யதோச்சையின் யாசகம் அந்த மாலை வேளை
அரை வண்ண விளக்குகளில்
அலங்கரிக்கப்பட்ட தேநீர் விடுதி
வாயில் ஒரு குவளை தேநீர்
ஊறிஞ்ச்யபடியே
சற்று நிதானித்து திரும்புகையில்
நவீன மங்கையின்
மிக இறுக்கமான ஆடைகளில் அங்கங்கள்
"தைரியமிருந்தால் என்னை தொட்டு பார்"
மார்பகத்தின் மீது அச்சடிக்கப்பட்ட வாசகம்
பிரகாசமானது எல்லோரின் (ஆண் )கண்களும்
இருண்டது
அச்சம் நாணம் பயிர்ப்பு இன்னும் சில??????