Quote Originally Posted by Kumbakonathupillai View Post
கற்பனைகளோடு
வாழ்பவனுக்கெல்லாம்
கற்பனை ஒரு காயகல்பம் - மனம்
மரணிக்கும்போதெல்லாம் உயிர்கொடுக்கும்!
நிஜமான வரிகள்.

கற்பனை என்பது மனதில் வரையும் வரைபடம்.
அற்புத படைப்புகள் அத்தனைக்கும் ஆதாரம் கற்பனையே

கற்பனை மனதை லயிக்க செய்யும் அழகான அசுர சிறகு.
சுற்றுலா செல்வதற்கு முன்னால் அதைப்பற்றிய கற்பனைகளே இடைப்பட்ட நாட்களை இனிமையாக்கும்.

விடுதலைக்கு முன்னால் அமரரான கவிஞர்,
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

என்ற கற்பனை நினைவு கூறத்தக்கது.

கற்பனை என்பது வெறும் கற்பனையாக இல்லாமல் உணர்ச்சியைக் கலந்து (Emotion) செய்கிறபோது கற்பனையின் சக்தி
பல மடங்கு பெருகி நினைத்ததை அடைவதற்கான காலத்தை குறைத்துவிடுகிறது. விரைவில் நிறைவேறும் உடனே நடக்கும்.
என்பது மனவியலாளர்களின் கருத்து.


உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினம தள்ளாமை நீர்த்து

உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

மறக்காமல் மறந்துவிடாமல் வேண்டியவற்றைக் குறித்து
எண்ணிக்கொண்டேயிருந்தால நினைத்ததை அடைவது எளிது என்கிறார் வள்ளுவர்

மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரம் கற்பனை.

நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.