Results 1 to 6 of 6

Thread: தமிழர் திருநாள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Jul 2012
    Location
    லியோன்
    Age
    45
    Posts
    487
    Post Thanks / Like
    iCash Credits
    18,254
    Downloads
    0
    Uploads
    0

    தமிழர் திருநாள்

    தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பெருநாள் - அதுவே
    தரணி வாழ் தமிழரின் திருநாள்
    அறுவடையின் ஆண்டவரை வணங்கிட்டு
    உழைத்திட்ட உழவர் பெருமக்களை வாழ்த்திட்டு
    வளமையும் உதவியும் நல்கிடும் இயற்கையை போற்றிட்டு
    புத்தரிசியில் சர்க்கரை பால் பொங்கலிட்டு
    தித்திக்கும் தேன்கரும்பு சுவைத்திட்டு
    மகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்!

    சாதி சமய எல்லைகளை கடந்து - தமிழ்
    இரத்தங்கள் என்ற உணர்வில் கலந்து
    இனம் காக்க இன்பத்தமிழ் காக்க
    இவ்விகம் வாழ் தமிழர் நலன் காக்க
    இதயங்கள் இணைய தோள்கொடுப்போம்
    பாரெங்கும் பசுந்தமிழை பறைசாற்றி
    நாளும் நற்றமிழ் வளர்த்து - நல்லவர்
    தமிழரே என்ற பண்பினை சாற்றிடிட்டு
    மகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்!

    உண்மை சொல்லெடுத்து நாவிற்கு வலிமைதந்து
    ஆற்றல்மிகு திறமைதனில் நம்பிக்கைகொண்டு
    நாளும் பொழுதும் முயற்சியில் வளர்ச்சிக்கண்டு
    உழைப்பின் உயர்வில் முழுநிறைவுக்கண்டு
    வானம்வரை எழும்பட்டும் தமிழ் சமூகம்
    அவர்தம் புகழ் திக்கட்டும் ஒலிக்கட்டும்
    வாழட்டும் தமிழர்யென்று வையகம் வாழ்த்திட
    மகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்!

    தமிழ் மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் மற்றும் தித்திக்கும் பொங்கல் பெருநாள் வாழ்த்துக்கள்.

    பொங்கலோ பொங்கல்!
    தோழமையுடன்
    ஆ. தைனிஸ்

    உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
    உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.

  2. Likes ஜானகி liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    உண்மை சொல்லெடுத்து நாவிற்கு வலிமைதந்து
    ஆற்றல்மிகு திறமைதனில் நம்பிக்கைகொண்டு
    நாளும் பொழுதும் முயற்சியில் வளர்ச்சிக்கண்டு
    உழைப்பின் உயர்வில் முழுநிறைவுக்கண்டு
    வானம்வரை எழும்பட்டும் தமிழ் சமூகம்
    அவர்தம் புகழ் திக்கட்டும் ஒலிக்கட்டும்
    வாழட்டும் தமிழர்யென்று வையகம் வாழ்த்திட
    மகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்!
    அருமையான மற்றும் ஆக்கபூர்வமான வாழ்த்து
    மனமகிழ்ந்து வாழ்த்துவோம் பொங்கட்டும் பொங்கட்டுமென்றே!
    எல்லா மனதிலும் வெற்றி ஆனந்தமாய் பொங்கட்டும்
    பொங்கலோ பொங்கல்!
    என்றென்றும் நட்புடன்!

  4. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    ஆக்கமுடன் நல் எண்ணங்கள் பொங்கட்டும்....

    ஊக்கமுடன் நல் முயற்சிகள் பெருகட்டும்...

    ஏற்றமுடன் நற் பலன்கள் தங்கட்டும்.....

    வாழ்க வளமுடன் நலமாக !

  5. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  6. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  7. #6
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    இன்பம் பொங்க செல்வம் பொங்க வளம் பொங்க, மனதில் அன்பு பொங்க, மன்ற உறவுகளுக்கு எங்க இனிய பொங்க வாழ்த்துக்கள்.

    போங்க, போங்க, பொங்க கொண்டாடுங்க ! அப்புறம் வாங்க மற்றவருடன் மன்ற திரிகளில் பகிர்ந்து களிக்க !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •