Results 1 to 5 of 5

Thread: குற்ற வுணர்ச்சி

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    குற்ற வுணர்ச்சி

    காரைக்காலில் எங்கள் வீட்டுக்கு எதிர் இல்லத்து மாடியில் பல் மருத்துவர் கபீர்தாஸ்

    வசித்துக்கொண்டு அங்கு கிளினிக்கும் நடத்தினார் . புதுச்சேரியிலிருந்து வந்திருந்த அவர்

    மணமாகாத இளைஞர் . எங்கள் நோய்களுக்கு அவரை நாடியதால் காலப் போக்கில் நெருக்கம்

    முகிழ்த்தது . உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவருக்கு நாங்கள் சமைக்கும் உணவு

    வகைகளுள் சிலவற்றை அவ்வப்போது வழங்கினோம் ; முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிடுவோம் .

    ஒரு நாள் , கோழி பிரியாணி தருவதாய் அறிவித்துவிட்டு மதியம் கொடுத்தோம் .

    விடுமுறை நாள்களில் , என் மனைவியும் ஐந்து பிள்ளைகளும் நானும் வட்டமாய் அமர்ந்து

    ( தரையில்தான் ; சாப்பாட்டு மேசை பழக்கத்துக்கு வராத காலம் ) உரையாடியபடி உண்பது

    வழக்கம் : பிள்ளைகள் அரசு பள்ளிகளில் தமிழ்வழி பயின்றவர்கள் ; அவை வெவ்வேறு பள்ளிகள் ;

    நானும் அரசு பள்ளி ஆசிரியர் . ஆக ஆறு பாடசாலைகளில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை

    அவரவரும் சொல்வோம் ; இவையன்றிப் பொதுவான விஷயங்களும் இடம்பெறும். .

    மிக்க சுவையாய் இருந்தால் உண்டு முடித்த பின்பும் உட்கார்ந்தபடியே பேசிக்கொண்டிருப்போம் .

    அன்று , பக்கத்து இல்லத்தரசி , தமது வீட்டிலிருந்து ( ஓட்டு வீடுகள் : பேசுவது கேட்கும் )

    " சாப்பாட்டு நேரமா ? நானும் வரட்டுமா ? " என வினவினார் .

    " வாங்க , வாங்க ; கோழி பிரியாணி ! " என்றேன் .

    அவர் உடனே , " கோழியா ? இன்னைக்கு அமாவாசை ஆச்சே ! " என்றதும் நான் மௌனித்தேன் ;

    குற்ற வுணர்ச்சி கொண்டேன் ; அமாவாசையில் அசைவம் சாப்பிட்டதற்காக அல்ல . ( நாங்கள் நாள்

    நட்சத்திரம் பார்ப்பதில்லை . விரதம் எதுவும் கடைப்பிடிப்பதில்லை ) ; தந்தையை இழந்திருந்த ஒருவரின்

    விரதத்துக்குப் பங்கம் ஏற்படுத்தியதை எண்ணித்தான் வருந்தினேன் .

    அருந்தி முடிந்ததும் அவரிடம் சென்றேன் ; " மன்னிக்கணும் , அமாவாசை இன்னு தெரியாமே

    அசைவம் கொடுத்திட்டோம் " அவர் பதில் அளித்தார் : " பரவாயில்லை , இதற்கு முன்னாலும்

    சில தடவை இப்படி ஓட்டலில் சாப்பிட்டிருக்கேன் ; வருத்தப்பட வேணாம் "

    உண்மைதானா? அல்லது என்னைச் சமாதானப்படுத்த அப்படிச் சொன்னாரா ? தெரியவில்லை .

    திருமணம் புரிந்துகொண்டு சில ஆண்டு கழித்துச் சொந்த ஊர் போய்விட்ட அவரது

    அகாலச் சாவுச் செய்தி எங்களைப் பெருந் துயரில் ஆழ்த்திற்று .

    ==========================================

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கடைசி வரியைப் படிக்கும்வரை மிகவும் சுவாரசியமாக இருந்தது, ஆனால் கடைசி வரியைப் படித்தவுடன் மனதை ஏதோ செய்கிறது.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    வெள்ளிக்கிழமை , அமாவாசை, கிருத்திகை மற்றும் பண்டிகை நாட்களில் அசைவம் தவிர்ப்பது நல்லது.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    கடைசி வரியைப் படிக்கும்வரை மிகவும் சுவாரசியமாக இருந்தது, ஆனால் கடைசி வரியைப் படித்தவுடன் மனதை ஏதோ செய்கிறது.
    பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . கடைசிச் செய்தியை எழுதுவதா வேண்டாமா என நெடு நேரம் யோசித்தேன் . அந்தத் துக்கம் இன்னமும் என் மனத்தில் கப்பியுள்ளதால் அதை வெளிப்படுத்தினேன் . வாழ வேண்டிய வயதில் பலர் இறக்க நேர்கிறது . கனி இருக்கக் காய் உதிர்வதுண்டு என்று இலக்கியம் சொல்கிறது .

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    வெள்ளிக்கிழமை , அமாவாசை, கிருத்திகை மற்றும் பண்டிகை நாட்களில் அசைவம் தவிர்ப்பது நல்லது.
    பெரும்பாலார்க்கு உங்கள் கருத்துதான் . எங்கள் குடும்பத்தின் கருத்து மாறுபடுகிறது . பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •