநாகம்
    உந்தியதைத் தேகெழுமிச் சுழிகாளம்
    . உம்பர்பதைத் தோடவிடப் பரமேசன்
    சொந்தமெனக் கையிலெடுத் துணவாய
    . ருந்திவிடக் கௌரிவிதிர்த் தவளோடி
    வந்துதடுத் தேமிடறிற் கரியோனாய்
    . அண்டமுயிர்த் தேவொளிரச் செயுமேறே! ... 1

    சொந்தமெனப் பேணிடுமிச் சிறைமேனி
    . உண்ணவுடுக் கையணியத் திமிரேறும்
    பந்தமெனப் பேணுமனச் சிறைமேவி
    . அஞ்சுபுலத் தாறுவுயிர்ப் புணையேகும்
    கந்தல்களைப் போற்றுலகச் சுமையேறி
    . அஞ்சுமனத் தேவினையொட் டடைசேரும்
    அந்தகனிப் போதுமனத் துளைவாலே
    . அந்தமிலித் தாளதனிற் றலைதாழ்வேன். ... 2

    நந்திதலைக் கோடுமிசைப் பதமேவி
    . அஞ்சலெனச் சூலமெடுத் தவிநாசி
    வந்துமனத் தாடுவதற் கெனநானும்
    . வஞ்சமறுத் தேவிதயச் சுவரோரம்
    சிந்தையறுத் தேவுணரச் சிலநேரம்
    . எண்ணமதிற் றேமதுரச் சுவையாரும்
    சந்திரனைச் சூடுதலைச் சடையோனே
    . அந்தநிலச் சீர்பெறுதற் கருள்வாயே. ... 3

    --ரமணி, 14/03/2014, கலி.30/11/5114

    *****

  12. #132
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    ஆதி சங்கரர் அருளிய ’ஶ்ரீ கணேச புஜங்கம்’
    ஸ்தோத்திரத்தின் தமிழ் யாப்பு

    (குறள் வெண்செந்துறை: புஜங்க அமைப்பு:
    லகு-குரு-குரு x 4)


    தணத்துப் பிணைந்தே மணித்தா ரொலித்தே
    . அலைந்தா டயிண்டை மலர்த்தண் டுமாடும்
    அணத்துப் பரூஉமே னிமின்நா கமாலை
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 1

    ஒலித்தண் டுநாதக் குரல்பா டுமுத்தம்
    . துதிக்கை நுனித்தேம் பழம்மா துளையாம்
    சலத்தின் மணத்தால் சுரும்பர்த் தார்கூட்டும்
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 2

    மிளிர்செம் பருத்திச் சிவந்தோங் குதோற்றம்
    . துளிர்க்கா லைசோதிக் கதிர்போன் ற-ஏகம்
    களிற்றா னைமோடும் துதிக்கை யோர்கோடும்
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 3

    வணச்சோ திரத்னத் திலாரங் கிரீடம்
    . கிரீடத் திலங்கும் பிறைவள் ளியாகும்
    அணிக்கே யிழையாய்ப் பிறப்பை யறுக்கும்
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 4

    உயர்ந்தே றுவல்லிக் கரம்நோக் கவேரோ
    . டுவல்லிப் புதல்சுற் றிலக்கம் மயங்கும்
    அயர்வே கவிண்மா தர்வீசித் துதிக்கும்
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 5

    அலைக்கும் கொடுஞ்செவ் விழிப்பார் வையாளன்
    . அருட்செய் யுமாடற் கொழுந்தா யுருப்பான்
    கலைபிந் துவாளென் றறிந்தார் துதிக்கும்
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 6

    ஒருப்பட் டமாசற் றவேறற் றவொன்றாய்
    . குணம்நீங் குமானந் தவோர்தோற் றமில்லாக்
    கரையோ மெனும்வே தமுட்கொள் ளுமோடாய்ச்
    . சமர்த்தன் பழையோன் எனப்போற் றுவேனே. ... 7

    உணர்வின் பவாளன் நிறையோ னுனைநான்
    . வணங்கே னோஞாலம் படைப்போ னழிப்போன்
    வணங்கே னோஆடும் பரம்தோற் றமொன்றாய்
    . வணங்கே னோவித்தா குமீசன் மகன்நான். ... 8

    உணர்வோ டுகாலை எழுந்தே யிதைப்பா
    . டுவோர்தம் விருப்பம் நிறைவே றும்திண்ணம்
    கணேசர் தயையால் பலிக்கா ததில்லை
    . கணேசர் வலத்தாற் கிடைக்கா ததேதோ? ... 9

    --தமிழ் யாப்பு: ரமணி, 20/03/2014, கலி.06/12/5114

    *****
    பதம் பிரித்து:

    ஆதி சங்கரர் அருளிய ’ஶ்ரீ கணேச புஜங்கம்’
    ஸ்தோத்திரத்தின் தமிழ் யாப்பு


    தணத்துப் பிணைந்தே மணித்தார் ஒலித்தே
    . அலைந்தாட இண்டை மலர்த்தண்டும் ஆடும்
    அணத்துப் பரூஉமேனி மின்நாக மாலை
    . கணாதீசன் ஈசன் மகன்-நான் துதிப்பேன். ... 1

    [தணத்தல் = பிரிதல்; இண்டை = தாமரை; அணத்தல் = மேல்நிமிர்தல்;
    பரூஉ = பருமை; மின்நாகம் = மின்னும் நாகம்.]

    ஒலித்தண்டு நாதக் குரல்பாடு முத்தம்
    . துதிக்கை நுனித் தேம்பழம் மாதுளையாம்
    சலத்தின் மணத்தால் சுரும்பர்த் தார்கூட்டும்
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 2

    [ஒலித்தண்டு = ஒலிக்கும் வீணை; முத்தம் = இதழ்கள்;
    தேம்பழம் = தேன் போன்று இனிய பழம்; சலம் = மத்தசலம்;
    சுரும்பர் = வண்டினங்கள்; தார்கூட்டும் = மாலைபோல் கூடி வதியும்.]

    மிளிர் செம்பருத்திச் சிவந்தோங்கு தோற்றம்
    . துளிர்க் காலை சோதிக் கதிர்போன்ற ஏகம்
    களிற்றானை மோடும் துதிக்கை ஓர்கோடும்
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 3

    [துளிர் = முளைவிட்ட தளிர்; மோடு = வயிறு; கோடு = தந்தம்.]

    வணச்சோதி ரத்னத்தில் ஆரம் கிரீடம்
    . கிரீடத்(து) இலங்கும் பிறை வள்ளி யாகும்
    அணிக்கே இழையாய்ப் பிறப்பை அறுக்கும்
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 4

    [வணம் = வண்ணம்; சோதி = ஒளி; வள்ளி = ஆபரணம், அணி;]

    உயர்ந்து-ஏறு வல்லிக் கரம்நோக்க வேரோ(டு)
    . வல்லிப் புதல் சுற்றில் அக்கம் மயங்கும்
    அயர்வு-ஏக விண்மாதர் வீசித் துதிக்கும்
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 5

    [வல்லி = படர்கொடி; புதல் = புருவம்; அக்கம் = கண்கள்;
    வீசி = சாமரம் வீசி.]

    அலைக்கும் கொடும்-செவ் விழிப் பார்வையாளன்
    . அருட்செய்யும் ஆடற் கொழுந்தாய் உருப்பான்
    கலை-பிந்து வாள் என்று-அறிந்தார் துதிக்கும்
    . கணாதீ சனீசன் மகன்நான் துதிப்பேன். ... 6

    [கலை-பிந்து = பிரணவத்தின் கூறுகளான கலையும் பிந்துவும்;
    வாள் = ஒளி.]

    ஒருப்பட்ட மாசற்ற வேறற்ற ஒன்றாய்
    . குணம்-நீங்கும் ஆனந்த ஓர்தோற்றம்-இல்லாக்
    கரை-ஓம் எனும்வேதம் உட்கொள்ளு மோடாய்ச்
    . சமர்த்தன் பழையோன் எனப்போற்று வேனே. ... 7

    [வேதம் உட்கொள்ளும் மோடாய் = வேதத்தின் பிறவிக் கர்ப்பமாய்.]

    உணர்வு இன்ப-வாளன் நிறையோன் உனைநான்
    . வணங்கேனோ ஞாலம் படைப்போன் அழிப்போன்
    வணங்கேனோ ஆடும் பரம்-தோற்றம் ஒன்றாய்
    . வணங்கேனோ வித்தாகும் ஈசன் மகன்(ஐ)நான். ... 8

    [உணர்விபவாளன் = அறிவாகும் இன்பம் துய்ப்பவன், சச்சிதானந்தன்;
    நிறையோன் = அமைதி நிறைந்தோன்.]

    உணர்வோடு காலை எழுந்தே இதைப்பா(டு)
    . வோர்-தம் விருப்பம் நிறைவே உம் திண்ணம்
    கணேசர் தயையால் பலிக்காதது இல்லை
    . கணேசர் வலத்தால் கிடைக்காது ஏதோ? ... 9

    [வலம் = வலிமை.]

    --தமிழ் யாப்பு: ரமணி, 20/03/2014, கலி.06/12/5114

    *****

Page 11 of 23 FirstFirst ... 7 8 9 10 11 12 13 14 15 21 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •