Results 1 to 6 of 6

Thread: வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள் [மறுபதிப்பு]

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Sep 2003
    Location
    சென்னை (இந்தியா)
    Posts
    103
    Post Thanks / Like
    iCash Credits
    25,993
    Downloads
    3
    Uploads
    1

    வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள் [மறுபதிப்பு]

    வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்

    ஆயிரமாயிரம் ஆசைக்
    கனவுகளைச் சுமந்து
    அயல்நாட்டில் வாழுகின்றோம்

    ஆனால் வாழ்கையின்
    அர்த்தம் புரியாமல்
    வாடுகின்றோம் நாங்கள்!!

    திரைகடல் திரவியம்
    திராம் கணக்கில்
    திரட்டினோம்
    திறைமறைவு காரியங்கள்
    செய்யாமல்.

    அரபிக்கடல் கடந்தோம்
    ஆயிரம் தினார்கள்
    அட்லாண்டிக் சமுந்திரம்
    கடந்தோம் பல்லாயிரம்
    யூரோக்கள், டாலர்கள் !!

    அன்பெனும் சாகரத்தில்
    மூழ்கி, பாசம் எனும்
    முத்தெடுக்க தேடுகின்றோம்
    ஒரு திரைகடலை, ஆனால்
    அதுவோ பாலைவனத்து
    கானல் நீராய் மாறி
    காலங்கள் பலவாகி
    விட்டது!!

    எங்களால் அழவும்
    முடியாது. காரணம்
    எங்கள் கண்ணீரும்
    பெட்ரோலாகி காற்றிலே
    கலந்து காலமாகிவிட்டது !!

    நினைவுகளின் வேதனையில்
    வாடு(ழ்)கின்றோம்!!
    கனவுகளின் நினைவுகளுக்காக
    உறங்குகின்றோம்!!


    அந்நிய நாட்டில்
    சொந்த நாட்டின்
    மூச்சுக் காற்றை
    சுகமாக சுவாசிக்க
    ஏங்குகின்றோம்!!
    -அன்புடன் பாலா-
    முடிந்த பொழுது நல்லதையே செய்
    முடியாத பொழுது நல்லதையே நினை

  2. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    அயல்நாட்டில் வாழ்ந்தாலும் மனம் மட்டும் நம்மன்னிலேதான் நிலைகொண்டிருக்கும் என்பதை வார்த்தைகளில் கண்ணீராய் வடித்திருக்கிறிர்கள்.
    இது எல்லா அயல்நாடுவாழ் தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பு. வாழ்த்துக்கள்!
    என்றென்றும் நட்புடன்!

  3. Likes prakash01 liked this post
  4. #3
    இளையவர் பண்பட்டவர் prakash01's Avatar
    Join Date
    30 Oct 2012
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    23,124
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by balakmu View Post
    வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்



    அரபிக்கடல் கடந்தோம்
    ஆயிரம் தினார்கள்
    அட்லாண்டிக் சமுந்திரம்
    கடந்தோம் பல்லாயிரம்
    யூரோக்கள், டாலர்கள் !!

    அன்பெனும் சாகரத்தில்
    மூழ்கி, பாசம் எனும்
    முத்தெடுக்க தேடுகின்றோம்
    ஒரு திரைகடலை, ஆனால்
    அதுவோ பாலைவனத்து
    கானல் நீராய் மாறி
    காலங்கள் பலவாகி
    விட்டது!!

    எங்களால் அழவும்
    முடியாது. காரணம்
    எங்கள் கண்ணீரும்
    பெட்ரோலாகி காற்றிலே
    கலந்து காலமாகிவிட்டது !!

    நினைவுகளின் வேதனையில்
    வாடு(ழ்)கின்றோம்!!
    கனவுகளின் நினைவுகளுக்காக
    உறங்குகின்றோம்!!


    அந்நிய நாட்டில்
    சொந்த நாட்டின்
    மூச்சுக் காற்றை
    சுகமாக சுவாசிக்க
    ஏங்குகின்றோம்!!
    அழகான வரிகள்..

    வாழ்த்துக்கள்.
    பிரகாஷ்

  5. #4
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    10 Aug 2010
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    31,472
    Downloads
    0
    Uploads
    0
    //எங்களால் அழவும்
    முடியாது. காரணம்
    எங்கள் கண்ணீரும்
    பெட்ரோலாகி காற்றிலே
    கலந்து காலமாகிவிட்டது !!//

    பிழைக்க நாடு கடந்து, துயரில் வாடும் உள்ளங்களின் வலிகளை கூறும் வரிகள்.

    வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் பாலா

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    அழகிய வரிகள் ஓவ்வொன்றிலும்
    கடலையாய் ஆர்ப்பாரித்திடும்
    ஒருவித வலி கலந்த
    ஏக்கம்.
    பணத்தைத் தேடி
    உறவை, பாசத்தை விட்டு
    கடலோடி செல்லும்
    அனைவரையும் ஆக்ரமித்திடும்
    ஒருவித ஏக்கம் கலந்த வலி
    உங்கள் வரிகளில்.. பாராட்டுக்கள் நண்பரே..
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வெளிநாட்டு வாழ்க்கையின் வலி சொற்களில் வெளிப்படுகிறது.

    தனிமை என்ற ஒன்று இல்லாவிட்டால் அந்த வலி அநாதையாகிவிடும்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •