Page 10 of 23 FirstFirst ... 6 7 8 9 10 11 12 13 14 20 ... LastLast
Results 109 to 120 of 273

Thread: ரமணியின் கவிதைகள்

                  
   
   
  1. #109
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    மரபு வித்தகம் 3.
    வினா உத்தரம்


    இவ்வகைப் பாடல்களில் கேள்விகளும் அவற்றின் விடைகளும் இருக்கும்.
    விடைகளை இணைத்தால் செய்யுள் குறிக்கும் பெயராகும்.

    எரிவ தெதுவோ விளக்கிலே? மன்னன்
    அரிவை இடம்பின் பதமெது? சொல்லெதிர்
    ’இந்த’வுக் கென்ன? இவற்றோடு ’கன்’சேர
    வந்த சிவநா மமே. ... 1.

    விடை:
    கேள்விகளுக்கு விடை முறையே திரி, (அந்தப்)புரம், அந்த.
    இவற்றோடு ’கன்’ விகுதி சேர வந்த சிவநாமம் ’திரிபுராந்தகன்’

    *****

    இதுபோல் இந்தப் பாடலின் விடையைக் காண்டுபிடியுங்கள்.

    வரதுங்க ராமமன்னன் அந்தாதி சொல்லும்
    கருவைத் தலமிது! யானையின்னோர் பேரெதுவோ?
    அம்மைக்கெப் பக்கமத்தன்? ’போன’ எதிர்ப்பதம்?
    செம்மைநல் லூர்சேர்க்க வே. ... 2.

    *****

  2. #110
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சென்ற அஞ்சலில் இரண்டாம் பாட்டு:
    கேள்விகளுக்கு விடை முறையே: கரி, வலம், வந்த
    கரிவலம்வந்த நல்லூர்

    மரபு வித்தகம் 4.
    சர-மழை


    கனவும் நனவும் உளமே விளையும்
    நனவும் மறுநாள் கனவாய் இரியும்
    உளமே கனவாய் உருவாய் வரத்து
    விளையும் இரியும் வரத்து.

    [இரிதல்=கெடுதல், ஓடுதல், விலகுதல், வடிதல், அஞ்சுதல்]

    மேலே உள்ள வெண்பாவின் சிறப்பு என்ன?

    --ரமணி

    *****

  3. #111
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    மேலுள்ள வெண்பாவின் சிறப்பு:
    இடம்-வலம் படித்தாலும், மேல்-கீழ் படித்தாலும் அதுவாகவே அமைந்த வெண்பா.

    மரபு வித்தகம் 5.
    நிரோட்டம் அல்லது இதழகலி


    இனியொரு நிரோட்ட வெண்பா. இதன் சொற்களைப் படிக்கும்போது உதடுகள் ஒட்டாமலோ
    குவியாமலோ அமைவதால் இது நிரோட்டம் அல்லது இதழகலி என்று பெயர் பெறும்.

    என்னென்ன நானில்லை என்றறியச் செய்தாய்நீ
    என்னதான் நானெனக் கேட்டேன்நான் - என்னைநீ
    என்றழைக்கா தேநீயே நான்நானே நீதெளி
    யென்றானே நெஞ்சி லிறை.

    --ரமணி

    *****

  4. #112
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    மரபு வித்தகம் 6.
    இதழுறல் அல்லது இதழுறலி


    ஒவ்வொரு சீரிலும் (குறைந்தது ஓர்) இதழுறல் வருவது:

    மானு மழுவு மிருபுஜ மோங்குமே
    வானம் புவனமு மாண்டு மழித்துமே
    மொய்ம்புறக் காப்பவன் மாண்புறு மாபதி
    மெய்யவன் பாடியே போற்று.

    பதம் பிரித்து:
    மானு(ம்) மழுவும் இருபுஜம் ஓங்குமே
    வானம் புவனமும் ஆண்டும் அழித்துமே
    மொய்ம்புறக் காப்பவன் மாண்பு(று) உமாபதி
    மெய்யவன் பாடியே போற்று.

    எல்லா எழுத்துகளிலும் இதழுறல் வந்தது:

    குப்பம்மா பாப்பா உவப்பது உப்புமா
    சுப்பம்மா பூமா உவப்பது உப்புமா
    உப்பொடு மாவுமே உப்புமா வாகுமே
    உப்புமா போடு உமா!

    --ரமணி

    *****

    தமிழில் உள்ள 247 எழுத்துகளில் இதழுறல்--அதாவது உச்சரிப்பில் இதழ்கள் ஒட்டியோ குவிந்தோ சொல்வது மொத்தம் 119. இவை போக மீதியுள்ள 128 எழுத்துகளும் இதழகலி எழுதப் பயன்படும் எழுத்துகளாகும்.

    உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
    ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
    ப்,ம்,வ் 12 உயிர்கள் உறழ்ந்து 36
    உ,ஊ,ஒ,ஓ,ஔ x15 மெய்யுடன்
    உறழ்ந்து, (ப்,ம்,வ் நீங்கலாக) 75
    ஆக 119.

    *****

  5. #113
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0



    மெழுகில் உருவாகும் மாயை
    (நேரிசை/இன்னிசை வெண்பா)

    இறவா உடலே மெழுகுரு என்பர்
    பிறவா உடலும் இதுவே - உறவாம்
    உயிரின்றி உய்யும் உயிர்ச்சிலை யென்று
    துயிலும் மனங்கொள் ளுரு. ... 1

    மெய்யிதுவே பொய்யாம் மெழுகதை மேன்மேலும்
    மெய்யாக்கும் அல்லது பொய்யாக்கும்! - ஐயா!
    உளங்கொள் உருவங்கள் ஒற்றும் மெழுகின்
    தளுக்கில் உலவுமே மாசு. ... 2

    இரும்புக் கலையம் மெழுகு கொதித்துத்
    தருவித்த அச்சுகளில் கால்கைத் தலையாய்
    தனியே உறைந்து பசையொட்டித் தைத்துக்
    கனவுச் சிலைகை வரும். ... 3

    கோலி விழிகளும் கூந்தல் உடற்கூறும்
    தோலும் மெழுகிளகித் தோய அனலில்
    அலகுகள் ஊசிகள் ஆக்கிடும் பொம்மை
    பலவகை ஆடை பெறும். ... 4

    புகழுக் கிணையாய்ப் பொருளதுவும் சேர
    அகம்கொள்ளும் காட்சியக ஆளுருவம் அல்லாது
    வீட்டில் குழந்தை விளையாடும் பொம்மையின்
    ஊட்டம் மெழுகின் உரு. ... 5

    குழந்தை மரபொம்மைச் சொப்புகள் நாள்போய்
    மெழுகு நெகிழி விளையாட்டுச் சாமான்கள்
    காற்றுநீர் மேனியும் மாசுறுதல் கண்ணுறாது
    போற்றி மகிழும் உலகு. ... 6

    --ரமணி, 14/11/2013, கலி.28/07/5114

    உதவி:
    How to Make Wax Dolls
    http://www.ehow.com/how_4728241_make-wax-dolls.html

    Environmental Pollution: How Toys Contribute to the Problem
    http://www.brighthub.com/environment...les/62042.aspx

    படங்கள் உதவி:
    http://www.pardaphash.com/news/overw...l#.UoTeVuWC1CY
    https://smalltreasuresdollcollectors...-of-wax-dolls/

    *****

  6. #114
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி 1.
    (பதினாறு சீர் விருத்தம்: எல்லாம் கூவிளம், ஒரு சீர் தவிர்த்து)

    எண்ணைநீ ராடிடு மீசன னந்தனே
    . என்னைநீ காத்தருட் செய்வதென் னாளிலே?
    . . சந்தநீ ராடிடுஞ் சண்முகற் றந்தையே
    . . . அந்தக னென்மரு ணீக்குத லெங்ஙனம்?
    வெண்ணிறப் பால்தயி ராடிடும் நித்தனே
    . எண்ணிலாப் பல்வினை யேறுமென் னாவியைத்
    . . தீப்புடம் போட்டுநீ தீயவை நீக்குவாய்
    . . . இம்மையென் னாயுளுந் தீர்ந்திடு முன்னரே
    வெண்ணிறக் காப்பிலுன் நீறதன் தெய்வதம்
    . என்னுளே பற்றியே விந்தைசெய் யட்டுமே
    . . இத்தனை யாண்டுகள் நீர்விழ லானவே
    . . . இன்னுமேன் தாமத மென்னைநீ யாட்கொள
    கண்ணுதற் றெய்வமே அண்ணுதற் கெளியனே
    . பெண்ணொரு கூறனே பித்தனே யத்தனே
    . . நித்தனி ருத்தனு ருத்திரத் தற்பரன்
    . . . சித்தமு றைந்திட வித்தக மோங்குமே.

    பதம் பிரித்து:

    எண்ணைநீர் ஆடிடும் ஈசன் அனந்தனே
    . என்னைநீ காத்தருள் செய்வதென் நாளிலே?
    . . சந்தநீ ராடிடும் சண்முகன் தந்தையே
    . . . அந்தகன் என்மருள் நீக்குதல் எங்ஙனம்?
    வெண்ணிறப் பால்தயிர் ஆடிடும் நித்தனே
    . எண்ணிலாப் பல்வினை ஏறுமென் ஆவியைத்
    . . தீப்புடம் போட்டுநீ தீயவை நீக்குவாய்
    . . . இம்மையென் ஆயுளும் தீர்ந்திடும் முன்னரே
    வெண்ணிறக் காப்பிலுன் நீறதன் தெய்வதம்
    . என்னுளே பற்றியே விந்தை செய்யட்டுமே
    . . இத்தனை ஆண்டுகள் நீர்விழல் ஆனவே
    . . . இன்னுமேன் தாமதம் என்னைநீ ஆட்கொள
    கண்ணுதல் தெய்வமே அண்ணுதற்கு எளியனே
    . பெண்ணொரு கூறனே பித்தனே அத்தனே
    . . நித்தன் நிருத்தன் உருத்திரன் தற்பரன்
    . . . சித்தம் உறைந்திட வித்தகம் ஓங்குமே.

    --ரமணி, 30/11/2013

    *****

  7. #115
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    மரபு வித்தகம் 7.
    ஒருசீர் விருத்தம்

    ஒரேயொரு அசையை அல்லது சீரை வைத்து மறைபொருளாய் விரியுமாறு பாட்டெழுதுவது ஒருசீர் விருத்தம் ஆகும். இரண்டு அல்லது மூன்று அசைச் சீர்கள் வரும்போது அவற்றைப் பிரித்தால் பொருள் தரும் சொற்கள் வருதல் கூடாது.

    அசை விருத்தம்
    தண்
    பெண்
    கண்
    மண்

    (தண்மை நிறைந்த பெண்ணின் கண் நோக்குவதோ மண்.)

    கா
    வா
    வா
    கா

    (’காவாவா, கந்தா வாவா’ என்னும் புகழ்பெற்ற பாடலை நினைவூட்டி)

    நான்
    யான்
    தேன்
    ஏன்?

    நாம்
    யாம்
    போம்
    ஓம்!

    ஏர்
    தேர்
    ஊர்
    வேர்

    (ஈரெதுகையில்)
    நான்
    தேன்
    நீ
    சீ!

    ***

    சீர் விருத்தம்
    இன்மை
    நன்மை
    தன்மை
    உன்ன.

    உண்ண
    உண்டு
    குண்டு
    நண்டு

    முன்னம்
    அன்னம்
    இன்று
    வின்னம்

    பண்ணாதே
    கண்ணாம்பா
    அண்ணாந்தே
    உண்ணாதே!

    --ரமணி

    *****

  8. #116
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி 2.

    காப்பு
    அண்டபகி ரண்டமெலாம் சண்டதர முண்டதுபோல்
    சண்டியுடன் அண்டனவன் தாண்டவத்தில் நீறாகும்
    வெண்ணீராய் ஆக்கிவினை ஈர்த்தோர்நாள் மீள்படைக்கும்
    கண்ணுதலான் நெஞ்சமுறக் காப்பு.

    [சண்டதரம் = இருபத்தெட்டு நரகங்களில் ஒன்று;
    அண்டன்=சிவன் (தேவாரம்); ஈர்த்தல்=அறுத்தல், பிளத்தல்]

    வழிபாடு
    முதல்வன் சிறப்பாய்த் துதிசெய மாலை
    அதனின் சிறப்பாய் மதிநாள் நலமே
    அதனின் சிறப்பாய் அரன்ராத் திரியே
    பதிமூன்றாம் நாளின்னும் நன்று.

    மாலய னாதியாய் வானவர் யாவரும்
    ஆலயம் சென்றே அரனைத் தொழவே
    பிரதோச காலம் பெருமாளின் கோவில்
    திருவழி பாடில்லை யே.

    காலைநீ ராடியுமா காந்தன் புகழ்பாடி
    மாலையில் நந்திக்கு ஆலயத்தில் பச்சரிசி
    வெல்லம் படைத்தபின் வேதமுதல் வன்போற்ற
    அல்லல் துடைத்தருள் வான்.

    ஆலகால நஞ்சும் வரையின்றிப் பின்தொடர
    வாலறிவன் நாடி வலம்வந்த வானோரும்
    சோமசூக்தம் என்பதாய் ஓடினரே முன்பின்னாய்
    காமனெரித் தான்காண வே.

    நந்திதேவர் கண்டபின் அங்கே இடப்பக்கம்
    வந்துபின் சண்டிகேசர் நந்தி வலப்பக்கம்
    கோமுகி நீரிங்ஙன் மும்முறை ஈசனீறாய்
    சோமசூக்தம் போவதாம் ஓம்.

    பலன்மொழி
    பிரதோச நன்னாள் பிறையணியான் போற்றி
    அருவினை அல்லல் வருவினை நீங்க
    அருமறை போற்றிடும் ஐந்தெழுத் தோதி
    திருவெலாம் பெற்றிடுவோ மே.

    --ரமணி, 14/12/2013, கலி.28/08/5114

    *****

  9. #117
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    ஆதிரைத் திருநாள் துதி

    களிமண் உலகு களிம்பெனப் பற்றிக்
    களிக்குமென் வாழ்வின் களேபரம் போக்கிக்
    களிஞானம் ஈசன் களிகூர்ந் தருளக்
    களிப்புடன் உண்டேன் களி.

    சேந்தன் களியுண்டு தேரூர்ந்த வேந்தநீ
    ஏந்தும் அழலினால் என்வினை தீப்பட
    சேந்தன்போல் நானுமுனை யேத்தி யுறவாடும்
    பாந்தம் எனக்கருள் வாய்.

    --ரமணி, 18/12/2013

    *****

  10. #118
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    பிரதோஷத் துதி 3.
    சவலைமதிச் சடைனுக்கோர் சவலைவெண் பாமாலை
    (ஒரு பா ஒரு பஃது:
    அந்தாதி மாலை: சவலை வெண்பா)


    காப்பு
    சவலைக் குழந்தையென் செய்வினை தீரச்
    சவலைவெண் பாமாலை சாற்றினேன்
    கவலையே யில்லாக் களிநட ராசா
    அவலம் அகற்றி அருள்.

    அந்தாதி மாலை
    ஆலமர் செல்வவுன் ஆறிழிச் சென்னியில்
    கோல மதியினைக் கொள்ளழகும்
    நீல மிடறுமுன் நீறுடற் செம்மையும்
    சால மனமுறச் செய். ... 1

    செய்வினை யாலே இழியுமென் சென்மமே
    மெய்யில் உயிரென ஏறியே
    குறிலாய் நெடிலாய் ஒலித்திடு மோலம்
    உறுந்தலையெ ழுத்தினிற் கூத்து. ... 2

    கூத்தனொ டாடிடும் கூத்தியின் லீலையில்
    பூத்திடும் ஈரே ழுலகம்
    உடலும் உயிரும் உவந்தே நடனம்
    கடலென வேழு களம். ... 3

    களத்தில் அறுப்புக் கதிரடி பட்டே
    விளமும் மனதில் விலகுமே ... ... [விளம்=ஆணவம்]
    தானியம் போர்வை யகன்றே தனிப்படத்
    தானியங் காத தழைப்பு. ... 4

    தழைகள் எழுந்தே தளிர்க்கும் நுழையும்
    விழையும் பசுவின் மிடறினில்
    மும்மலம் சம்மதம் உற்றே பசுவுமே
    மம்மரில் வீழுமே மாய்ந்து. ... 5

    மாய்ந்தே படித்தனன் மாயை யகலவே
    ஆய்ந்தவர் நூல்பல வாக
    கணத்தில் விடுதலை காணும் மறையும்
    உணர்வினி லூற லுறாது. ... 6

    உறாததைத் தந்தெனை உய்வித் தருள்வாய்
    பெறாதனு பூதியும் ஏற
    உமையொரு கூறாய் உருத்திடு மீசா
    இமைவிழும் காப்பா யிரு. ... 7

    இருந்தென் னுளத்தில் நிருத்தியம் செய்தே
    வருந்துயர் போக்கி யருள்வாய்
    கரும்பென மேனியைக் காணுதல் போக
    மருந்தென என்னுளம் வா. ... 8

    வானதி வீழவே வான்மதி சூடியே
    கானில் நடமிடும் கள்வ!
    விடையன் சடைமுடி வேட நடேசா
    உடைத்தெறி வாய்மனச் சொல். ... 9

    சொல்லும் பொருளும் ஒலியும் உருவமும்
    அல்லும் பகலும் கடந்தோனே
    அல்ல லருவினை வல்வினை சூழ்வதே
    இல்லை யெனும்நிலை யென்று?

    நூற்பயன்
    காடு நடமிடும் காளே சனினருள்
    நாட மனம்வர நேரிடினே
    பாடு படுவதும் பாவமும் குன்றவே
    தேடுதல் போய்வரும் வீடு.

    --ரமணி, 28-30/12/2013, கலி.15/09/5114

    *****

  11. #119
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    இறை வண்ணம் இசை வண்ணம்
    1. கணபதி
    (தத்தன தனதன தனதான)

    அத்தனின் முதல்மக னடிபேண
    . அப்பிடும் வினைமல மகலாதோ?
    மத்தள வயிறனும் மனமார
    . மப்புறு மனமது தெளியாதோ?
    வித்தகன் பெயர்புகழ் விரவாது
    . எத்தனை பொழுதுகள் செலவாகும்
    நித்தமும் கரிமுகன் நினைவோடு
    . நித்தில மனம்பெற விழைவேனே. ... 1

    --ரமணி, 21/12/2012

    *****

  12. #120
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jan 2013
    Posts
    1,078
    Post Thanks / Like
    iCash Credits
    55,008
    Downloads
    10
    Uploads
    0
    சிவத்துதிக் குறும்பாக்கள்

    செஞ்சடையில் கொப்பளிக்கும் ஆறு
    நஞ்சரவு மேனியெலாம் நீறு
    . . பாதவிணை பற்றிடவே
    . . வேதனைகள் இற்றிடுமே
    அஞ்செழுத்தில் வந்திடுமே ஏறு. ... 1

    மான்மழுவே தீக்கரமே சூலம்
    கான்நடமே கூளிகளின் ஓலம்
    . . இருவடியைப் பணிந்திடுவோம்
    . . திருநீற்றை யணிந்திடுவோம்
    தான்நீக்கும் நாதனவன் கோலம். ... 2

    வாழவைக்கும் தேவனவன் சிவனே
    ஏழைகளின் இறையாவான் அவனே
    . . வேதவொலி முழங்கிடவே
    . . பேதமெலாம் கழன்றிடவே
    பாழியதில் போற்றிடுவோ மவனை. ... 3

    [பாழி=கோவில்]

    --ரமணி, 24/01/2014

    *****

Page 10 of 23 FirstFirst ... 6 7 8 9 10 11 12 13 14 20 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •