தின நாளேடுகளை
திறக்கையிலே
தினம் தினம் திருட்டு,
கொள்ளை ,கொலை ,கற்பழிப்பு ,
சினிமா செய்திகள்,
அழகியின் அட்டை படம் ,
எல்லாம் படித்து முடிக்கையில்
கண்ணீர் சிந்தியது
உருமாறியதை எண்ணி
காகிதமாகி போன மரம்