Results 1 to 8 of 8

Thread: காதல் வலிக்கிறது!

                  
   
   
 1. #1
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  25 Dec 2012
  Location
  கோவை
  Posts
  147
  Post Thanks / Like
  iCash Credits
  18,922
  Downloads
  2
  Uploads
  0

  காதல் வலிக்கிறது!

  ************************************************
  ஆண் அழைப்பு
  ************************************************
  என்னவளே!
  விரல் கோர்த்த போது,விரிந்த நம் இதழ்களும்,
  அனல் கொதித்த போது, என் அன்பு முத்தமும்,
  துயர் நேர்ந்த போது,பலம் தந்த தோள்களும்,
  ஊர் சுற்றும் போது,நாம் கொண்ட உவகையும்,
  கைபேசியில் நாம்,கழித்த பொழுதுகளும்,
  சின்னச் சண்டைகளும்,
  செல்லச் சிணுங்கள்களும்,
  உணர்த்தாத ஊடலையா உணர்த்திவிட்டான்-
  உனக்கு பார்த்திருக்கும் ஆண்மகன்?-
  உனக்காகவே வாழ்கிறேன்- உடனே என்னுடன் வா!
  என்னுயிர் கொடுத்தேனும்,உன் இன்னுயிரை காப்பேன்!
  படி தாண்டி வா என் பத்தினியே!!!  ***********************************************
  பெண் மறுப்பு
  ***********************************************

  என்னவனே!
  உனக்காக மட்டும்,அளித்தேன் என் பெண்மை,
  நாம் கொண்ட காதல், எந்நாளும் உண்மை!
  இறந்தாலும் மறவேன்,மறந்தாலும் இறப்பேன்!
  துயில் கொள்ளும் நேரம்,தலையணையும் குளம்தான்!
  முழுநிலவு கண்டால்,முழுதும் உன் முகம்தான்!
  இருந்தென்ன செய்ய,வர இயலாத பாவி நான்!
  தகப்பனும் தாயும்,தடைதானே எனக்கு!
  தங்கையின் வாழ்வும்,என் முடிவில் இருக்கு!
  மங்கையே நானும்,மாற்றென்ன செய்ய?
  மன்றாடி கேட்டும், மறுப்பேதான் மிச்சம்!
  என் நினைவுகள் என்றும், உன்னுடன் அன்புடன்!
  உன் நினைவு மட்டும்,என்னிடம் கொண்டு,
  உயிர் நீக்கப்போகிறேன்,உலகை விட்டு போகிறேன்!
  மற்றொரு பிறவி மீண்டும் நாம் கண்டால்,
  நீ வர வேண்டும்,என் ஆசை கணவனாய்!

 2. Likes thanigairaja, prakash01 liked this post
 3. #2
  இனியவர் பண்பட்டவர்
  Join Date
  27 Mar 2011
  Location
  madurai
  Age
  58
  Posts
  539
  Post Thanks / Like
  iCash Credits
  59,051
  Downloads
  2
  Uploads
  0
  உரையாடல் வடிவில் கவிதை ..நன்றாக இருக்கிறது ..அருண் கார்த்திக்

 4. Likes prakash01 liked this post
 5. #3
  இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
  Join Date
  02 Aug 2009
  Location
  குவைத்
  Age
  54
  Posts
  980
  Post Thanks / Like
  iCash Credits
  13,615
  Downloads
  13
  Uploads
  0
  கவிதை வரிகள் அருமை அருண்கார்த்திக்...
  மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே: 6. #4
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  51
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  100,796
  Downloads
  21
  Uploads
  1
  ஆழமறியாமல் காலைவிட்டு அவதிப்படுவது போல் எதிர்காலத்தை நினையாமல் காதலில் ஈடுபட்டு பின் கலங்கும் நிலையை என்ன சொல்வது? மனம் கனக்கிறது.

 7. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  52,336
  Downloads
  86
  Uploads
  0
  உணர்வுகளின் உயிர்ப்போராட்டம் கண்டு விழிகளில் இழையோடுகின்றன கண்ணீர்த் துளிகள்..

  உயிரை விடும் உரிமை எமக்கில்லை,, உயிர் நீக்க பிறக்கும் தைரியத்தை வெற்றி மீது வைத்து போராடுங்கள்,
  வெற்றிப்புன்னகை என்றென்றும் உங்கள் வாழ்வில் தவழ்ந்தோடும்...


  கவி நன்று, வாழ்த்துக்கள்...!
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 8. Likes ஆதவா liked this post
 9. #6
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  42
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  360,824
  Downloads
  151
  Uploads
  9
  வருக இனியவள்!

  நலம்தானே?

  கணப்பொழுதில் கவிபொழியும் உங்கள் வரவில் மன்றம் மேலும் செழிக்கட்டும்.

 10. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
  Join Date
  09 May 2007
  Location
  அவுஸ்ரேலியா
  Posts
  3,339
  Post Thanks / Like
  iCash Credits
  52,336
  Downloads
  86
  Uploads
  0
  நன்றி அமரன், நான் மிக்க நலம்.. தாங்கள் நலம் தானே ?
  உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

  ___________________________________________________

  கவியோடு நான்

  இனியவளின் பூங்காவனம்

 11. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  42
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  360,824
  Downloads
  151
  Uploads
  9
  நலமே நானும்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •