Results 1 to 5 of 5

Thread: முதுகுவலியா என்ன முதலுதவி?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6

    முதுகுவலியா என்ன முதலுதவி?

    முதுகு வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. ஏதேனும் விபத்து மூலமாகவும் விளையாடும் போதும் கீழே விழுதல், அதிக எடையுள்ள பொருட்களைத் முதுகில் தூக்குதல் அல்லது தோள்பட்டையில் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குதல் மேலும் உடற்பருமன் போன்ற காரணங்களால் முதுகு வலி வருவதுண்டு. மேலும் அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது, உட்காருவது, தவறான நிலையில் உட்காருதல், நடத்தல் அல்லது படுத்தல், முதுகை வளைத்து உட்காருதல், தவறான முறையில் சுமை தூக்குதல் போன்ற காரணங்களாலும் முதுகுவலி வருவதுண்டு.

    முதுகு வலி வந்ததும் சில நாட்களுக்கு முதுகுக்கு ஓய்வு தரவும். முதுகுக்கு சுமை தரக்கூடிய வேலைகளை செய்யக்கூடாது.

    முதுகு வலியை குணப்படுத்த வெறும் தரையில் மல்லாக்கப் படுத்து, முழங்கால் மற்றும் மூட்டுகளைச் சற்று மடக்கி, பாதங்களைச் சற்று உயர்த்தி வைத்துக் கொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் முதுகு வலி குணமாகும்.

    ஐஸ் கட்டியைப் பிளாஸ்டிக் பையில் போட்டு, அந்தப் பையால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் தரலாம். பொருள்களை இழுப்பது, தள்ளுவது தூக்குவது கூடாது. அடிக்கடி குனிதல் கூடாது.

    ஒவ்வொருமுறையும் 15 நிமிடங்களுக்குக் குறையாமல் ஐஸ்கட்டி ஒத்தடம் தரலாம்.. இப்படி 3 மணி நேரத்துக்கு ஒருமுறை இரண்டு நாட்களுக்குத் தரலாம். வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம். வலிநிவாரணி களிம்பை வலி உள்ள இடத்தில் தடவி, வெந்நீர் ஒத்தடம் தரலாம்.

    முதுகுவலி நீடிக்குமானால், மருத்துவர் உதவியை நாடவும். முதுகுப்பிடிப்பை எடுக்க முயலாதீர்கள். முதுகுப்பிடிப்பைத் தவறாக எடுத்துவிடும்போது கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நடப்பதில் சிரமம் உண்டாகும்.

    முதுகுவலி குறைந்த பின்னர், முதுகுத் தசைகளுக்கு வலு சேர்க்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். வயிற்றுத் தசைகளுக்கும் கால் தசைகளுக்கும் சேர்த்து உடற்பயிற்சிகள் செய்வது மிக நல்லது. முறையான யோகாசனப் பயிற்சிகளும் உதவும்.

    நன்றி: http://www.dinakaran.com/Medical_Det...d=1649&Cat=500
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  2. Likes sarcharan liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    முதுகுவலி என்பது 'ஒயிட்காலர்' எனவழைக்கப்படும் அலுவலகத்தில் அமர்ந்தே வேலைபார்கும் அனேகருக்கும் வர வாய்ப்புள்ள ஒரு விடையம்.
    விளங்கதந்மைக்கும் சுட்டியிட்டமைக்கும் நன்றி!
    என்றென்றும் நட்புடன்!

  4. #3
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0
    முதுகு வலி வந்தால் தால் தன் தெரியும் எனது மனைவிக்கு அடிகடி வரும் போகும்
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  5. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    இருவிதமாக இப்பிரச்சினையை அணுக வேண்டும் !


    தண்டுவட பயோ கெமிகல் குறைபாடு .....எலும்பு நோய் ,ஆஸ்டியோ போராசிஸ் இது போன்று

    மற்றது அமைப்புக் கோளாறு சவ்வு விலக்கம் போன்றவை

    முதல்வகை தீவிர ஆங்கில மருத்துவத்தாலும் இரண்டாவது வகை நமது யோகா போன்றவையாலும் சரிசெய்யலாம்

  6. #5
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0
    மிக்க நன்றி ஜான் அவர்களே
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •