Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: கற்பனைகள்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0

    கற்பனைகள்

    கற்பனைகளோடு
    வாழ்பவனுக்கெல்லாம்
    கற்பனை ஒரு காலுன்றி - மனம்
    தடுமாறும்போதெல்லாம் தாங்கிக்கொள்ளும்!

    கற்பனைகளோடு
    வாழ்பவனுக்கெல்லாம்
    கற்பனை ஒரு கடுமருந்து - மனம்
    காயப்படும்போதெல்லாம் வலிமாற்றும்!

    கற்பனைகளோடு
    வாழ்பவனுக்கெல்லாம்
    கற்பனை ஒரு காயகல்பம் - மனம்
    மரணிக்கும்போதெல்லாம் உயிர்கொடுக்கும்!
    என்றென்றும் நட்புடன்!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    கற்பனையல்ல...நிஜம்தான் !

  3. #3
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    கற்பனை....

    தடுமாறும்போது தாங்கிக்கொண்டு....
    காயப்படும்போது மருந்தாய் தன்னை மாற்றிக்கொண்டு....
    மனம் மரணிக்கும் ஒவ்வொருமுறையும் உயிர்ப்பித்துக்கொண்டு....

    ஒரு நீரூற்றாய் பனி ஊற்றாய் வற்றாத கற்பனையாய் நம்மை வாழவைத்துக்கொண்டு....

    அருமையான வரிகள் கும்பகோணத்துப்பிள்ளை... சிந்தனை ஊற்று அருமை....அன்பு வாழ்த்துகள்.
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    உண்மைதான். கற்பனை ஒரு நல்ல வரம்
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  5. #5
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by ஜானகி View Post
    கற்பனையல்ல...நிஜம்தான் !
    இருவார்த்தை
    திருவார்த்தை

    நன்றி!
    என்றென்றும் நட்புடன்!

  6. #6
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by மஞ்சுபாஷிணி View Post
    கற்பனை....

    தடுமாறும்போது தாங்கிக்கொண்டு....
    காயப்படும்போது மருந்தாய் தன்னை மாற்றிக்கொண்டு....
    மனம் மரணிக்கும் ஒவ்வொருமுறையும் உயிர்ப்பித்துக்கொண்டு....

    ஒரு நீரூற்றாய் பனி ஊற்றாய் வற்றாத கற்பனையாய் நம்மை வாழவைத்துக்கொண்டு....

    அருமையான வரிகள் கும்பகோணத்துப்பிள்ளை... சிந்தனை ஊற்று அருமை....அன்பு வாழ்த்துகள்.
    வாழ்த்துகளுக்கு நன்றி!
    என்றென்றும் நட்புடன்!

  7. #7
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by கோபாலன் View Post
    உண்மைதான். கற்பனை ஒரு நல்ல வரம்
    மனம் வார்க்கும் கற்பனைகளை சொல்
    இனம் பார்த்தே தொகுப்பவர்க்கு
    கவிதை ஒரு நல்ல வரம்!
    மனம் வார்க்கும் கற்பனைகளை சொல்
    வளம் கொண்டே கட்டுபவர்க்கு
    கதை ஒரு நல்ல வரம்!
    மனம் வார்க்கும் கற்பனைகளை சொல்
    மணம் கொண்டே சொக்கவைப்பவர்க்கு
    பேச்சு ஒரு நல்ல வரம்!
    மனம் வார்க்கும் கற்பனைகளை சொல்லாமல்
    உளம் கொண்டே ரசிப்பவருக்கு
    கனவு ஒரு நல்ல வரம்!
    மொத்தத்தில் கற்பனைகள்
    ஒரு நல்ல வரம்!



    நன்றி கோபாலன்
    என்றென்றும் நட்புடன்!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    கற்பனைகளில் வாழ்வது சிலவேளைகளில் ஆபத்தும் கூட... அருமையான கவிதை அன்பரே



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  9. #9
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by பாலகன் View Post
    கற்பனைகளில் வாழ்வது சிலவேளைகளில் ஆபத்தும் கூட... அருமையான கவிதை அன்பரே
    அதனால்தானது மருந்தென்றது
    அளவுக்கு மிஞ்சினால்
    அமிழ்தும் நஞ்சு!

    நன்றியன்பரே!
    என்றென்றும் நட்புடன்!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கற்பனைக்குப் பலவாறு பெயர்சூட்டி மகிழ்வோருண்டு.
    சொற்புணைக்கும் கவிகளெல்லாம் கற்பனையின் குழவிகளே..
    விற்பன்னராயினும் வீணரேயாயினும் வில்லில் ஸ்வரம்பிரிக்கும் வீரரே ஆயினும்
    சிற்பங்கள் வடிக்கின்ற சிற்பியே யாயினும் சீராட்டும் அன்னையே ஆகியபோதிலும்
    கற்பனையின் கைப்பிடித்தே களம்காணும் இவ்வுலகு..
    தற்குறிகள் சொல்லுவதைக் கருதிடாமல் தலைவா உன்
    கற்பனையின் தேரேறி வா..


    என்னையும் கவியெழுதவைக்கும் வார்த்தை வசிகரம் உங்கள் கவிதைகளில் காணக்கிடைக்கின்றன பிள்ளை. வாழ்த்துகள்.

  11. #11
    இனியவர் பண்பட்டவர் கும்பகோணத்துப்பிள்ளை's Avatar
    Join Date
    12 Sep 2012
    Location
    துபாய்
    Posts
    646
    Post Thanks / Like
    iCash Credits
    18,567
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by கலைவேந்தன் View Post
    கற்பனைக்குப் பலவாறு பெயர்சூட்டி மகிழ்வோருண்டு.
    சொற்புணைக்கும் கவிகளெல்லாம் கற்பனையின் குழவிகளே..
    விற்பன்னராயினும் வீணரேயாயினும் வில்லில் ஸ்வரம்பிரிக்கும் வீரரே ஆயினும்
    சிற்பங்கள் வடிக்கின்ற சிற்பியே யாயினும் சீராட்டும் அன்னையே ஆகியபோதிலும்
    கற்பனையின் கைப்பிடித்தே களம்காணும் இவ்வுலகு..
    தற்குறிகள் சொல்லுவதைக் கருதிடாமல் தலைவா உன்
    கற்பனையின் தேரேறி வா..


    என்னையும் கவியெழுதவைக்கும் வார்த்தை வசிகரம் உங்கள் கவிதைகளில் காணக்கிடைக்கின்றன பிள்ளை. வாழ்த்துகள்.
    கற்பனைகளில்லையெனில் கலைகளில்லை!
    கற்பனைகளில்லையெனில் கண்டுபிடிப்புகளில்லை!
    கற்பனைகளில்லையெனில் நீங்களும் நானுமில்லை!

    பன்பும் முதிச்சியும் காட்டிய பாராட்டுக்கு நன்றி
    என்றென்றும் நட்புடன்!

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by Kumbakonathupillai View Post
    கற்பனைகளோடு
    வாழ்பவனுக்கெல்லாம்
    கற்பனை ஒரு காயகல்பம் - மனம்
    மரணிக்கும்போதெல்லாம் உயிர்கொடுக்கும்!
    நிஜமான வரிகள்.

    கற்பனை என்பது மனதில் வரையும் வரைபடம்.
    அற்புத படைப்புகள் அத்தனைக்கும் ஆதாரம் கற்பனையே

    கற்பனை மனதை லயிக்க செய்யும் அழகான அசுர சிறகு.
    சுற்றுலா செல்வதற்கு முன்னால் அதைப்பற்றிய கற்பனைகளே இடைப்பட்ட நாட்களை இனிமையாக்கும்.

    விடுதலைக்கு முன்னால் அமரரான கவிஞர்,
    ஆடுவோமே பள்ளு பாடுவோமே
    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

    என்ற கற்பனை நினைவு கூறத்தக்கது.

    கற்பனை என்பது வெறும் கற்பனையாக இல்லாமல் உணர்ச்சியைக் கலந்து (Emotion) செய்கிறபோது கற்பனையின் சக்தி
    பல மடங்கு பெருகி நினைத்ததை அடைவதற்கான காலத்தை குறைத்துவிடுகிறது. விரைவில் நிறைவேறும் உடனே நடக்கும்.
    என்பது மனவியலாளர்களின் கருத்து.


    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினம தள்ளாமை நீர்த்து

    உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளியது உள்ளப் பெறின்

    மறக்காமல் மறந்துவிடாமல் வேண்டியவற்றைக் குறித்து
    எண்ணிக்கொண்டேயிருந்தால நினைத்ததை அடைவது எளிது என்கிறார் வள்ளுவர்

    மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரம் கற்பனை.

    நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.






    கீழை நாடான்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •