இத்தனை பேர் கேட்டதால சொல்றேன். மதியும் நானே மச்சியும் நானே
இத்தனை பேர் கேட்டதால சொல்றேன். மதியும் நானே மச்சியும் நானே
நான்தான் சொன்னேனே... மச்சிக்கு ரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கப்படும் என்று. என்னையும் சேர்த்து எத்தனை ரசிகர்கள் பாருங்க..![]()
செல்வா கூறியது போல் நாதஸ்வரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் குறைவான நேரமே ஒலிபரப்பப்பட வேண்டும் நேற்று ஒலிபரப்பிய மேளக் கச்சேரி நீண்ட நேரம் ஒலித்தது.
மதியும் மச்சியும் என்ற தொகுப்பு புதுமை. எதிர்பார்க்காததால் ரசிக்க முடிந்தது. (அதிலும் மொக்கை மதி என்ற பெயரின் விளக்கம்) மச்சி நன்றாகவே மதியைக் கலாய்த்தது. ஆனால் மதியின் குரலில் தான் சோர்வு தெரிந்தது. அடுத்த முறை உற்சாகமாகவும் கணீரென்றும் மதி பேச வேண்டும். தொகுப்பாளர் மதிக்குப் பாராட்டுக்கள்!
இது போன்ற ஸ்பெஷல் நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப நிறைய விஷயங்கள் இருக்கும் போது, பிடித்த பாடல் ஒலிபரப்புவதைத் தவிர்க்கலாம் என்பது என் எண்ணம். எந்த நிகழ்ச்சியுமே மூன்று மணி நேரத்தைத் தாண்டும் போது உற்சாகத்தைக் குறைகிறது. மேலும் எல்லாராலும் மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்பதென்பது இயலாத காரியம். அதனால் இறுதியாக ஒலிபரப்பப்படும் சில நல்ல நிகழ்ச்சிகளை உறவுகள் கேட்க இயலாமல் போக நேரிடலாம்.
அடுத்த நிகழ்ச்சியில் இது வரை பேசாத உறவுகளின் குரல்கள் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும். (உம்:- அன்புரசிகன், அக்னி, பாரதி, இராசகுமாரன் போன்றோர்) இவர்களுக்குப் பேச விருப்பம் இல்லாவிடினும் இவர்களது குரல்களைக் கேட்க எங்களுக்கு ஆர்வமாயிருக்கிறது.
நேற்று பேசியவர்களில் கீதம், ஹேமா, மஞ்சு இவர்களது குரல்கள் கணீரென்று இருந்தன. இன்பக்கவி இயல்பாகப் பேசினார். செல்வாவின் பேட்டியும் மிகவும் இயல்பாக இருந்தது. தாம்ரையின் விளக்கம் நன்றாக இருந்தது. ஆதியும் நன்றாக பேசினார்.
சிலரின் குரல்களில் ஒலி மிகவும் குறைவாக இருந்தது.
இந்தச் சிறு குறைகளை நீக்கிப் பார்த்தால் முதல் ஒலிபரப்பு வெற்றியே! இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்!
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
நன்றியுடன்,
கலையரசி.
என்னைய சொல்லாம விட்டுட்டிங்களே கலையக்கா... போங்க உங்க கூட கா..![]()
வாழ்த்துக்கள் !!மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
கலையக்கா.. சில தூக்கமில்லா இரவுகள் காரணமா இருக்கலாம். ஆபிஸில் வேலையெல்லாம் பாக்க சொல்றாங்க.. இனி ஒழுங்கா பேசறேன் வழக்கம் போல![]()
மன்ற பண்பலைக் குழுவினருக்கு....
மனமார்ந்த வாழ்த்துக்கள்....!
மதிக்கும்....மச்சிக்கும்....
மலையளவு பாராட்டு மாலைக*ள்...!
உழைத்த* அத்த*னை உற*வுக*ளுக்கும்...
உள*மார்ந்த* ந*ன்றிக*ள்....
மேள இசையுடன்...
இனிய துவக்கம்....
தாமரை அண்ணாவிற்கு...
தகுதியான நல்ல பட்டம்...
நடமாடும் கூகுள்...!
பஞ்சாமிர்தத்தில்...
எந்தப் பழச்சுவை ...
மிகுந்த சுவை...!!
அனைத்தும் மிக அருஞ்சுவை.
நான்கு மணி நேர....
நல்விருந்து-
கேட்டு... உண்டு மகிழ்ந்தோம்.
தித்திக்கும் தீபாவளி நிகழ்ச்சிகள்-
எத்திக்கும் ஒலித்தது...அழகு...அழகு.
மன்ற உறவுகள்...ஒன்றாகக் கூடி...
மகிழ்ந்த உணர்வுகள்...அருமை...அருமை...
சிறப்பான வாழ்த்துக்களுடன்,
சி.கோவிந்த்.
கலையரசி அவர்கள் பண்பலை ஒலிபரப்பின் தீபாவளி நிகழ்ச்சிகளின் நிறை குறைகளைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார்.
கவனித்து ஆவன செய்யவும்.
Last edited by ஜானகி; 17-11-2012 at 03:31 PM.
வணக்கம் உறவுகளே,
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை மிக பெரிய வெற்றியை எட்ட துணை நின்ற அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
உறவுகள் பதிவு செய்த குறைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு எதிர் வரும் நிகழ்ச்சிகளில் குறைகளை களைய முயல்வோம்
அன்புடன்
தமிழ்மன்றப் பண்பலை குழு
Last edited by மதி; 16-11-2012 at 11:24 AM.
அன்புடன் ஆதி
தமிழ்மன்ற பண்பலைக்கு என் மனமார்ந்த பாராடுக்கள், தீபாவளி நிகழ்ச்சிகள் கேட்டான், அருமையான தொகுப்பு, சிறந்த செயல் வடிவம் என ஏற்றம் பலக்கண்டேன், குழுவாக செயல்பட்டு பட்டாசாக பணபலையை வெடித்து கிளப்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும்.
தோழமையுடன்
ஆ. தைனிஸ்
உண்மை நம்பிக்கை உழைப்பு என்றும் வேண்டும்- என
உலகிற்கு நம் வாழ்வால் உரக்க சொல்லி சாற்றுவோம்.
பழுதான எனது கணணி இன்றுதான் சரியானது. சிறப்பு நிகழ்சிகளில் ஒருசில மட்டும் அலுவலக கணணியில் கேட்க முடிந்தது. மதியின் மனசாட்சிக்கு ஒரு ரசிகர் மன்றமே உருவாகிவிட்டதென நினைக்கிறேன். செல்வாவின் குரலும் வெகு கச்சிதம். அவரை இன்னும் வேலைவாங்கலாம் என்று தோன்றுகிறது.
குழ்ந்தைகள் தின நிகழ்ச்சியும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. கீதம் வழக்கம் போல மிக சிறப்பாக தொகுத்திருந்தார்கள்.
பண்பலை குழுவுக்கும் பங்கு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
சில யோசனைகளும் தோன்றுகிறது. ஒருவேளை இதைப் பற்றி நீங்களும் யோசித்திருக்கலாம்.
1. பண்பலைக்கென்று ஒரு பிரத்யேக வாசகம். அதற்கான இசையோடு உருவாக்கப் படவேண்டும். அது நம் லோகோவாக இருக்க வேண்டும்.[உதா: ’தமிழ்மன்றம் பண்பலை; உங்கள் எண்ணங்களின் குரலலை’]
2. நிகழ்சிகளுக்கு ஒரு அடையாளம்.. அதாவது தலைப்பு.. கதை நேரம், சிரிக்கலாம் வாங்க, கவிஞர் உலகம் ….. இப்படி.. .. யோசிக்கலாம்.
3. அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் கால் மணி நேரம் அல்லது அரை மணி நேரம் மட்டுமே நீடித்திருக்க வேண்டும்.
4. குறிப்பிட்ட தலைப்புடன் கூடிய நிகழ்ச்சி வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் அமைந்தால் நல்லது.
5. மன்றத்தில் இருக்கும் படைப்புகளை ஒலிவடிவமாக்கலாம். உதாரணமாக ராஜாவின் ரவுசு பக்கத்தை நகைச்சுவை நிகழ்ச்சியாக தொகுக்கலாம் இடையே காமெடி பாடல்கள். ஜானகி அவர்களின் தியானம் பக்தி மஞ்சரியாக்கலாம், தாமரையின் பதில்கள் ஒரு அரை மணி நேர நிகழ்ச்சியாகலாம். குறிப்பிட்ட தலைப்பிலமைந்த கவிதைகள் ஒரு நிகழ்ச்சி….
6. நிகழ்ச்சி குறித்த கருத்துகளை பகிர தனியாக நிதந்தரமாக ஒரு திரி.. நிகழ்ச்சியின் முடிவில் கருத்துகளை அங்கே எழுதச் சொல்லலாம். அதை தொகுத்து ஒரு ‘எதிரொலி’ நிகழ்ச்சியாக்கலாம்.
ஓய்வு நாளில் ஏதோ கொஞ்சம் யோசனை வந்துவிட்டது.
பயன்பட்டால் எடுத்துக் கொள்க.
குறிப்பு: மேற்கண்ட உதாரணங்கள் வெறும் உதாரணத்துக்குதான். தங்களை பற்றி குறிப்பிட்டு சொல்லவில்லையே என்று தயவுசெய்து ய்யரும் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks