Results 1 to 8 of 8

Thread: தகுதியுடையவை தழைத்தோங்கும்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0

    தகுதியுடையவை தழைத்தோங்கும்

    தமிழ்மன்ற சிறுகதை போட்டிக்காக இது என்னுடைய கன்னி சிறுகதை முயற்சி.

    தகுதியுடையவை தழைத்தோங்கும்

    ஆசிரியர் பரிணாம வளர்ச்சியைப் பற்றி வகுப்பில் விளக்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு காலத்தில் வாழ்ந்த விலங்குகள் பற்றியும், அவற்றின் தகவமைப்பு காலத்திற்கேற்ப மாறியதையும் சுட்டிக்காட்டினார். ஒருகாலத்தில் வாழ்ந்த மிருகங்கள் அடுத்த காலகட்டத்திற்கு முன்னேற முடியாமல் அழிந்தது பற்றியும் ,சில வகையான மிருகங்கள் மட்டுமே எல்லா காலத்திற்கும் தொடர்ந்தது என்பதையும் விவரித்துக்கொண்டிருந்தார்.

    எப்படி சில மிருகங்கள் மட்டும் எல்லா காலத்திற்கும் தொடர்ந்தன ? தொடர்கின்றன? ஏன் டைனோசரஸ் போன்ற பெரிய மிருகங்கள் தற்போதும் வாழ முடியாமல் அழிந்தன? இதுபோன்ற கேள்விகள் கதிரவனின் மனதில் ஓடலாயின. அதற்கு ஆசிரியர், எந்தவொரு மிருகம் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொள்கிறதோ, அதுவே தொடர்ந்து வாழும். டைனோசரஸ் போன்ற விலங்குகள் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் தங்களுடைய பெருத்த உருவம் காரணமாக தப்பிக்கமுடியாததையும்; மரங்கள்,செடிகள் போன்ற தங்களுடைய உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் ஒட்டகங்கள் உயிர்வாழ அவைதம் கழுத்துகள் நீட்டப்பட்டதையும்; குரங்குகள் தங்கள் தகவமைப்பைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டதாலேயே அவைதம் பரிணாமம் மனிதனாக மாறி உலகை ஆட்டுவிப்பதையும் விளக்கினார். ஆகவே தகுதியுடையவை தப்பிப்பிழைக்கும் என்ற பாடத்தை மனதில் கொண்டே வளரலானான் கதிரவன்.

    எப்போதும் படிப்பில் முதலாவதாக வந்தான்.யாரேனும் சந்தேகம் என்று கேட்டால் அவர்களுக்கு சொல்லித்தராமல் புறக்கணிப்பான். விளையாட்டில் மற்றவர்களை எப்படியாவது முந்தி வெற்றிபெற்றுவிடுவான். ஏனென்று கேட்டால், அவர்களுக்கு தகுதியிருந்தால் சொந்தமாக படித்து, சொந்தமாக முயன்று வெற்றிபெறவேண்டும் என்பான். தன்னுடைய தகுதிக்கேட்பவே நட்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்று, தகுதி குறைந்தவர்களை ஒதுக்கி நண்பர் வட்டாரத்தையும் குறைத்துக்கொண்டே வந்தான்.

    படித்து முடித்து , ஒரு நல்ல அலுவலகத்தில் பணியிலமர்ந்தான். அலுவலகம் சிறு சிறு அணிகளாக வகுக்கப்பட்டிருந்தது. அவனுடைய அணியில் அருணும் ஒருவனாக இருந்தான். அவன் சற்று கூச்ச சுபாவமுடையவன். ஒருமுறை அணித்தலைவர் , அணியை திறம்பட செயல்படுத்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த ஆலோசனை அனைவர் முன்னிலையிலும் விவாதிக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்தார். அருண் தனக்கு தோன்றிய யோசனையை கதிரவனிடம் கூறினான். ஏனெனில் அவனுக்கு அனைவர் முன்னிலையிலும் பேசுவதற்கு தயக்கம் இருந்தது. ஆனால், கதிரவன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அருணின் யோசனையை அனைவர் முன்னிலையிலும் கூறி பாராட்டையும் சிறந்த யோசனைக்காக பதவி உயர்வும் பெற்றான். தன்னைக் கேள்வி கேட்ட அருணுக்கு, தகுதியுடையவை மட்டுமே தழைத்தோங்கும் என்று பதிலளித்தான்.
    ஒருமுறை தனது அணியோடு அருணும், கதிரவனும் ஒரு காட்டுக்கு சுற்றுலா செல்ல நேரிட்டது. காட்டின் ரம்மியத்தை வியந்து அனுபவித்துக்கொண்டிருந்தபோது ஒரு புலி அவர்களை நோக்கி பாய்ந்தது. எல்லாரும் ஆளுக்கொரு திசையில் தெறித்து ஓட அருணும், கதிரவனும் ஒருதிசையில் ஓடினர். புலியும் அவர்கள் திசையை நோக்கி ஓட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இருவரும் பிரிந்து ஓட, புலி கதிரவனை நோக்கி முன்னேறியது. அவனை கடித்துகுதற எத்தனித்த வேளையில், அருண் அங்கிருந்த மரக்கட்டையைக் கொண்டு புலியை அடித்து விரட்டினான்.

    அப்போதுதான், கதிரவன் சிந்திக்கலானான். ஏன் அருண் தன்னுடைய உயிரை பொருட்படுத்தாமல் நம் உயிரைக் காக்க வேண்டும். மிருகங்கள் மட்டுமே , தாம் உயிர்வாழ மற்ற விலங்குகளை வீழ்த்தி , அழித்து வாழும். ஆனால், மனித குலம் தழைத்து விளங்குவதற்கு, அன்பு என்ற ஒரே தகுதிதான் தொன்றுதொட்டு தொடர்ந்துவருகிறது என்பதை அறிந்து மனதில் நிறுத்திக்கொண்டான். இனி மனித குலம் தழைத்தோங்க அன்பு என்ற ஒரே தகுதி போதும் என்பதில் கதிரவனுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ஐயமிருக்காது
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    முதல் முயற்சிக்குப் பாராட்டுகள் கோபாலன். பிழைகளின்றி நன்கு எழுதும் வல்லமை உங்களிடம் உள்ளது. கதைக்கருவைத் தேர்ந்தெடுத்து ஒரு நிகழ்வைச் சொல்லி அதில் ஒரு பிரச்சினையை அலசி அந்த பிரச்சினையைத் தீர்த்து அல்லது அந்த முடிச்சை அவிழ்த்து சட்டென்று ஒரு திருப்பத்துடன் அல்லது வியப்புடன் முடிப்பதுதான் சிறுகதை என்னும் வரைமுறையை மனதில் வைத்து மேலும் கதைகள் படைக்க வாழ்த்துகள் கோபாலன்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    முதல் முயற்சிக்குப் பாராட்டுக்கள் கோபாலன். சிறுகதை உங்கள் வசப்பட தொடர்ந்து எழுதுங்கள்.
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    கலைவேந்தன் மற்றும் கலையரசி அவர்களின் பாராட்டுக்கு நன்றிகள் பல. உங்கள் கருத்துகளை ஏற்று சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன்
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    அன்பொன்றால் மட்டுமே மனிதகுலம் தழைத்தோங்கும் என்னும் வலிய கருத்தைத் தாங்கி வந்துள்ள கதைக்குப் பாராட்டுகள் கோபாலன். சொல்லப்பட்டிருக்கும் கருத்தும் எழுதிய விதமும் வெகுவாகக் கவர்கின்றன. ஆனால் கதையில் கதிரவனுக்கு உண்டான மனமாற்றத்துக்கான காரணம் வேறுவிதமாய் சொல்லப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. புலி துரத்துவதும் அதை அருண் மரக்கட்டையால் அடித்துத் துரத்துவதுமான செயல்களில் செயற்கைத்தனம் நுழைந்துவிட்டதை உணர்கிறேன். மேலும் போட்டிக்கான கதை என்பதால் சுருக்கமாய் முடிக்காமல் இன்னும் சற்று விரிவாய் எழுதியிருக்கலாம் என்பதும் என் கருத்து. எனினும் உற்சாகத்துடன் போட்டியில் கலந்துகொண்டு கன்னி முயற்சியாய் அருமையானதொரு கருத்தோடு கதைபடைத்தமைக்குப் பாராட்டுகள். உங்கள் திறமையை தொய்யவிடாமல் தொடர்ந்து எழுதி இன்னும் பல கதைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    வலிமையானவை மட்டுமே வாழும் என உலவும் கருத்துகளுக்கு மத்தியில் தகுதியுடையவை தழைத்தோங்கும் அந்த தகுதியும் 'அன்பு' தான் என சொல்ல வந்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

    மேலும் பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்

    கீழை நாடான்

  7. #7
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    அழகாக கதை சொன்ன உங்கள் முதல் முயற்சிக்கு பாராட்டு.அருமையானதொரு கருத்தோடு கதை எழுதியுள்ளீர்கள். நன்றி

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு மென்மேலும் நல்ல கதைகளை படைப்பதற்கு வாழ்த்துக்கள்.

    மும்பை நாதன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •