Page 102 of 391 FirstFirst ... 2 52 92 98 99 100 101 102 103 104 105 106 112 152 202 ... LastLast
Results 1,213 to 1,224 of 4690

Thread: புதிரோ புதிர் எண்-571-05-06-2015

                  
   
   
 1. #1213
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Location
  abudhabi
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  15,730
  Downloads
  9
  Uploads
  0
  புதிர் எண் - 137
  ஒரு நாட்டை பேரரசன் ஒருவன் ஆண்டு வந்தான்.தனது ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றரசனது அமைச்சன் மிகுந்த அறிவுடையவன் என்று கேள்விப்பட்ட பேரரசன், அவனது அறிவுத் திறனைச் சோதிக்க நினைத்தான். அதனால் தனது விருந்தினராக வருமாறு அழைப்பு விடுத்தான்.இதுவரை அந்த சிற்றரசனின் அமைச்சர், பேரரசனைச் சந்தித்ததில்லை. அதனால். பேரரசன் ஒரு திட்டமிட்டான்.
  அவன் அவைக்கு வரும்போது, அமைச்சனைப்போல் உடையணிந்து பேரரசன் அமைச்சனது ஆசனத்தில் அமர்ந்துகொள்ள, அமைச்சன் பேரரசனைப்போல் உடையணிந்து அரியனையில் வீற்றிருந்தான்." வருபவன் அமைச்சனாகிய நீ அரியனையில் இருப்பதுகண்டு உன்னை வணங்கினால், அவன் அறிவுக் கூர்மை இல்லாதவன் என்றும், அமைச்சனைப்போல் அமர்ந்துள்ள என்னிடம் வந்து வணங்கினால் சிறந்த அறிவாளன் என்று நான் ஒப்புக்கொள்வேன்" என்றும் அனைவரிடமும் கூறியிருந்தான்.
  சிற்றரசனது அமைச்சன் அவையுள் நுழைந்தான். வழக்கத்துக்கு மாறாக அவை அமைதியுடன் இருந்தது..... இதைக் கவனித்ததும் சிந்தனையுடன் கொஞ்ச நேரம் அவையில் நடுவில் நின்று அனைவரது மேலும் கண்களை ஓடவிட்டான். பிறகு அமைச்சன் வேடமிட்டு அமர்ந்திருந்த பேரரசனிடம் வந்து தலை குனிந்து வணங்கினான்." அரசே எனது மன்னர் தங்களுக்கு அனுப்பிய பரிசுப் பொருட்களையும், ஓலையையும் பெற்றுக்கொள்க" என்று கூரினான்.
  பேரரசனும் அமைச்சனது அறிவுக்கூர்மையை வியந்து பாராட்டி, எப்படி உண்மையைக் கண்டு பிடித்தாய் என்று கேட்டான்.
  அதற்கு அந்த அமைச்சனது பதில் என்னவாக இருந்திருக்கும்?????
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:24 AM.

 2. #1214
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,474
  Downloads
  10
  Uploads
  0
  "அரசே! நான் வந்த போது இங்கே நிலவிய அமைதியான சூழ்நிலையையும், காவலாளிகள் முதல் அனைவரும் அரியணையில் அமர்ந்திருப்பவரை பார்பதை விட உங்களையே பயபக்தியோடு பார்ப்பதை பார்த்தேன், அரியணையில் அமர்ந்தவரும் உங்களையே பார்ப்பதையே பார்த்தேன், ஆக மொத்தம் நீங்கள் தான் அமைச்சர் இடத்திலும், அரியணையில் வேறு ஒருவர் இருப்பதையும் யூகித்தேன்" என்று சொல்லியிருப்பார்.
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:24 AM.
  பரஞ்சோதி


 3. #1215
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Location
  abudhabi
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  15,730
  Downloads
  9
  Uploads
  0
  அருமை....அருமை பரஞ்சோதி அவர்களே.....
  அட்டகாசமான பதில்....நன்றி
  வாருங்கள் அடுத்த புதிரைப் பார்ப்போம்.
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:24 AM.

 4. #1216
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Location
  abudhabi
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  15,730
  Downloads
  9
  Uploads
  0
  புதிர் எண் - 138
  ஒரு ஊரில் ஒருவனுக்கு பறவைகள் பேசும் மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருந்தது.வெகு தொலைவில் இருந்த தனது அத்தை ஊருக்கு ஒரு வேலையாக தனது மனைவியை அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் போனான்.
  வந்த வேலை முடிந்ததும், அப்படியே அத்தையின் வீட்டுக்கும் போனான். எதிர்பாராமல் வந்த மருமகனைக் கண்டதும் மகிழ்ந்த அத்தை, மருமகனை உபசரித்து, விருந்து வைத்தாள். பிறகு அவன் தனது ஊருக்குப் புறப்பட்டான். அவனிடம், நிறைய பலகாரங்கள் செய்து, ஒரு பெரிய குடத்தில் வைத்துக் கொடுத்து, " மருமகனே...இதில் நிறைய பலகாரங்கள் உள்ளன.போகும் வழியில் சாப்பிட்டுக்கொள். மீதம் உள்ளதை எனது மகளுக்கும் கொண்டுபோய் கொடு" என்று கூறி அனுப்பினார்கள்.
  அவனும் நடக்க ஆரம்பித்தான் . மதிய வேளையில் சூரியனின் வெப்பம் தாளாமல், ஒரு குளத்தின் அருகே இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் குடத்தை இறக்கி வைத்துவிட்டு, குளத்தில் நீராடி , குடத்தைத் திறந்து, பலகாரங்களை வேண்டிய மட்டும் சாப்பிட்டான். பிறகு களைப்பு நீங்க அங்கேயே படுத்து ஒரு உறக்கமும் போட்டான். மாலைப் பொழுதானதும், எழுந்தான். குடத்தின் மூடியை எடுத்து குடத்தை இறுக மூடினான். தலையில் தூக்கிக்கொண்டு ஊரை நோக்கி புறப்பட்டான்.....அப்போது அந்த மரத்தில் இருந்த இரண்டு பறவைகள், அவனைப் பார்த்தன. " இவன் வழியில் மறுபடியும் தங்கினால் இவன் உயிர் போய்விடும்....வழியில் தங்காமல் வீட்டுக்குப் போனால் இவனது மனைவியின் உயிர் போய்விடும்" என்று கூறிவிட்டுப் பறந்து போயின.
  பறவைகள் பேசியதன் பொருளை உணர்ந்த அவன் மிகுந்த குழப்பம் அடைந்தான். தான் வழியில் தங்கினால் தனது உயிர் போய்விடும்..தங்காமல் வீட்டுக்குப் போனால் தனது அன்பு மனைவி இறந்துவிடுவாள். என்ன செய்வதென்றே புரியவில்லை. அதனால் அவன் வீட்டுக்குப் போக மனதில்லாமல் , தனது ஊருக்கு அடுத்த ஊரில் இருந்த ஒரு அறிஞரின் வீட்டுக்குப் போனான்.அந்த அறிஞர் இதற்கு ஏதாவது நல்ல வழி காட்டுவார் என்று நினைத்தான்.
  அறிஞரிடம் சென்று விபரத்தைக் கூறினான். கொஞ்ச நேரம் சிந்தித்த அவர் அவனிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவனும் பதில் கூறினான்
  கவலைப்படாதே என்று கூறிய அறிஞர் சில காரியங்களைச் செய்து அவனை அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்.

  அறிஞர் என்ன செய்திருப்பார்?????
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:25 AM.

 5. #1217
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் இளந்தமிழ்ச்செல்வன்'s Avatar
  Join Date
  12 Aug 2003
  Posts
  1,319
  Post Thanks / Like
  iCash Credits
  4,894
  Downloads
  8
  Uploads
  0
  மரத்தடியில் என்ன செய்தான் என்று கேட்டிருப்பார். அவனும் பலகாரம் உண்டு களைப்பில் அப்படியே "மூடியை மூடாமல்" உறங்கியதை கூற, பின் பலகார குடத்தை வெளியே வைத்து திறந்து விட சொல்லியிருப்பார். அதிலிருந்த பாம்பு (அவன் உறங்கும் போது குடத்தினுள் சென்று இருக்கும்) வெளியேறியபின் பயமற்று பயணிக்க சொல்லியிருப்பார்.

  வீட்டுக்குச் சென்றால் தாய் வீட்டிலிருந்து வந்த பலகாரத்தை அவன் மனைவி ஆவலுடன் சாப்பிட முயலும் போது பாம்பு அவளை கடித்திருக்கும். வீட்டுக்குச் செல்லாமல் வழியில் தங்கியிருந்தால் பசிக்காக குடத்தினுள் அவன் காயை விட்டுருப்பான். அப்போது பாம்பு அவனை தீண்டியிருக்கும்.
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:25 AM.
  வாழ்வது ஒருமுறை
  வாழ்த்தட்டும் நம் தலைமுறை
  ----------------------------------
  அன்புடன்
  இ.த.செ

 6. #1218
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,474
  Downloads
  10
  Uploads
  0
  நண்பர் இளந்தமிழ் செல்வர் சொன்னது அருமையான பதில், என்பதால் என்னுடைய பதிலும் அதுவே.

  சிந்தனை செய்ய உதவும் சின்னஞ்சிறு புதிர்கதைகள் சொல்லும் பிஜிகே அண்ணாவுக்கு எனது நன்றிகள்.
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:25 AM.
  பரஞ்சோதி


 7. #1219
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Location
  abudhabi
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  15,730
  Downloads
  9
  Uploads
  0
  இளந்தமிழ்ச் செல்வனின் பதில் மிகவும் சரியானதே.
  வாழ்த்துக்கள். அடுத்த புதிருக்குப் போவோம்.
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:26 AM.

 8. #1220
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  31 Mar 2003
  Location
  abudhabi
  Posts
  2,259
  Post Thanks / Like
  iCash Credits
  15,730
  Downloads
  9
  Uploads
  0
  புதிர் எண் - 139

  மருதூரில் தனது அத்தை உடல் நலமின்றி படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டான் முருகன்..
  மருதூருக்கு முருகன் இதுநாள்வரை சென்றதில்லை.
  அந்த ஊருக்குச் செல்ல பேருந்து வசதிகூட இல்லை. நடந்துதான் போகவேண்டும்..
  அதனால் அந்த ஊரைப் பற்றித் தெரிந்தவர்களிடம் , எப்படிப் போவது என்று வழி கேட்டுக்கொண்டு புறப்பட்டான்.
  காலையில் நடக்கத் தொடங்கி மாலை வரை நடந்தும் மருதூர் வந்த பாடில்லை.முருகனும் கால் வலியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தான்.அப்போது பாதையின் ஓரத்தில் ஒரு கிழவன் விறகு பொறுக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தான்.
  முருகன் அந்தக் கிழவனைப் பார்த்து, " ஐயா.....இங்கிருந்து மருதூர் செல்ல இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்" என்று கேட்டான்.
  ஆனால் கிழவன் எதுவும் பேசவில்லை.
  கிழவனைச் செவிடு என்று நினைத்த முருகன், உரத்த குரலில், " "ஐயா....மருதூர் செல்ல இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்" என்று கேட்டான்.
  அப்போதும் கிழவன் பதில் ஏதும் சொல்லாமல் முருகனை ஏற இறங்கப் பார்த்தான்.
  "சரி....கிழவன் முழுச் செவிடு போலிருக்கிறது" என்று கூறியபடியே முருகன் நடக்க ஆரம்பித்தான்.
  சிறிது தொலைவுதான் சென்றிருப்பான்....தன் பின்னால் இருந்து கிழவன் தன்னைக் கூப்பிடுவது கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
  அவனைப் பார்த்த கிழவன், மருதூர் செல்ல இன்னும் இரண்டு மணிநேரம் ஆகும் என்றான்.
  "நான் பலமுறை கேட்டும் பதில் கூறாத நீ, இப்போது என்னைக் கூப்பிட்டுச் சொல்கிறாயா...ஏன்????" என்று கோபத்துடன் கேட்டான் முருகன்.
  அதற்குக் கிழவன் கூறிய பதிலைக் கேட்ட முருகன், கிழவனைப் பாராட்டியபடி நடக்கத் தொடங்கினான்.
  கிழவன் ஏன் அப்படிச் செய்தான்?????
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:26 AM.

 9. #1221
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
  Join Date
  27 May 2003
  Posts
  6,588
  Post Thanks / Like
  iCash Credits
  13,825
  Downloads
  4
  Uploads
  0
  முருகனின் முகத்தை பார்த்து அவன் வெகு நேரம் நடந்ததால் மிகவும் களைப்பாய் இருப்பதை உணர்ந்த கிழவன் அவனுக்கு சற்று ஓய்வு தருவதற்காக பதில் கொடுப்பதை தாமதப்படுத்தினான். மீறி முருகன் புறப்படவே கிழவன் இன்னும் தாமதம் செய்யாமல் வழியை கூறியிருக்கிறான்...
  அன்புடன்
  மணியா...
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:26 AM.

 10. #1222
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,474
  Downloads
  10
  Uploads
  0
  மணியா அண்ணா சொன்னது மட்டுமல்ல, அந்த கிழவர் முருகனின் நடையின் வேகத்தை கணக்கிட்டு இதே வேகத்தில் நடந்தால் இரண்டு மணி நேரத்தில் ஊரை அடையலாம் என்று கூறியிருப்பார்.
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:27 AM.
  பரஞ்சோதி


 11. #1223
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
  Join Date
  27 May 2003
  Posts
  6,588
  Post Thanks / Like
  iCash Credits
  13,825
  Downloads
  4
  Uploads
  0
  மணியா அண்ணா சொன்னது மட்டுமல்ல, அந்த கிழவர் முருகனின் நடையின் வேகத்தை கணக்கிட்டு இதே வேகத்தில் நடந்தால் இரண்டு மணி நேரத்தில் ஊரை அடையலாம் என்று கூறியிருப்பார்.
  :lol: :lol: :lol: சபாஷ் பரம்ஸ்.....நீ சொன்னதுதான் மிகவும் சரியான பதில்...... :lol: :lol: என்னையும் விட்டுக்கொடுக்காமல் நீ சொன்ன விதம் மிக மிக அருமை...... :lol: :lol: பாராட்டுக்கள்..... :lol:
  அன்புடன்
  மணியா..... :lol:
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:27 AM.

 12. #1224
  மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
  Join Date
  16 Jan 2004
  Posts
  10,688
  Post Thanks / Like
  iCash Credits
  26,474
  Downloads
  10
  Uploads
  0
  மணியா அண்ணா சொன்னது மட்டுமல்ல, அந்த கிழவர் முருகனின் நடையின் வேகத்தை கணக்கிட்டு இதே வேகத்தில் நடந்தால் இரண்டு மணி நேரத்தில் ஊரை அடையலாம் என்று கூறியிருப்பார்.
  :lol: :lol: :lol: சபாஷ் பரம்ஸ்.....நீ சொன்னதுதான் மிகவும் சரியான பதில்...... :lol: :lol: என்னையும் விட்டுக்கொடுக்காமல் நீ சொன்ன விதம் மிக மிக அருமை...... :lol: :lol: பாராட்டுக்கள்..... :lol:
  அன்புடன்
  மணியா..... :lol:
  தலை இல்லாமல் வால் இல்லை தானே அண்ணா. :lol:

  அது மட்டுமல்ல தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது என்றும் சொல்வார்கள் (இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டும் இது பொருந்தாது). :wink:
  Last edited by சுகந்தப்ரீதன்; 28-05-2008 at 10:27 AM.
  பரஞ்சோதி


Page 102 of 391 FirstFirst ... 2 52 92 98 99 100 101 102 103 104 105 106 112 152 202 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •