அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
Last edited by முரளி; 09-02-2013 at 11:37 AM.
கண்ணிரண்டும் பேசினால் காதல் உருவாகும்
கண்ணீரே பேசினால் நட்பாகும் -- பண்ணும்
பணமது பேசினால் யார்யாரோ சொந்தம்
அனைவரும் பேசினால் இவ்வுலகம் -- நீயே
தனியாகப் பேசினால்நீ லூசு! ... 5
பாட்டீநான் பள்ளியில் ஓட்டப்பந்த் யத்திலே
ஸ்மார்ட்டாக வின்பண்ண உன்னாசி வேணுமே!
பையவே ஓடுகண்ணா வேகமாக ஓடினா
கைகால் ஒடிஞ்சிடு மே! ... 6
வகுப்பறையில் மாணாக்கன்: போடாநீ முட்டாள்!
வகுப்பிலேயே நீதான் வடிகட்ன முட்டாள்!
வரலாற்று வாத்தியார்: என்னசத்தம்? நாஅன்
ஒருத்தன் இருக்கேனில் ல? ... 7அருமை ரமணி ஐயா... எப்படியெல்லாம் யோசிக்கறீங்க! அதை கவிதையாய் வடிக்கிறீங்க! சுப்பர் சாமி சூப்பர் !!!கருப்பையா: ஜிம்மி குறைப்பதில் சிக்கல்!
மிருக மருத்துவர்: ஐநூறு ஆகுமே?
ஏன்டாக்டர் கொஞ்சம் குறைக்கலாமே கட்டணம்?
நான்குறைத்தால் நாய்குரைக் காது! ... 1
தமிழா சிரியர் தடியடிஏன் பட்டார்?
தமிழா சிரியர் எவரெனக் கேட்க
அடியேன் எனச்சொன்ன தால்! ... 2
புத்தகம் அஞ்சல் கடிதம் இரண்டுக்கும்
வித்தியாசம் என்ன தெரியுமா தோழா?
படித்துக் கிழிப்பாயே புத்தகம் ஒன்றை!
கடிதம் கிழித்துப் படி. ... 3
ஒருசிறுவன் இன்னோர் சிறுவனிடம் சொன்னான்:
திருமுருகா, எங்கப்பா ரொம்ப பயங்கொள்ளி!
இன்னைக்கு சாலையை க்ராஸ்செய்தார் பாருடா
என்கையை நல்லாப் பிடிச்சு! ... 4
வணக்கம் முரளி அவர்களே.
நம் மரபுப் பாவகை, பாவின வடிவங்களைப் பயன்படுத்தி நவரசத்தில் நாம் விரும்பும் ரசம் ததும்ப, எந்தப் பொருள் பற்றி வேண்டுமானாலும் இன்றைய வழக்கிலோ செந்தமிழ் வழக்கிலோ கவிபுனைய முடியும் என்று காட்ட விழைவது என் தினுசு தினுசான கவிதை முயற்சிகளின் பின்னணி.
ஹைகூ, சென்ரியு, லிமரிக் போன்ற பிறமொழிக் கவிதை வடிவங்களுக்கு ஈடாகவும் மாற்றாகவும் நம் ஐக்குறள், வெண்பா, குறள்வென்செந்துறை, ஆசிரியத் தாழிசை, கலிவிருத்தம் போன்ற பல கவிதை வடிவங்களில் நாம் அதிக சிரமமின்றிக் கவிபுனைய முடியும் என்பது என் கருத்து.
அன்புடன்,
ரமணி
22. வெண்பாவில் கடிஜோக்ஸ்!
குறுநாவல் ஒண்ணு கிறுக்கி யிருக்கேன்
அருமையான எங்க தமிழ்வாத்யார் பத்தி!
குருநாவல் அப்படீன்னு சொல்லு! ... 11
பெரிய மனிதர்கள் யாரேனும் ஊரில்
பிறந்திருக் கார்களா தம்பீ? அதுபோல
ஒன்றும் நடக்கலையே ஐயா, பிறந்ததெல்லாம்
சின்னக் குழந்தைகள் தான்! ... 12
போஸ்ட்மேன் நடக்கறப்ப ஸ்லிப்பாய் விழுந்தார்னா?
வேஸ்ட்டா அவர்விழுந்து போஸ்ட்டெல்லாம் கொட்டிடும்!
எப்’டி விழுவார்னு கேட்டேன்! தெரியலையே?
இப்’டி விழுவார் தபால்னு! ... 13
’வாகனங்கள் போகும் வழியில்லை இத்தடம்!’
நாகசாமி கான்ஸ்டபிள் நாக்கிலே பீடியுடன்.
’நானிந்த சாலைவழிப் போலாமா காவலரே?’
கான்ஸ்டபிளைக் கேட்டார் ஒருமனிதர். ’வாகனங்கள்
தானே நுழைய முடியாது, நீங்கபோலாம்.’
’நான்மயில் வாகனன் சார்!’ ... 14
நம்பமக்கு கேட்டான்பார், நா’ஆடிப் போய்ட்டேன்யா!
சும்பனாச்சே? அப்படி என்னதான் கேட்டான்?
எசமான்நான் எல்லாபாங்க் ஏடீஎம் பாத்தேன்
ரிசர்வ்பாங்க்கின் ஏடீஎம் மாத்திரம் ஏங்க்ட்ட
வசமா அகப்படலை யே! ... 15
சொல்லுங்க, பையன் படிப்புல சாதனை
நல்லாநீர் ஊக்குவித்த தால்தானே கன்னையா?
இல்லைநான் வித்தது பாக்கு. ... 16
--ரமணி, 08/02/2013
சாரங்கன் பாடம் முடித்தபின் கூறினார்:
யாரேனும் ஏதேனும் சந்தேகம் உள்ளதென்றால்
தாராள மாய்க்கேள் தயக்கம் எதுவுமின்றி.
சார்-உங்கள் பெண்பெயர் யாது? ... 17
நேர்முகத் தேர்வு நடந்த சமயத்தில்
தேர்வாளர் கேட்டது: மேசைமேல் மொய்த்தஈ
மொத்தமாய் ஐந்து. அடித்தேன்நான் ஒன்றினை.
எத்தனை இன்னும் இருக்குமென்று சொல்லுங்கள்?
வந்தவர்: ஒன்றுமட்டும். தேர்வாளர்: எப்படி?
கொன்றது மிஞ்சுமே அங்கு? ... 18
சினிமாக்கு டிக்கட் எடுத்திருக்கேன் சாரூ!
இனிமேலா, என்னங்க இல்லையே நேரம்?
உடுத்துக் கிளம்பனுமே? மெல்லச்செய், டிக்கட்
எடுத்தது நாளைக்குத் தான்! ... 19
தாயார்: மருந்தெல்லாம் பாட்டிதான் எப்பவுமுன்
வாயில் விடணும்னு சொல்றியே ஏண்டா?
சிறுமகன்: பாட்டிக்குக் கைநடுங்கி பாதி
மருந்துபோய்டும் கீழே அதான்! ... 20
--ரமணி, 10/02/2013
*****
சினிமாக்கு டிக்கட் எடுத்திருக்கேன் சாரூ!
இனிமேலா, என்னங்க இல்லையே நேரம்?
உடுத்துக் கிளம்பனுமே? மெல்லச்செய், டிக்கட்
எடுத்தது நாளைக்குத் தான்! ... 19
தாயார்: மருந்தெல்லாம் பாட்டிதான் எப்பவுமுன்
வாயில் விடணும்னு சொல்றியே ஏண்டா?
சிறுமகன்: பாட்டிக்குக் கைநடுங்கி பாதி
மருந்துபோய்டும் கீழே அதான்! ... 20வாகனங்கள் போகும் வழியில்லை இத்தடம்!’
நாகசாமி கான்ஸ்டபிள் நாக்கிலே பீடியுடன்.
’நானிந்த சாலைவழிப் போலாமா காவலரே?’
கான்ஸ்டபிளைக் கேட்டார் ஒருமனிதர். ’வாகனங்கள்
தானே நுழைய முடியாது, நீங்கபோலாம்.’
’நான்மயில் வாகனன் சார்!’ ... 14நேர்முகத் தேர்வு நடந்த சமயத்தில்
தேர்வாளர் கேட்டது: மேசைமேல் மொய்த்தஈ
மொத்தமாய் ஐந்து. அடித்தேன்நான் ஒன்றினை.
எத்தனை இன்னும் இருக்குமென்று சொல்லுங்கள்?
வந்தவர்: ஒன்றுமட்டும். தேர்வாளர்: எப்படி?
கொன்றது மிஞ்சுமே அங்கு? ... 18
எல்லாமே சூப்பர். என்னத்தை சொல்ல !அசத்தறீங்க ரமணி ஐயா..
சும்மா அதிருதில்லே! அமர்க்களம் போங்கள்!
24. உத்திக் கவிதைகள்
1. வினை-பெயர் அடுத்து இருபொருள் படவரும் எண்ணும்மைகள்
(இருவிகற்ப அறுசீர் விருத்தம்)
முள்ளும் மலரும் மலரும் காயும் காயும் கனியுமே
பள்ளும் பறையும் பறையும் ஒலியும் ஒலியும் ஒளியுமே
காகமும் கரையும் கரையும் உடையும் உடையும் கிழியுமே
தாகமும் குறையும் குறையும் மறையும் மறையும் நிறையுமே.
கல்லும் கரையும் கரையும் அணையும் அணையும் உடையுமே
சொல்லும் விளக்கும் விளக்கும் இருளும் இருளும் மருளுமே
காற்றும் அலையும் அலையும் சுழலும் சுழலும் கழலுமே
நாற்றும் தழையும் தழையும் ஆடும் ஆடும் மேயுமே.
[ஒலிதல்=தழைத்தல்; கிழி=பரிசு; மறை=வேதம்]
இதுபோல் அமைத்தெழுத வேறென்ன எண்ணும்மைகள் பயன்படும்?
*****
21. அருகிடும் வானுயிர் வாழ்வு
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வயல்களில் வீடுகள் விளையும் போது
அயலில் இருந்துமுதற் குடிபுகும் மக்கள்
இயற்கைச் சூழலின் அழகும் வாழ்வும்
செயற்கையில் நாள்பட மறைவது காண்பரே! ... 1
இன்னமும் மனைகள் காலி யிருக்க
தினமும் காணும் வானுயிர் வாழ்வின்
விந்தையும் ஒலியும் வண்ணமும் செயலும்
சிந்தையில் என்றும் சீர்த்து நிற்குமே! ... 2
இந்திய ராபின் என்றுபெயர் பெற்ற
பந்தயக் குருவிகள் கூட்டமாய்ப் பறந்து
ஆரவாரத் திரள்களாய் ஆங்காங்கே அமர்ந்து
வீரமாய்ப் பேசித் தத்தித் தேடுமே. ... 3
ஒன்றோ டொன்று என்னதான் பேசுமோ?
ஒன்றை யொன்று எதற்குத்தான் துரத்துமோ?
உருவினில் பருத்து அலகினில் சிறுத்துக்
கருகரு விழிகளை உருட்டுவ தழகு! ... 4
செடிகளின் அடியில் தேங்கிய நீரில்
படபட வென்று சிறகுகள் அடித்தே
உடம்பினை நனைத்துக் குளியல் செய்த
தடம்தெரி யாது தரையினில் தத்தும். ... 5
காக்கைக்குக் காலையில் வைத்த உணவைக்
காக்கையைத் துரத்திக் கவர்ந்து கொள்ளும்!
விடுமுறைக் குழந்தைகள் போலவே தினமும்
தடுப்பா ரின்றித் திளைத்தே ஆடிடும்! ... 6
புழுக்கள் குறைந்து பூச்சிகள் மறைந்து
நுண்கதிர் கோபுர விண்ணலை தாக்க
மனிதன் வாழ்வின் வினோதப் பொறிகளால்
இனிய குருவிகள் இனமே அழியுமே! ... 7
நுண்கதிர் தாக்கும் அடுப்புகள் வீட்டில்!
நுண்கதிர் அழிக்க நலிவுறும் குருவிகள்!
கவலைக ளின்றிக் கைத்தொலை பேசி
செவிட்டில் அறையச் சிரித்து மகிழ்வோம்! ... 8
கடுகள வுடலுடன் காதுறுத்தும் குரலுடன்
செடியிடைத் தத்திக் கழுத்தை வெட்டித்
தேடித் தேடித் தேன்சிட் டோய்ந்தும்
வாடி வதங்காது வகையாய்த் தேடும்! ... 9
மாலை வேளையில் மின்கம்பி மேலமர்ந்து
சாலையின் அமைதியை அனுபவிக்கும் வால்குருவி.
எப்போதும் மழைவிரும்பிக் கூவும் குயில்கள்
தப்பாது எதிரொலிக்கும் நாமதுபோல் கூவிடவே! ... 10
காக்கைகள் கூடக் காவியம் படைக்கும்!
காலையில் இட்டதைச் சடுதியில் விழுங்கி
மாலையில் சிலநாள் மிஞ்சிய கடைச்சரக்குக்
காரவகை இட்டால் காலிபண்ணும் சட்டெனவே. ... 11
காக்கையின் குஞ்சுகள் குரல்காட்டிப் பழகும்.
திருட்டில் வளர்ந்த குயில்குஞ்சின் குரல்கேட்டு
வெருட்டும் காக்கையதை விரட்டி ஓயும்.
குருவிநாம் அசந்தால் கூடுகட்டும் புறம்போக்கியில்! ... 12
மழைபெய்தால் போதும் இன்னும் பலவகை
வண்ணங்கள் கூட்டும் எங்கிருந்தோ வந்து!
மழைக்காலம் முடிந்ததும் மறைந்தே போகும்நம்
எண்ணங்களில் இருந்து இவ்வகைப் பறவைகள். ... 13
மழைநீர் தேங்கிய மனைகளின் சேற்றில்
வெண்ணிறக் கழுத்துடன் காணான் கோழிகள்
மழைநீரில் ஓடி மறைந்தே செடிகளில்
சின்னக் குழந்தைக் குரல்களில் குழுமும். ... 14
நீலச் சிறகும் செங்காலும் கண்பட
சாலை ஓரச் சுவரில் அமர்ந்து
விர்ரெனப் பறக்கும் மீன்கொத்திப் பறவையின்
குரல்கேட் டால்நம் காதுகள் விறைக்கும்! ... 15
சேற்றினை அளைந்து சிறுமீன் உண்ணும்
வெண்ணிறக் கொக்குகள் கூடவே நடந்து
மேயும் மாடுகள் கால்களில் கொத்திப்
பூச்சிகள் உண்டு மாட்டிற் குதவும். ... 16
இயற்கை ஒன்றிய இந்நாள் வாழ்க்கை
செயற்கைக் கானலில் மறைவதென் நாளோ?
இருக்கும் வரையில் கண்களில் விருந்து
மறைந்த பின்னர் மனதில் மட்டுமே! ... 17
--ரமணி, 03/02/2013
*****
Last edited by ரமணி; 25-04-2013 at 02:25 AM.
உங்கள் கவிதைகள் அனைத்தும் சிறப்பு. எனது பரிசு இ காசு 2000
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks