Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: கதைப் போட்டி 06 - முடிவுகள்

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    கதைப் போட்டி 06 - முடிவுகள்

    இனிய உறவுகளுக்கு!

    மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட கதைப்போட்டியின் முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அனைவரையும் திக்குமுக்காட செய்யும் அளவிற்கு 29 கதைகள் வாக்களிக்க தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு மாதகாலம் அவகாசம் இருந்தும் அதிகளவில் வாக்களிக்கப்படவில்லை. ஒருவர் நான்கு கதைகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றிருந்தும் சில ஒன்றிரண்டு கதைகளுக்கு மட்டுமே வாக்களித்திருந்தது வருத்தம் கொள்ள செய்தது. அவர்களின் வாக்குகள் செல்லா வாக்குகளாக ஆக்கப்பட்டு முடிவுகள் அதற்கேற்றாற் போல் அறிவிக்கப்படுகின்றன.

    முதலில் மனம் தளராது போட்டிக்கு தங்கள் படைப்புக்களை அனுப்பிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி.

    திருத்தப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்,

    ரிஷ்வன் அவர்களின் கதை "கடவுளும் மனிதனும்" அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

    புதுவை.வெ.செந்தில் அவர்களின் கதை "மாற்றாள்" அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது.

    முதல்முறையாக மூன்றாம் இடத்தை இரு கதைகள் பிடித்திருக்கிறது.

    கலைவேந்தன் அவர்களின் கதை "அண்ணி என்றால்" மற்றும் முரளிதரன் எழுதிய "சந்தேகம்" ஆகியவை மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது..

    போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நால்வரையும் வாழ்த்தி மகிழும் மன்றம் பங்குபெற்ற ஏனைய கதாசிரியர்களைப் பாராட்டுகிறது.

    நன்றி

    கதையும் ஆசிரியர்களும்


    எண் கதை தலைப்பு தமிழ்மன்ற பயனர் பெயர்
    1 பந்தா seabird
    2 சில நிஜங்கள் arunbharathi
    3 புரிதல் அப்பாவிதங்கமணி
    4 அண்ணி என்றால் ... கலைவேந்தன்
    5 வீரபத்திரன் .. NKannappu
    6 யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா tamilppr
    7 கடவுளும் மனிதனும் rishvan
    8 சந்தேகம் murali12
    9 தீர்ப்பு கலையரசி
    10 எதார்த்தம் நாஞ்சில் த.க.ஜெய்
    11 நான் சொல்வதெல்லாம் உண்மை... pk_muthukumaran
    12 தகுதியுடையவை தழைத்தோங்கும் கோபாலன்
    13 அரளிப்பூக்கள் ஐரேனிபுரம் பால்ராசய்யா
    14 அன்பு சாம்ராஜ்ஜியம் க.கமலக்கண்ணன்
    15 காதல் பண்பாடு srisivasubramanyan
    16 பச்சை நிறமே இல்லை prakashsembai
    17 மாற்றாள் puduvai.ve.senthil
    18 மாமன் மகள் wilsongnanasingh
    19 மாயை இன்பக்கவி
    20 நானும்,ஜெயனும்,திருச்சியும் subamenu
    21 உண்மைகள் தெளிவாகும் போது Ravee
    22 கடவுள்களின் முகவரி PUTHUVAI PRABA
    23 செல்போன் KARUNAGARAN
    24 காதலுக்கு உருவம் உண்டு Shanmugakala
    25 பிராயச்சித்தம் M.Rishan Shareef
    26 தண்ணீர் Raji Iyer
    27 சக்ரவியூகம் shreemurali
    28 ஆசான் Kovai Puthiyavan
    29 கடைசிவரை Keelai Naadaan
    Last edited by மதி; 06-12-2012 at 02:54 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    கதைப் போட்டியில் களமிறங்கி முதலிடத்தைப் பெற்ற ரிஷ்வன் அவர்களுக்கும் இரண்டாம் இடத்தைப் பெற்ற புதுவை வெ செந்தில் அவர்களுக்கும் மூன்றாமிடம் பெற்ற முரளிதரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ஏனையோர் கதைகளையும் அவர்தம் பெயருடன் குறிக்கலாமே..

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், இரண்டாமிடம் பிடித்த செந்தில் மூன்றாவதாக வந்த முரளிதரன் ஆகியோர்க்கு என் வாழ்த்துக்கள். கவிதைப் போட்டி, கதைப்போட்டி இரண்டிலும் பரிசு வென்ற கலைவேந்தன் அவர்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்!

    எனக்குப் பிராயச்சித்தம் என்ற கதை மிகவும் பிடித்திருந்தது. நடையும் அருமை! போட்டியில் வெல்லவில்லையாயினும் அந்தக் கதாசிரியருக்கும் என் பாராட்டுக்கள்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    கதைப்போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் ரிஷ்வன், புதுவை.வெ.செந்தில், கலைவேந்தன் மற்றும் முரளிதரன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    உண்மையில் பல கதைகள் சிறப்பாய் இருந்தது.
    பிடித்த நான்கு கதைக்கு வாக்களிக்க தேர்ந்தெடுப்பதில் பலமுறை யோசிக்க வேண்டியிருந்தது.
    பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

    கீழை நாடான்

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2009
    Posts
    75
    Post Thanks / Like
    iCash Credits
    18,413
    Downloads
    2
    Uploads
    0
    கதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், கவிதைப் போட்டி, கதைப்போட்டி இரண்டிலும் பரிசு வென்ற புதுவை.வெ.செந்தில் , கலைவேந்தன் மூன்றாவதாக வந்த முரளிதரன்ஆகியோர்க்கு என் வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    கதைப்போட்டியில் வெற்றிபெற்ற மற்றும் பங்குபெற்ற அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    கதைப் போட்டியில் வெற்றி பெற்ற ரிஷ்வன், புதுவை.வெ.செந்தில், கலைவேந்தன், முரளிதரன் ஆகியோர்க்கு என் வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கதைப்போட்டியில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற ரிஷ்வன், புதுவை.வெ. செந்தில், கலைவேந்தன், முரளிதரன் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். தங்கள் கதைகளால் இப்போட்டியை களைகட்டவைத்த அனைத்துக் கதாசிரியர்களுக்கும் பாராட்டுகள். பங்கேற்றவர்கள் அனைவரும் இப்போட்டியோடு நின்றுவிடாமல் தொடர்ந்து தங்கள் படைப்புகளால் மன்றத்துக்கு மெருகூட்ட வாழ்த்துக்கள்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    வெற்றிவாகை சூடியவர்களுக்கும், பங்குகொண்டவர்களுக்கும் பாராட்டுக்கள் !

    போட்டியுடன் நின்றுவிடாமல், அவ்வப்போது எழுதிவரவும்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் உளம் கனிந்த பாராட்டுக்கள்...!!!
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  11. #11
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், இரண்டாமிடம் பிடித்த செந்தில் மூன்றாவதாக வந்த கலைவேந்தன் ஆகியோர்க்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    கதையெழுத நினைத்து நான் எழுதிய முதல் கதை சந்தேகம். எனக்கெல்லாம் கதை எழுத வருமா என்ற சந்தேகத்தோடு. அப்போது கதையில் எந்த செய்தியும் சொல்லத்தெரியாத புதியவன் (இப்போது மட்டும் என்ன வாழ்ந்தது? நீங்க சந்தேகபடறது சரியே!).அதற்கு பரிசு எனும்போது மிக மிக மகிழ்ச்சி. கதை போட்டி மூலம் என்னை மன்றத்தில் இணைத்தது சந்தேகமே இல்லாமல் 'சந்தேகமே'.

    மன்ற நடுவர்கள், நீங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி.
    Last edited by முரளி; 06-12-2012 at 03:52 AM.

  12. #12
    புதியவர்
    Join Date
    09 Apr 2010
    Posts
    16
    Post Thanks / Like
    iCash Credits
    10,284
    Downloads
    0
    Uploads
    0
    கதைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற ரிஷ்வன், மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொள்ளும் கலைவேந்தன் மற்றும் முரளி ஆகியோர்க்கு என் உளமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்..... இப்போட்டியில் பங்குபெற்ற அனைத்து படைப்புகளும் சிறந்தவையே.... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
    எனது கதை இரண்டாம் இடத்திற்கு தேர்வாக காரணமாயிருந்த அனைவருக்கும் நன்றி..நன்றி...

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •