Page 103 of 391 FirstFirst ... 3 53 93 99 100 101 102 103 104 105 106 107 113 153 203 ... LastLast
Results 1,225 to 1,236 of 4690

Thread: புதிரோ புதிர் எண்-571-05-06-2015

                  
   
   
  1. #1225
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    :lol: :lol: :lol: அங்கே தலை எங்க ஆடறது..... :lol: :lol: வால்கள் தான் ஆடுகின்றன.... :lol: :lol: :wink:
    அன்புடன்
    மணியா.... :lol:
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:28 AM.

  2. #1226
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    இம்முறையும் பரஞ்சோதி அவர்கள் சரியான விடையைக் கூறிவிட்டார். வாழ்த்துக்கள் பரஞ்சோதி.
    அடுத்த புதிரைப் பார்ப்போம்
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:29 AM.

  3. #1227
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண் - 140

    ஒரு ஊரிலே மாணிக்கம் என்று ஒருவன் இருந்தான். ஓரளவு செல்வம் மிக்கவன். ஏழைகளுக்கு இரங்கும் கருணை உள்ளம் கொண்டவன். அதே ஊரிலே கருப்பன் என்று ஒருவனும் இருந்தான். அவன் பேராசை மிக்கவன். ஏழைகளுக்குக் கடன் கொடுத்துக் கந்து வட்டி வாங்குவது அவனுக்குக் கை வந்த கலை.அந்த ஊரில் இருந்தவர்கள் மாணிக்கத்தைப் புகழ்ந்து பாராட்டியும், கருப்பனை இகழ்ந்தும் பேசுவார்கள்

    மாணிக்கத்தின் புகழைக் கண்டு கருப்பன் மிகுந்த பொறாமை கொண்டான்.எப்படியாவது மாணிக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான்.

    ஒருநாள் மாணிக்கத்தைப் பார்க்க அவனது நண்பன் வந்திருந்தான்.அவனுக்கும் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பெரும் பணக்காரரின் மகளுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாகவும், மணப்பரிசாக மணமகளுக்குக் கொடுக்க விலை உயர்ந்த வைர மோதிரம் ஒன்று வாங்கவேண்டும் என்றும், திருமணச் செலவு நிறைய ஆகி ,அவனிடம் பணப்பற்றாக்குறை இருப்பதினால், மாணிக்கம் கொடுத்து உதவினால், ஒரு மாத காலத்துக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் கூறினான். நண்பனுக்குத் திருமணம் கூடிவந்தது கேட்டு மாணிக்கம் மகிழ்ந்தான். ஆனால் அந்த சமயம் மாணிக்கத்திடம் கையிருப்பில் பணம் இல்லை. அவனுக்கும் ஒரு மாதத்துக்குள் பணம் வந்துவிடும். இருந்தாலும், நண்பன் கேட்கும்போது இல்லை என்று சொல்வது எப்படி என்று யோசித்து, மறுநாள் தருவதாகக் கூறினான்.

    அன்று மாலையே, கருப்பனிடம் சென்று ஒரு மாதகாலத்தில் திரும்பக் கொடுப்பதாகக் கூறி ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டான்.கருப்பனுக்கு ஒரே மகிழ்ச்சி. மாணிக்கம் தன்னிடம் மாட்டிக்கொண்டான் என்று நினைத்து, பணத்தைக் கொடுப்பதாகக் கூறினான்.ஆனால் ஒரு நிபந்தனை போட்டான். அதாவது அவனுக்கு வட்டி ஏதும் வேண்டாம் என்றும், சரியாக முப்பது நாளைக்குள் பணம் தர இயலாவிட்டால், மாணிக்கத்தின் உடலில் இருந்து அவன் விரும்பிய இடத்தில், ஒரு கிலோ சதையை வெட்டி எடுத்துக்கொள்ள சம்மதம் என்று மாணிக்கம் பத்திரம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்றும் கூறினான்.மாணிக்கம் அதைப் பற்றி எதுவும் அதிகம் ஆலோசிக்காமல், எப்படியும் ஒரு மாதத்தில் பணம் வந்துவிடுமென்பதினால் சம்மதித்து பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் சென்று நண்பனுக்குக் கொடுத்தான்.நண்பனும் திருமணம் குடிந்து மனைவியை அழைத்துக்கொண்டு தேனிலவுப் பயணம் சென்று விட்டான்.

    ஒரு மாதம் சென்றது. எதிர்பாரதவிதமாக மாணிக்கத்தின் பணம் கைக்கு வந்து சேர தாமதம் ஆகிவிட்டது.நண்பனும் தேனிலவு முடிந்து இன்னும் திரும்பி வரவில்லை. அதனால் கருப்பனிடம் வாங்கிய பணத்தைக் கூறியபடி கொடுக்க இயலாமல், கருப்பனிடம் சென்று எப்படியும் இன்னும் பத்து நாட்களுக்குள் பணம் கொடுப்பதாகக் கூறினான் மாணிக்கம்.
    கருப்பன் இந்த சந்தர்ப்பத்துக்காத்தானே காத்திருந்தான். அவன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. " பத்திரத்தில் ஒத்துக்கொண்டபடி ஒரு கிலோ சதைதான் வேண்டும் அது இல்லாமல் நீ ஆயிரம் மடங்கு பணம் பத்து நாட்கள் கழித்துக் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம்" என்றான்......அது மட்டும் இல்லாமல் அந்த பஞ்சாயத்தில் போய் வழக்கும் தொடுத்தான்.
    பஞ்சாயத்து கூடியது. யார் என்ன சொன்னாலும் கருப்பன் ஒத்துக்கொள்ளவில்லை. தனக்கு ஒரு கிலோ சதைதான் வேண்டும் என்றான். அந்த பஞ்சாயத்து தலைவர் சிறந்த அறிவாளி.......சிறிது நேரம் ஆலோசனை செய்தார்..பிறகு கருப்பனின் கோரிக்கை நியாயமானதே என்றும், கருப்பன், மாணிக்கத்தின் உடலில் இருந்து ஒரு கிலோ சதையை அரிந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக்கூறினார்.அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
    கருப்பன் ஒரு கத்தியையையும் தராசையும் எடுத்துக்கொண்டு மாணிக்கத்தை நெருங்கி, எந்த இடத்தில் இருந்து சதையை அறுக்கலாம் என்று மாணிக்கத்தை ஏற இறங்கப் பார்த்தான்.
    அப்போது "ஒரு நிமிஷம் பொறு கருப்பா" என்றால் பஞ்சாயத்துத் தலைவர்.கருப்பன் என்ன என்று கேட்டபடி அவரைப் பார்த்தான்.
    அவர் கூறியதைக் கேட்டதும், தனக்கு மாணிக்கத்தின் உடலில் இருந்து சதை வேண்டாம்என்றும், தாமதம் ஆனாலும் பரவாயில்லை,தனது பணத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும் என்றும் கூறினான்....

    ஆனால் தலைவர் "மாணிக்கம் பணம் கொடுக்கமாட்டான். பத்திரத்தில் குறிப்பிட்டபடிதான் நடக்கவேண்டும்." என்று சொல்லியதும், கருப்பன் தனக்கு ஒன்றுமே வேண்டாம் என்றபடி அங்கிருந்து ஓடிவிட்டான்.....
    நண்பர்களே பஞ்சாயத்துத் தலைவர் கருப்பனிடம் என்னதான் கூறினார்?????????
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:29 AM.

  4. #1228
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    அவன் ஒரு கிலோ சதையை மட்டும்தான் எடுக்கவேண்டும். ஒரு துளி ரத்தம் கூட எடுக்கக்கூடாது என்று சொல்லியிருப்பார்.
    அன்புடன்
    மணியா
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:30 AM.

  5. #1229
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    Merchant of Venice!
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:30 AM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  6. #1230
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    மணியா அண்ணா சரியான பதில் சொல்லியிருக்காங்க, வாழ்த்துகள்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:30 AM.
    பரஞ்சோதி


  7. #1231
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    Merchant of Venice!
    கரிகாலன் அண்ணா, மேலே சொன்னதை தலைப்பை சின்ன வயதில் கதை படித்திருக்கிறேன். ஆனால் நினைவில் இல்லை, சுருக்கமாக சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:31 AM.
    பரஞ்சோதி


  8. #1232
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    பரஞ்சோதிஜி

    ஷேக்ஸ்பியரின் நாடகங்களுள் ஒன்று "வெனிஸ் நகர வணிகன்".

    ஷைலக் என்ற பெயர் (வில்லனாக இருந்தும்) இந்த நாடகத்திலிருந்துதான் பிரசித்தி அடைந்தது -- மற்ற கதாபாத்திரங்களை விட.

    மற்ற பாத்திரங்கள் அந்தோனியோ, பஸ்ஸானியோ & போர்ஷியா -- கடைசி இரண்டும் ஜோடிகள்.

    அந்தோனியோ கடன் படுகிறான், ஷைலக்கிடம். அந்தோனியோவின் கப்பல் மூழ்கிவிடுகிறது. நஷ்டமோ நஷ்டம். நிபந்தனைப் படி ஷைலக் அந்தோனியோவின் இதயத்திற்கு அருகில் இருக்கும் ஒரு பவுண்ட் சதையை வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டும் -- கடன் அடைக்கப்படாவிட்டால். இந்த நாடகத்திலிருந்துதான் -- He wants his pound of flesh -- என்கிற சொற்றொடர் வந்தது.

    கோர்ட்டில் போர்ஷியா வாதாடுகிறாள். கடைசியில் ஒத்துக்கொள்கிறாள் சதையை வெட்டி எடுத்துக்கொள்ளும்படி -- தனது கட்சிக்காரருடைய!

    கத்தியுடன் ஷைலக் நெருங்கும்போது, போர்ஷியா சொல்கிறாள், சதையை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், ரத்தம் சிந்தக்கூடாதென்றும்.

    ஷைலக் விக்கித்துப் போகிறான்.

    ===கரிகாலன்
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:31 AM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  9. #1233
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    மிக்க நன்றி அண்ணா.

    கேட்டதும் சொன்ன உங்க பாங்கு என்னை வியக்க வைக்கிறது. பழைய நினைவுகளை மீண்டும் நினைத்து பார்க்க வைத்தமைக்கு நன்றி.
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:31 AM.
    பரஞ்சோதி


  10. #1234
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    மணியா அவர்களே சரியான பதில் கூறியுள்ளீர்கள்.
    கரிகாலன் கூறியபடி இது வெனிஸ் மெர்ச்சண்ட்டைத் தழுவிய புதிர்தான்.
    வெனிஸ் மெர்ச்சண்ட் கதையை, சுறுக்கமாகவும் அதே சமயம் சுவையாகவும் கூறியிருந்தீர்கள். மிக்க நன்றி.
    சரி தொடர்ந்து சுலபமான புதிர்களையே கொடுத்துவிட்டேன். அடுத்த புதிர் கொஞ்சம் கடினமானது. [ அப்படி நான் நினைக்கிறேன். யார் தூள் பரத்தப் போகிறார்களோ தெரியவில்லை] வாருங்கள் அடுத்த புதிரைப் பார்ப்போம்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:32 AM.

  11. #1235
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண் - 140

    ஒரு ஊரில் அண்ணன் தம்பி இருவரும் தந்தை சேர்த்து வைத்த சொத்துக்களைச் சமமாகப் பிரித்துக்கொண்டார்கள். மீதம் இருந்த ஒரு பசு மாடு மட்டும்தான். இருவருமே அந்த பசு தனக்குத்தான் வேண்டும் என்று பிடிவாதமாகப் பேசினார்கள்.யாரும் விட்டுத் தரத் தயாராக இல்லை. அதனால் இருவரும் மாட்டை ஓடிக்கொண்டு அந்தப் பகுதியை ஆண்டுவந்த அரசனிடம் போனார்கள்.
    கொழுகொழுவென்று அழகாக இருந்த பசுமாட்டைக் கண்ட அரசன், ஏதாவது தந்திரம் செய்து அந்தப் பசுவை தான் வைத்துக்கொள்ளத்
    தீர்மானித்தான்.
    அதனால் அவர்களைப் பார்த்து, "நான் உங்களை மூன்று கேள்விகள் கேட்கிறேன். நாளைக் காலைக்குள், உங்களில் யார் அதற்குச் சரியான விடை தருகிறரோ, அவருக்கே பசுமாடு சொந்தமாகும். இருவருமே சரியான விடை கொடுக்காவிட்டால், நான் மாட்டை எடுத்துக்கொள்வேன்" என்றான்.
    இது ஏதடா....குரங்கு, ஆப்பக் கதையாக இருக்கிறதே என்று அவர்கள் நினைத்தாலும், அரசனின் சொல்லை மீற முடியாமல், என்ன கேள்விகள் என்று கேட்டார்கள்.
    "மனிதனின் வயிற்றை நிரப்புவதில் சிறந்ததாகக் கருதப்படுவது எது?
    மனிதனுக்கு மிகுதியான இன்பம் தருவது எது?
    மிக வேகமாகப் பயணம் செய்வது எது"...இதுதான் எனது கேள்விகள் என்றான் அரசன்.
    அண்ணன் தம்பி இருவரும் கேள்விகளுக்கான பதிலை ஆலோசனை செய்தபடி வீடு வந்தார்கள்.
    அண்ணனோ இவை எளிதான கேள்விகள். தான் சரியான பதில் கூறி பாட்டை ஓட்டிக்கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்து மேற்கொண்டு சிந்தனை செய்யாமல் வீட்டுக்கு வந்ததும், சாப்பிட்டு உறங்கிவிட்டான்.
    ஆனால் தம்பியோ, இந்தக் கேள்விகளை சாதாரனமாக நினைக்கவில்லை. நல்ல பதிலாக என்ன கூறலாம் என்ற சிந்தனையிலேயே, உறக்கமின்றித் தவித்தான். அப்போது அவனது மூத்த மகள், அங்கே வந்தாள். அவள் அழகு நிறைந்தவள்....அதி புத்திசாலி. சாமர்த்தியம் மிக்கவள். அவள் தனது தந்தையின் நிலை கண்டாள். என்ன விஷயம் என்று கேட்டாள். அவனும் நடந்த விபரங்களைக் கூறினான். சிறிது நேரம் சிந்தனை செய்த அவள், " தந்தையே, கவலைப் படாதீர்கள். நான் அரசனது கேள்விகளுக்குச் சரியான விடை கூறுகிறேன்...நீங்கள் அந்த விடைகளைக் கூறி பசுமாட்டை கொண்டு வந்துவிடுங்கள்" என்றாள்.
    அவள் கூறிய விடைகளை மனதில் வாங்கிக்கொண்ட தம்பி....மறுநாள் அரசவைக்குச் சென்றான். அண்ணனும் வந்திருந்தான்.
    முதலில் அண்ணன் தனது பதிலைக் கூற எழுந்து,
    " அரசே, மிகவும் சிறந்த உணவு தேன்....
    மிகவும் மகிழ்ச்சியைக் கொடுப்பது பணம்,.....
    மிகவும் வேகமாகச் செல்வது வேட்டை நாய்" என்றான்.

    அரசன் அவனது பதில் தவறானது என்று கூற அண்ணன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு சபையை விட்டு வெளியேறினான்.
    அண்ணன் சென்றபிறகு தம்பி எழுந்தான். அரசனை வணங்கிவிட்டு, தம்பி கூறிய பதில்களை அரசன் மிகச் சரியானவை என்று ஏற்றுக்கொண்டான்..

    நண்பர்களே அரசனது கேள்விகளுக்கு தம்பி கூறிய பதில்கள் என்ன????
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:32 AM.

  12. #1236
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    உணவு;
    நீர்;
    மனம்.

    ===கரிகாலன்
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:32 AM.
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

Page 103 of 391 FirstFirst ... 3 53 93 99 100 101 102 103 104 105 106 107 113 153 203 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •