Results 1 to 5 of 5

Thread: போதுமடி நீயெனக்கு!

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jul 2012
    Location
    VELLORE
    Age
    37
    Posts
    89
    Post Thanks / Like
    iCash Credits
    12,662
    Downloads
    12
    Uploads
    0

    போதுமடி நீயெனக்கு!

    போதும் பெண்ணே நீயெனக்கு- உயிர்
    ====போகும் வரைக்கும் நானுனக்கு!
    வேதம் கண்ணே நீயெனக்கு- உடல்
    ====வேகும் வரைக்கும் நானுனக்கு!

    பூஜை யறையின் விளக்காக- அடி
    ====நேற்று வரையில் நின்றவளே!
    பள்ளி யறையின் விளக்காகி- என்
    ===பருவம் ஆள வந்தவளே!

    முகத்தைப் பார்க்கும் முன்னாலே- என்
    ====இதயம் இதயம் நீபறித்தாய்!
    முகத்தைப் பார்த்த பின்னாலோ- என்
    ====உயிரும் சேர்த்து நீபறித்தாய்!

    உன்னைப் பார்த்த நொடியில்தான்- என்
    ====பிறவிப் பயனே பூர்த்தியாச்சு!
    காதல் தேவன் சந்நிதியில்- அடி
    ====கண்ணீர் துளசித் தீர்த்தமாச்சு!

    பட்டு வாயை நீதிறந்து- காதல்
    ====பாஷை கொஞ்சம் பேசிவிட்டால்
    கொட்டும் அருவி போல்நெஞ்சில்- தமிழ்க்
    ====கவிதை துள்ளிக் குதிக்கிறது!

    தங்கம் போலே காலெடுத்து- அடி
    ====தரையில் மெல்ல நீநடந்தால்
    கொலுசின் ஓசை செவிபுகுந்து- என்
    ====இதயத் தாழைத் திறக்கிறது!

    வெட்கம் நீயும் கொள்ளுகையில்- என்
    ====புலன்களின் பொறுமை தொலைகிறது!
    வெட்கம் கெட்ட ஆசைகளில்- அடி
    ====பாவி நெஞ்சு அலைகிறது!

    தேடி வந்த தேவதையே- அந்த
    ====தெய்வம் தந்த தாய்மடியே!
    பாடி வந்த பூங்குயிலே- உயிரில்
    ====பாதி யானத் திருமகளே!

    தோளில் சாயும் வேளையிலே-நான்
    ====தூக்கி வளர்த்த தந்தையடி!
    மடியில் சாயும் வேளையிலே- உன்னை
    ====கருவில் சுமந்த அன்னையடி!

    கையைப் பிடிக்கும் வேளையிலே- உன்னைக்
    ====காவல் காக்கும் அண்ணனடி!
    மையல் கொள்ளும் வேளையிலே- உன்னை
    ====மார்பில் சாய்க்கும் மன்னனடி!

    மனத்தில் அல்ல கண்மணியே- உன்
    ====முகத்தில் வாட்டம் வந்தாலும்
    கணத்தில் உந்தன் காலடியில்- என்
    ====கிளியே கிளியே உயிர்துறப்பேன்!

    தென்றல் உன்னைத் தொட்டாலும்- கண்ணே
    ====தூக்கில் அதனைப் போட்டிடுவேன்!
    அத்து மீறல் என்றேதான்- நான்
    ====ஐ.நா. சபையைக் கூட்டிடுவேன்!



    ----------------ரௌத்திரன்
    பேனாக்கள் உறங்கிவிட்ட தேசத்தில்
    போர்வாள்கள் விழித்துக்கொள்கின்றன-------ரெளத்திரன்

  2. #2
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    ஸ்!... ஸ்!...
    கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது!
    என்றென்றும் நட்புடன்!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    அருமையான காதல் கவிதை ! பாராட்டுக்கள் ரௌத்திரன்.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மிகுந்த பொறாமையாக இருக்கிறது.. உங்கள் கவிதைக்கு உரியவரை நினைக்கையில்... கொடுத்து வைத்தவர்.
    மனதார வாழ்த்துகள் இருவருக்கும்.

    எல்லாமுமாய் அமையும் மணாளர் கிடைத்தால் வேறேதும் தேவையில்லை மங்கைக்கு... சொல்ல வார்த்தைகள் இல்லை ரவுத்திரன்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #5
    இளையவர் பண்பட்டவர் prakash01's Avatar
    Join Date
    30 Oct 2012
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    23,124
    Downloads
    6
    Uploads
    0
    அருமையான காதல் கவிதை ரௌத்திரன்.
    பிரகாஷ்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •