Results 1 to 4 of 4

Thread: தரிசிக்க முக்தி தரும் தலம் ''சிதம்பரம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    22 Aug 2010
    Posts
    168
    Post Thanks / Like
    iCash Credits
    34,435
    Downloads
    1
    Uploads
    0

    தரிசிக்க முக்தி தரும் தலம் ''சிதம்பரம்

    இறைவனால் உருவாக்கப்பட்ட பல புண்ணிய தலங்கள் ;! அவற்றுள் சில தலங்கள் மிகவும் முக்கியமானவை. ஆம்!

    காஞ்சியில் பிறந்தால்
    முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி, சிதம்பரம் தரிசிக்க முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பர்.

    தரிசிக்க முக்தி தரும் தலம் எனச் சிறப்பித்துக் கூறப்படும் சிதம்பரம் (சித்+அம்பரம்) என்னும் சொல்கு ஆகாயம் (அம்பரம்) என்று பொருள்படும். பஞ்ச பூதங்களில் ஈசன் ஆகாயமாகி நின்றதனால் இத்தலம் இப்பெயர் பெற்றது.

    எல்லா கோயில்களிலும் (சிவன் கோயில்களில்) மூலவர் சிவலிங்கமாய் அமைந்திருப்பார். சிதம்பரத்தில் மட்டும் மூலவரும், உற்ஸவரும் என எம்பெருமான், ஆடல்வல்லான் ஆகி ஸ்ரீநடராஜர் மூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார்.

    நடராஜர் என்ற சொல்லுக்கு நடன + ராஜன் அதாவது நடனத்தின் நாயகன் என்று பொருள். பெரும்பாலும் அனைத்துக் கோயில்களிலும் காணப்படும் நடராஜர் திருமேனி அமைப்பு "ஷட்கோண' வடிவில் அமைந்திருக்கும். இத்தலத்தில் மட்டும் வித்தியாசமாகவும், அதிசயமாகவும் சுவாமியின் திருமேனி ஸ்ரீசக்கரத்தில் அடங்கி உள்ளதைக் காண முடியும். பல கோயில்களில் நடராஜர் விரிந்த சடையும், கேசக் கிரீடமும் எனக் காட்சி தரக் கூடும். இங்கு மட்டும் தொங்கு சடையாக சுவாமியின் மேனியில் பரவி நிற்பதைக் காணலாம். ஆடவல்லானின் கலைகள் ஒவ்வொன்றும் எல்லா தெய்வங்களின் உருவில் மிளிர்கின்றது.

    ஒவ்வொரு நாள் இரவும் அர்த்த ஜாம பூஜை நடைபெறும் சமயம் 64 கலைகளும் சுவாமியின் திருப்பாத கமலத்தில் ஐக்கியமாகி பின்பே அந்தந்த தலங்கட்கு திரும்புகின்றன என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி எல்லா நடராஜர் சிலைகளும் ஒவ்வொரு வகையில் மிகவும் சிறப்பு பெற்றவையே. இருப்பினும் சிதம்பரத்தில் உள்ள எம்பெருமான் தானே வந்து சிலையாக அமர்ந்ததால் பெரும் சிறப்பைப் பெறுகின்றது.

    ஒரு காலத்தில் நடராஜர் சிலை வடிக்க மன்னன் ஆணையிட, சிற்பிகள் சிலை வடிக்க முற்பட்டனர். ஆனால் சிலை உருவாகும் நேரத்தில் எப்படியோ தவறு நடந்துவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் இப்படியே நடந்து வந்தது. சிலை முழுமையடையவில்லை. எனவே சிற்பிகள் அரசரிடம் சென்று தங்களின் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னரோ கடும்கோபம் கொண்டார். அவர் சிற்பிகள் அனைவரையும் அழைத்து ஒருநாள் குறிப்பிட்டு "இத்தேதிக்குள் சிலை முழுமை அடைய வேண்டும். இல்லையேல் உங்களுக்கு சிரச்சேதம்தான்' என ஆணை பிறப்பித்தார். சிற்பிகள் நடுங்கினர். சிற்பிகள் அனைவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. எனவே மிகவும் கவலையுற்று நம்பியவர்களைக் காக்கும் நடராஜர் பாதத்தில் சரணடைந்து மனம் உருகி வேண்டியபடி சிலையமைக்கும் இடம் சென்றனர். அவ்விடம் ஒரு காடு என்பதால் ஜன நடமாட்டமே கிடையாது. சிற்பிகள் கலக்கத்துடன் தங்களின் வேலையைத் துவக்கினர்.

    அப்போது ஒரு வயோதிகர் வந்து நின்று "ஐயா! மிகவும் பசியும், தாகமுமாக உள்ளது. ஏதேனும் உணவு கொடுங்கள்' என இரு கைகளை நீட்டி யாசிப்பவராய் நின்றார். சிற்பிகளோ பதற்றத்தின் உச்சியில் நிற்க, வயோதிகரைப் பார்த்து "ஏனய்யா சமயம் தெரியாமல் நீர் வேறு தொல்லை தருகின்றீர். இவ்விடம் உணவில்லை. உலோகக் கூழ்தான் உள்ளது. நாங்கள் என்ன செய்ய?'' என்றனர்.

    கிழவரோ, ""என்னால் பசி தாங்க முடியவில்லை ஐயா. உயிர்போகும் படியாய், தலை சுற்றுகிறது, நடக்க முடியவில்லை. எனவே இந்த உலோகக் கூழையே ஊற்றுங்கள். குடித்துக் கொள்கிறேன்'' என்றார். சிற்பிகளோ ஒன்றும் புரியாது குழப்பத்துடன் நிற்க, அதில் ஒருவர் ""சரி என்னவோ நடக்கட்டும் கிழவர் கேட்கின்றார் ஊற்றுவோம்'' எனக் கூறி ஒரு குவளை எடுத்து கையில் ஊற்ற பெரியவரோ அதை அன்புடன் சுவைக்க இவர்கள் ஊற்றிக்கொண்டே வந்தனர். சிற்பிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

    அனைத்துக் கூழும் தீர்ந்தது. பெரியவர் சிரித்துக்கொண்டே "அப்பா என் பசி தீர்ந்தது' என்றார். அடுத்த நொடி புன்னகையுடன் குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயும், குமிழ் சிரிப்பும், பனித்த சடையும், பவளம்போல் மேனியும், பால் வெண்ணீறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்துடன் ஆடல்பிரான் சிரித்துக்கொண்டே அருட்காட்சி தந்து நின்றார். நாம் இக்கலியுகத்தில் காணும் சிதம்பர நடராஜன் தானே உகந்து வந்து நாம் உய்யும் பொருட்டு நமக்கு அருளாசி தருகின்றார். நட்சத்திரங்கள் மொத்தம் 27ல் "திரு' என்ற அடைமொழியைக் கொண்டது திருவாதிரை, திருவோணம் என்ற இரண்டுமாகும். திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு உகந்தது.

    ஒருமுறை சுவாமி, அம்பாள் இருவருக்கும் நடனத்தில் சிறந்தவர் யார் என்ற போட்டி வந்தது. முடிவில் சுவாமி வெற்றி பெற்றதை பிரம்மா, விஷ்ணு, இந்திரன் கூறத் தயங்கியவர்களாய் நின்றனர். அப்போது சுவாமி, மயிலாப்பூரில் நெசவு செய்யும் திருவள்ளுவர் மூலம் கூறப் பணித்தார். திருவள்ளுவருக்கு சுவாமி தறிமேடையில் அக்காட்சியைத் தந்தருளினார். அந்நாள் திருவாதிரை நாளாகும்.

    இந்நாள் மார்கழி மாதம், திருவாதிரை அன்று முன் நாளிரவு முதல் ஜாமபூஜை. சுவாமிக்கு மிகவும் அழகான முறையில் பெரிய அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் விடிய விடிய அதிகாலை 3 மணிக்கு மேல் இப்பூஜை சிறப்புடன் நடைபெறும். இது ஒரு மூலாதார பூஜை எனக் கூறப்படுகின்றது.

    இத்துடன் சிவன் ஐந்தொழில்களை உலகிற்கு உணர்த்தும் தாண்டவ தரிசனம் தரும் நாளாகும். அம்பலவாணரின் நான்கு சபைகளில் பொற்சபை எனப் போற்றப்படும் சிதம்பரத்தில்தான் நந்தனார் எனும் அடியவர்க்கு தரிசனம் அளித்ததை வியந்து போற்றத் தோன்றுகிறது.

    இப்படிப் பல வகையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மருதவாணரை, சிதம்பரத்தில் ஆடல்பிரான், நடராஜர், நடேசன், இரத்தின சபாபதி, அம்பலவாணன் எனப் பல திருநாமங்களில் போற்றப்படும் பிரபுவை "நமசிவாய' எனும் மந்திரத்தை ஓதி வழிபடுவோம். வளம் பல பெறுவோம்.

    ''தென்னிந்தியாவின் காசி''


    கேரளாவில் உள்ள திருநெல்லி, தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படுகிறது. நெல்லிமரத்தின் கீழ் விஷ்ணு அமர்ந்துள்ள இடம் என்பதால் முதலில் திருமால் நெல்லி என அழைக்கப்பட்டது. இதுவே மருவி திருநெல்லி என்று அழைக்கப்படுகிறது. மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது போன்ற அனைத்து சடங்குகளையும் இங்கு ஓடும் பாபநாசினி நதிக்கரையில் செய்கிறார்கள். கங்கை நதியும், சரஸ்வதிநதியும் இணைந்ததே பாபநாசினி நதி. பரசுராமர் தன்னுடைய தந்தைக்கு இங்குதான் கடைசி காரியங்களை செய்ததாக தல வரலாறு.
    கேரளாவில் வயநாடு மாவட்டம், மானந்தவாடியிலிருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்

    source;dhinamani/vellimani

  2. Likes ஜானகி liked this post
  3. #2
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    ஆஹா உலோகக்கூழ் குடித்த வயோதிகர் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜரா?

    அருமையான பகிர்வு ஐயா... அன்புநன்றிகள் பகிர்வுக்கு...
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  4. #3
    புதியவர்
    Join Date
    30 Apr 2011
    Posts
    32
    Post Thanks / Like
    iCash Credits
    9,098
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான விளக்கம் மேலும் சரியான விளக்கமும் ஆகும்.

    ”பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
    உரைஉணர்வுக் கெட்டா ஒருவன் – வரைமகள்தான்
    காணும் படியே கருணைஉருக் கொண்டாடல்
    பேணுமவர்க் குண்டோ பிறப்பு” --- உண்மை விளக்கம் பாடல் எண் 38

    பொழிப்புரை :

    பராசக்தியாகிய திருவம்பலமிடமாக நின்று, வரைமகள்தான் காணும்படியே பாதியாகிய மலையரையன் மகள் காணும்படிக்கு, ஆடல் பேணுமவர்க்குப் பிறப்பு உண்டோ திருக்கூத்தை விரும்பினவர்களுக்குப் பின்பு பிறவியில்லையாம்.


    இக்காட்சியை ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சனத்தன்றும் பொன்னம்பலத்தின் பின்புறம் (உள் பிரகாரம்) கணலாம். ஆதலால் தான் தரிசிக்க முக்தி - தில்லை -சிதம்பரம்.
    முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ...

  5. #4
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    திருவாதிரை நாளில்
    திரூவாதிரைகளி போல் ஒரு
    திரட்டுப்பதிவு!

    பாராட்டுகள்! கேசவன்னாரே!
    Last edited by கும்பகோணத்துப்பிள்ளை; 28-12-2012 at 11:49 PM.
    என்றென்றும் நட்புடன்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •