Results 1 to 6 of 6

Thread: விளிம்பு நீரென...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0

    விளிம்பு நீரென...




    வெளிச்சத்தில் மறைந்திருக்கும் இருளைப் போல

    எனதான அத்தனையிலும் நீயே
    நிறைந்திருக்கிறாய்...

    உன் ஸ்பரிசம் தீண்டும் பொழுது
    சிறகுகள் அமிழ்த்தி அமரும்
    பருந்தைப் போல
    ஒரு கனத்த மௌனம்
    மனதை அழுத்துகிறது...

    நமது ஒவ்வொரு சந்திப்பின்
    முடிவும்

    எதிர்கொள்ளமுடியாத ஒரு
    உண்மையாய்... ஊமையாய்...
    நான் திரும்பும் வழி நெடுகிலும்
    தொடர்கிறது
    எனை உறுத்தவாரே...

    குழந்தையின் புரிந்து கொள்ளமுடியாத
    புன்னகையும் அழுகையும் போல
    உன் மீதான காதலும் கசப்பும்
    விளிம்பு நீரென என் கண்களில்

    சொட்டியும் விடாமல் வற்றியும் விடாமல்...

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    இனம் புரியாத இந்த காதல் படுத்தும் பாடு இப்படித்தான் அக்கா... கவிதை அருமை...



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  3. #3
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    ஸ்பரிசத் தீண்டலின் தகிப்பு.....

    மனம் நிறைந்த நேசத்தின் பகிர்வு.....

    அது கிடைக்காதப்பொழுது ஏங்கும் தவிப்பு.....

    நேசம் தரும் வலி ரணம்....

    கண்ணீரை சொட்டியும் விடாமல் வற்றியும் விடாமல்....

    ப்ப்ப்ப்ப்ப்ப்பா க்ளாஸ் ஹேமா...... அசத்தல் வரிகள்.... ரசித்து வாசித்தேன் ஹேமா.... அன்பு வாழ்த்துகள் தொடரட்டும்பா....
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    கவிதையும் அதற்கேற்ற தலைப்பும் மிகவும் அருமை
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  5. #5
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by HEMA BALAJI View Post


    குழந்தையின் புரிந்து கொள்ளமுடியாத
    புன்னகையும் அழுகையும் போல
    உன் மீதான காதலும் கசப்பும்
    விளிம்பு நீரென என் கண்களில்

    சொட்டியும் விடாமல் வற்றியும் விடாமல்...
    கவித்துவம் தது(ளு)ம்பும் வரிகள் - அருமை!
    என்றென்றும் நட்புடன்!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jun 2012
    Location
    Chennai
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    15,508
    Downloads
    0
    Uploads
    0
    ரசித்துப் படித்து ஊக்கம் தரும் வரிகளும் பகிர்ந்த நட்புகளுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.. மன்ற உறவுகள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •