Page 101 of 391 FirstFirst ... 51 91 97 98 99 100 101 102 103 104 105 111 151 201 ... LastLast
Results 1,201 to 1,212 of 4690

Thread: புதிரோ புதிர் எண்-571-05-06-2015

                  
   
   
  1. #1201
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    பரஞ்சோதி மிகச் சரியான விடையைத்தான் கூறியுள்ளார் அறிஞரே.
    பரஞ்சோதிக்கு எனது வாழ்த்துக்கள். இதோ அடுத்த புதிர்
    Last edited by சுகந்தப்ரீதன்; 26-05-2008 at 03:35 PM.

  2. #1202
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண் - 134
    சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் விரைவு ரயில் இரவு 9 மணிக்குப் புறப்பட்டது. இருவர் மட்டும் பயணம் செய்யும் முதல் வகுப்புப் பெட்டியில் இரண்டு பேர் இருந்தார்கள்.அதில் ஒருவன் பக்காத் திருடன். தன்னுடன் பயணம் செய்பவர், பெட்டி நிறையப் பணம் கொண்டு செல்கிறார் என்ற நம்பகமான தகவல் அவனுக்குக் கிடைத்திருந்ததினால், தானும் அந்தப் பெட்டியிலேயே இருக்கை பதிவு செய்துகொண்டு, அவனும் ஒரு பெட்டியை கையுடன் கொண்டு வந்து பயணிபோல் நடித்துக்கொண்டு,.அவருடன் பயணம் செய்தான்.
    இடையில் அவர் பெட்டியைத் திறக்கும்போது உள்ளே பணம் நிறைய இருப்பதையும் கண்டான். வாய்ப்புக் கிடைக்கும்போது அந்தப் பெட்டியில் உள்ள பணத்தை திருடிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்வதற்குள் திருட்டை நடத்தத் திட்டமிட்டான். ஏனென்றால் அப்போதுதான் மற்றவர் ஆழ்ந்த நித்திரையில் இருப்பார்.
    வண்டி விழுப்புரம் தாண்டியது. பக்காத் திருடன் எழுந்தான். எதிரே இருந்தவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்ததைப் பார்த்தான். சிறுநீர் கழித்துவிட்டு வந்து, நிதானமாகத் திருட்டை நடத்தலாம் என்று நினைத்து, டாய்லெட் சென்று திரும்பினான்..சப்தமில்லாமல் அவரது பெட்டியை நகர்த்தினான். திறமையாகப் பெட்டியைத் திறந்தான். ஆனால் உள்ளே பணம் எதுவுமே இல்லை. பதிக்கும் மேல் காலியாக,வெறும் துணிமணிகளும், தின்பண்டங்களுமே இருந்தன.
    பக்காத் திருடனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தப் பெட்டியில் பணம் இருந்ததை அவன் ஏற்கனவே கண்டிருந்தான். நிச்சயமாக அவர், இந்த ரயில் கம்பார்ட்மெண்டுக்குள்தான் எங்கோதான் மறைத்து வைத்துள்ளார் என்று முடிவு செய்து, கம்பர்ட்மெண்ட் முழுவதும் தேடினான். எங்குமே கிடைக்கவில்லை. .
    இதற்கிடையில் வண்டி திருச்சியைத் தாண்டியது.. திருடனும் சளைக்காமல் ,அவன் தேடிச் தேடிச் சலித்துவிட்டான். எங்குமே கிடைக்கவில்லை. விடிந்தது மதுரையும் வந்துவிட்டது.இரவு முழுதும் உறக்கமின்றி இருந்த பக்காத் திருடன், முகம் கழுவிக்கொண்டு வரலாம் என்று , வாஷ் பேசின் சென்று வந்தான்.
    அவன் போய் வந்த பின்பு, மற்ற பயணி எழுந்தார். தனது உடமைகளை எடுத்து வைத்தார். திருடன் கண்முன்னாலேயே பெட்டியைத் திறந்து, உள்ளே இருந்த தனது புதிய வேஷ்டியை எடுத்து உடுத்திக்கொண்டார். உள்ளே பணம் கட்டுக்கட்டாக இருந்ததை திருடன் கண்டான்.
    அவனுக்கு ஒரே ஆச்சர்யம். தான் திறந்து பார்த்தபோது இல்லாத பணம், இப்போது பெட்டிக்குள் எப்படி வந்தது என்று வியந்தான்!!!!!. தலையைப் பிய்த்துக்கொண்டன். அவனுக்குப் புரியவே இல்லை.
    நண்பர்களே, அவர் பணத்தை எங்கே ஒளித்து வைத்திருந்தார்?
    .நீங்கள்தான் அந்தப் பக்காத் திருடனுக்குச் சொல்லவேண்டும்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 26-05-2008 at 03:35 PM.

  3. #1203
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    அவர் அந்த திருடன் பாத்ரூமுக்கு போயிருந்தபோது தன் பண கட்டுகளை திருடனின் பொட்டியில் வைத்து விட்டார். அதேபோல் காலையில் அவன் முகம் கழுவ போயிருந்த போது மீண்டும் அவன் பொட்டியிலிருந்து தன் பொட்டிக்கு பணக்கட்டுகளை மாற்றிவிட்டார்.
    அன்புடன்
    மணியா
    Last edited by சுகந்தப்ரீதன்; 26-05-2008 at 03:36 PM.

  4. #1204
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    கில்லாடி மணியா... திருடனை போலவே யோசிக்கிறீர்கள்...

    வாழ்த்துக்கள்
    Last edited by சுகந்தப்ரீதன்; 26-05-2008 at 03:36 PM.

  5. #1205
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    தலையின் பதில் அருமை.
    Last edited by சுகந்தப்ரீதன்; 26-05-2008 at 03:36 PM.
    பரஞ்சோதி


  6. #1206
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    மணியா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    சரியான பதில்.
    அடுத்த புதிருக்குப் போவோம்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 26-05-2008 at 03:37 PM.

  7. #1207
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண் - 135

    ஒரு ஊரில் பயந்த சுபாவமுடைய உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வாய்த்திருந்த மனைவியோ அடங்காப்பிடாரியாக இருந்தாள்.தன் கணவனின் இயல்பு அறிந்த அவள், தினமும் விளக்குமாற்றால் இரண்டு அடி அடித்தபிறகுதான் அவனுக்கு சாப்பாடே போடுவாள்.

    நாள்தோறும் விளக்குமாற்றுப் பூசை வாங்கிய உழவனுக்கு வாழ்க்கையே சலித்துப்போனது.மனைவியிடம் இருந்து தப்பித்து, பத்து நாட்களுக்காவது நிம்மதியாக இருக்கவேண்டும் என்று நினைத்த அவன், தான் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியுள்ளதென்றும், பத்து நாட்களில் வந்துவிடுவதாகவும் கூறினான்.
    அதற்கு அவள், " உன்னை விளக்குமாற்றால் தினம் ஒருமுறையாவது அடிக்காவிட்டால் எனக்கு உறக்கம் வராதே. நான் என்ன செய்வேன் " என்றாள். அவனோ, " தோட்டத்தில் வேப்ப மரம் ஒன்று இருக்கிறது. அதை நானாக நினைத்து வேண்டுமட்டும் அடித்துக்கொள்" என்று கூறிவிட்டு வெலியூர் புறப்பட்டுப் போனான்.

    அவளும் தன் கணவன் கூறியது போலவே, வேப்ப மரத்தை விளக்குமாற்ரால் ஓங்கி ,ஓங்கி அடித்தாள்.அந்த மரத்தில் நீண்ட நாட்களாக ஒரு பேய் தங்கியிருந்தது. அவளது அடியைத் தாங்கமாட்டாமல், வேப்ப மரத்தை விட்டு ஓடிவிடத் தீர்மானித்தது. உழவன் திரும்பிவந்ததும், " நீ எப்படித்தான் உனது மனைவியின் விளக்குமாற்று அடியை தினமும் தாங்கிக் கொள்கிறாயோ தெரியவில்லை. என்னால் தாங்க இயலவில்லை. அதனால் நான் இங்கிருந்து ஓடப்போகிறேன். ஆனால் போகும் முன்பாக உனக்கு ஒரு உதவி செய்யலாம் என்று நினைக்கிறேன்.நான் இங்கிருந்து போய், இந்த நாட்டு அரசனின் மகளைப் பிடித்துக்கொள்ளப் போகிறேன். நீ வந்தால்தான் அவளை விட்டுப் போவேன். உனக்கும் ஏராளமான பொன் மற்றும்பரிசுகள் கிடைக்கும். அதன் பிறகு உனது மனைவி உன்னை அடிக்கமாட்டாள்.," என்று கூறிவிட்டுப் போனது.

    சொன்னபடியே, அந்தப் பேய், அந்நாட்டு அரசனின் மகளைப் பிடித்துக்கொண்டது. பெரிய பெரிய மந்திரவாதிகள் எல்லாம் வந்து எவ்வளவோ முயற்சி செய்தும் பேய் அவளை விட்டு விலகவில்லை.. தனது மகளைப் பிடித்த பேயை யார் விரட்டினாலும் அவர்களுக்கு ஏராளமான பொண்ணும் பொருளும் பரிசளிக்கப்படும் என்று அரசன் அறிவித்தான்.
    உழவன் அங்கே சென்றான்.அவனைக் கண்டதும் பேய், " அய்யோ நான் போய்விடுகிறேன்" என்று சொல்லியது. அதே சமயம் அவனது காதில், "நான் உனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன். இனி நீ என் வழிக்கு வந்தால் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்றும் கூறியது.
    பேயிடம் இருந்து மகளைக் காப்பாற்றிய உழவனுக்கு அரசன் பெரும் பொருளும் பொண்ணும் கொடுத்தான்.ஆனால் அந்தப் பேய் பக்கத்து நாட்டு அரசன் மகளைப் பிடித்துக்கொண்டது. அங்கும் இதே நிலைதான். எவ்வளவோ முயற்சித்தும் அவளை விட்டுப் போகவில்லை. பக்கத்து நாட்டு இளவரசியைப் பிடித்திருந்த பேயை ஒரு உழவன் விரட்டிய விஷயத்தை அறிந்த மன்னன், உழவனை வரவழைத்தான். தனது மகளைப் பிடித்துள்ள பேயை விரட்டக் கேட்டுக்கொண்டன். ஆனால் உழவன் முடியாது என்று மறுத்தான். அரசனோ, "நீ பேயை விரட்டாவிட்டால், உன்னைக் கொன்றுவிடுவேன்" என்று கோபமுடன் கூறினான். வேறு வழியின்றி, உழவன் இளவரசியிடம் சென்றான். அவனைப் பார்த்த பேய், " உழவனே, உனக்கு என்ன திமிர்?.மீண்டும் என் வழிக்கு வராதே என்று கூறியிருந்தேன். அதை சட்டை செய்யாமல் வந்துவிட்டாய். அதனால் உன்னைக் கொல்லப் போகிறேன் " என்றது.
    உழவன் அந்தப் பேயிடம் ரகசியமாக ஏதோ கூறினான்.
    உடனே பேய், போகிறேன், போகிறேன் என்று அலறிக்கொண்டு அந்த நாட்டையே விட்டு ஓடிப்போனது.

    உழவன் பேயிடம் என்ன சொல்லியிருப்பான்.?????
    Last edited by சுகந்தப்ரீதன்; 26-05-2008 at 03:37 PM.

  8. #1208
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    என் மனைவி விளக்குமாறோடு உன்னை அடிக்க வருகிறாள் என்று சொல்லியிருப்பார்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:22 AM.
    பரஞ்சோதி


  9. #1209
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    அடேயப்பா என்ன விரைவான பதில்.
    அசத்துகிறீர்கள் பரஞ்சோதி.
    அடுத்த புதிரைப் பார்ப்போம்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:22 AM.

  10. #1210
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    புதிர் எண் - 136

    முன்னொரு காலத்தில் பரமன் என்ற உழவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரே மகள்.அவள் பெயர் மலர்விழி. அவள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, திருமணப் பருவத்தை அடையும்போது பேரழகியாகத் திகழ்ந்தாள்.அவழது அழகின் சிறப்பை கேள்விப்பட்ட மூன்று இளைஞர்கள் , அவளையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் அவள் இருந்த ஊருக்கு வந்தார்கள்.
    மூவருமே தனித்தனியாக பரமனைச் சந்தித்து, அவனது மகளை தனக்குத்தன் மணம் செய்து வைக்கவேண்டும் என்றும் இல்லையானால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் உறுதியாகச் சொன்னார்கள்.

    இதைக் கேட்ட பரமனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.மூவரில் யாராவது ஒருவனுக்குத்தானே, மகளை மணம் செய்து வைக்க முடியும். அப்போது மற்ற இருவர் இறந்துவிடுவார்களே? அந்தப் பாவம் தன்னைத்தானே வந்தடையும். என்று நினைத்து, மகளின் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தான்.
    திடீரென்று நோய்வாய்ப்பட்ட மலர்விழி, மருத்துவம் செய்தும் பலனில்லாமல் இறந்துவிட்டாள்.அவளது உடலையும் சுடலையில் எரித்துவிட்டார்கள்.தங்கள் எண்ணம் ஈடேறவில்லையே என்ற மனத்துயருடன், இளைஞர்கள் மூவரும் சுடுகாட்டுக்குச் சென்றார்கள்.
    அவர்களில் முதல் இளைஞன், அங்கே எரிந்து கிடந்த மலர்விழியின் சாம்பலைத் திரட்டி எடுத்துக்கொண்டு வந்து தனது வீடில், தனது படுக்கையில் பரப்பி வைத்துக்கொண்டு, நாள்தோரும் அதன் மேலேயே உறங்கினான்.
    இரண்டாவது இளைஞன், அவளது எலும்புகளை எல்லாம் ஒன்று சேர்த்தான்.தனது மனதுக்குகந்தவளின் ஆத்மா சாந்தியடையவேண்டும். அதனால், அவளது எலும்புகளை கங்கையில் கொண்டுபோய் நனைத்து சுத்தப்படுத்திக் கொண்டு வரலாம் என்று புறப்பட்டுப் போனான்.
    மூன்றாவது இளைஞனோ மனம் வெறுத்துத் துறவியாகிவிட்டான்.ஊர் ஊராக அலையத் தொடங்கினான்.மந்திர சக்திகள் பல கற்றுத் தேர்ந்த ஒருவரைச் சந்தித்தான். அவரிடம் தனது காதலி இறந்த கதையை மனம் உருகிக் கூற, அவரும் அவன்மேல் பரிதாபப்பட்டு, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவனி மந்திரம் ஒன்றைச் சொல்லிக்கொடுத்தார்.ஆனல் அந்த மந்திரத்தைக் கூறி உயிர்ப்பிப்பதற்கு, இறந்தவர்களின் சாம்பலும், எலும்பும் வேண்டும்.இளைஞன் துறவைத் துறந்தான். வேகமாக மலர்விழி வசித்த ஊருக்கு விரைந்து வந்தான்.
    அதே சமயம், கங்கைக்குச் சென்றிருந்த இளைஞனும் எலும்பைப் புணித நீரில் சுத்தப்படுத்தி ஊருக்கு வந்து சேர்ந்தான்.இருவரும் ஒன்று சேர்ந்து, சாம்பலைப் பத்திரப்படுத்தி வைத்திருந்த இளைஞனிடம் சென்றார்கள். சாம்பலின் மேல் எலும்புகளை வைத்து, சஞ்சீவனி மந்திரத்தைக் கூற மலர்விழி மறுபடியும் உயிர் பெற்று எழுந்தாள்.
    மறுபடியும் மூன்று இளைஞர்களுக்குள் யார் மலர்விழியை மணம் செய்து கொள்வது என்பதில் பெரும் போட்டி உண்டாகியது.அந்த ஊரில் வசித்து வந்த ஒரு சிறந்த அறிஞரிடம் இவர்களது பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது. அவரும் நடந்த விபரங்கள் அனைத்தையும் கேட்டுவிட்டு, யார் மணம் செய்துகொள்ளவேண்டும் என்று தீர்ப்பைச் சொன்னார்.
    .நண்பர்களே... அந்த மூவரில் யாருக்கு அவளை மணம் செய்து கொள்ளும் உரிமை இருப்பதாகத் தீர்ப்புக் கூறியிருப்பார் ? ஏன் ?
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:23 AM.

  11. #1211
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    பிஜிகே. எப்பொழுதோ படித்தது. அன்று சொன்னது வேதாளம். இன்று சொல்வது தாதாழம். :-) சரி. விடைக்கு வருகிறேன். சஞ்சீவினி மந்திரத்தால் உயிர் கொடுத்தவன் தந்தைக்கு ஒப்பானவன். எலும்பை எடுத்துக் கொண்டு கங்கைக்குச் சென்று நீர்க்கடன் செய்தவன் மகனுக்கு ஒப்பாவான். சாம்பலை வைத்துக்கொண்டு அதனோடே இருந்தவனே கணவனாகத் தகுதியானவன். சரிதான பிஜிகே?

    சரி. நான் சொல்லாத புதிருக்கு வில்லாக விடைத்து வந்து விடை சொல்லப் போகும் வல்லாளன் யார்?

    அன்புடன்,
    கோ.இராகவன்
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:23 AM.

  12. #1212
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Location
    abudhabi
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    19,810
    Downloads
    9
    Uploads
    0
    நண்பர் ராகவன் அவர்களே....தாதாழம் ....என்றால் என்ன பொருள். எனக்கு விளங்கவில்லை.
    புதிருக்கு சரியான பதிலைக் கூறியமைக்கு வாழ்த்துக்கள்....அடுத்த புதிரைப் பாருங்கள்.
    Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 09:23 AM.

Page 101 of 391 FirstFirst ... 51 91 97 98 99 100 101 102 103 104 105 111 151 201 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •