View Poll Results: கதைப்போட்டி 06 வாக்கெடுப்பு

Voters
36. You may not vote on this poll
    The results in this poll are hidden.
  • தகுதியுடையவை தழைத்தோங்கும்

    The results are hidden 0%
  • கடவுளும் மனிதனும்

    The results are hidden 0%
  • நான் சொல்வதெல்லாம் உண்மை...

    The results are hidden 0%
  • தீர்ப்பு

    The results are hidden 0%
  • அண்ணி என்றால்...

    The results are hidden 0%
  • சந்தேகம்

    The results are hidden 0%
  • புரிதல்...

    The results are hidden 0%
  • பந்தா !

    The results are hidden 0%
  • வீரபத்திரன் ...

    The results are hidden 0%
  • அரளிப்பூக்கள்

    The results are hidden 0%
  • எதார்த்தம்

    The results are hidden 0%
  • காதல் பண்பாடு

    The results are hidden 0%
  • “பச்சை நிறமே இல்லை.”

    The results are hidden 0%
  • மாற்றாள்

    The results are hidden 0%
  • மாயை

    The results are hidden 0%
  • நானும்,ஜெயனும்,திருச்சியும்.

    The results are hidden 0%
  • அன்பு சம்ராஜியம்

    The results are hidden 0%
  • மாமன் மகள்

    The results are hidden 0%
  • உண்மைகள் தெளிவாகும் போது …

    The results are hidden 0%
  • கடவுள்களின் முகவரி

    The results are hidden 0%
  • செல்போன்

    The results are hidden 0%
  • காதலுக்கு உருவம் உண்டு

    The results are hidden 0%
  • பிராயச்சித்தம்

    The results are hidden 0%
  • தண்ணீர்

    The results are hidden 0%
  • சக்ரவியூகம்

    The results are hidden 0%
  • ஆசான்

    The results are hidden 0%
  • சில நிஜங்கள்

    The results are hidden 0%
  • கடைசி வரை...

    The results are hidden 0%
  • யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா?

    The results are hidden 0%
Multiple Choice Poll.
Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 59

Thread: கதைப் போட்டி 06 - வாக்கெடுப்பு

                  
   
   
  1. #13
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    காதல் பண்பாடு

    காதல் பண்பாடு


    நள்ளிரவு மணி 2.00. தூக்கம் சட்டென அறுந்து திவ்யாவின் நினைவுகள் அவளையும் அவளது அசைவுகள் படுக்கையையும் புரட்டிப்போட்டு கொண்டிருந்தது.

    நாளை விடிந்தால் அவள் வாழ்வில் முக்கியமான நாள். அவள் தனது எதிர்கால வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க வேண்டிய நாள். திவ்யா ஒன்றும் காதலை பற்றி முடிவெடுக்க வேண்டிய பதின்பருவ வயதினள் இல்லை. திருமணம் பற்றி முடிவெடுக்க வேண்டிய கன்னியும் இல்லை.

    அவள் ஒரு திருமணமான கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மகனும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் ஆகிய இரு பதின்பருவ குழந்தைகளுக்கு தாயான 36 வயதான ஒரு நடுத்தர வயது பெண்.

    திவ்யாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து மிகவும் அடக்க ஒடுக்கமாக வளர்க்கப்பட்டவள். சிறு வயது முதலே தான் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று தன் குடும்பத்தை நிமர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். எல்லோரிடமும் நன்கு கலகலவென பேசி சிரித்து எப்போதும் மலர்ந்த முகத்துடன் வளைய வருபவள். இயற்கை மீது பற்றும் கதை கவிதைகள் வாசித்தலில் மேல் காதலும் கொண்டவள். இலக்கிய ஆர்வம் அதிகமுண்டு. இசை மீது பேரார்வம். எப்போதும் ஏதாவது சினிமா பாடலை பாடிக் கொண்டே எந்த வேலையும் செய்வாள்.

    ஆனால் அவளைப்பற்றி அவள் பெற்றோர் வைத்திருந்த ஒரு தீர்மானம் அவளுடைய பத்தாம் வகுப்பு முடித்தபோதுதான் அவளுக்கு தெரிந்தது. அவளுடைய மற்ற தோழிகள் எல்லாம். மேல்நிலைக்கல்விக்கும் தொழில்நுட்பக் கல்லூரிக்கும் விண்ணப்பம் போட்டுக் கொண்டிருக்க பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்று தலைமையாசிரியை பாராட்டி தந்த மதிப்பெண் பட்டியலை பற்றி பெரிதாக மகிழ்ச்சி எதுவும் காட்டாத பெற்றோரும் எந்த ஒரு பள்ளியிலும் விண்ணப்பம் வாங்க முனையாத அவளுடைய பெற்றோரின் நடவடிக்கையும்தான் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது.

    அது குறித்து அவள் வினவிய போது அவர்கள் தந்த பதில் அவளை மேலும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது திவ்யாவை அவர்கள் அவளது மாமன் மகன் வெங்கடேசனுக்கு திருமணம் செய்து கொடுக்க போகிறார்கள் என்பதுதான். வெங்கடேசன் பத்தாவது வரைதான் படித்திருக்கிறான் என்பதால் அவளை மேற்கொண்டு படிக்க வைக்கப்போவது இல்லை என்றும் கூறி அவளை அதிர்ச்சியில் உறைய வைத்தனர்.

    சிறுவயது முதல் தான் கண்ட கனவுகள் எல்லாம் தகர்ந்துடைந்து போக கண்ணீரோடு அவர்களிடம் சண்டையிட ஆரம்பித்தாள். தான் பொறியியல் படிக்க வேண்டும் என்பதும் படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதும் தன்னுடைய வாழ்நாள் லட்சியம் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க மிகவும் பாடு பட வேண்டியதானது.

    இறுதியில் அவளுக்கு வயது இன்னும் 18 ஆக வில்லை என்பதால் அவளை பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க ஒப்புக் கொண்ட பெற்றோர் ஆனால் அதற்கு மேல் படிக்க கூடாதென்றும் இதுவும் கூட வெங்கடேசன் தான் படிக்காவிட்டாலும் தன் மனைவி படித்தவளாக இருந்தால் தன் சந்ததியை படிக்க வைக்க உதவியாக இருக்குமென ஒப்புக்கொண்டதால்தான் தாங்கள் சம்மதம் தெரிவிப்பதாகவும் ;கூறியது அவளுக்கு மிகுந்த மனவருத்தமாக இருந்தது. என்ன சமூகம் இது. ஒரு பெண்ணுக்கு தான் விரும்பியதை படிக்க உரிமையில்லை. அப்படியே படிக்க வைத்தாலும் அது அவர்கள் விரும்பும் அளவுதான் அதுவும் கூட தன் சந்ததிக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான். என்றபோதும் இப்போதைக்கு படிக்க அனுமதி கிடைத்ததே பெரிய விஷயம். நாம் நன்று படித்து மேல்நிலைக்கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்றால் அப்போது எப்படியாவது மேல்படிப்பு படித்து விடலாம் என எண்ணி பள்ளியில் சேர்ந்து படித்தாள்.

    படிக்கும் போதே ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து போட்டி போட்டு படிப்பாள். வகுப்பில் அவளுக்கும் அதே வகுப்பில் படிக்கும் சிவநேசனுக்கும்-தான் போட்டி. கதை கவிதை இசை என எல்லாவற்றிலும் ஒத்த சிந்தனை உள்ளவர்களாக இருந்தனர். இருவரும் அனைத்து போட்டிகளிலும் முதல் அல்லது இரண்டாவது இடத்தை பெறுவார்கள். பள்ளியில் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகளும் இருவரையும் சரியான பொருத்தம் என்று குறிப்பிட்டு பேசுவதை சிவநேசன் உள்ளுர ரசிப்பான். அவனுக்கும் திவ்யாவின் ஆர்வமும் அவளுடைய அழகிய அகன்ற கண்களும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் திவ்யாவிடம் இருந்து அது போன்ற உணர்வு வெளிப்பாடு எதுவும் தெரியாததால் அது பற்றிய தன் கற்பனையை அவன் வளர விடவில்லை. திவ்யா திருமணத்தையே வெறுப்பவள் என்பதும் அவள் பெற்றோர் அவளுக்கு இட்டிருக்கும் விலங்கினைப் பற்றியும் அவன் அறிந்திருக்க நியாயமில்லை.

    இருவரும் நன்கு படித்து திவ்யா முதல் மதிப்பெண்ணும் சிவநேசன் இரண்டாம் மதிப்பெண்ணும் பெற்றனர். ஆனால் காலம் யாரை எங்கே கொண்டு தள்ளும் என்பதை யாரறிவர். திவ்யாவை அவளது பெற்றோர் திட்டமிட்டபடி வெங்கடேசனுக்கு மணமுடித்தனர். வேங்கடேசன் நல்ல உழைப்பாளி. தொழிலில் நல்ல ஆர்வத்துடன் உழைத்து மெல்ல மெல்ல ஊரிலேயே சிறந்த தொழிலதிபர் என்ற நிலைக்கு உயர்ந்தான். அடுத்தடுத்து விக்னேஷ் அக்ஷயா என ஆஸ்திக்கொன்றும் ஆசைக்கொன்றுமாக இரு குழந்தைகள். வேங்கடேசனை பொறுத்தவரை திவ்யாவை நன்றாக எல்லா வசதிகள் செய்து கொடுத்து அவனளவில் நன்றாகவே வைத்திருந்தான்.

    வெங்கடேசன் எப்போதும் தொழில் பற்றிய சிந்தனையோடுதான் இருப்பான். இரவு படுக்கைக்கு மட்டுமே வீடு வருவான். அதுவும் குழந்தைகள் எல்லாம் தூங்கிய பின்னிரவு நேராமாகத்தான் இருக்கும். தன் உணர்வுகளை ரசனைகளை எதையுமே பகிர்ந்து கொள்ள யாருமில்லாமல் குழந்தைகளே உலகம் என தன் வாழ்க்கையை கடனென வாழ்ந்து கொண்டிருந்தாள்.

    கணவனின் உதவியின்றி தான் தனியாக குழந்தைகளை வளர்ப்பதால் எங்கே தந்தையின் அரவணைப்பில்லாதால் அவர்கள் பருவ வயது கோளாறுகளால் தவறான சகவாசம் அல்லது பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி விடுவார்களோ என்ற பயத்தினால் திவ்யா அவர்களை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தாள். அவர்களை ஒழுக்கசீலர்களாக வளர்க்க வேண்டும் என்ற முயற்சியில் அவர்களுக்கு செல்போன் கூட வாங்கித்தர மறுத்து விட்டாள். வீட்டு லேண்ட்லைன் போனில் அவர்கள் நண்பர்களுடன் பேசினால் கூட யார்? என்ன பேசினார்கள்? என கேள்விகளால் துளைத்தெடுத்துவிடுவாள். மற்ற விஷயங்களில் அன்பை பொழியும் அம்மா நண்பர்கள் விஷயத்தில் இவ்வாறு இருப்பதில் அவர்களுக்கே மிகுந்த வருத்தமுண்டு.

    விக்னேஷ் பள்ளிக்கல்வி முடித்து சென்னை எஸ்.ஆர்.எம்-ல் ஏரொநாட்டிக்கல் பொறியியல் படிக்கவும் மகள் அக்ஷயா பதினொன்றாம் வகுப்பிற்கு விடுதியில் இருந்தால்தான் டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் படிக்க முடியும் என கூறி ராசிபுரத்தில் உள்ள விடுதியில் சென்று சேர்ந்து விடவும் கணவனின் தொழில் பக்தியும் எல்லாம் சேர்ந்து மெல்ல திவ்யாவை தனிமை சிறைக்குள் தள்ள ஆரம்பித்தன.

    வெங்கடேசனிடம் மெல்ல தனிமையை பற்றி பேசி தான் நினைக்கும் எதிலாவது தன்னை ஈடுபடுத்திக்கொள்ள அனுமதி கேட்டாள். முதலில் மறுத்தவன் பின் அவளுடைய வற்புறுத்தலுக்காக ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் தேர்வுக்கு அனுப்பி வைத்தான்.

    அங்கே அதே தேர்வுக்காக காத்திருந்த சிவநேசனைக் கண்டதும் திவ்யாவுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி. பள்ளி மாணவனாக பார்த்தவனை மீசை வளர்ந்த ஆண்பிள்ளையாக வயதுக்கேற்ற வளர்ச்சியுடன் இன்ஷெர்ட்டில் ஆபிஸர் போன்ற தோற்றத்துடன் அழகாக இருந்தவனை ஒரு நொடி வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் பின்புதான் சுதாரித்தாள்.

    இரட்டை சடையில் ரிப்பன் வைத்து கட்டி ஸ்கூல் யூனிபார்ம் தாவணியில் பார்த்தவளை சற்றே பூசினாற்போன்ற தேகத்துடன் வயதுக்கே உரிய தெளிவுடனும் திவ்யாவை பார்த்த சிவநேசனும் மிகுந்த பரவசமடைந்தான்.

    பரஸ்பரம் விசாரித்ததில் சிவநேசன் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் தன் இரு தங்கைகளுக்கு திருமணம் முடித்து ஐந்து வருடங்கள் முன்புதான் தான் திருமணம் முடித்திருப்பதாகவும் ஆனால் தனக்கு இன்னுமும் குழந்தையில்லை என்பதையும் தெரிவித்தான்.

    சொல்லி வைத்தாற்போல சிவநேசனும் திவ்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் சேர்ந்து செய்தி வாசிப்பதாக நிர்ணயிக்கப்பட்டது.

    அடுத்த அடுத்த சந்திப்புகளில் கதை கவிதை இலக்கியம் என எல்லாவற்றையும் இருவரும் பகிர்ந்து கொண்டனர். குழந்தையின்மை பற்றிய அவனுடைய வருத்தத்திற்கு அவள் அவனுக்கு ஆறதல் கூறினாள். இசை குறுந்தட்டுகளை மாற்றிக் கேட்டு ஷ்ரேயா கோஷலையும் ஹாரிஸ் ஜயராஜின் இசையும் எஸ். இராமக்கிருஷ்ணனின் கதா விலாசம் முதல் சிறிது வெளிச்சம் வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்து பிடித்த விஷயங்கள் பிடிக்காத விஷயங்கள் பற்றியும் பேசிப் பேசி மெல்ல மீண்டும் பள்ளிப் பிராயத்திற்கே சென்றதை போல உணர்ந்தனர்.

    இருவரும் ஒருநாள் மழை இரவில் செய்தி முடித்து திரும்பும் போது பெருமழையின் காரணமாக அவளுக்கு ஆட்டோ கிடைக்காததால் சிவநேசன் தன் வண்டியில் ஏறிக்கொள்ளும் படி கூறினான். ஆனால் திவ்யாவால் இப்போது சாதாரணமாக அவனோடு ஏறிச்செல்ல முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது. வேறு வழியில்லை என்பதால் தயக்கத்துடனே ஏறிக்கொண்டாள். வெங்கடேசன் கார் வாங்கிய பிறகு கடந்த 10 ஆண்டுகளாகவே குடும்பத்துடன் எங்கு சென்றாலும் பிள்ளைகள் முன் சீட்டிலும் இவள் எப்போதும் பின் சீட்டிலுமே அமர்ந்து செல்வாள். நெடுநாளுக்கு பிறகு ஒரு ஆண் மகனோடு ஸ்பரிசம் படும்படி இருசக்கர வண்டியில் சென்றது அவளுக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ச்சிய ஒரு உணர்வைத்த தந்தது. அன்று இரவு முழவதும் அவர்களின் இளம்பிராய சந்திப்புகளும் பேச்சுகளும் விளையாடிய பொழுதுகளும் மீண்டும் பசுமையாக இன்னும் இனிமையாக மனக்கண்களில் தோன்றி அவளை இம்சித்தன.

    மறுநாளில் இருந்து சிவநேசன்; அவளைப் பார்த்த பார்வையும் சாப்பிட்டாயா? தூங்கினாயா? மகனது படிப்பு எப்படி இருக்கிறது? மகள் போன் செய்தாளா? என ஒவ்வொன்றை பற்றியும் அக்கறையுடன் விசாரித்தது அனைத்தும் அவளுக்குள் இருந்த தன் கணவன் செய்யத்தவறிய சின்னச் சின்ன விஷயங்கள் பற்றிய ஏக்கத்தை மேலும் அதிகரித்தது.

    தான் தேடிக்கொண்டிருந்த ஒரு துணை இவனாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சிவநேசனோடு வாழ்ந்திருந்தால் தன் வாழ்வு இன்னும் இனிமையாகவும் காதலுடனும் பேசிக்கொள்ள பகிர்ந்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்திருக்கும் என்று தோன்றியதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

    இந்நிலையில் அவர்கள்; வேலை செய்த தனியார் தொலைக்காட்சியில் ஊழியர்கள் அனைவரையும் ஊட்டிக்கு இரண்டு நாட்கள் சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்தனர். சிவநேசன் தனக்கு அலுவலகத்தில் ஆடிட்டிங் இருப்பதால் சுற்றுலாவுக்கு வரவில்லை என கூறிவிட்டான். திவ்யா எப்படியும் வரமாட்டாள் என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் அன்று திவ்யாவே போன் செய்து ஏன் சிவா நீ வரல நீயும் வந்தால் டூர் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன் என்றாள்.

    அவள் அப்படி உரிமையாக அழைத்தது அவனுக்கு மிகவும் பிடித்தது. அலுவலகத்தில் உடம்பு சரியில்லை என பொய் சொல்லி விடுப்பு எடுத்துக்கொண்டு அவனும் அவர்களோடு கிளம்பி விட்டான். ஆனால் தான் வரப்போவதை அவளுக்கு சொல்லாமல் சஸ்பென்ஸ் காத்தான். சுற்றுலா செல்லும் அன்று அவனைப்பார்த்த அவளது கண்களில் அத்தனை ஒளி வெள்ளம். ஐஸ்க்ரீம் கடையைப் பார்த்த சிறுமியை போல் துள்ளினாள். சொல்லவேயில்லை. பாவி! என உரிமையோடு கோபித்துக்கொணடாள்.

    இருவரும் பார்த்துக்கொள்ளக்கூடிய பக்கத்து இருக்கைகளில் அவள் காம்பயரர் உமாவுடனும் இவன் அப்துலொடும் அமர்ந்து கொண்டனர். உமாவும் அப்துலம் காதலர்களாக இருக்க கூடாதா என இருவர் மனமும் ஏங்கியது.

    ஊட்டியில் தொப்பி பாறை தற்கொலை ஸ்பாட் ரோஸ் கார்டன் என எல்லாவற்றையும் பார்த்து ரசித்தவர்கள் குளிர் தாங்காமல் எல்லோரும் இரவு 7.00 மணிக்கே படுத்து விட்டனர். யாருக்கும் தெரியாமல் சிவநேசன் வேறொரு பெயரில் ஒரு ரூம் புக் செய்திருந்தான். இரவு அனைவரும் குளர்காய்ந்து விட்டு அவரவர் அறைக்கு திரும்பிய போது திவ்யா நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் உனக்கும் விருப்பமிருந்தால் அறை எண் 103-க்கு வா என அவளிடம் கிசுகிசுத்தான்.

    மணி 11.00-ஐ தாண்டியது. அவளை மீண்டும் செல்போனில் அழைக்கலாமா என்று எழுந்த எண்ணத்தை உதறினான். அதுதான் சொன்னேன்ல இனி அவளாக வந்தாள் சரி என்று வீம்பாக படுத்து விட்டான். மணி 12.00 கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தால் எதிர்பார்த்ததை போல் அவளேதான். ஓரு மணி நேரம் குட்டி தூக்கம் அவள் மேலிருந்த கோபத்தை குறைத்திருந்தது. சட்டென அவள் கையைப்பிடித்து இழுத்து கதவைத் தாளிட்டான். அதிர்ந்தவளை யாரும் பார்த்துவிடக் கூடாது என்றுதான் என முடிப்பதற்கு முன் அவளும் தெரியும் நீ என் மீது வைத்திருக்கும் அக்கறை எனக்கு புரியும் என்றாள்.

    பின்பு அவன் வா உட்கார் என சொல்லவும் அவளும் அமர்ந்தாள். இருவரும் இரண்டு நிமிடம் மௌனமாக பார்த்துக்கொண்டனர். அதில் ஆயிரம் காந்தங்களின் ஈர்ப்பு சக்தியை இருவராலும் உணர முடிந்தது. அப்பார்வையின் தகிப்பை தாங்க முடியாமல் எழுந்து தலை கவிழ்ந்து நின்றவளின் அருகில் மெல்ல வந்து எதிரில் நின்றவன் அவள் கைகளைப் பற்றி புறங்கையில் முத்தமிட்டபடி அழகாய் இருக்கிறாய் ஐ லவ் யூ என்றான் மென்மையான குரலில்.

    அதைக்கேட்டு சற்றே அதிர்ந்தவளாக தலையை பின்னுக்கு இழுத்து பெருமூச்சுடன் பயமாக இருக்கிறது என்றாள். இதென்ன சிவா 37-வயதில் காதலெல்லாம் சாத்தியமா? என்றாள் தயக்கத்துடன். உம்..... வந்திருக்கிறதே என தோள்களை குலுக்கி சொன்னான். அவன் பற்றியிருந்த கைகளை மெல்ல அழுத்தவும் அப்படியே அவன் தோளில் சாய்ந்து விட்டாள். அவன் அவளை இழுத்து அணைத்தபடி சுவரில் சாய்த்து குனிந்து அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பித்தான். தாங்க முடியாத உணர்வுகளால் அவன் தலையைக் கொய்தாள். அங்கே ஒரு ஆனந்த சங்கமம் அழகாய் ஆர்ப்பரித்தது.

    அவனது மடியில் சாய்ந்து படுத்திருந்தவள் விடை பெறுவதற்கு முன்ää இரு கண்ணாடி வளையல்களை அவனிடம் தந்தாள். இது நான் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது தந்த தாம்பலத்தில் இருந்தது. இதைக்கொடுக்கத்தான் வந்தேன் என அவள் சொன்ன பொய்யான காரணத்தை அவன் ரசித்து சிரித்தான். அந்த சிரிப்பு அவளையும் தொற்றிக்கொண்டது. பின்பு இதை உன் மனைவி தீபிகாவிடம் கொடுத்து அணியச்சொல். கண்டிப்பாக கூடிய சீக்கிரமே குழந்தை பிறக்கும். குழந்தை வேணும்டா! தேய் ஆர் அவர் மோட்டிவேஷனல் ஸ்பிரிட் என்றாள். சுயநினைவுக்கு வந்தவனாக சற்றே ஆழ்ந்து யோசித்து ஆமென தலையசைத்தான்.

    ஊர் திரும்பியவன் அந்த வளையலை மனைவியிடம் கொடுத்து திவ்யா சொன்ன வார்த்தைகளை அவள் எந்த நிலையில் இருந்து சொன்னால் என்பதை மட்டும் மறைத்து விட்டு கொடுத்து அணிந்து கொள்ள சொன்னான். அவளுக்குதான் தன் குடும்பத்தின் மீது எவ்வளவு அக்கறை என வியந்தான். தீபிகாவும் அதையே ஆமோதித்தாள். அவ்வளையல்களை தன் கைகளில் நம்பிக்கையோடு அணிந்து கொண்டாள்.

    வீடு திரும்பிய திவ்யா கணவனின் முகம் பார்க்கும்போது குற்ற உணர்வு தன்னை ஆட்படுத்தியதை நன்றாக உணர்ந்தாள். ஆனாலும் சிவநேசனை அவளால் வெறுத்து ஒதுக்க முடியவில்லை. ஒரு நாள் வீட்டு அலமாரியை ஒழுங்குபடுத்துகையில் தன் தாய் தந்தையரின் புகைப்படத்தை பார்த்தவள் தான் அவர்களை பழி வாங்கி விட்டதாக உணர்ந்தாள்.
    நீங்கள் கொடுக்காத ஒரு வாழ்வு எனக்கு கிடைத்து விட்டது. இந்த நொடி இந்த உலகத்திலேயே நான்தான் ரொம்ப சந்தோஷமானவள்|| என சொல்லிக் கொண்டாள்.

    அதன்பிறகு வந்த நாட்களில் காதல் குறுஞ்செய்திகளும் அறிவு சார்ந்த விஷயங்களும்ன தினமும் மூன்று வேளை போனிலும் பேசி மகிழ்ந்தனர். மெல்ல விஷயம் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களிடமெல்லாம் பரவ ஆரம்பித்தது. இவர்களின் காதலை தோலுரித்து காமமாக அவர்கள் பார்த்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தங்களது காமத்துக்கு ஆடையணிவித்து காதலாக்க முயற்சித்தனர்;.

    ஊம்! புதுசு புதுசாக தேவைப்படுகிறது! என இவளைப்பற்றியும் பெரிய இடமாக பார்த்து பிடித்து விட்டான் என அவனைப்பற்றியும் இருவர் காது படவே பேசினர். அவர்கள் இருவரும் பள்ளிப்பருவத் தோழர்கள் என்ற உண்மையை அவர்கள் நம்ப மறுத்தனர்.

    சிவநேசனின் அடிக்கடி போன் பேசும் நடவடிக்கை குறித்து அவன் மனைவி தீபிகா அவன் மீது சந்தேகப்பட ஆரம்பித்தாள். ஏற்கனவே குழந்தையில்லை என்ற மனக்குறையில் இருந்தவளுக்கு இது மேலும் உளைச்சலை தந்தது. அவனது போன் ரிஜிஸ்டரை செக் செய்து சண்டையிட ஆரம்பித்தாள். அதைப்பற்றி அவன் திவ்யாவிடம் சொன்னவுடன்தான் திவ்யாவின் ஆறாவது அறிவு விழித்துக்கொண்டது. ச்சே! என்ன ஒரு பாவம் செய்து விட்டேன் என மனம் நோக ஆரம்பித்தாள். தன்மீது இருக்கும் மோகத்தில் எங்கே சிவநேசன் தன் குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விடுவானோ தீபிகாவும் கணவனின் அரவணைப்பில்லாமல் தன்னைப்போன்ற அன்புக்கு ஏங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு விடுவாளோ என்ற பயம் அவளைக் கவ்வியது.

    அதற்குள் தீபிகா கர்ப்பமாகிவிட சிவநேசனுக்கு ஏக மகிழ்ச்சி. செய்தியறிந்த திவ்யாவும் எனக்குத் தெரியும் இது நடக்கும் என்று என்றாள் மகிழ்ச்சியாக.

    சிவநேசன் மனதிலும் இப்போது லேசான சஞ்சலம். மனைவியின் சந்தேக எண்ணம் நீடித்தால் அது தன் குழந்தையை பாதிக்கும். மேலும் தான் தொடர்ந்து திவ்யாவுடன் உறவு கொண்டால் அதுவும் தன் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பினான். மெல்ல விலக ஆரம்பித்தான். திவ்யாவும் அதே முடிவில் இருந்த போதும் சிவநேசன் தன்னை விட்டு விலகுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் ஏமாற்றி விட்டதாக நினைத்தாள். தான் அவசரப்பட்டு இத்தனை வருடமாக காத்து வந்த கற்புத்தன்மையை அவனால் இழந்து விட்டதாக எண்ணித் துடித்தாள். சிவநேசன் அவளது இயலாமையை தன் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொண்டு விட்டதாக நம்பினாள். இவற்றையெல்லாம் அவனிடம் நேரிடையாக கேட்க நினைத்தாலும் எங்கே அவன் தன்னை முழுவதுமாக வெறுத்து விடுவானோ என பயந்தாள். தனக்கு கிடைக்காத ஒரு பொக்கிஷத்தை கடவுள் ஒரு நிமிடம் கொடுத்து பிடுங்கிக்கொண்டதாக நினைத்தாள். தான் எப்போதுமே காதல் விஷயத்தில் ஒரு அபாக்கியவதி என்கிற தன்னிரக்க உணர்வு அவளை மேலும் சின்னாபின்னமாக்கியது.

    இவையணைத்தும் சேர்ந்து கேள்வி கணைகள் அவளைத்துரத்த ஒரு நாள் கேட்டே விட்டாள். என்னை ஒரே ஒரு முறை அனுபவிக்க வேண்டும் என்ற திட்டத்துடன்தான் என்னிடம் பழகினாயா? என அழுதபடி கேட்டாள்.

    அப்போதுதான் சிவநேசன் தனக்கிருந்த பயத்தை கூறினான். குழந்தை பிறப்பிற்கு பிறகு நாமிருவரும் இணையலாம் என கூறினான்.

    அதுபோலவே பத்து மாதங்களில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் தீபிகா. இன்றுதான் திவ்யா குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறாள். குழந்தையை கைகளில் ஏந்திய நேரத்தில் மீண்டும் தாயானதாக உணர்கிறாள். தீபிகாவிடம் குழந்தையை நன்றாக பார்த்துக்கொள் எனக்கூறி விட்டு விடை பெற்றாள்.

    மருத்துவமனை அறையை விட்டு அவளை வழியனுப்ப வந்த சிவநேசன் திவ்யாவிடம் இது நம் குழந்தை என கிசுகிசுத்தான. எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறாய சிவா? என வினவியவளிடம் மனம் மற்றும் உணர்வு ரீதியான அடிப்படையில்தால் சொல்கிறேன் என்றான். அதில் மனம் உருகியபோதும் தான் இனி தவறு செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

    இப்போது சொல் திவ்யா நாம் எங்கு செல்லலாம்? நீ எந்த ஊருக்கு அழைத்தாலும் நான் வரத்தயார் என கூறியவனிடம் மகிழ்ச்சி சிவா இனி நாம் இருவரும் சந்திக்கவே வேண்டாம். அதனால் டி.வி.யில் இருந்து நான் விலகி விடுகிறேன் என்றாள்.

    ஏன் இந்த விபரீத முடிவு? என அதிர்ந்தவனிடம் சிறிது நேரம் மௌனம் காத்து பின் இல்லை இதுதான் நல்ல முடிவு நம் இருவரின் குடும்பத்திற்கும் ஏற்ற முடிவு என்றாள்.

    திவ்யா நீ இல்லாத வாழ்வை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. நான் உங்கள் இருவரையும் ஒன்றாகவே நேசிக்கிறேன் உன்னால் எப்படி என்னை உதற முடிந்தது? என்றவனை அதுதான் உன் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே என்றவள் நினைவுகள் வாட்டும்போது குழந்தையின் முகத்தைப் பார் அதில் எல்லாவற்றுக்கும் பதில் இருக்கும் என்று கூறினாள்.

    மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ராசிபுரம் சென்று தங்கி அக்ஷயாவின் படிப்பிற்கு உதவ போகிறேன். புதிய இடம் புதிய வாழ்க்கை எல்லாவற்றையும் எனக்கும் மாற்றிவிடும். கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் பழகிக்கொள்கிறேன் ஆனாலும் உனக்கும் உன் குடும்பத்திற்குமான என் பிரார்த்தனை எப்போதும் உண்டு என கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தபடி வெளியேறினாள்.

  2. #14
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    “பச்சை நிறமே இல்லை.”

    பச்சை நிறமே இல்லை.”.

    புழுதிப்படர்ந்த சாலையின் நடுவே வண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தது.

    ஜன்னலின் வழியாக எதயோ தேடிக்கொண்டிருந்தது, உள்ளே அமர்திருந்த ஸ்கூல் பசங்களின் கண்களும் , முன் இருக்கையில் அமர்திருந்த தலைமையாசிரியார் சுகவனத்தின் கண்களும்.

    சிக்னலில் சிவப்பு லைட் விழுந்ததை கவனித்த ட்ரைவர் வண்டியை நிறுத்தினார். மீண்டும் நீல லைட் விழுந்தவுடன் வண்டியை கிளப்பினார்.

    சற்று தொலைவில் ஒரு டீக்கடையில் லேப்டாப்பில் செய்திகளை படித்துக்கொண்டிருந்தவர்களிடம் சென்ற சுகவனம் தன் கையில் இருந்த ஒரு புகைப்படத்தை காட்டி இதை பாத்தீருங்காளா? என்றார் , அதைப்பார்த்த அங்கிருந்தவர்கள், இல்ல நாங்க பார்த்ததில்ல, இது என்ன?, என்று சிரிச்சிகிட்டே அவர்கிட்ட மறுபடியும் கேட்டனர்.

    தலையை அசைத்தவாரே மறுபடியும் வண்டிக்கு வந்தார், செல்லும் வழியெல்லாம் வெறும் தொழிற்சாலைகளும் , காற்றுகூட புகமுடியாதளவுக்கு நெருக்க கட்டபட்ட வீடுகளாகவும் தான் காட்சியாளித்தது.

    மஞ்சள் சால்வை போத்தினது போல் எல்ல இடமும் ஒரே புழுதியாக இருந்தது.

    அங்க ஒரு இடதுல அழ்துளை கிணறு தோண்ட அதிலிருந்து தண்ணீர் வரம வெறும் ப்ளாஸ்ட்டிக் கழிவுகள் தான் தண்ணீரை போல வந்து கொண்டிருந்தது.

    சுகவனமும் வழியில் செல்லும் ஒவ்வொருத்தர்கிட்டயும், அந்த போட்டவை காட்டி கேட்க யாருமே தெரியாதுனு சொல்லீடாங்க.
    கடைசியாக அதைபார்த்த ஒருவர் எங்க தாத்தாவுக்கு தெரிஞ்சிருகணும் நினைக்கிறேன், வாங்க அவர்கிட்ட கேட்டு பார்ப்போம்.
    அந்த புகைபடத்தை தனது சுருங்கிய கண்ணால் விரித்து பார்த்த பெரியவர், இந்த இடத்த பாக்காணும்னா இன்னும் நீங்க 300 கீ.மீ போகணும் சொன்னாரு.

    இதை கேட்ட சுகவனம் மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றிய சொல்லிவிட்டு அங்கிருந்தது கிளம்பினார்.
    மாணவர்களும் மகிழ்ச்சியில் ஆரவரம் போட்டனர். சற்று நேரத்தில் அவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அந்த இடத்திற்கு வந்துவிட்டனர், பசங்களை வண்டியில் இருக்க சொல்லிவிட்டு சுகவனம் அலுவலகத்திற்கு சென்றார், தான் வந்த விபரத்தை காப்பாளரிடம் கூறினார்.

    அதைக்கேட்ட காப்பாளர் சாரி சார் இன்னைக்கு பர்மிஷன் தரமுடியாது, இன்னைக்கு மட்டுமில்ல, இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க பார்க்கமுடியாது, ஏன்ன எற்கனவே எல்லாம் டிக்கெட்டும் புக் ஆயிட்டு.

    மூணு மாசத்துக்கு முன்னடியே நீங்க புக் பண்ணிருக்கணும், அப்பதான் நீங்க இப்ப பார்க்கமுடியும்,

    இல்ல சார் எனக்கு தெரியாது, நாங்க ரொம்ப தூரத்துலேர்ந்து வர்றோம், பசங்கலெல்லாம் ரொம்ப ஆசையோட வந்தீருக்காங்க, இப்ப நீங்க பார்க்கமுடியாதுனு சொல்லீடிங்கனா ரொம்ப ஏங்கி போயிடுவாங்கா. இதுவரைக்கும் எங்க ஸ்கூலேருந்து யாருமே அத பார்த்ததுயில்ல , சோ ,ப்ளீஸ் நீங்க தான் கொஞ்சம் உதவி பண்ணணும்.

    என்ன? சார் இப்படி தொல்ல பண்ணுறீங்க,

    ஒரு நாளைக்கு 50 பேரதான் அனுமதிப்போம், இன்னைக்கு எல்லாமே புக் ஆயிட்டு, சரி ஒண்ணு பண்ணுவோம், 15 நிமிசம் டைம் தர்றேன் அதுக்குள்ள போய் பார்த்திட்டு வந்திடணும் சரிய?,

    ஒ,கே சார், அதுபோதும்,

    சரி வாங்க என்று சொல்லி கேட்டை திறந்துவிட்டார். பசங்களை அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார் சுகவனம்,
    பசங்களும் சுகவனமும் கண்ட காட்சி அவர்களை ஆச்சர்யபடவைத்தது, அவர்கள் வியப்புடன் பார்த்தது முன்னே கம்பீரமாக நிற்கும் மரங்களைதான்.

    நாகரீக வளர்ச்சியில் காடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டதால் அந்த மாணவர்கள் அப்போதுதான் முதல் முறையாக மரங்களை பார்க்கின்றனர். அவர்கள் முகத்தில் எல்லையில்ல மகிழ்ச்சி கரைபுரண்டு ஒடியது, சுகவனம் இதுதான் மரங்கள் என்று மாணவர்களிடம் கூறினார்.

    அது என்ன? நிறம் என்று மாணவர்கள் கேட்க, இதுதான் பச்சை நிறம் என்று விளக்கினார்.

    இந்த காத்து ரொம்ப சூப்பர இருக்கு, ஏதோ புது வாசம் அடிக்குது, இந்த காத்து வீச எவ்வளவு கரண்ட் செலவாகும், இதுக்கு எங்க சார் மோட்டார் இருக்கு, இது எப்படி? சார் ஒரே கால்ல நிற்குது, என்று அடுக்குகடுக்காக கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர் மாணவர்கள்.
    இதைக்கேட்ட சுகவனம் இதுதான் சுத்தமான ஆக்ஸிஜன் உள்ள காத்து, இந்த மரத்துல பச்சையம் என்று ஒரு கெமிக்கல் இருக்கு, அதுனால்தான் இது பச்ச கலருல இருக்கு. மரங்களே இல்லததால்தான் பச்சை என்கிற நிறமே இல்லாம போயிட்டு, அதுனாலதான் உங்களுக்கு பச்சை கலரே எப்படி இருக்கும்ணு?தெரியிலஇதுக்கு கிழ நிரைய வேர்கள் இருக்கும் அதுனால்தான் இப்படி நிற்குது .டேய் இலைகள பறிக்காதீங்க?

    எங்க காலத்துல மரத்துக்கு கிழேதான் பாடம் நடத்துவாங்க இப்ப உங்களுக்கு மரத்த பற்றியே பாடம் நடத்த வேண்டியாத இருக்கு, இப்படி ஃபோட்டோவிலும்,புக்லேயும் மட்டும் தான் பார்க்க வேண்டியாதிருக்கு ,என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே
    அங்கு வந்த காப்பாளர் சார் உங்க டைம் முடிஞ்சிடுச்சி. நீங்க கிளம்புலாம் என்றார் .மிகுந்த மனவருத்ததுடன் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டனர்.

    ஆரம்பத்துல இந்த இடம் முழுக்க சுற்றுலாத்தலமதான் இருந்திச்சு, கொஞ்ச கொஞ்சம இங்க இருக்கிற மரத்தயெல்லாம் காலிபண்ணி பேக்டரியாவும்,ப்ளாட்டாவும் ஆக்கீடாங்க, கடைசிய இருக்கிறது இந்த இடம் மட்டும்தான், அதுனால்தான் இந்த இடத்த பத்திரம பாத்துக்கிறோம் என்று கூறிய காப்பாளருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    அப்போது காத்துல மரங்கள் ஆடுவது அனைவருக்கும் டாடா காட்டுவது போல் இருந்தது.

    மாணவர்களும் பதிலுக்கு டாடா காட்டினர், அவர்களுடன் சேர்ந்த்து சுகவனமும் கையை அசைத்தார்.

    வண்டிபுறப்பட்டு சென்றுக்கொண்டிருக்கும் போது சட்டென நின்றது, முகத்தை துடைத்தவாறே எழுந்த சுகவனத்திற்கு அப்போதுதான் தெரிந்தது தான் இதுவரை கண்டது கனவு என்று.

    சுகவனம் அந்த ஊரில் வசிக்கும் பெரிய பணக்காரர், அவருக்கு சொந்தமாக ஒரு பள்ளியும் நிரைய தோட்டங்களும் உள்ளது.
    அவருக்கு சொந்தமாக தோட்டத்தை அழித்துவிட்டு ப்ளாட் போட செல்லும்போதுதான் இந்த கனவு நடந்தது.
    மரங்கள் இல்லன அந்த ஊரு எப்படி இருக்கும் என்பதைத்தான் இவ்வளவு நேரமா அவருடைய கனவுல வந்தது.
    அதில் வந்த ஒவ்வொரு சம்பவமும் மனதில் ஈட்டியை போல் பாய்ந்தது.

    என்னயா ?முழுச்சிகிட்டீங்களா? என்று கேட்ட ட்ரைவர் மணியிடம் ஆமாம் இப்பதான் முழுச்சிகிட்டேன்.

    எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்ய பார்த்தேன், என் மண்ண நானெ அழிகப்பாத்தேனெ, என்று மனசுக்குள்ளே நினைத்வாறே ,
    ஸ்கூலுக்கு சென்ற சுகவனம் மத்த ஆசிரியர்களையும் தனது உதவியாளரையும் தனது ரூமுக்கு அழைத்தார்

    இங்க இருக்குர மரத்தயெல்லாம் அழிக்கவேணாம், அப்படியே இருக்கட்டும், அதுமட்டுமில்ல ஏற்கனவே நாம போட்டு இருக்கிற எல்லா ப்ளாட்டிலேயும் புதுசா மரங்கல வாங்கிட்டு வந்துபோட்டுங்க, அத நம்ப ஸ்கூல் படிக்கிற ஒவ்வொரு பசங்ககிட்டேயும் கொடுத்து நட சொல்லுங்க, அத அவங்களவிட்டே நல்ல பராமரிக்க சொல்லுங்க, சரியா விளையாத மண்ணுல அந்த மண்ண டெஸ்ட் பண்ணி அதுக்கு ஏத்த மாதிரி சரியான மரங்களையும், பயிர்களையும் போடுங்க, அதுமட்டுமில்லாம நம்ப ஏரியாவுல இருக்கிற ஒவ்வொரு வீட்லேயும் ஒவ்வொரு மரம் கண்டிப்பா வளக்கணும்ணு சொல்லுங்க, பத்து வீட்டுக்கு ஒரு குப்பைதொட்டிய நம்ப செலவுலே வச்சி கொடுத்துடுங்க, குப்பையயெல்லாம் அதுல தான் போடனும், முடிஞ்சவரைக்கும் பிளாஸ்டிக் பொருள தவிர்க்க சொல்லுங்க .

    இத கொஞ்சம் கவனமா ஃபாலோ பண்ணங்க என்று சொல்லியதோடு மட்டுமில்லாமல் அதை சரியாக கையாளவும் செய்தார்.

    அன்று முதல் அந்த ஊர் மற்ற ஊர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தது.

    ஒரு நாட்டின் வளம் நன்றாக இருக்கனும் என்றால்- அந்த
    நாட்டிலுள்ள காட்டின் வளம் நன்றாக இருக்கனும்.
    எனவே நாமும் மரங்களை வளர்ப்போம்.
    காடுகளை பாதுகாப்போம்.


    முற்றும்.

  3. #15
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    மாற்றாள்

    மாற்றாள்

    திறந்திருந்த ஜன்னல் வழியாக நுழைந்த அதிகாலை சூரியனின் இளம் மஞ்சள் கதிர்கள் அறையை ஆக்ரமிக்க துவங்கின. அலாரம் தனக்கு இடப்பட்டிருந்த கட்டளையின் படி மும்முரமாக ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது.

    சிரமப்பட்டு கண்விழித்தான் வைத்தி. அலார ஒலியை நிறுத்தினான். வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாகவே எழுந்ததாலும், முன்தின இரவு தூக்கமின்னை காரணமாகவும் எழுந்திருக்க சிரமப்பட்டான்.

    அவன் தங்கியிருந்த மேன்ஷனில் பெரும்பாலோர் இன்னும் எழுந்திருக்கவில்லை என்பதை கழிவறைகள் காலியாக இருந்ததிலிருந்து உணரமுடிந்தது. காலைக்கடன்களை முடித்துக்கொண்டு அறைக்கு வந்தபோது, அவனின் அறைநண்பர்கள் தூக்கத்தை விரட்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

    “என்ன மாப்ள இவ்ளோ காலையில எழுந்திட்ட.. ஏதாவது ஸ்பெஷல் புரோகிராமா..” என்றான் அறைவாசிகளில் ஒருவன்.

    “ஒன்னும் இல்லப்பா.. சும்மாதான்.. தூக்கம் வரல..”

    “பொய் சொல்லாதடா.. தங்கச்சி வரச்சொல்லுச்சா..” என்றான் மற்றொரு அறைவாசி நண்பன்.

    தங்கச்சி என்று அவன் குறிப்பிட்டதும், முன்தினம் அவனை தூக்கமில்லாமல் செய்த ரோசியின் நினைவுகள் மீண்டும் அவனை சூழ்ந்து கொண்டது. எனினும் சமாளித்துக்கொண்டு, “அதெல்லாம் ஒண்ணுமில்லை, எழுந்து வேலைக்கு கிளம்புங்க” என்றவாறு அலுவலகம் செல்ல தயாராகி பேருந்து நிறுத்தம் வந்து நின்றுகொண்டான்.

    ரோசி – கடந்த ஆறு மாத காலமாக அவன் நினைவுகளில் உறைந்து போனவள். ஆர்ப்பாட்டமில்லாத அழகு. பார்த்த மாத்திரத்தில் காதலிக்க தூண்டும் கண்கள். வைத்தி சற்று அதிகமாகவே தூண்டப்பட்டிருந்தான்.

    தினமும் அலுவலகம் செல்லும் பேருந்தில் திட்டமிடப்படாத, எதிர்பாராத விதமாய் தொடங்கிய சந்திப்புகள், பின்னர் திட்டமிடப்பட்டு, காத்திருந்து பயணித்து, காதலை கண்களால் பரிமாறிக்கொள்ளும் விதமாய் உருமாறியது. வழக்கமான பயணத்தின் போது, டயர் பஞ்சரால் பேருந்து ஓரம்கட்டப்பட்ட ஒரு காலை பொழுதில் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டு மவுனம் விலகிவிட, வாய் வழியே காதல் கசிந்தது. அதுமுதல் சிறந்த காதலர்களுக்கான எல்லா லட்சணங்களுக்குள்ளும் தங்களை பொருத்திக்கொண்டனர்.

    ஆனால் கடந்த இரண்டு தினங்களாக அவள் வழக்கமாக வரவேண்டிய பேருந்தில் வராததால் வாடிப்போனான் வைத்தி. செல்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எனவே காலையில் அவள் பேருந்து ஏறும் நிறுத்தத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே சென்று நின்றுவிடுவது என்று முடிவெடுத்து அதன்படி வந்து காத்திருந்தான்.

    அவன் நினைத்தது போலவே ரோசியும் வழக்கத்தைவிட முன்பாகவே பேருந்து நிறுத்தம் வந்தாள். இவனை கண்டதும் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைக்க முயன்றாள். வைத்தி மெல்ல அவளருகில் சென்று, “என்னாச்சி ரோசி... ஏன் என்ன தவிர்க்கிற..” என்றான்.

    “நீங்க செய்தது சரியா.. ஏன் சொல்லாம மறைச்சிங்க..” ரோசிக்கு குரல் தழுதழுத்தது.

    “என்ன சொல்ற புரியல... “

    “நான் வேலை செய்ற பி&பி நிறுவனத்தில் ஒரு வருடம் முன்பு வரை நீங்க வேலை செய்து இருக்கீங்க. அங்க ஏதோ சண்டை போட்டுகிட்டு அங்கிருந்து விலகி, வேணும்னே எங்க நிறுவனத்தோட முதல் எதிரி நிறுவனமான ஷக்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கீங்க. உண்மைதான..”

    “இது தான் உன் பிரச்சனையா..” இறுக்கம் தளர்ந்தான் வைத்தி.

    “உங்களுக்கு இது சாதரணமாக தெரியலாம்... ஆனால் எனக்கு அப்படியில்ல. எங்க நிறுவனத்தோட பழைய போட்டோவுல உங்கள பார்த்துட்டு கேட்டப்பதான் இதெல்லாம் தெரிந்தது. இன்னைக்கு நானும் என் குடும்பமும் நிம்மதியாக வாழ்றதுக்கு எங்க பி&பி நிறுவனம் தான் காரணம். அதை அழிக்க நினைக்கிற ஒரு நிறுவனத்தில் வேலை செய்ற உங்கள காதலிக்க என் மனசு இடம் கொடுக்கல. அதனால..” அவள் சொல்லி முடிப்பதற்குள் உரிமையோடு குறுக்கிட்டான் வைத்தி “அவசரப்படாதே என் செல்லக் காதலியே.. எனக்கு பசிக்குது.. வா சாப்டுகிட்டே பேசுவோம்”

    சற்று தயங்கியவள் அவன் ஆளுமைக்கு ஆட்ப்பட்டவள் போல் அவனை பின் தொடர்ந்தாள். அதிகம் ஆள் வர வாய்ப்பில்லாத ஒரு ஹோட்டல் மூலையிலிருந்த மேசையருகே அமர்ந்தனர். சர்வரிடம் வேண்டிய சிற்றுண்டியை சொல்லிவிட்டு, முகத்தில் லேசான புன்னகையோடு, “ரோசிக்கண்ணு இது தொழில் ரகசியம். இப்ப எதுவும் கேக்காத. இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோ.. நீயே வியக்கற அளவுக்கு புரமோஷனும் பணமும் வரும்” என்றான்.

    “இத சொல்லத்தான் இங்க வந்திங்களா, நான் கிளம்பறேன்” எழுந்துகொண்டாள். “அவசரப்படாதே ரோசி.. உட்கார் சொல்றேன்” யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தான். அவள் உட்கார்ந்துகொண்டாள்.

    “ரோசி, தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைத்து நான்கு வழி சாலையமைக்க அரசு ஒரு திட்டம் போட்டதும், அதுக்கு டெண்டர் விட்டதும் உனக்கு ஏற்கனவே தெரியும்னு நினைக்கிறேன். அது பல்லாயிரம் கோடி ரூபாய் புராஜக்ட். அந்த திட்டத்தை ஏலம் எடுக்க, நீ வேலை செய்ற பி&பி நிறுவனமும், நான் வேலை செய்ற ஷக்தி நிறுவனமும் கடும் போட்டி போடுது. இதுல போட்டி நிறுவனம் குறிப்பிடும் தொகை தெரிஞ்சிட்டா சுலபா ஜெயிச்சிடலாம். அதனால நான் ஒரு திட்டம் போட்டேன். அதன்படி ஷக்தி நிறுவனம் கோரும் தொகையை தெரிந்து சொன்னால் புராஜக்ட் மேனேஜர் பதவியும் ஒரு கோடி ரூபாய் பணமும் தரணும்னு பி&பி நிறுவனத்தோட சேர்மேனிடம் பேசிட்டு தான் அங்கே சண்டை போடற மாதிரி சூழ்நிலையை உருவாக்கி அங்கிருந்து விலகி ஷக்தி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இங்க சில முக்கிய பைல்களை திருடி வெற்றிகரமா கொட்டேஷன் தொகையை தெரிஞ்சிகிட்டு அதை பி&பி நிறுவனத்தில் கொடுத்துட்டேன். அந்த தொகையை விட ஒரு லட்சம் ரூபாய் குறைத்து போட்டு பி&பி நிறுவனம் இந்த ஏலத்தில் ஜெயிச்சிடுவாங்க. அப்புறம் ஐயாதான் புராஜக்ட் மேனேஜர். அதுக்கு இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு. போதுமா...” நீண்ட உரையாற்றி முடித்தான் வைத்தி.

    அனைத்தையும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த ரோசி, வைத்தியின் கைபிடித்து அவன் உள்ளங்கையில் முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தாள்.

    ஊடலுக்குபிறகான அவர்களின் நேசம் மேலும் பலப்பட்டது.

    முடிவு அறிவிக்கபடும் நாளில், குறித்த நேரத்தில் அரசு குறைந்த தொகை கோரிய நிறுவனத்தை தேர்வு செய்வதாக அறிவித்தது. அவன் எதிர்பார்த்தபடியே முடிவையறிந்து ஷக்தி நிறுவனம் சோகத்தில் மூழ்கியது. மேலும் சிக்கன நடவடிக்கை என கூறி சிலரை வேலையிலிருந்து நீக்குவதாக ஷக்தி நிறுவன நிர்வாகம் அறிவித்தது. அதில் வைத்தியின் பெயரும் இருந்தது. சிறிது நேரம் சோகமாய் இருப்பது போல் பாவனை செய்துவிட்டு மெல்ல வெளியேறினான் வைத்தி.

    பின்னர் தன் பதவியேற்பு விழாவின் தேதியறியும் ஆவலோடு, பி&பி நிறுவன சேர்மேனை செல்பேசியில் அழைத்தான்.

    “என்னப்பா வேணும்” சேர்மேனின் உதவியாளர் பேசினார்.

    “சேர்மேன் சார் இல்லியா” உற்சாகமாக கேட்டான் வைத்தி.

    “இருக்காரு.. உனக்கு என்ன வேணும் சொல்லு” பேச்சிலிருந்த கடுமை வைத்தியை திடுக்கிட வைத்தது. “என்ன சார் இப்படி பேசறீங்க.. எவ்வளவு பெரிய வெற்றி தேடி தந்திருக்கேன்”

    “கிழிச்ச போ.. அதான் புரோஜக்ட அந்த பன்னாட்டு சீட்டர்ஸ் கம்பனிகாரன் தள்ளிட்டு போயிட்டானே” என்றார் எரிச்சலோடு.

    “என்ன சார் சொல்றீங்க, புரொஜக்ட் நமக்கில்லையா..”

    “விவரமே தெரியாதா, அமெரிக்க பன்னாட்டு சீட்டர்ஸ் கம்பனிகாரன் நம்ம தொகையைவிட ஒரு லட்சம் ரூபாய் கம்மியா போட்டு புரொஜக்ட தூக்கிட்டான். சேர்மேன் ரொம்ப அப்செட். உன்னோட பேச விரும்பல. நீ நம்பக தன்மை இல்லாதவன்னு அவர் நினைக்கிறார். இனி நீ இங்க வேணாம்னு சொல்லிட்டார். வச்சிடட்டுமா” பதிலை எதிர் பார்க்காமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    பேரதிர்ச்சியில் உறைந்துபோனான் வைத்தி. ரோசி முகத்தை எப்படி எதிர் கொள்வது என நினைத்தபடியே, மெல்ல நடக்கத்தொடங்கினான்.

    “வைத்தி.. வைத்தி” ரோசியின் குரல் கேட்டது ஆனால் அவளை காணவில்லை. அதேநேரத்தில் அவன் பக்கத்தில் நின்றிருந்த விலையுயர்ந்த வெளிநாட்டு காரின் கதவு தானாக திறந்து கொண்டது. உள்ளே டி ஷர்டும், ஜீன்சும் அணிந்த நவநாகரீக பெண் அமர்ந்திருந்தாள். “கெட் இன்” அநாயாசமாக ஆணையிட்ட அந்த பெண்ணை உற்று நோக்கினான். ஆம். ரோசி தான் அவள். ஆச்சர்யம் அகலாத நிலையில் இயந்திரத்தனமாக காரில் அமர்ந்து கொண்டான்.

    “வைத்தி, உனக்கு அதிகம் விளக்க வேண்டியிருக்காதுன்னு நினைக்கிறேன். பி&பி நிறுவனத்திற்காக நீ என்ன செய்தியொ அதே வேளைய அமெரிக்க சீட்டர்ஸ் கம்பனிக்காக நான் செய்தேன். ஷக்தி நிறுவனத்தோட தொகையை தெரிந்துகொள்ளத்தான் உன்னோடு பழகினேன். ஆனால் நீயும் அதே திட்டத்தோடு இருக்கறத தெரிஞ்சிக்கிட்டேன். அதனால என் வேல சுலபமாயிடுத்து. அவ்வளவுதான். தெரிந்தோ தெரியாமலோ நீ என்னை லவ் பண்ண. அதனால உண்மைகளை சொல்லனும்னு தோனுச்சி. மற்றபடி நோ செண்டிமென்ட்ஸ்”.

    வைத்தி எதுவும் பேச இயலாதவனாக உட்கார்ந்திருந்தான்.

    “ஒகே வைத்தி, எனக்கு நேரமாச்சி.. இறங்குறியா..” என்றவள் ஏதோ பொத்தானை அழுத்த கார் கதவு திறந்து கொண்டது. இறங்கி நின்றான். அவன் காலுக்கு பிடிபடாமல் பூமி நழுவி நழுவி சென்றது.

  4. #16
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    மாயை

    மாயை


    ஓயாமல் பெய்த அடைமழையால் சூரியன் கூட வெளி வர தயக்கம் காட்டி மெது மெதுவாய் மேகப் போர்வையை கிழித்து சோம்பல் முறித்து எட்டி பார்த்தது... எப்பொழுதும் இயந்திர தனமாக வாழும் சென்னைவாசிகளுக்கு, மழையா? வெய்யிலா?

    சுனாமியே வந்ததாலும் அவர் அவர் அலுவலில் மும்முரமாய் இருப்பதாய் ஒரு தோரணையில் வாழும், ஜீவராசிகள்..

    ”டேய் விஜி எந்திரிடா, சூரிய உதயத்தை ஒரு நாள் ஆச்சும் பார்த்து இருக்கியா? நைட் எல்லாம் கண்விழிச்சு லேப்டாப்-ல எதையோ நோண்டிட்டு இருக்க வேண்டியது...ஆடு மாடு கூட எந்திரிச்சாச்சு எந்திரிக்குரனா பாரு”...

    "ஏம்மா சிவகாமி , உன் அண்ண மகன் தானே ..எங்கியாச்சும் கண்டுக்கிறியா நீ...என் பேச்சுக்கு எங்க மதிப்பு இருக்கு இந்த வீட்டுல..ச்சே..என்று அலுத்துக்கொண்டார் நடராஜன்...

    ”விடுங்க சின்ன பையன் தானே...வேலை கிடைச்சிட்டா இப்படி எல்லாம் தூங்க கூட நேரம் இருக்காது... உதாரணத்துக்கு என்னை பாருங்க...இவன் தூங்குரதை பார்க்க ஆசையா இருக்கு,..என்னால தூங்க முடியுதா? சாவுற வரைக்கும் வேலைக்கு போகணும்னு என் விதியில எழுதி இருக்கு”.. என்று அலுத்துக் கொண்டாள் சிவகாமி..

    ”அப்போ என்னை பிரயோஜனம் இல்லாதவனு சொல்றியா?? வேலைக்கு போகாம உக்காந்து இருக்கேனு சொல்லி கட்டுறியா?” கொதித்து எழுந்துவிட்டார் நடராஜன்...

    சொந்த தொழில் செய்து நஷ்டம் மேல நஷ்டம் வந்ததும் இல்லாம சக்கரை வியாதி, ரத்த கொதிப்பும் வந்து இனி வேலைக்கு போக முடியாமல் போன விரக்தி வெறுப்பு எல்லாம் அப்போ அப்போ தனக்கு மாட்டிய அடிமைன்னு விஜி மேல கொட்டி தீர்ப்பார்

    ”ஐயோ ஆரம்பிச்சுட்டார்... டேய் விஜி எந்திரி, என்னை பஸ் ஸ்டாப்-ல விட்டுரு,., நான் ஆபீஸ்க்கு போறேன்”... என்று தப்பித்தால் போதும் என்று கிளம்பி வாசலுக்கு சென்று காத்திருந்தாள் சிவகாமி..

    தினம் தினம் இதை கேட்டு அலுத்து போனதால் எந்தவித அதிர்ச்சியும் கட்டாமல் அத்தையை கொண்டு பஸ் ஸ்டாப்பில் விட உடை மாற்றி கிளம்பினான்..

    விஜய்..

    எல்லா கனவுகளையும் நெஞ்சில் சுமந்து , ஒரு வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞன்.. அம்மாவின் ஆசை ... அக்காவின் திருமணம், எல்லா வீட்டில் உள்ள மகன்களுக்கே உண்டான கடமை உணர்வும் மற்றும் தன்னுடைய சின்ன சின்ன ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்ற போகும் வேலை வரும் வேலை தெரியாமல் அன்றாடம் இப்படி சிறு சிறு சண்டைகள் சில நேரம் பெரிய சண்டையாகி "இவனுக்கு எதுக்கு நாம சோறு போடணும்னு" என்ற மாமாவின் வார்த்தைகள் காது பட கேட்டாலும், கண்டும் காணமல் போக பழகி கொண்டாலும் சில நேரங்களில் மனம் உடைந்து வரும் கண்ணீர் துளிகளை மறைக்கமுடியாமல் தவித்து துடிப்பான்.. அந்நேரம் அவன் கண்மூடி துயரம் மறக்க நினைக்கையில்

    "விஜி கவலைபடாதடா நிச்சயம் நீ ஆசை படுற வேலை கண்டிப்பா கிடைக்கும்" அந்த மகிழ்ச்சி நாளுக்காக நான் காத்துகிட்டே இருப்பேன்..

    திவ்யாவின் நம்பிக்கை ஊட்டும் வரிகள் மட்டுமே அவன் வழிகளை தீர்க்கும் மருந்தாகும் பல நேரங்களில்..
    சொல்லாத காதலை அவள் சொல்லும் மகிழ்ச்சி நாளில் சொல்ல காத்திருக்கிறான்.

    "டேய் விஜி நிறுத்து...ஸ்டாப் வந்திருச்சு...என்ன சிந்தனையில நீ இருக்கியோ"...மாமா சொன்னதை எல்லாம் மனசுல வச்சுக்காத..இன்னைக்கு இண்டர்வியூ போகணும்னு சொன்னியே,,, இந்தா பணம்.. பார்த்து பத்திரமா போய்டுவா...உங்க அம்மா போன் பண்ண நான் விசாரிச்சேன்னு சொல்லு" என்று அவசரம் அவசரமாக பஸ் ஏற ஓடினால் சிவகாமி..

    TNPSC பயிற்சி மையம்..

    உங்கள் அரசாங்க வேலை கனவை நிறைவேற்றி தருவதே எங்கள் லட்சியம்..

    முயற்சியும் உழைப்பும் இருந்தால் உங்கள் கனவு நிறைவேறும்

    இன்றே இணைந்து பயன் பெறுங்கள்

    பயிற்சி மையத்தின் விளம்பர பலகை..

    சட்டென்று ராஜேஷ் நினைவுக்கு வர ...அவனைச் சென்று பாப்போம் என்று நேராக ராஜேஷ் வீட்டை நோக்கிச் சென்றான் விஜி..

    TNPSC தேர்வு எழுதி இருந்தானே என்ன ஆச்சு என்று கேட்கலாம் என்று நினைத்து கொண்டே செல்ல..

    எங்க போற விஜி? என்று அவன் நண்பன் சுரேஷ் கேட்க.
    "நம்ம ராஜேஷ பார்க்க" என்று சொல்ல..


    "அவன் இங்க இல்லைடா.. அவன் கத்தார் போய்ட்டான்.. டிரைவர் வேலை கிடைச்சிருச்சு அவனுக்கு"...

    "என்னடா சொல்ற? அவன் அரசாங்க வேலைக்கு தான் போவேன்னு கஷ்டப்பட்டு படிச்சானே.. என்ன ஆச்சு?

    "இன்னுமா இதையெல்லாம் நம்பிக்கிட்டு இருக்க? அதெல்லாம் சும்மா கண்துடைப்பு-டா...நேர்மையா எழுதினவன் எவனுக்குமே வேலை கிடைச்சதா சரித்தரமே இல்லை...

    "எக்ஸாம்-ல பாஸ் பண்ணிட்ட லெட்டர தான் நாம பிரேம் செய்து வச்சுக்கணும்டா"...

    "எல்லாம் பணம் செய்ற வேலைடா....இவன் சும்மா இல்லாமல் நேர்மையா இருந்து தான் வேலை கிடைக்கல, வேற வழியில முயற்சி பண்ணலாம்னு எவனோ சொன்னானு ஒருத்தன் கிட்ட ரெண்டு லட்சத்தை கட்டி, அவன் இவன்கிட இப்போ வரும் இண்டர்வியூ அப்போ வரும்னு ஏமாத்திட்டு போய்ட்டான்"...

    "கடனாளியாக ஆனது தான் மிச்சம்...இப்போ பாரு கத்தார்-ல டிரைவர் வேலைக்கு போய்ட்டான்...வாங்கின கடனையாவது அடைச்சிடலாம்னு .. அதனால விஜி எந்த வேலை கிடைச்சாலும் போடா.. நேரத்தை வீணடிக்காமல் என்று சுரேஷ் சொல்லி விட்டு நகர..

    சொந்த ஊரான திருச்சியை விட்டு சென்னைக்கு வந்து அல்லல் பட்ட நாள் எல்லாம் கண் முன்னே நிழல் ஆட...
    கவலை தோய்ந்த முகத்துடன், விஜி சென்ற வாரம் வந்த TNPSC பணிக்கான தேர்ச்சிப் பெற்றதாக வந்த கடிதத்தை எடுத்து ஒரு கணம் பார்த்தான்...

    ஆசையாக அம்மாவிற்கு சொன்ன போது
    “கவலைப் படாத விஜி உனக்கு அரசாங்க வேலை தான் கிடைக்கும்னு உன் ராசியிலேயே இருக்கு” என்று சொன்னது நினைவுக்கு வர கண்ணில் நீர்த்துளி மீண்டும் கன்னத்தை தொட, ஒரு கணம் சுதாரித்து மீண்டும் வீடு நோக்கி செல்ல
    மீண்டும் TNPSC பயிற்சி மையம்.. பலகை..

    அங்கே இருவர்..

    “மச்சி எப்டியாவது இதுல சேரணும்டா... வேலைன்னு போன அரசாங்க வேலை தண்டா ...எத்தனை வருஷம் ஆனாலும் சரிடா” என்று பேசுவதை கேட்டு

    விஜி சிரிப்பதா அழுவாத என்றுத் தெரியாமல், கல்லூரி முடித்து மூன்று வருடமாக “போகாத ஊருக்கு வழி தேடியதைப் போல” திரை மறைவில் நடக்கும் சித்து வேலைகள் அறியாமல் பல கனவுகளை நெஞ்சில் சுமக்கும் என்னை போன்ற முட்டாள்களை யார் திருத்துவது என்று தன்னைத் தானே திட்டி கொண்டு

    இன்னைக்கு நடக்கப் போற இண்டர்வியூ , அதுவாச்சும் நிஜமா இல்லை, பொய்யா என்று தனக்குள் தானே வினா எழுப்பிக்கொண்டு, எதிர்காலத்தை பற்றிய கனவை மறந்து, பயத்தை மட்டுமே நினைவில் கொண்டு வீட்டை நோக்கி செல்ல

    “வாடா வா...எப்போ போன இப்போ வர...இது வீடா இல்லை சத்திரமா” என்று மாமாவின் அர்ச்சனை..

    சிறு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு தன் அறை நோக்கி சென்றான் கனத்த இதயத்தோடு..

  5. #17
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    நானும்,ஜெயனும்,திருச்சியும்

    நானும்,ஜெயனும்,திருச்சியும்.

    இன்று அவன் மரணமடைந்த செய்தி கிடைத்தபோது நான் நொறுங்கிபோனேன்.கடந்த சில ஆண்டுகளில் நான் இழந்த சொந்தங்கள் அநேகம் .வாப்பா ,உம்மா ,மூத்த சகோதரர் ,சகோதரிகள் என்று, பாதிப்பேருக்குமேல் போய்சேர்ந்துவிட்டார்கள் . அவர்களின் இழப்பிலிருந்து மீண்டுகொண்டிருந்த நேரமிது . மனைவியும் மகளும் அவர்களின் பிரிவின் துயரை மறக்கச்செய்து கொண்டிருக்கிற நேரம் . எனக்கு அதிகம் நண்பர்கள் எப்போதுமே கிடையாது . என் வாழ்நாள் முழுதும் இருந்த எனது நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . இப்படி அபூர்வமான எனது நண்பர்களில் ஜெயன் முதன்மையானவன்.

    அன்று வகுப்பில் மாணவர்கள் சிலர் ஆங்கில கவிதையை சரியாக மனப்பாடம் செய்யவில்லை . அதற்காக நாங்கள் பகல் சாப்பாட்டிற்கு அனுப்பப்படவில்லை . இரண்டு மணிக்கு மதிய வேலை ஆரம்பமானதும் , அடுத்து வந்திருந்த அறிவியல் ஆசிரியர் சாமியல் சார் நாங்கள் தனியாக புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு நிற்பதை பார்த்து காரணம் கேட்டார் . காரணம் சொன்னதும் ,சரி போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்று அனுப்பிவைத்தார் . ஆனால் எனக்கு சாப்பாடு கொண்டுவரும் கூடைகார அம்மா , நான் வராததால் ஏற்கனவே போய்விட்டார்கள் .என்னிடம் வெளியில் சாப்பிட காசும் இல்லை . வீட்டிற்குபோனால் நேரம் ஆவதுடன் ,வாப்பாவுக்கு காரணம் தெரிந்து அவர் தண்டிப்பார் . ஆகவே பசியோடு இருந்து விட முடிவு செய்தேன் . அந்த தூங்குமூஞ்சி மரநிழலில் தண்ணீர் குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு சாமியல் சார் கொடுத்திருந்த ஒரு மணி நேர அவகாசம் முடிவதற்காக காத்திருந்தேன் . அந்த நேரத்தில்தான் ஜெயனின் நட்பு கிடைத்தது.அதுவரை ஒரே வகுப்பில் இருந்தாலும் அறிமுகம் இல்லாமல் இருந்தோம் . ஏன் சாப்பிடபோகவில்லையா ? என்று கேட்டான் .ஏற்கனவே கூடைகார அம்மா போய்விட்டதையும் , வீடு காந்தி மார்க்கெட் பக்கம் இருப்பதால் போய்வர நேரமாகலாம் என்றும் சொன்னேன் . சரி எங்கள் வீட்டிற்கு வா .எங்கள் வீடு சமஸ்பிரான் தெருவில்தான் இருக்கிறது என்றான் . வேண்டாம் எனக்கு பிரச்சினை இல்லை என்றேன் . அவன் விடவில்லை .பசியாகவா இருக்கப்போகிறாய் என்று கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான் . அவன் அம்மா விஷயம் அறிந்து இருவருக்கும் பரிமாறினார் .அன்று ஆரம்பமானது எங்கள் நட்பு.

    அது 1961ம் ஆண்டு.ஊரிலிருந்து படிப்பதற்கு திருச்சிக்கு வந்தோம்.தந்தை திருச்சி ராணித்தெரு வீட்டில்இருந்தார்கள்.என்னோடு என் தம்பி மற்றும் எனது உறவினர் பிள்ளைகள் என்று மொத்தம் எட்டுப்பேர் வந்தோம்.ஊரில் நாங்கள் சரியாகப்படிக்கவில்லை என்ற பொதுவான குற்றச்சாற்றின் பேரில் திருச்சியில் எங்கள் படிப்பை தொடர முடிவு செய்தார்கள்.முதலில் நாங்கள் எல்லோரும் தெப்பக்குளத்தின் அருகில் உள்ள அந்த பிரபலமான பள்ளியில் சேர்வதற்காக விண்னப்பித்திருந்தோம்.நுழைவுத் தேர்வு நடந்தது.அதில் நான் மட்டும் அந்த பள்ளியில் சேர்ந்தேன்.மற்றவர்கள் இடம் கிடைக்காததால் மற்ற பள்ளிகளில் சேர்ந்தார்கள்.நான் அப்போது III பாஃர்ம் என்று அழைக்கப்பட்ட,8ம் வகுப்பில்,சேர்ந்தேன்.எனக்கு 8ம் வகுப்பு ஆசிரியராக வில்லியம் இருந்தார்.அவருக்கு முஸ்லிம்களை பிடிக்கவில்லை.மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்.ஆனால் மற்ற ஆசிரியர்கள் கிறித்தவர்களுக்கே உரிய அன்போடு பழகினர்.எனக்கு புதிய இடம்,புதிய சூழல்,மற்றும் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர் ஆகியவை மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது.பள்ளியில் இப்படி இருக்க வீட்டிலும் மிகவும் கடுமையான சூழல்.மற்றவர்களுக்கு நல்ல பள்ளிகளில் இடம் கிடைக்காத நிலையில் வீட்டின் அருகில் இருந்த சிறிய பள்ளியில் சேர்ந்தார்கள்.நாங்கள் எல்லோரும் காலையில் 4 மணிக்கே எழுந்துவிட வேண்டும்.வீட்டில் மொத்தம் 35 பேர் இருந்தோம்.அதாவது எங்கள் நான்கு கடைகளில் வேலை செய்தவர்களும் அடக்கம்.

    காவிரிக்கரையில் இருந்தபோதும் கோடைகாலங்களில் தண்ணீர் பஞ்சம்தான் .அத்துனை பேரும் குளிப்பதற்கு அந்த வீட்டில் தண்ணீர் பற்றாததால் காலையில் நாங்கள் 4மணிக்கே எழுந்து காலை தொழுகையை முடித்துவிட்டு துண்டு உடைகள் எடுத்துக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தந்தையின் நண்பர் வீட்டிற்கு குளிக்கச் செல்வோம்.பாதி தூக்கம்,அசதியுடன் அங்கு போய் சேருவோம்.என் தம்பி எழுந்ததுமே தூங்கி வழிவான்.தம்பி எழுந்தஉடன் கழிவறையில் போய் அங்கு தூங்கிகொண்டே காலைக்கடனை முடிப்பான்.பின்பு குளிக்கும் வீட்டிற்கு வந்தபின் அங்குள்ள குளியல் அறை படிகளில் தூங்குவான்.ஒருவாறு குளித்துவிட்டு வீடுவந்து சேர்வதற்குள் விடிந்திருக்கும்.பிறகு குரான் ஓதுவோம்.கடையில் வேலை செய்யும் காசிம் எங்கள் எல்லோருக்கும் ஓதச்சொல்லித் தருவார்.தொழுகைமுறை,கலிமாஆகியவையும் கற்பிப்பார்.8மணியானதும் காலை உணவு சாப்பிடச்செல்வோம். அத்தனை பேருக்கும் ஒரே சமையல்தான்.அவருக்கு உதவிக்கு முகைதீன் இருந்தான் .அவனுக்கு என் வயது இருக்கும் ..காலை உணவிற்கு பிறகு பள்ளிக்கூட புத்தகப்பையை எடுத்துக்கொண்டு,தந்தை இருக்கும் செயற்கை வைர கடைக்கு வந்து அங்கு உட்கார்ந்து படிக்க வேண்டும்.அவர் கடைக்கு வந்ததும் 9மணியளவில் நாங்கள் பள்ளிக்குப் போக அனுமதி தருவார்.நான் பள்ளிக்கு நடந்து போவேன்.பள்ளி தெப்பக்குளத்திற்கு அருகில் இருக்கும்.பள்ளியின் புதிய சூழல்,வகுப்பு ஆசிரியரின் கடுமை,எல்லாம் பெருத்த சுமையாக இருக்கும்.கிராமத்திலிருந்து வந்த எனக்கு,பாடங்கள் கடினமாக இருந்தது.இருந்த போதிலும் வகுப்பில் சுமாரான மானவனாக இருந்தேன்.இத்தனை கஷ்டங்கள் இருந்த போதிலும்,இளம் வயது காரனமாக எதுஉம் பெரிதாக தெரியவில்லை.சிறு சிறு சந்தோசங்கள்கூட பெரிதாக தெரிந்தது.ஆரம்பத்தில் பகல் உணவிற்கு,நான் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு போவேன்.ஒருமுறைசாப்பிட்டுச்செல்ல நேரமாகி வகுப்பில் தண்டனை பெற நேர்ந்தது.அப்போது முதன்முறையாக பள்ளிக்கு பகல் உணவு அனுப்பும்படி போராடினேன்.முதலில் மறுத்த தந்தை ,பின்பு சம்மதித்து,கூடைக்காரர் மூலம் சாப்பாடு பள்ளிக்கு வந்தது. வீட்டிலிருந்து ஒரு வெங்கல டிபன் கேரியரில் பகல் உணவு சாப்பாட்டு கூடை ஆள் கொண்டு வருவார்.சாப்பாட்டு நேரத்தில்,சாப்பிட்ட நேரம்போக,கொஞ்சம் விளையாட நேரமும் கிடைத்தது.மாலையில் பள்ளி 4.30 மணிக்கு முடிந்ததும்,5மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்பது வாப்பாவின் கட்டளை.எனக்கும் எல்லோறையும் போல் விளையாட ஆசை.ஆனால் 5மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்பதால் விளையாட முடியாமல் ஆசையை அணை போட்டுவிட்டு வீட்டிற்கு வருவேன்.சில சமயத்தில் வரும் வழியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்ததில் நேரமாகி வீட்டில் உதைவாங்கியதும் உண்டு.திருச்சியில் நடைபாதைகளில் பல விதமான வேடிக்கைகள் நடக்கும்.தேள்,பாம்பு,போன்றவற்றை வைத்துக்கொண்டு,விஷ கடிகளுக்கு மருந்து இலவசமாக தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்,சுலபமாக ஜெயித்து விடலாம் என்று நம்பிக்கையூட்டி,ஏமாளிகளிடம் பணம் முழுவதையும் பிடிங்கிக்கொள்ளும் நாடாக்குத்து சூதாட்டக்காரர்கள்,திராவிட இயக்க பாடல்களை பாடும் தெருப்பாடகர்கள்,சிறு சிறு வித்தைகள் காட்டும் கலைக்கூத்தாடிகள்,என்று பல விதமான தெருக்கவர்ச்சிகள்தான் எனக்கு பொழுதுபோக்காக இருந்தன.அவற்றில் மிகவும் நான் கவரப்பட்டது,ஹிப்நாடிசம் செய்வதாக விளக்கம் அளித்து கருப்பு துணியால் ஒரு சிறுவனை மூடி,அவன் ஹிப்நாடிசம் மூலம் பதில் அளிப்பான் என்று கூறி,சாலையில் செல்லும் வாகனங்களின் எண்கள் முதல் பார்வையாளர்களின் சட்டைப்பையில் இருக்கும் பொருட்கள் வரை சொல்லவைப்பது ஒன்று.அப்போது நான் ஹிப்நாடிசம் மூலம் அவற்றை சாதிக்க முடியும் என்று நம்பினேன்.அதுவே பின்பு என்னை ஹிப்நாடிசம் பற்றி அறிந்து கொள்ள அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி அது பற்றி படிக்க ஈடுபாடு ஏற்பட்டது.

    5மணிக்கு வீட்டிற்கு வந்ததும் கொஞ்ச நேரம் இருட்டும் வரை மொட்டை மாடியில் நிற்கலாம்.அதற்குள் லுஹர்(பகல்)அஷர்(மாலை)தொழுகைகளை முடித்திருக்க வேண்டும்.மொட்டை மாடியில் அந்த மாலை நேரக்காற்றை அனுபவித்ததும் அந்த காலகட்டத்தில் சந்தோசமான நேரங்கள்.சந்தோசம் என்ன என்று அறியாத காலத்தில் அவைதான் சந்தோசங்கள்.
    இன்றும் திருச்சி என்று நிணைக்கும்போது சிறு சிறு கோயில்களிலிருந்து வரும் கற்பூரம் கலந்த பூ வாசனை,மாலையில் கடைகளில் வாசல் தெளிக்கும் போது வரும் மண் வாசனை,திறந்த சாக்கடை நாற்றம்,குளோரின் அதிகம் கலந்த குலாய் நீர்,கரை புரண்டு ஓடும் காவேரி,பழங்கால பாணி சினிமா அரங்குகள்,அந்த பெரிய காந்தி மார்கட் ஆகியவைதான் நினைவில் வரும்.

    திருச்சியை பொருத்தவரை எனக்கு நன்பர்கள் அதிகம் இல்லை.அதற்கு என் தனிமை விருப்பமே காரணம்.வீட்டில் என் தம்பியை விட சிராஜ்ஜுடன் அதிகமான நட்புடன் இருந்தேன்.எனக்கும் அவனுக்கும் இரண்டு மூன்று வயது வித்தியாசம் இருந்த போதிலும்,அதிக நட்புடன் நடுவயது வரை தொடர்ந்தது.பின்பு ஏற்பட்ட சில சம்பவங்கள் எங்களை சற்று தள்ளி இருக்க செய்தது.இருந்த போதிலும் அந்த நட்பை நான் என்றும் மறந்ததில்லை. எனக்கு அனுமதிக்கப்பட்ட அந்த சில சமயங்களில் நான் அதிகம் கழிக்கும் இடம் ஜெயனின் வீடுதான்.அவன் தாயார் மிகவும் அன்பானவர். தன் சொந்த மகனைப்போல் அன்பாக இருப்பார்கள்.அவன் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.வெலிங்டன் தியேட்டர் பின்புறம் இருக்கும் ஸ்டோர் என்று சொல்லப்படும் பல பகுதிகளாக வாடகைக்கு இருக்கும் பல குடும்பங்கள் வசிக்கும் பழமையான கட்டிடம்.அது அவர்களின் பூர்வீக சொத்து என்று நினைக்கிறேன்.அவனுடைய மாமாவின் குடும்பமும் ஒரு பகுதியில் இருந்தார்கள்.ஜெகனின் ஸ்டோரின் மொட்டை மாடியில் ஓலை கொட்டகை போட்டிருப்பார்கள். தேர்வுகாலங்களில் அங்குதான் கம்பயின் ஸ்டடி பண்ணுவோம். ஜெகனும் படிப்பில் சுமார்தான். எங்கள் வகுப்புத்தோழன் விஜயனும் கம்பயின் ஸ்டடிக்கு சேர்ந்து கொள்வான். விஜயன்தான் வகுப்பில் பர்ஸ்ட் ரேங்க் . இருபதிற்குமேல் ரேங்க் வாங்கிகொண்டிருந்த நாங்கள் , பத்து ரேங்குகளுக்கு அருகில் நானும் ஜெயனும் வந்தது விஜயனுடன் சேர்ந்து கம்பயின் ஸ்டடி பண்ணியதுதான் காரணம். விடுமுறை தினங்கள் ஜெயன் வீட்டிலேயே பொதுவாக கழியும். தாயார் ஊரில், தந்தையின் கடுமையான கட்டுப்பாடுகள் ,இவற்றிற்கிடையில் சந்தோஷமான கணங்கள் ஜெகனின் வீடுதான். அவனுடைய தந்தை சிறுவயதிலேயே விபத்தொன்றில் மறைந்துவிட, அவனுடைய தாய் மாமாவின் பாதுகாப்பில் அவன் குடும்பம் இருந்தது . அவன் மாமா மகன்கள், ஜெகனின் தம்பிகள், அந்த ஸ்டோரில் இருந்த மற்ற பையன்கள் ,மற்றும் ஜகன் தெருவில் இருந்த பையன்கள் என்று பெரிய கூட்டமே மொட்டை மாடியில் பட்டம் விடும் காலங்களிலும், தேர்வு காலங்களிலும் கூட்டம் சேருவோம். எல்லோருக்கும் ஜெயன்தான் தலைவன். அத்தனை கூட்டத்திலும் ஜெயனைத்தவிர மற்றவர்களோடு நான் அதிகம் ஒட்டவில்லை. அதற்கு என்னுடைய இண்ட்ரோவெர்ட் குணம் காரணமாக இருக்கலாம் . பொதுவாக பட்டம் விடும்காலம் டிசம்பர் மாதத்தில் வரும். அது அறையாண்டு தேர்வு காலமாக இருக்கும். அப்போது கம்பயின் ஸ்டடி நடக்கும் .தேர்வுகள் முடிந்ததும் பட்டம் விடும் காலம் ஆரம்பித்துவிடும்.மாமாவின் மகன்கள்,ஜெயனின் தம்பிகள்,மற்றும் அந்த ஸ்டோர் முழுவதும் இருந்த பையன்கள் எல்லோருக்கும் ஹீரோ ஜெயன்தான்.பட்டம் விடும் காலம் வந்தால்,அவனுடைய ராஜ்யம்தான்.மாஞ்சா போடுவதுமுதல் பட்டம் விடுவதுவரை கலகலப்பாக ஜெயன் வீட்டு மொட்டை மாடியில் அவன் தலைமையில் நடக்கும்.ஜெயன் பட்டம் விட மற்ற எல்லோரும் அவனுக்கு உதவியாக பின்னால் இருப்போம்.ஒருவர் பட்டத்தை மற்றவர் அறுக்க கடுமையான போட்டி நடக்கும்.பொதுவாக மார்வாடிகளும் சிந்திகளும் அதிகம் செலவு செய்து பட்டம் விடுவதில் புதிய யுத்திகளை உபயோகித்து அதிக பட்டங்களை அறுத்து பட்டம் விடுவதில் முன்னனியில் இருப்பார்கள்.ஆனாலும் ஜெயன் அவர்களுக்கு சலைத்தவன் அல்ல.அது ஒரு போர்காலம் போல் இருக்கும்.தந்தையின் கட்டுப்பாடுகளால் நான் அதிகம் வாரநாட்களில் போகமுடியாது.இருந்தாலும் ஞாயிற்றுகிழமைகளிலும்,விடுமுறை நாட்களிலும், கிடைக்கும் அனுமதியில் அவனுடைய வீட்டில்தான் இருப்பேன். தந்தைக்கும் ஜெகனை தெரியும், பிடிக்கும் .அவன் வீட்டிற்கு போவதற்கு தந்தைக்கு சம்மதம்தான். ஆனால் அதிலும் பொதுவான நேரக்கட்டுப்பாடு உண்டு. என்ன ஆனாலும் வீட்டில் விளக்குபோடுவதற்குள் வந்துவிட வேண்டும். அறையாண்டு விடுமுறைக்கு மற்ற உறவு பிள்ளைகள் ஊருக்கு போய்விடுவார்கள் .தந்தை என்னையும் ,தம்பியையும் அப்போது ஊருக்கு அனுப்பமாட்டார் . ஊருக்கு போனால் சுற்றிக்கொன்று கெட்டுப்போய்விடுவோம் என்பது அவர் எண்ணம். சிராஜும் ஊருக்கு போயிருப்பான் . அதனால் எதாவது சமாதானம் சொல்லி ஜெயன் வீட்டில் அந்த அரையாண்டு விடுமுறையை அதிகம் கழிப்பேன் .

    சினிமாவுக்கு போவதில் தந்தையிடம் மிகுந்த கட்டுப்பாடு உண்டு .மாதம் ஒருமுறைதான் சினிமாவிற்கு போகமுடியும். ஒரு ஞாயிற்றுகிழமைகளில் 65 காசுகள் தருவார். அப்போது திருச்சியில் தியேட்டர்களில் கீழ் தளத்தில் பின்பகுதி வகுப்புக்கான டிக்கட்டின் விலை. ஆக குறைந்த டிக்கட் 35 காசுகள் என்று நினைக்கிறேன் .சினிமாவிற்கு போகுமுன்னால் தந்தை நேர்காணல் சென்சார் ஒன்று நடத்துவார். எந்த படத்திற்கு போகிறாய்? யார் நடிகர் ? எந்த தியேட்டர் என்ற விபரம் சொல்லவேண்டும் . சில நடிகர்களின் படங்களுக்கு அனுமதி தரமாட்டார் .அவை ஆபாசமாக இருக்கும் என்பது அவர் அபிப்பிராயம் . சிவாஜி கணேசன் படம் என்றால் உடனே U சர்டிபிகட்தான். அனுமதி உடன் கிடைக்கும் . படம் பார்த்துவிட்டு திரும்பிவந்து டிக்கட்டை அவரிடம் காட்டவேண்டும் . அவரோடு சேர்ந்து நான் மூன்று படங்கள் பார்த்திருக்கிறேன். ஒன்று கற்பகம். அதில் வரும் ரங்கா ராவ் போன்ற தோற்றம் உடையவர் என் தந்தை . இப்போதும் தொலைகாட்சியில் ரங்கராவ் நடித்த பழைய படங்களை பார்த்தால் தந்தையின் நினைஉகளுக்கு போய்விடுவேன் . அடுத்தது தந்தையோடு சென்னைக்கு முதல் முறையாக சென்றிருந்தபோது சாந்தி தியேட்டரில் அவரோடு பார்த்த சாந்தி படம், அடுத்தது மதுரையில் மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் மூத்த சகோதரரைபார்க்கப்போனபோது ,சிந்தாமணி தியேட்டரில் பார்த்த பாகப்பிரிவினை ஆகியவை மரணமடைந்து விட்ட அந்த இருவருடனும் நான் பார்த்தபடங்கள். அந்த படங்களை சமீபத்தில் தொலைகாட்சியில்பார்த்தபோது அவர்களை நினைத்து அழுதுவிட்டேன்.

    ஒருமுறை ஜெயன் வீட்டின் அருகில் இருந்த வெல்லிங்டன் தியேட்டரில் நீல வானம் படம் திரையிட்டிருந்தார்கள் .ஜெயனிடம் அதிகமாக டிக்கட் ஒன்று அந்த படத்திற்கு இருந்தது .அது ஒரு ஞாயிற்று கிழமைதான் . ஆனால் தந்தையின் உத்தரவில்லாமல் போகமுடியாது .சென்ற வாரம்தான் சினிமாவுக்கு சென்றிருந்ததால் ,அனுமதி கிடைக்காது ,ஆகவே கேட்டும் பயனில்லை .மேலும் சினிமாவிற்கு போகாத ஞாயிருகளில் வீட்டிற்கு இரவு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்பது தந்தையின் உத்தரவு . அகவே ஜெயன் என்னை அழைத்தபோது மறுத்து விட்டேன் . ஜெகன் என்னை இடைவேளை வரை பார்த்துவிட்டு போகும்படி சொன்னான் .நானும் ஒத்துக்கொண்டுவிட்டு ,சைக்கிளை ,அவன் வீட்டில் விட்டு விட்டு படம் பார்த்தோம் . ஆனால் படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை .தந்தையிடம் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயம்தான் .இடைவேளையில் நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு விட்டிற்கு புறப்பட்டேன் .இன்னும் ஒரு சில நிமிடங்கள்தான் இருந்தது 8 மணிக்கு . அப்போது ஜெயன் சொன்னான் . வீட்டில் போய் தலையை காட்டிவிட்டு சாப்பிட்டுவிட்டு வேகமகவந்துவிடு மீதிபடத்தையும் பார்க்கலாம் என்றான் . அதற்கு வசதியாக அவன் வீடும் இருந்தது .அவன்வீடு வெல்லிங்டன் தியேட்டரை ஒட்டி இருந்தது .அவர்கள் வீடு கொல்லை வழியாக தியேட்டர் உல் பகுதிக்கு போய்விடலாம் .எனக்கும் முழு படத்தையும் பார்த்துவிட வேண்டும் என்று விருப்பம் இருந்தது . அதேபோல் வீட்டிற்குபோய் வாப்பாவிடம் தலையை காட்டிவிட்டு ,அவசரம் அவசரமாக இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு திரும்பவும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஜெயன் வீட்டின் வழியாக
    தியேட்டருக்கு வந்து மீதி படத்தையும் பார்த்தேன் . ஆனால் தந்தை நான் சாப்பிட்டபின் அவசர அவசரமாக வெளியே சைக்கிளில் போனதை தந்தை பால்கனியிலிருந்து பார்த்துவிட்டார் .இது அறியாத நான் 10மணிக்கு வீட்டுக்கு வந்தபோது தந்தை பால்கனியில் நின்று பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் என் எனக்கு வேர்த்துகொட்டிவிட்டது .பிறகு தந்தையின் அந்த பெல்ட் அடி . தந்தையை அவருடைய இத்தகைய கடுமையான தண்டனைகளுக்காக நான் அவரை ஒருபோதும் வெறுத்ததில்லை .அந்தகால தந்தைமார்களுக்குள்ள நம்பிக்கைகள் அவருக்கும் இருந்தது . பிள்ளைகளை அடித்துத்தான் திருத்தமுடியும் என்று நம்பினார்கள் .ஆனால் அன்பு என்பது குறைந்ததல்ல .அந்த கடுமையான தண்டனைகளே அந்த அன்பின் அன்றைய கால வெளிப்பாடுதான் .

    PUC வரை திருச்சியில் ஒண்றாக நாங்கள் படித்தோம் .அதன் பின் பட்டப்படிப்பிற்கு நான் சென்னை போனபின், எங்கள் பிரிவு ஆரம்பமானது . கடிதங்களில் எங்கள் நட்பு தொடர்ந்தது . பின்பு இந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள். இடையில் பத்து ஆண்டுகள் எங்கிருக்கிறோம் என்ற விபரமே இல்லாமல் இருந்தோம் . அதற்கு காரணம் ஏன் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளும் , ஏமாற்றங்களும்தான் காரணம் . அந்த நிகழ்வுகள் அவனை பாதிக்கவேண்டாம் என்று எண்ணியே அந்த காலகட்டங்களில் அவனை தவிர்த்தேன் .அந்தக்காலங்களில் மும்பை, சவுதி , சிங்கபூர் என்று வாழ்வின் நீரோட்டத்தில் பல இடங்களுக்கு ஓடிக்கொண்டிருந்தேன் . நான் செய்துவந்த தொழில் நஷ்டம் , தோல்வி ,தொடர்ந்த தொழில் வேலை மாற்றங்கள் என்று பல கஷ்டங்கள் . அதன் பின் நான் 1998 இல் துபாய் வந்தேன். சிட்டி சென்டரில் கேஸ் கௌண்டரில் ஒரு கை ஓங்கி அறைந்தது .கோபத்தோடு திரும்பிபார்த்தால் ,ஜெயன் . சந்தோசத்தில் ஏறக்குறைய அழுதுவிட்டோம் .பத்தாண்டு நிகழ்வுகளை மால் பெஞ்சில் பகிர்ந்துகொண்டோம் .எனக்கு ஏற்பட்ட துன்ப அனுபவங்களை தெரிவிக்காததர்காக கோபித்துக்கொண்டான் . வீட்டிற்கு வரும்படி அழைத்தான் .அடுத்த வெள்ளிக்கிழமை வார விடுமுறையில் வருவதாக சொல்லி பிரிந்தேன் . நான் ஷார்ஜாவில் இருந்தேன் .தினமும் போனில் பேசிக்கொள்வோம் . அடுத்த வெள்ளிக்கிழமை துபாயில் அவன் வீட்டிற்கு போனேன் . திருச்சியில் அவன் கல்யாணத்தில் பார்த்த அவன் மனைவியை அறிமுகம் செய்துவைத்தான் . அவன் மகளையும் அறிமுகம் செய்தான் . மகளும் துபாயில் நல்ல வேலையில் இருந்தாள். மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருப்பதாக சொன்னான் . மகளுக்கு வயது 30 நெருங்குவதையும் ,பல வரன்கள் தட்டிபோவதையும் வருத்தப்பட்டான் . பின் ஒவ்வொரு வெள்ளியும் அவன் வீட்டிற்கு போவேன் . மாலையில் வா வெளியே போவோம் என்றான் . அப்போது அவன் மனைவியின் முகம் சுருங்குவதை கண்டேன் . என்னை பாருக்கு அழைத்து சென்றான் . நான் குடிக்க மாட்டேன் என்பது அவனுக்கு தெரியும் . எனக்கு ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு அவனுக்கு மதுபானம் ஆர்டர் செய்தான் . அவன் மிதமாக குடித்தாலும் அது எனக்கு பிடிக்கவில்லை . நான் முதன் முதலில் PUC இல் சேர்ந்தபோது அப்போது கிடைத்த வகுப்பு தோழர்களுடன் சேர்ந்து புகை பிடிக்க ஆரம்பித்தேன் . அப்போதுகூட அவன் அதை தொடாததோடு ,என்னையும் கண்டித்தான் . புகைப்பழக்கம் எனக்கு 40 வயதில் சர்க்கரை நோய் வரும்வரை தொடர்ந்தது . அவனுக்கு அந்த பழக்கம் ஏற்படவே இல்லை .அப்படிப்பட்டவன் மதுப்பழக்கத்திற்கு ஆளானது எனக்கு ஆச்சரியம்தான் . எந்த கெட்டபழக்கமும் இல்லாத அவனுக்கு இது எப்படி ஏற்பட்டது . அவனிடம் கேட்டேன் . எல்லாம் துபாய் வந்தபிறகுதான் என்றான் . மகளுக்கு வரன் கிடைக்காதது , துபாய் வாழ்வின் மன இருக்கங்கள் , அலுவல் சம்பந்தமான பார்டிகள் ஆகியவைதான் மதுப்பழக்கத்திற்கு காரணம் என்றான் . இருந்தாலும் நான் அந்த பழக்கத்தை அங்கீகரிக்கவில்லை .விட்டுவிடும்படி சொன்னேன் . அதிகம் குடிப்பதில்லை என்றும் விடுமுறை அன்று மட்டும் குடிப்பதாக சொன்னான் . அவன் வீட்டிற்கு வந்ததும் ,அவன் மனைவி அவன் குடிபற்றி முறை இட்டார் .சமீபத்தில் இருதய அறுவைசிகிச்சை செய்திருப்பதாகவும், மேலும் சர்க்கரை ,ரத்தகொதிப்பு போன்றவற்றிற்கு மருந்துகள் எடுத்துகொள்வதாகவும் சொன்னார் . நானும் அவனுக்கு குடியை நிறுத்திவிடும்படி சொன்னேன் .அனால் அவன் விடுவதாக இல்லை .

    பின்பு வார நாட்களிலும் குடிப்பதாக அவன் மனைவி சொன்னார் . நான் எவ்வளவோ அறிவுரை சொன்னேன் . கேட்கவில்லை .அவன் வேலையும் போய்விட்ட நிலையில் திருச்சிக்கு போய்,அங்கு செட்டில் ஆக முடிவு செய்தனர் . மகளுக்கு வரன் அமையாததே பெரிய கவலை என்று சொன்னான் . கடவுள் சீக்கிரம் ஒரு நல்ல வரனை கொடுப்பார் கவலைபடாதே .அதற்காக குடிக்காதே .அது தீர்வல்ல என்று அறிவுரை சொல்லி அனுப்பினேன் .

    பிறகு எங்கள் நட்பு தொலைபேசியில் தொடர்ந்தது .அடிக்கடி பேசிக்கொண்டோம் .அவன் மனைவி இப்போது குடி அதிகமாகி விட்டதாகவும் ,நண்பர்களோடு சேர்ந்து குடிக்கிறார் ,கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சொன்னார் . அந்தநேரத்தில் நல்ல செய்தியும் வந்தது . அவன் மகளுக்கு நல்ல வரன் வந்ததுதான் . அமெரிக்க மாப்பிள்ளை .விரைவில் திருமணம் நடந்து மகள் கணவனோடு அமெரிக்க சென்றுவிட்டாள். ஜெயன் இப்போது நிம்மதி அடைந்ததாக சொன்னான் . பின்பும் குடியை நிறுத்துவதாக தெரியவில்லை .இப்போது மகளின் பிரிவிற்காக குடிப்பதாக சொன்னான் . அவன் துணைவியார் ஒருபள்ளியில் ஆசிரியையாக இருந்தார் . அவன் வீட்டில் தனிமை மற்றும் ரிடையர் வாழ்கை போரடிப்பதாகவும், அதற்காக குடிப்பதாகவும் புதிய காரணம் சொன்னான் .
    பின்பொருநாள் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது .அவன் மனைவிதான் பேசினார் . குடித்துவிட்டு வீதியில் மயங்கி விழுந்து விட்டதாகவும் , மருத்துவமனையில் ஐ சி யு வில் இருப்பதாகவும் சொன்னார் . தினமும் அவன் உடல்நிலை விசாரித்துக்கொண்டிருந்தேன் .இருபதுநாட்களுக்கு பிறகு வீடுதிரும்பிவிட்டான் என்ற பின் நிம்மதி பிறந்தது ..
    அந்த நிம்மதி சீக்கிரமே போய்விட்டது வீட்டிற்கு வந்த சில நாட்களில் வாதம் அடித்து கண்பார்வையும் போய்விட்டது . பேச்சும் குழறியது . ஆறுமாதத்தில் அவன் ஓரளவு நடமாட்டத்துடன் பேச்சும் வந்தது .ஆனால் கண்பார்வை முழுமையாக போய்விட்டது . இந்த காலகட்டங்களில் என்னால் ஊருக்குவரமுடியாமல் போய்விட்டது .ஆனாலும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டோம் .சீக்கிரம் வரும்படி சொல்வான் . விரைவில் வருவதாக சொல்வேன் .ஆனால் இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது .
    சென்ற டிசம்பர் விடுமுறையில் இந்தியா சென்றிருந்தபோது,திருச்சிக்குப்போய் அவனைப்பார்த்து வந்தேன்.என் துனைவியும் மகளும் உடன் வந்தனர்.சர்க்கரை நோயால் அவதிப்பட்டு,கண்பார்வை இழந்து அவன் துன்பப்படுவது என்னை மிகவும் காயப்படுத்தியது.எப்படி இருந்தவன்? அவனுடன் அவன் துனைவி மட்டும் இருந்தார்.அவனுடைய ஒரே மகள் திருமனமாகி யுஎஸ்ஸில் இருக்கிறார்.அவன் துனைவியார் அருகில் உள்ள பள்ளிக்கு வேலைக்கு போய்விட்டபின் ,பகலெல்லாம் தனிமையில் கழிகிற அவன் வாழ்கையை நினைத்து மிகவும் வருந்தினேன்.அவன் மகள் குழந்தை உண்டாகி இருப்பதால், கோடை விடுமுறையில் அவன் துனைவியார் யுஎஸ்சிற்கு செல்ல இருப்பதாகவும்,அப்போது அவனை மதுரைப்பக்கமுள்ள ஒரு ஊரில் முதியவர் இல்லத்தில் சேர்க்கப்போவதாகவும் சொன்னார்கள்.அது என்னை மிகவும் பாதித்தது.குடும்பங்கள் கூட்டுக்குடும்பங்களிலிருந்து மாறி அணுக்குடும்பங்களாகி மணிதனை தனிமைப்படுத்தி விட்ட அவலத்தை நினைத்து வருந்தினேன்.எங்களுக்கும் ஒரு மகள்தான் இருக்கிறாள்.அதிகம் பெற்றுக் கொள்ளாததற்காக வருந்தினேன்.என் மகளை அதிகப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். பேரப்பிள்ளைகளையாவது அதிகமாக பார்க்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

    அவனின் கடைசி நேரங்களில் யாரும் அருகில் இல்லை .மனைவி அமெரிக்காவில் இருந்தார் . முதியோர் இல்லம் போக மறுத்து தனிமையில் இருந்திருக்கிறான் . அடிக்கடி உரையூரிளிருக்கும் அவன் தங்கை வந்து பார்துக்கொண்டிருந்ததாகவும் சொன்னார்கள் . அந்த கடைசி நிமிடங்களில் யாரும்மில்லை . நேற்று இரவுதான் நான் அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன் . பள்ளி நாட்கள் பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தோம் .காலையில் அவன் மனைவியின் அழைப்பு அந்த அதிர்ச்சி செய்தியை சொன்னது .

    இழந்து விட்ட சொந்தங்களுக்கு ,மனைவியும் மகளும் மற்ற சொந்தங்களும் ஈடுசெய்கிரார்கள் .இந்த நண்பனின் இழப்பிற்கு என்போன்ற தனிமை மனிதர்களுக்கு, யார் ஈடு செய்வார் ? சுகத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள நண்பன் வேண்டும் .

  6. #18
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    அன்பு சம்ராஜியம்

    அன்பு சம்ராஜியம்

    தஞ்சை தரணியில் காவிரியால் வளமான நகரத்துக்கு அருகாமையில் பச்சை பசேல் என வயல்வெளிக்கு நடுவே அந்த அழகிய கிராமம்.

    காலை கதிரவன் மெல்ல எழ, கந்த சஷ்டி கவசம் காதில் தேனாய் விழ, கதிர் இழுத்து போர்த்திக் கொண்டு சுகமாய் அரை குறை தூக்கத்தில் படுத்திருந்தான்.

    “கதிர், எழுந்திரு நேரம் ஆகுது” என்று எழுப்பினாள் அக்கா வளர்மதி. சோம்பலாய் எழுந்து, வரவேற்பறையை எட்டி பார்த்தான், எதிர் வீட்டு தங்கராசு மாமாவும் கதிர் அப்பாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

    “பொண்ணு பெயர் சுதாராணி லட்சணமாய் அழகாய் இருக்கும், பி.ஏ. வரைக்கும் படிச்சிருக்கு, இந்தாங்க பொண்ணோட போட்டோவை பாருங்க.” என்று போட்டோவையும், சான்றிதழ்களின் நகலையும் கொடுத்தபடி தொடர்ந்தார்.

    “பொண்ணோட வீட்டுல ஜெயராமன், லெஷ்மணன்னு அண்ணன், தம்பிங்க, ரெண்டு பேரும் இரட்டையர்கள், ஒரே குடும்பத்தில் அக்காவையும் தங்கச்சியையும் கல்யாணம் செய்துகிட்டாங்க.

    மூத்தவர் ஜெயராமனோட பொண்ணுதான் சுதாராணி. நல்ல குடும்பம். வெங்கட்டுக்கு இன்னிக்கு பொண்ணு பார்க்க போறோம். பிடிச்சிருந்தா பேசி முடிச்சிடலாமான்னு நினைக்கிறேன் .” என்றார் கதிர் அப்பா.

    “ஆமாண்ணே, பொண்ணு நல்லா இருக்கு. நல்லபடியா பேசி முடிச்சிட்டு வாங்க.” என்று கிளம்பினார் தங்கராசு.

    “கதிர், இதை உள்ளே கொண்டு போய் வை” என்றார் அப்பா.

    தன் அண்ணனுக்கு பொண்ணு பார்க்க ஊருக்கு போக போறோம் என்று மகிழ்ச்சியோடு அந்த சான்றிதழை வாங்கி படித்தான், வியந்து போய் மீண்டும் பார்த்தான். மீண்டும் வியந்தான்.

    கதிரை பார்த்து அவன் அம்மா “சீக்கிரம் ஆபிஸ்க்கு கிளம்பு கதிர். சாயுங்காலம் நேரம் கழித்து வராம சீக்கரம் அலுவலகத்தில் இருந்து வந்துடு.” என்றாள்.

    “சரிம்மா” என்று சொல்லிவிட்டு விரைந்தான். மாலை சீக்கிரம் வீட்டுக்கு வந்தான் கதிர். கிளம்பி வெளியே வரவே வேன் தயாராக இருந்தது. முன் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான்.

    சற்று நேரத்தில் அனைவரும் வர, வேன் கிளம்பியது. அவன் ஜன்னல் அருகில் அமர்ந்து காவிரி நதியின் அழகை பார்த்து ரசித்தப்படியே வந்தான்.

    பெண்ணின் வீடு வந்தது. அனைவரையும் அன்போடு வரவேற்றார்கள். சம்பிரதாயமாக பேசாமல், சகஜமாய் பேசினார்கள். இரு வாசல் வைத்த வீடு உள்ளே ஒரே வீடாய் இருந்தது. அண்ணன் தம்பி இருவரும் குடும்பமாய் ஒரே வீட்டில் வசித்தார்கள். வாசல் மட்டுமே இரண்டு. மனசு எல்லாம் ஒன்றாக இருந்தது.

    அனைவருக்கும் சாப்பாட்டை கேட்டு கேட்டு பரிமாறினார்கள். வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது.

    அனைவரும் கூடிபேசி பிப்ரவரி மாதம் திருமணத்தை வைத்தார்கள். அங்கே கடைக்குட்டியான திரபா அந்த வீட்டில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளைய வளைய வந்தாள். கதிருக்கு திரபாவை பார்த்ததும் சற்றே பொறாமையாக இருந்தது. ஒரு அறையில் திரபா அலமாறியில் உள்ள தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.

    அப்போது சான்றிதழ்கள் நினைவுக்கு வந்தது. பெரியவர் பெயர் ஜெயராமன், அவரோட பொண்ணுதான் அண்ணி. ஆனா J.L. சுதாராணி அப்படின்னு எழுதியிருக்கு. ஒரு வேளை தவறுதலாக போட்டு விட்டார்களோ?

    “திரபா, உங்களுடைய அடையாள அட்டையை பார்க்கலாமா?” என்றான் கதிர்.

    “எதுக்கு கதிர், நான் என்ன படிக்கிறேன்னு தெரிஞ்சுக்கனுமா?” என்று புன்சிரிப்புடன் கேட்டவாறே கொடுத்தாள் திரபா.

    அதை பார்த்து மீண்டும் வியந்து போனான் கதிர். அதிலும் J.L.திரபா என்று போட்டிருந்தது.

    “ஏன் அப்படி பாக்குறீங்க?” என்றாள் திரபா

    “உங்கள் எல்லோருக்கும் J.L.ன்னுதான் இன்ஷியல் போடுவீங்களா?” என்றான் கதிர்.

    “ஆமாம், எங்களுக்கு இரண்டு அப்பா, இரண்டு அம்மா. அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். எங்களை பிரிச்சி பார்க்காதீங்க. சரியா” என்றாள் திரபா.

    “சரி திரபா” என்றான் கதிர் நெகிழ்வுடன்.

    அனைவரும் கிளம்பினார்கள். கதிர் திரபாவிடமும் சுதாராணியிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

    திருமணம் மிக விமர்சையாக நடந்தது. அன்று இரவு தொலைகாட்சியில் தங்கமலை ரகசியம் திரைப்படம் போட்டார்கள்.

    அண்ணி வீட்டுக்கு வந்ததும் மிகவும் ஜாலியாக இருந்தது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தாள் இன்னொரு அம்மாவாய், தவறுகளை கண்டித்தாள் அப்பாவாய்.

    சுதாராணி ஊருக்கு கிளம்புகிறாள் என்றால் கதிருக்கு இரவெல்லாம் தூக்கமே வராது. அண்ணியுடன் ஊருக்கு செல்வது குஷியாக இருக்கும். சுதாராணியும் ஏதாவது காரணம் சொல்லி கதிரை அழைத்து செல்வாள்.

    அண்ணி வந்தாலும், வராவிட்டாலும் அடிக்கடி அண்ணியின் ஊருக்கு செல்வது கதிருக்கு வாடிக்கையாகிவிட்டது.
    அங்கு பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா சின்னம்மா என்று அழைப்பதில்லை. இருவரையும் அப்பா என்றும் அம்மா என்றே அழைத்தார்கள்.

    யாரும் இது உன்னுடையது என்னுடையது என்று சண்டையிடாமல் அனைத்தையும் பகிர்ந்து பயன்படுத்தினார்கள்.

    இனிப்பு வாங்கி வந்தாலும் கூட யாராவது இல்லை என்றால் அவர்களுடைய பகுதி குளிர் சாதன பெட்டியில் காத்திருக்கும். மற்றவர்கள் அதை தொடக்கூட மாட்டார்கள்.

    இதனால் அவர்களிடம் இருந்து ஓற்றுமையை மட்டும் இல்லை அன்பு, மரியாதை, விட்டுக் கொடுத்தல் என அனைத்தையும் கற்றுக் கொண்டான் கதிர்.

    முதல் முறை சென்ற போது திரபாவுக்கு இணையாக கதிரை தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள். காலை சாப்பாட்டில் இருந்து, படுக்க போகும் வரை. அந்த அன்பில் நெகிழ்ந்து போனான் அவன்.

    சில ஆண்டுகள் கழிந்து, கதிர் படிப்பை முடித்து விட்டு வேலைச் செல்ல ஆரம்பித்தான்.

    அதன் பிறகு அதிகமாக செல்ல இயலவில்லை. எப்போதாவது விடுமுறை வந்தால் காலை சென்று அனைவரையும் பார்த்து விட்டு இரவு திரும்பி விடுவான்.

    அண்ணியின் ஊருக்கு அருகாமையில் உள்ள ஊரில், பெண் பார்த்து, கதிருக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

    ஒரு முறை அண்ணியின் வீட்டுக்கு கதிர் மட்டும் சென்றவன். 2 மணி நேரத்தில் மின்னல் மாதிரி அதிர்ச்சியுடன் வந்தான்.

    அதன்பிறகு அவன் அங்கு செல்லவில்லை. ஏதாவது விஷேசம் வந்தால் கூட, ஏதாவது காரணம் சொல்லி அங்கு செல்வதை தவிர்த்துவிடுவான். பல முறை வராததை கவனித்த சுதாராணி.

    “ஏன் கதிர், எங்க அம்மா வீட்டுக்கு வரவே மாட்டுற. நீ சின்ன பிள்ளையா இருக்கும் போது, துள்ளி குதிச்சிக்கிட்டு எனக்கு முன்னாடி கிளம்புவ. ஆனா உனக்கு திருமணம் ஆனதும் கூப்பிட்டாலும் வரமாட்டுறியே” என்று கேட்டாள் சுதாராணி.

    “அண்ணி, ஒரே வீட்டில் ஒற்றுமையாக, பெரியப்பா சித்தப்பா என்ற வேறுபாடு இன்றி நான்கு பேரையும் அப்பா, அம்மா என்று அழைத்து, உங்களின் தந்தையார் பெயரை அனைவருமே J.L. இன்ஷியலாக போட்டு, ஊருக்கே ஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்தது உங்களின் குடும்பம்.

    அனைவரும் அன்போடு அண்ணா அண்ணி அக்கா அத்தான் என்று உறவாடி, அன்னத்தோடு அன்பையும் பரிமாறிய போது, நான் சோகத்தின் உச்சிக்கே போனேன்.

    உங்கள் வீட்டில் திரபாவாக பிறந்திருக்க கூடாதா என்று ஏங்கி பல இரவுகள் அழுதிருக்கிறேன். பாசங்கு இல்லாத பாசம் அங்கு வளைய வந்தது.

    நான் கடைசியாக சென்ற போது, அதிர்ந்து போனேன். என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. யார் கண் பட்டதோ தெரியவில்லை. அந்த அன்பு சகோதரர்கள் பிரிந்து தனித்தனியாக ஒரே வீட்டை இரண்டாக பிரித்து யாரோ போல வாழ்வது கொடுமை. அதை என்னால் பார்த்துகிட்டு அரை மணி நேரம் கூட இருக்க முடியவில்லை.

    அன்று ஒற்றுமையான அன்புக்கு அழுத நான், இன்று பிரிந்த, அந்த அன்பு சம்ராஜித்திற்காக மனதுக்குள் அழுகிறேன். பாசத்தின் கோட்டையை பாழடைந்த மண்டபமாக பார்க்க விரும்பவில்லை.” என்று கண்கள் கண்ணாடி திரையிட சொன்னான் கதிர்.

    (முற்றும்)

  7. #19
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    மாமன் மகள்

    மாமன் மகள்


    கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய அன்புசெல்வனுக்கு தலை கால் புரியவில்லை..காரணம் இந்த வருடம் திருவிழாவிற்கு அவனுடைய மாமா ஊரிலிருந்து வருவதாக அம்மா இப்போது தான் சொன்னாள்.அவன் சந்தோஷத்திற்கு காரணம் இருக்கிறது..ஆம் மாமாவுடன் அவன் மாமன் மகள் மாயாவும் வருவாள் அல்லவா..? அன்புசெல்வனுக்கு மாயாவை ரொம்ப பிடிக்கும்.அவளின் ஒவ்வொரு செயலையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருப்பான் அவன். சென்ற முறை மாயா ஊருக்கு வந்திருந்த போது அவன் மாயாவையே சுற்றிச் சுற்றி வந்தான்.அவளிடம் என்னென்னவோ பேசிப் பார்த்தான்.ஆனால் அன்புசெல்வன் பாவம்..மாயா அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.ஊருக்கு கிளம்பும் போது அவனுக்கு மாயா தந்த ஒரு பரிசு....புன்னகை.மாயா அன்புசெல்வன் வீட்டுக்கு வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டன. அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக பேசுவாள் என்ற நம்பிக்கையிலேயே ஆறு மாதங்களைக் கடந்துவிட்டான் அவன்..

    திருவிழாவும் வந்து விட்டது. மாமாவை அழைத்துச் செல்வதற்காக காலையிலேயே தனது ஊர் பேருந்து நிலையத்தில் காத்துக்கிடந்தான் அன்பு. அன்பு எதிர்பார்த்த பேருந்து வந்துவிட்டது. மாமாவையும் அத்தையையும் கூடவே மாயாவையும் பார்த்த அவனுக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை.மாமா மற்றும் அத்தையிடம் நலம் விசாரித்த அன்புசெல்வன்மெதுவாக மாயாவைப் பார்த்தான். அவனைப் பார்த்து மெல்லிய புன்னகையை உதிர்த்தாள் மாயா. ஆனால் இந்த முறையும் மாயா அவனிடம் பேசவே இல்லை.நான்கு நாட்கள் ஓடிவிட்டன.திருவிழா முடிந்து விட்டது.மாமா ஊருக்கு கிளம்ப தயாரானார்.மாயா தன்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்த்த நான்கு நாட்களாய் அவளையே சுற்றி வந்த அன்புசெல்வனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஏமாற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாத அன்புசெல்வன் , மாமாவிடமே கேட்டுவிட்டான். ஏன் மாமா மாயா என்னிடம் பேசவே இல்லை??

    அன்புசெல்வனின் மனதைப் புரிந்து கொள்ளாத மாமா சிரித்துக்கொண்டே சொன்ன பதிலை கேட்ட அவன் முகத்தில் ஏமாற்றம்.மாமா சொன்னார் மாயா பேச இன்னும் நான்கு மாதங்கள் ஆகும். அவள் பிறந்து எட்டு மாதம் தானே டா ஆச்சு...இன்னும் நான்கு மாதங்கள் ஆகுமா? என்ற ஏக்கத்தில் நின்ற அன்புசெல்வனைப் பார்த்து சிரித்தாள் மாயா..வாயில் விரலை வைத்துக்கொண்டே...!!!

    (மேலே இருக்கும் படத்துக்கும் நம்ம கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

  8. #20
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    உண்மைகள் தெளிவாகும் போது …

    உண்மைகள் தெளிவாகும் போது




    ஜெஸ்சி , நான் அண்ணா பேசுறேன் ....

    சொல்லுண்ணா .....

    நாளைக்கு பேசினபடி வங்கி பணிமாறுதல் வாங்கி ஜான் மேரியை கூட்டிகிட்டு உன் வீட்டுக்கு வந்துடுவான் ..... நீதான் பார்த்துக்கணும் .... மும்பையில இருந்தவன் ...நம்ம ஊரு எப்படி ஒத்துக்குமொன்னு தெரியலை.....

    ஏன்னா .... அவன் நாலு வருசமாத்தானே வடநாட்டிலே இருக்கான் .... அண்ணி போன பின்னாலே காலம் முழுசும் அவனை ஆளாக்குறதிலேயே அவன் கூடவேதானே இந்த ஊரிலே இருந்த .... இப்போ நீ சென்னைக்கும் உன் பிள்ளை மும்பைக்கும் போனதாலே நெல்லை ஒண்ணும் குறைஞ்சு போயிடலை ...... ஜான் அரை மணிக்கு முன்னே போனில் பேசினான் ..... மாடியை முழுசும் சுத்தம் பண்ணி வச்சுட்டேன் . குழந்தைகளை நான் பார்த்துக்கறேன் .........நீ கவலை படாதே .....

    ஜெசி மா ... போனமாசம் அங்க போய் இவங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு . ரெண்டு பெரும் ஏதோ மெசின் மாதிரி இருக்காங்க .... ஒரு சந்தோசமும் தெரியலை .....

    மேரிக்கும் ஜானுக்கும் ஏதும் பிரச்சனையா அண்ணா ?

    என்னன்னு தெரியலைமா ...... அவங்க காதலிச்சு கல்யாணம் பண்ணப்ப கூட நான் ஏதும் சொல்லல .... எல்லாம் நம்ம முறைப்படி கர்த்தர் ஆசியோட நல்லா நடக்கணும்ன்னு மட்டும்தான் ஆசைப்பட்டேன் . அந்த பொண்ணும் எல்லாத்துக்கும் சம்மதம் சொல்லித்தான் நம்ம குடும்பத்தில வந்தா ..... பிறகு மும்பை போன பின்னாலேதான் ஏதோ பிரச்சனை நடந்து இருக்கு ..... அவன் கிட்ட பேசினா பிடியே கொடுக்க மாட்டேங்கறான் .... ரெண்டு வருஷம் ஆகப்போகுது .... ஒரு குழந்தை இல்ல .... குட்டி இல்ல .... ஏன்தான் தேடி தேடி இவளை பிடிச்சுட்டு வந்தானோன்னு இருக்கு .... நம்ம பக்கத்தில இல்லாத பொண்ணா .... என்ன காதலோ கன்றாவியோ .... பொறுப்பில்லாத பொண்ணு ... வளர்ப்பே சரியில்லமா ....

    அண்ணன் குரல் தழுதழுக்க .... ஜெசி இடைமறித்தார் .
    அண்ணா கவலையை விடு ..... ஒரு ஆசிரியையாய் இத்தனை வருஷ வாழ்க்கையிலே எத்தனையோ பிள்ளைகளை பார்த்துட்டேன் .... நம்ம குழந்தைகளை பார்த்துக்க மாட்டேனா .... கர்த்தர் மேல பாரத்தை போட்டுட்டு உன் வேலையை பாரு ..... பசங்க வரட்டும் .... நான் பார்த்துக்கறேன் .

    ஜெசியம்மாவின் வீடு நெல்லைக்கு வெளியே புறநகர் பகுதியில் இருந்தது . முன்னர் கிராமமாக வயல்வெளிகளாக இருந்த பகுதிகள் நாளடைவில் பிளாட்டுகளாக போடப்பட்டு வீடுகளாக மாறிப்போனது . ஜெசியம்மாவின் வீட்டில் இருந்து தாமிரபரணி நடக்கும் தொலைவில் இருந்தது . அருமையான தண்ணீர் , ஆரோக்கியமான காற்று .... அவரின் உறவுகள் விபத்தில் விட்டு போக அந்த பூர்வீக வீடு ஆறுதலாய் இருந்தது .

    மறுநாள் காலை ஜானும் மேரியும் முதலில் காரில் வர மதியம் போல சரக்கு வாகனத்தில் வீட்டு சாமான்கள் வந்து இறங்கின . வீட்டை ஒழுங்கு செய்வதிலேயே ஒரு வார பொழுது போய்விட்டது . மேரியின் கலை ஆர்வம் அவள் வீட்டை பார்த்து பார்த்து ஒழுங்கு செய்வதிலேயே தெரிந்தது . ஆனால் அனைத்தும் அவள் விருப்பபடி ஒழுங்கு செய்யப்பட்டதாகவே தெரிந்த்தது . ஜானும் அவளும் ஜெசியம்மாவின் முன் ரொம்பவும் குறைவாகவே பேசிக்கொண்டனர் . கல்யாணத்தின் போது பார்த்த பிள்ளைகளா இவர்கள் என்று ஜெசியம்மாவிற்கு பட்டது . வந்ததும் ஏதும் பேசவேண்டாம் என்று மேரிக்கு தேவையான உதவிகள் செய்வதில் மட்டுமே கவனமாய் இருந்தார் . நாட்கள் செல்ல செல்ல மேரியே தன்னை சுற்றி ஒரு தனிமையை உருவாக்கிக்கொண்டு இருப்பதை உணர்ந்தார் . சில நேரம் மாடிபடிகளில் விசும்பல் சத்தம் கேட்டு என்ன மேரி என்றால் முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு ஒண்ணும் இல்லை அம்மா என்பாள் .

    அம்மா .......... இது ஒன்றுதான் மேரி ஜெசியம்மாவிடம் அதிகம் பேசிய வார்த்தைகளாக இருக்கும் . பார்க்க நல்ல பெண்ணாகவே தெரிகிறாள் . ஒருவேளை இந்த பெண் அவள் வீட்டை நினைத்து வருத்தப்படுகிறாளா ? .... மேரியாக வாய் திறவாமல் ஜெசியம்மாவாள் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை .

    அன்று மாலை ஜெசியம்மா தோட்டத்திற்கு வந்த போது மேலே மேரி யார்கூடவோ பேசிக்கொண்டு இருந்தாள். யாராய் இருக்கும் .... ஜெசியம்மாவின் பார்வையில் படாமல் யாரும் மாடிக்கு செல்ல முடியாது . குழப்பமாய் ஜெசியம்மா மாடிக்கு விரைந்தார் . கதவுகள் தாளிடாமல் திறந்தே கிடந்தன. ஓசை படாமல் ஜெசியம்மா வீட்டிற்குள் போனார் . அங்கே ...............
    ஜன்னல் திண்டில் ஒரு பக்கமாக உக்கார்ந்து கொண்டு தோட்டத்தில் உள்ள மரத்தை பார்த்து மேரி பேசிக்கொண்டு இருந்தாள் . கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் ..........
    ஜெசியம்மா அதிர்ச்சியானார் . அவர் அருகில் வந்தது கூட கவனிக்காமல் மேரி தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள் .
    அங்கே மரத்தின் உச்சியில் நாரைகள் இரண்டு கூடு கட்டி இருந்தன . ஒரு பறவை குஞ்சிகளுடன் இருந்தது . மற்றது அவைகளுக்கு உணவை கொண்டுவந்து ஊட்டிக்கொண்டு இருந்தது .
    மேரி மேலும் பேசிக்கொண்டே இருந்தாள் ..... நீ கொடுத்து வச்சவ .... பாரு உன் புருஷன் எப்படி குஞ்சிகளை தாங்குறான் ... . ம்ம்ம்ம் ... குழந்தைகள் அருமை தெரிஞ்சவன் .... கொடுத்து வச்சவடி ... அவள் கண்ணில் இன்னும் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது .

    மேரி ...... என்னம்மா இது ..... ஜெசியம்மா மேரியின் தோளைத்தொட மேரி அதிர்ச்சியாய் திரும்பினாள்.

    அது அது ஒண்ணும் இல்லைமா .... கண்களை துடைத்துக்கொண்டாள் .

    வா நாம கொஞ்சம் ..... ஆத்தங்கரை வரை நடந்துட்டு வருவோம் . முதலில் மௌனமாக இருந்த மேரி பின்னர் சரியென்று தலை அசைத்தாள்.

    ஆற்றங்கரை வரை இருவருமே மெளனமாக நடந்து வந்தார்கள் . அங்கே சிவன் கோவிலை ஒட்டி பெரிய படித்துறை உண்டு . முன் மாலையாய் இருந்ததால் படித்துறையில் யாரும் இல்லை . தூரத்தில் ஆற்றின் நடுவில் சிலர் துணிகளை சலவை செய்து கொண்டு இருந்தார்கள் .ஜெசியம்மா படித்துறையில் அமர்ந்தார் ...... மேரியையும் அருகில் அமரச்சொன்னார் . அமைதியாக அவள் கண்களை பார்த்துக்கொண்டு இருந்தார் . அந்த கண்ணில் கபடம் இல்லை ... கர்வம் இல்லை .... ஆனால் எதையோ சொல்லத்துடித்து அதை மறைக்க அங்கும் இங்கும் கண்கள் அலை பாய்ந்தது . ஜெசியம்மாவின் பார்வையை சந்திக்க முடியாமல் மேரி தலை குனிந்தாள். இரண்டு கண்ணீர் திவலைகள் அவள் கால்களில் விழுந்து தெறித்தது .

    மேரி .... என்னம்மா பிரச்சனை உனக்கு ? .... ஜான் என்ன தப்பு பண்ணான் ?....
    சொல்லு ?.... அம்மா இருக்கேன் .

    இந்த வார்த்தைகள் கேட்டதும் ...... அடக்கி வைத்து இருந்த அழுகை பீரிட்டு வந்தது . மேரி அழுது கொண்டே இருந்தாள் . எத்தனை நேரம் அழுது இருப்பாள் என்றே தெரியாது . இத்தனை நாட்களாய் அவள் தலையணைகளை மட்டுமே நனைத்துக் கொண்டு இருந்தாள் . இன்று முதல் முறையாய் ஆதரவாய் ஒரு மடியில் .......

    இரவு ஜான் வந்ததும் ஜெசியம்மா .... ஜானை அழைத்தார் .

    ஜான் நாளைக்கு வங்கிக்கு லீவு போடு ....

    ஏன் அத்தை ... உங்களை எங்கயும் கூட்டிட்டு போணுமா ....

    உன் அப்பாவை வரச்சொல்லி இருக்கேன் ..... நம்ம வீட்டு விஷயம் கொஞ்சம் பேசணும் …. நாளைக்கு காலையில பேசிக்கலாம் . போய் படு .... கதவை அடைத்துக்கொண்டு ஜெசியம்மா போய் விட்டார் .

    வீடு அத்தை பங்குக்கு என்று அப்பா எப்பவோ கொடுத்துவிட்டார் . இப்ப இதில என்ன குழப்பம் அத்தைக்கு .... ஜான் குழம்பியவாறே படுக்கபோனான் .
    மறுநாள் காலை ...... ஜெசியம்மா மாடிக்கு வந்தார் .
    ஜானகி .... இங்க வா..... மா ....
    மேரி என்ற ஜானகி உள்ளே இருந்து வந்தாள் ....
    போடா குழந்தை ..... கோவிலுக்கு போய் எல்லாம் நல்லபடியா நடக்கணும்ன்னு வேண்டிக்கோ ....
    ஜானகி மறு வார்த்தை பேசாமல் படி இறங்கி போனாள் .
    ஜெசி என்ன பண்ணுற .... மேரியை எதுக்கு பழைய பெயர் சொல்லி கூப்பிடுற ... இதுக்குத்தான் இவங்களை நான் இங்க உன்கிட்ட அனுப்பினேனா ? இது கர்த்தருக்கு நாம பண்ணுற பாவம் .... ஜான் அப்பா இரைந்தார் .
    எதுண்ணா, பாவம் ..... ஒரு பாவப்பட்ட மனசை புரிஞ்சிக்காம அதை சாகடிகிரீங்களே அது பாவமா ? இல்லை ரெண்டு கொளந்தையை கொன்னுட்டு இறக்கம் இல்லாம ஒருத்திக்கு மலடி பட்டம் வாங்கி தந்துட்டு நிக்குறானே ... அது பாவமா .... இல்லை இது எதுவுமே தெரியாம கர்த்தருக்கு மட்டும் நான் நல்லவனா இருப்பேன்னு மார்தட்டிகிறீயே இதுதான் பாவம் ..... உன் பிள்ளை யோக்கியன் அந்த பொண்ணுகிட்டதான் குறை இருக்கும்ன்னு நீ எதை வச்சு சொன்ன ... உன்னோட கர்வம் , சுயநலம் ... அதுதானே உன் பிள்ளை கிட்டயும் இருக்கும் ... முதல்ல நீங்க எல்லாம் மனுசங்களா இருங்க ... அதுக்கு அப்புறம் தேவனை பத்தி கவலைபடலாம் ..... ஜெசியம்மா ஒரே மூச்சாய் இரைந்தாள் .

    நடந்தது எதுவும் புரியாமல் ஜானின் அப்பா முழித்தார் .
    ஜெசி என்னம்மா நடந்துச்சி .... ஜான் நீ என்ன தப்பு பண்ண .... கர்த்தாவே எனக்கு ஒண்ணும் புரியலை ... யாராவது உண்மையை சொல்லுங்க ....

    இப்போ கேளு என்ன தப்பு பண்ணான்னு ... இதை ஒரு வருஷம் முன்னாலே கேட்டு இருந்தா இப்போ உன் பேரன் உன் மடியில கிடந்திருப்பான் .
    ஜான் தலை குனிந்து நின்றான் ....

    ஜெசியம்மா தொடர்ந்தார் ..... அண்ணா உன் பிள்ளை கல்யாணம் பண்ணதும் குழந்தை பெத்துக்கிட்டா தன் சந்தோசம் போய்டும்ன்னு உன் மருமகளை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு பண்ணி இருக்கான் ... ஒரு தடவை இல்லை ..... இரண்டு தடவை . இது உனக்கு தெரியுமா ..... அவ கிட்ட எத்தனை நல்ல விஷயங்கள் இருக்கு ... கேவலம் உனக்கு அவ உடம்பு மட்டும்தான் பெருசா பட்டுச்சா ... அதை மட்டும்தானா காதலிச்ச .... என் அண்ணன் பையன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு ...

    அத்தை ... இப்படி சொல்லாதீங்க .... மும்பையில இருக்கிற வருமானத்துக்கு இப்ப குழந்தைங்க வேணாம்ன்னு சொல்லித்தான் நான் அவளை அபார்சன் பண்ண சொன்னேன் .... நான் அவளை இப்பவும் முழுசா காதலிக்கிறேன் உடம்புக்காக மட்டும் இல்லை மனசுகக்காகவும்தான். அது இப்ப அவளுக்கும் புரியலை ... உங்களுக்கும் புரியலை ……..ஜான் படபடப்பாக பேசி முடித்தான்.

    இப்படி சொல்ல உனக்கு வெக்கமாய் இல்லை ... மும்பையில வருமானம் பத்தலைன்னா இங்க கிளம்பி வந்து இருந்தா நீ நல்ல புருஷன் ... அப்படி உன் அப்பா என்ன உன்ன தெருவிலையா நிறுத்தியிருக்கான். உனக்கு இங்க சொத்து இல்லை , சொந்தம் இல்லை பாரு .... என் பிள்ளையும் , அவரும் அல்பாயுசுல போனதும் நீதானேடா என்னை சொர்க்கத்துக்கு வழிகாட்டி அனுப்பி வைப்பன்னு நினச்சேன் .... நீ நீ ... ஜான் குழந்தை பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்குறது இல்லைடா .... அதை போய் இப்படி பண்ணிட்டியே . லேசா சொல்லுறியே அந்த வலியை மனசாலேயும் , உடம்பாலேயும் தாங்குற வேதனை ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் . உனக்கு உன் சந்தோசம் பெருசு ...உன் அப்பாவுக்கு கடவுள் பெருசு .... எனக்கு இங்க மனுசங்கதான் பெருசு .... அவங்க கிட்டதான் நான் கடவுளை பார்க்கனும்னு நினைக்கிறேன் .... வானத்தில இருந்தோ ... சொர்க்கத்தில இருந்தோ இல்லை . நரகத்திலையும் என் கூட யார் இருந்து என்னை பார்த்துப்பானோ அவர்தான் எனக்கு கடவுள் . கடவுளை புத்தகத்தில மட்டும் தேடாதீங்க ... தேவன் தேவாலயத்தில மட்டும் இருக்கிறது இல்லை .... மனிதர்களுக்குள்ளேயும் இருக்கான் . முதல்ல பிரச்சனைகள் தீரணும் என்றா உங்க பக்கத்தில அந்த பிரச்னைக்கு என்ன காரணம்ன்னு கண்டு பிடிங்க .... ஜெசியம்மா மூச்சு வாங்க பேச்சை நிறுத்தினார் .

    அத்தை என்னை மன்னிச்சுகோங்க .... நான் ஆரம்பத்தில அப்படி இருந்தது உண்மைதான் இப்போ அப்படி இல்ல ... இப்போ எனக்கும் குழந்தைகளோட இருக்கனும்ன்னு ஆசை இருக்கு ... ஆனா மேரிதான் அதுக்கு .... ஜான் முடிப்பதற்குள் ஜெசியம்மா இடைமறித்தார் .

    உன் கூட படுத்துக்க வரலைன்னு சொல்லுறீயா .... ஒரு மனைவியை கேவலபடுத்த இதை விட ஒரு வார்த்தை கிடையாது ஜான் . நீ அவளை காதலிச்ச .... கல்யாணம் பண்ணா அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு உறுதியா இருந்த ...... மதம் மாறி வந்தா போதும்ன்னு உன் அப்பாவும் உன் ஆசைக்கு சம்மதம் தெரிவிச்சார் . ஆனால் அதுக்கு பிறகு நீங்க வாழ்ந்ததுதான் வாழ்க்கை ... அதில எத்தனை சந்தோசத்தை அந்த பொண்ணு அனுபவிச்சா ... பெத்த அம்மா அப்பா ஒதுக்கிடாங்க ... மொழி புரியாத ஊரு ... மனசை புரிஞ்சிக்காத புருஷன் , பையனை மட்டுமே நெனைக்கிற மாமனார் .... இப்படி இருக்கையில யார் கிட்ட போய் அவ நிப்பா ... இழப்பு எல்லாம் அந்த பெண்ணுக்குத்தான் . அதை ஏன் ரெண்டு பேரும் புரிஞ்சிக்கலை .... உன் மனசு மாறும் போது அவ மனசு உடஞ்சி போனாளே ... அதை சரி பண்ண என்ன செய்யணுமோ அதை விட்டு நீ பிள்ளை கேக்கும் போது பெத்து தர அவ மெசின் இல்லை .... அப்படி பெத்தாலும் அது நல்ல பிள்ளையாய் இருக்காது ... உன்னை மாதிரி ரெண்டும்கெட்டானா ... தறுதலையாத்தான் இருக்கும். முதல்ல அவ குடும்பத்தை அவளுக்கு திருப்பி கொடு ... அவ வாழ்க்கையில உனக்காக எதை எல்லாம் இழந்தாளோ அதை எல்லாம் எடுத்துக்கொள்ள வாசலை திறந்து வை . அப்புறம் அவ ஜானகியா இருக்குறதா மேரியா இருக்கிறதான்னு அவ முடிவு பண்ணட்டும் . ஒண்ணு மட்டும் சொல்லுறேன் ஜான் ... உன் மேல நம்பிக்கை இருகிறதாலேதான் அந்த பொண்ணு இன்னும் உன்னோட இருக்கா .... அவ சரியாத்தான் இருக்கா ... நீ உன்னை சரி பண்ணிக்கோ ... குடும்பத்தில் சந்தோசம் தானா வரும் .
    ஜெசியம்மா வெளி வாசல் திறக்கும் சத்தம் கேட்டு முன் வாசலுக்கு போனார். உள்ளே இரண்டு ஆண்களும் உண்மையால் அறையப்பட்டு சிலுவையில் தொங்கினார்கள் . உண்மைகள் தெளிவாகும் போது கர்த்தர் தெரிந்தார் ஜெசியம்மாவின் உருவத்தில்.

  9. #21
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    கடவுள்களின் முகவரி

    கடவுள்களின் முகவரி


    பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த மத்திய தொடர்வண்டி நிலையத்திற்குள் அலமேலு மெல்ல நடந்தாள். குவிந்துகிடந்த மனிதர்கள் அங்கும் இங்குமாக இயந்திரதனமாய் நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிலரது சுறுசுறுப்பான ஓட்டம் அலமேலுவிற்கு கதிரவனை நினைவுபடுத்தி அவள் விழிகளை ஈரப்படுத்தியது. சற்று நின்று பெரும்மூச்சிவிட்ட நொடியில் அந்த புத்தகம் அவளது கண்ணில் பட்டது.


    அக்னியின் - விடியல்’. பயணத்திற்காக காத்திருப்பவர்களில் இளைஞர் ஒருவர் முழுவதுமாக அந்நூலில் முழ்கியிருந்தார். அவருக்கு பக்கத்து இருக்கையில் வெறுமை உட்கார்ந்திருந்தபடியால் அதை எழுப்பி அனுப்பிவிட்டு அலமேலு அமர்ந்து கொண்டாள். புத்தகத்தையும் அந்த வாசகரையும் ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டாள். அவளுக்குள் இனம்காண முடியாத உணர்வு. அதற்கு காரணம் மகிழ்ச்சியா பெருமிதமா அவைகளைப் பின்னுக்குத்தள்ளி முன்னே முன்னே வந்து முகங்காட்டும் குற்ற உணர்வா என்று புரியாமல் குழம்பினாள்.


    சட்டென தம்பி…நீங்க படிச்சிட்டிருக்கீங்களே…அந்த புத்தகம் எப்படி இருக்கு? என்றாள்.


    புத்தக அட்டையை திருப்பி பார்த்துக்கொண்டே அந்த ஆசாமி யார் நீங்க? என்பதுபோன்ற கேள்விப்பார்வை வீசினான்.
    அலமேலு அமைதியாய் உட்கார்ந்து கொள்ள அவளது நினைவலைகள் பின்நகர்ந்து கடந்தகால கரைநோக்கி பாய்ந்தது.


    ***
    "என்னங்க… கத எழுத உட்கார்ந்துட்டிங்களா...? கிழிஞ்சிதுபோங்க. பையன கூட்டிகிட்டுபோய் முடிவெட்டிகிட்டு வாங்க. கண்ணுலவந்து குத்துது கொடையுதுன்னு நாலுநாலா கத்திக்கிட்டு கெடக்கறான் பாருங்க." அடுப்படியில் இருந்தபடியே ஆணை பிறப்பித்தாள் அலமேலு.


    "ஏம்மா…அரைமணி நேரங்கழிச்சி போகக்கூடாது…? ஏன்னா அதுக்குள்ளää இந்த கதைய முடிச்சிடுவேன்." தயங்கியபடியே பேசினான் கதிரவன்.


    "எனக்குத்தெரியாதுங்க. எக்கேடாவது கெட்டுப்போங்க. கதைய முடிக்கிறேன்.. கதைய முடிக்கிறேன்னு ஒங்க பொண்டாட்டி புள்ளைங்க கதைய அற்ப ஆயுசுல முடிக்கப்போறீங்க."


    எரிச்சலோடு எடுத்தேற கட்டிவிட்டு கிளம்பினான்.


    கதிரவன் -பொருளாதாரத்தில் ஒரு முதுநிலை பட்டதாரி. படித்து முடித்த அடுத்த வருடமே தனியார் நூற்பாலை ஒன்றில் மேற்பார்வையாளராக பணி கிடைத்தது. குடும்பம் நடத்த அது போதுமான வருமானம் தரும் என்கிறபடியால் அடுத்த ஆறு மாதங்களில் திருமணமும் முடிந்தது. அப்போது அலமேலு தனியார் பள்ளி ஆசிரியை. திருமணத்திற்கு பிறகும் அவள் அந்த வேலையை தொடரலாம் என்கிற சுதந்திரம் கதிரவன்மேல் ஒரு புரிந்துணர்வு ஏற்பட காரணமாயிருந்தது.


    இரண்டு மாதங்களுக்கு பிறகு கதிரவன் தனது இன்னொரு முகத்தை அலமேலுவிற்கு அறிமுகப்படுத்தினான். பள்ளிக் காலங்களில் கதைபோன்று கிறுக்கியவற்றையும் கல்லூரி நாட்களில் எழுதி பிரபல இதழ்களில் வெளிவந்த ஒன்றிரண்டு சிறுகதைகளையும் அவளுக்கு படித்துக்காட்டினான். அப்போதே அவள் அதில் ஆர்வம் இல்லாதவளாய்த்தான் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டாள். நூறு சதவிகிதம் புரிந்துகொண்ட கதிரவனும் அதற்குப்பிறகு இதுபற்றியெல்லாம் அவளிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.


    ஆறு ஆண்டுகளில் ஆண் ஒன்று பெண் ஒன்றிற்கு அப்பாவாகியிருந்த கதிரவனின் தலையில் காலம் கல்லைத் தூக்கிப்போட்டது. ஆம். அவன் பணியிலிருந்த ஆலை நிர்வாகக் குளறுபடியால் இழுத்து மூடப்பட்டது. அதுவரை வாசிப்பதையம் எழுதுவதையும் பொழுதுபோக்காக கொண்டிருந்த அவன் இனி முழுநேர எழுத்தாளனாகிவிட முடிவெடுத்தான்.


    எழுத்தே வாழ்க்கை என்றாகிப்போன பிறகு நிறைய வாசிக்கத் தொடங்கினான். புதுமையை உட்புகுத்தி 'அக்னி' எனும் புனைப்பெயரில் படைப்புகள் பிரசவித்தான்.

    ***

    "புக் வேணுமா மேடம்?" நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து நிறுத்தினான் பக்கத்து இருக்கை இளைஞன்.

    "இல்ல..தம்பி.. நீங்க படிச்சிட்டிருக்கீங்களே.. அந்த புத்தகம் எழுதனவரோட மனைவிதான் நானு."

    "ஐயோ..அப்படீங்களா…? வணக்கம்மா" அலமேலுவின் கால்களை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான்.

    "ஐயையோ… என்ன தம்பி நீங்க? நானே அக்கினியில்லையே…அவரோட மனைவிதானே… எங்காலுலலாம் விழுந்துகிட்டு…"

    "இல்லமா. என்ன பொறுத்த வரைக்கும் நான் அவுரு கால்ல விழுந்த மாதிரிதான்"

    பளாரென கன்னத்தில் அரைந்ததுபோலிருந்தது அலமேலுவிற்கு.

    'அலமேலு.. நீ என்ன பேசினாலும் திட்டினாலும் சாபம்விட்டாலும் என்னோட வெற்றிக்கு பின்னால நீ இருக்கறன்னு நான் மட்டும் பேசல… இந்த சமூகமே பேசுது. அவங்களுக்கெல்லாம்.. 'அக்னி'ங்கறது நான் மட்டுமில்ல. நீயும்தான்.' கதிரவன் எப்போதோ சொல்லியிருந்த வார்த்தைகள்தான் அதற்கு காரணம்.

    'சென்னையிலிருந்து மும்பை செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ்' ஒன்பதாவது பிளாட்பாரத்திலிருந்து….' அறிவிப்பை தொடர்ந்து
    'தம்பி. நான் கௌம்ரேம்பா.' என்று எழுந்தாள்.

    "மும்பைக்காமா?"

    "ஆமாம்ப்பா. ஐயாவோட மகன் மகள்லாம்; மும்பாய்ல இருக்காங்க"

    விடைபெற்றுக்கொண்டு அவள் முன்நோக்கி நடக்கத்தொடங்கியதும் நினைவுகள் பின்னோக்கி நடந்தது.

    ***

    "என்னங்க… ஏதோ 'பட்டற'ன்னு…பேசப்போனீங்க. அர..நாள் கழிச்சி வர்றீங்க. இன்னா குடுத்தாங்க…?"

    கதிரவன் அமைதியாய் தன் ஜோல்னாப்பையிலிருந்து சால்வையை உருவி மேசை மீது வைத்துவிட்டு நகர்ந்தான்.

    "ஆமா.. நான் தெரியாமதான் கேட்கறேன.; உங்க தமிழ் ஆளுங்களுக்கு இதவிட்டா வேற எதுவும் தெரியாதா?"

    "…ம்..தமிழாளுங்க….! இவ மட்டும் இங்கிலீஷ்காரி பாரு…" உச்சரிப்பை உதட்டைவிட்டு வெளியேறிவிடாமல் நசுக்கினான்.

    " நா..சம்பாரிக்கிறது வாயிக்கும் வயித்துக்குமே சரியாயிருக்குது. நீங்களும் எதாவது கம்ப்பனி கிம்ப்பனிக்கு போனீங்கன்னா… கொழந்தைங்களுக்கு சேத்துகீத்து வைக்கலாம். அந்த அக்கற கொஞ்சமும் இல்லாம…எழுத்தாளனாகிட்டன்..கிழுத்தாளனாகிட்டேன்னு ஏடா கூடமா பேசிக்கிட்டு. எக்கேடாவது கெட்டுத் தொலைங்க. எல்லாம் எந்தலையெழுத்து…"

    " அடியே..ய்…பணம் சம்பாதிக்கிறது மட்டுமே வாழ்க்கையில்ல. எவன் எவ்ளோ சம்பாரிச்சு என்ன புண்ணியம்? நாளைக்கு அவனெல்லாம் செத்தா..அது ஒரு சம்பவம். ஆனா…நான் செத்தா அது ஒரு செய்தி. நான்… சமுதாயத்துல எனக்குன்னு ஒரு கூட்டத்த சேத்து வச்சிருக்கேன். பணம் மட்டும் வட்டி குட்டின்னு போடாது….புகழும் போடும்."

    காட்சி அந்த இடத்தில் அறுந்தபோது "உண்மதாங்க. உண்மதான்." என்று கண்கலங்கினாள்.

    ஏ.சி கம்பார்ட்மென்டில் தன் இருக்கையை தேடி அமர்ந்து கொண்டாள். தன் எதிர் இருக்கையில் இருந்த இளம்தம்பதியர் ஏதோஅவர்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தமிழர்களாய் இருந்தது அலமேலுவிற்கு அறுதல் தந்தது.

    " அம்..மா.. நீங்க… அக்னி ஐயாவோட மனைவி தானே…?" தம்பதியரில் ஆடவன் கேட்டான்.

    ஆச்சரியத்தோடு 'ஆமாம்.' என்றாள்.

    " அம்மா.. ரொம்ப சந்தோஷம்மா. நான் ஐயாவோட அமைப்புல இருந்தேம்மா. உங்க வீட்டுக்கெல்லாம்கூட வந்திருக்கிறேன்."

    "பானு… நான் சொல்வேனே.. அக்னி ஐயா…அவரோட மனைவி இவுங்க." அவன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினான்.

    அவள் சம்பிரதாயத்திற்கு வணக்கம் சொல்லிவிட்டு 'சொல்லறத கேளுங்க. புக்ஸ்லாம் வேணாங்க. காச இப்டி கரியாக்காதீங்க..' என்று சொல்லிவிட்டு முகத்தைதிருப்பி ஜன்னல் பக்கம் வைத்துக்கொண்டாள்.

    "இல்ல பானு…கத அனுப்பியிருக்கேன். வந்திருக்குதான்னு பாக்கவேணாமா?" தலையை சொறிந்த அவனிடம் தீடீரென உரிமையோடு

    "நீ போய் வாங்கிட்டுவாப்பா. நான் அதுவரைக்கும் பானுவோட பேசிக்கிட்டிருக்கேன்." என்றாள் அலமேலு.

    அவன் தயங்கி தயங்கி நகர்ந்ததும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் அலமேலு பேசத்தொடங்கினாள்.

    " நானும் ஒன்ன மாதிரிதாம்மா. எனக்கும் புக்ஸ்லாம் வாங்கி காச கரியாக்கனா பிடிக்காது."

    அவள் ஆர்வமானதும் 'அலமேலு-கதிரவன்' பற்றிய முழுகதையையும் சொல்லத்தொடங்கினாள். பேச்சின்போது

    "அப்போ அவர் சொல்லும்போதெல்லாம் புரியாத ஒரு விஷயம் இப்போ புரியுதுமா. கதை எழுதறவங்க… கடவுள்மா. அவுங்க…புதுசு புதுசா படைக்கிறவங்க. நம்ம பண்பாடு கலாச்சாரம் சீரழிஞ்சிபோவாம பாதுகாக்கிறவுங்க. சமுதாயத்துல முள் செடியா வளர்ற அவநம்பிக்கையும் மூடத்தனத்தையும் அழிக்கிறவுங்க. ஆக்கல் காத்தல் அழித்தல்ன்னு மூணு வேலையையும் அக்கறையோட செய்யற அவுங்க கடவுள்மா. இத மட்டும் நான் முன்கூட்டியே உணர்ந்திருந்தா…முப்பது வருஷம்…அவர பாடாதபாடு படுத்தியிருக்கமாட்டேன். அவுரும்…நிம்மதியா சந்தோஷமா இன்னும் கொஞ்ச நாளு.. இருந்திருப்பாரு…" கண்ணீர் கட்டுப்பாட்டை இழந்து வழிந்தது.

    " என்னங்க .. இந்தப்பாவிய மன்னிச்சிடுங்க…" மேலே பார்த்து வாய்விட்டு அழுத அலமேலுவின் கைகளை அந்த இளம்பெண் அழுத்திப்பிடித்தாள். அது 'நீங்க செஞ்ச தப்ப நான் செய்ய மாட்டேன்ம்ப்பா ' என்பதன் அர்த்தமாகப்பட்டது அலமேலுவிற்கு.

  10. #22
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    செல்போன்

    செல்போன்


    செல்போன் சிணுங்கியது: !!!!

    இது அழைப்பு மணி அல்ல அலாரம் மணி என்பது கனகசபைக்கு தெரியும். காலை 5.00 மணி மார்கெட்டிற்கு சென்றுவிட்டு தனது மளிகை கடையை திறக்க பரபரப்புடன் எழுந்தார். குளித்து தலையை துவட்டிகொண்டே தன் மகள்கள் உறங்கிக் கொண்டிருப்பதை வெறுப்புடன் பார்தார். அழகில்லாமல் பிறந்து விட்ட அவர்களுக்காக பணம் சேர்க்க ஓயாமல் உழைக்க நேர்ந்ததை எரிச்சலுடன் உணர்ந்தார். ஐந்து மாத கைக்குழந்தையுடன் தன் முதல் மனைவி இறந்ததை நினைத்து அதிகம் கவலை கொள்ளாமல் பணம் மட்டுமே குறிக்கோளாய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    ப்ளஸ்டு மாணவியான ரம்யா தன்னை விடவும் கருப்பாய் அழகில் குறைந்த தங்கை ராஜியை எழுப்பினாள். சமையலறையில் இருந்து சித்தியின் குரல் “எழுப்பாதே அவள் தூங்கட்டும்”.

    செல்போன் சிணுங்கியது: !!!!

    வியாபாரத்தில் பிஸியாக இருந்த கனகசபை எரிச்சலுடன் போனை எடுத்தார். ரம்யா இரவு 9.30 மணி ஆகியும் வரவில்லை என்ற தகவல் மேலும் கோபத்தை அதிகரித்தது. அவ்வமயம் ரம்யா வந்துவிட்டாள் என்ற செய்தியும் சொல்லப்பட செல்போன் ரம்யாவிடம் செல்ல உச்சரிக்கத்தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்தார். சிறப்பு வகுப்பு தனக்கு இருந்ததையும் தோழியிடம் நோட்ஸ் வாங்க சென்றதையும் ரம்யா சொல்ல அவர் அதை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

    இரவு உணவு பரிமாறிக்கொண்டே விபரீதம் புறியாமல் சித்தி “என்னங்க அவளுக்கு செல்போன் வாங்கிக்கொடுங்க. அப்பத்தான் எனக்கும் சரி உங்களுக்கும் சரி டென்சன் இல்லாமல் இருக்கும்”. மறுநாள் கேமரா வைத்த செல்போன் கிடைத்தது ரம்யாவுக்கு.

    வேகமாக வீட்டுக்குள் வந்த ராஜியை தடுத்து என்ன என்றால் ரம்யா தெருமுனையில் ஒருவன் தினமும் தன்னையே பார்ப்ததாகவும் இம்முறை பின்னால் வீடுவரை வந்து விட்டதாகவும் கூறினாள். ஆச்சாயமானால் ரம்யா அவள் சொல்லும் பொய்யை உண்மை என்று நம்பி. அடுத்து கழிவிரக்கம் தழுவியது ரம்யாவை. பெருமூச்சுடன் தன்னையே நொந்து கொண்டாள்.

    காபி சாப்பிடரீங்களா! ஏன தன் தோழி ஹரினியின் அண்ணன் ஷ்யாம், தன்னை அவர்கள் வரவேற்பறையில் தோழியிடம் தன் ரிகார்ட் நோட்டை வாங்கிக்கொண்டு கிளம்பினாள். தன் தந்தையோ சித்தியோ ஒருநாள் கூட சாப்பிடரியா என ஒருநாளும் கேட்டதில்லை. இன்ஜினியரிங் படிக்கும் அழகான ஷ்யாம் தன்னை கேட்கவும் வீடு வந்து சேரும்வரை அதையே அசைபோட்டுக்கொண்டு மகிழ்ந்தாள்.

    செல்போன் சிணுங்கியது: !!!!

    மறுமுனையில் ஷ்யாம் தன் தங்கை ஹரின் பேசவேண்டும் என கூறி போனை தங்கையிடம் தந்தான். பள்ளி சம்மந்தமான விஷ்யங்களை பேசி வைத்துவிட்டபின் ஷ்யாமின் குரல் காதுக்குள் ஒலித்துக்கொணடே இருந்தது அவன் மேல் ஒரு இனம்புரியாத ஈர்ப்பு உருவானது. நேரில் நான்கைந்து முறை ஷ்யாமை பார்த்தும் பேசுவதற்கு பயந்து சும்மா இருந்தாள். இதே போல் இரண்டு முறை ஷ்யாம் போன் செய்து தங்கையிடம் தரவே சிறிது துணிச்சல் கொண்டாள் ரம்யா நேரில் செல்ல முடியாமல் ஷ்யாம் நம்பருக்கு மிஸ்டுகால் தந்தாள், உடனே பதில் வராமல்போகவே தவித்தாள்.

    இரவு 10.30 மணி

    செல்போன் சிணுங்கியது: !!!!

    தூக்கம் வராமல் தவித்த ரம்யா ஷ்யாமின் அழைப்பை உடனே அட்டெண்ட் பண்ணாமல் தவிர்த்தாள். போனை எடுத்தவுடன் ஷ்யாமின் அன்பான வார்த்தைகளால் மகிழ்ந்தாள். கனவுகளுடன் தூங்கினாள். மேலும் மேலும் தைரியம் பெற்று ஷ்யாமுடன் செல்போனில் அடிக்கடி பேச ஆரம்பித்தாள். நேரில் பேசுவதற்கு அஞ்சும் சில விஷயங்களை செல்போனில் சரளமாக பேச ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் ஷ்யாம் தன்னை காதலிப்பதாக சொன்ன பொய்யையும் உண்மை என்று நம்பினாள். சினிமா பார்க் பீச் என்று வளர்ந்த அந்த விடலைக்காதல் யாருமில்லாத நேரத்தில் அது ஷ்யாமின் பெட்ரூமில் முடிந்தது. சித்தியும் அப்பாவும் தன் கண்முன்னே செய்த காமலீலைகளால் பாதிக்கப்பட்டிருந்த ரம்யா ஷ்யாமின் தொடல்களை தடுக்க நினைத்தும் அணுமதித்தாள். ஏதோவொரு பயமும் சந்தோஷ்மும் கலந்து கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பதை உணர்ந்தாள்.

    செல்போன் சிணுங்கியது:

    ரம்யா எண் என தெரிந்து செல் போனை எடுக்காமல் தவிர்த்தான் ஷ்யாம். தவித்தாள் ரம்யா, இரண்டு மூன்று முறை முயற்சிக்கிப்பின் ஷ்யாமிடமிருந்து பழைய அனபான வார்த்தைகளுக்குப் பதில் எரிச்சலான வார்த்தைகள் வந்து விழ ஆரம்பித்துவிட்டன. நொறுங்கிப் போனாள் ரம்யா. வெளியே சொல்லமுடியாமல் அதே பழைய சோக வாழ்க்கையுடன் நாட்கள் உருண்டோடின. வகுப்பை ஒழுங்காக கவனிக்காமல் ஆசிரியர்களின் வசவுகளையும் அப்பாவின் திட்டுகளையும் வாங்கிக் கொண்டு தூக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

    செல்போன் சிணுங்கியது: !!!!

    ஷ்யாமின் நண்பன் நட்ராஜ். ஷ்யாம் மதியம் வழக்கமாக சந்திக்கும் சினிமா தியேட்டரில் சந்திக்க விரும்புவதாக கூறினான். இரவு தண்ணியடித்துக் கொண்டே ஷ்யாமிடம் நெம்பர் வாங்கியது ரம்யாவுக்கு தெரிய நியாயமில்லை. தியேட்டரில் நட்ராஜைப் பார்த்து ஷ்யாம் எங்கே என்றாள். ஷ்யாம் வரவில்லை எனவும் அவன் உனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் அவன் வேறொரு பெண்ணை காதலிப்பதாகவும் நான் உன்னை விரும்புவதாகவும் அன்பொழுக பேச ஆரம்பித்தாள். வாழ்க்கையில் ஒரு பிடிப்புமே இல்லாமல் இருந்த ரம்யா நட்ராஜை முழுமையாக நம்பினாள். ஆனால் ஷ்யாம் சுழற்றிவிட்ட அதே சக்கரத்தை நட்ராஜீம் சுழற்றி விட்டதை கண்டு திகைத்து பயந்துபோனாள் வேறுவழியில்லாமல் முதல் அனுபவ உணர்வுகளை அடக்க இயலாமல் அடங்கிப்போனாள்.

    செல்போன் சிணுங்கியது: !!!!

    பலமுறை முயற்சி செய்தும் நட்ராஜ் செல்போனை எடுப்பதாக தெரியவில்லை. கோபம் வெறுப்பு பயம் அழுகை என அனைத்து உணர்வுகளும் ஒருசேர ரம்யாவை ஆக்ரமித்தது. அப்பாவையும் சேர்த்து ஆண் இனத்தின் மேலே ஒரு வெறுப்பும் கோபமும் படரத்தொடங்கியது. மிகுந்த மன அழுத்தத்துடன் இரவு உணவு அருந்தாமலே உறங்கிப்போனாள்.

    காலை 5.00 மணி

    இம்முறை செல்போன் சிணுங்கவில்லை மாறாக அலறியது. தன் எஜமானி மின்விசிறியில் தூக்கிட்டுத் தொங்குவதைகண்டு!!!!.

  11. #23
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    காதலுக்கு உருவம் உண்டு

    காதலுக்கு உருவம் உண்டு

    இரவு மணி 11.15, புதுக்கோட்டை இரயில் நிலையத்தை அடைந்தான் சிவா. தான் வந்த காரை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு நடைமேடை நோக்கிச் சென்றhன். சென்னை - இராமேஸ்வரம் இரயில் செல்லும் முதல் நடைமேடையை அடைந்து,அங்கே உள்ள இருக்கையில் அமர்ந்தான். பக்கத்திலே சிலர் அதே இரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். வேறு சிலரோ நடைமேடை ஒரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். இவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டே தனிமையில் இருக்கையில் அமர்ந்தான் சிவா. இரயில் வர இன்னும் 30 நிமிடங்கள் இருக்க வானத்தைப் பார்த்தப் படியே அமர்க்கையில் சாய்ந்தான். உறங்கும் நேரமாக இருந்தப் போதிலும் அவன் கண்களில் உறக்கம் இல்லை, காலையிலிருந்து அழுது அழுது அவன் கண்கள் சிவந்துக் காணப்பட்டது.

    5 வருடங்களாகக் காதலித்தப் பெண், சிவாவை வேண்டாம் எனக் காதலை உதறிவிட்டாள.் இருவருக்கும் இந்த 5 வருடங்களில் சிறு சிறு சண்டைகள் வருவதும் மறுபடியும் அதை மறந்தும், மன்னித்தும் காதலித்து வந்தனர், ஆனால் கடந்தச் சில மாதங்களாகவே இருவருக்கும் பிரியும் அளவுக்குச் சண்டை வரத் தொடங்கியது, சண்டை முற்ற முற்ற அவளுக்கு காதல் கசக்கத் தொடங்கி, சிவாவை வெறுத்து ஒதுங்கி விட்டாள். அதன் பிறகு சிவா எவ்வளவு மன்றாடியும் அவள் மறுபடியும் அவனுடன் பேச மறுத்துவிட்டாள். இறுதியில் தற்கொலை தான் ஒரே முடிவு என வாழ்க்கையை முடிக்க நினைத்தான்.

    அன்று மாலை 4 மணி அளவில் அந்த பெண்ணிடம் இறுதியாக ஒரு முறை பேச நினைத்து அலைபேசியில் தொடர்புக் கொண்டான், ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதே கோபத்தில் தற்கொலைச் செய்யத் துணிந்த சிவாவிற்கு, ஒரு தொலைபேசி வந்தது அவனது அம்மாவிடம் இருந்து. சற்று நேரம் யோசித்தப் பின் எடுத்தான்.

    அம்மா....... (மெதுவாக)

    என்ன சிவா சாப்டியா பா..... இன்னக்கு 5 மணி இரயில்ல நானு, அண்ண, அக்கா, அக்கா புள்ள எல்லோரும் கிளம்பி வரோம் நீ இரவு 11.45 மணிக்கு கூப்புட வந்துடு என்றாள்.

    சிவா சற்று மௌனத்திற்குப் பிறகு சரி மா......

    என்னப்பா ஒரு மாதிரி பேசுர உடம்பு சரியில்லையா....

    நல்லாதான் இருக்கேன்.....

    சரிப்பா நான் வைக்கிறேன்

    சரி மா.......

    6 மாதத்திற்குப் பிறகு வரும் அக்காவை உயிரோடுச் சென்று வரவேற்பதா இல்லை நாம் பிணமாக இருக்கப்போவதைப் பார்க்க வருகிறாளா என சிந்தனை சிவாவிற்கு ஓடத் தொடங்கியது. அக்காவின் குழந்தை மேல் சிவாவிற்கு ரொம்ப பாசம், குழந்தைக்கும் சிவா என்றால் உயிர். எல்லாவற்றையும் யோசித்தப்பின் தனது சாவை ஒரு நாள் தள்ளி வைக்க முடிவுச் செய்தான்...

    மணி 11.45 இரயில் வரும் ஒசைக்கேட்டது, தலையை இரயில் வரும் திசையை நோக்கித் திருப்பினான் இரயில் நடைமேடையை அடைந்தது, எழுந்து நடைமேடையில் அவர்களைத் தேடி நடக்க ஆரம்பித்தான். இரயிலின் S4 பெட்டியில் இருந்து முதலில் அண்ணன், அக்கா துணி பைகளுடன் இறங்கினார்கள், அவன் அம்மா குழந்தையைத் தோலில் சாய்த்துக்கொண்டே பெட்டியில் இருந்து இறங்கினாள், அந்த 3வயது குழந்தை நன்றhக உறங்கிக்கொண்டிருந்தாள், சிவா அம்மாவிடம் சென்று குழந்தையை வாங்கித் தன் தோலில் போட்டுக்கொண்டு அக்காவுடன் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினான்...

    காரைச் சாவியை அண்ணனிடம் கொடுத்து விட்டுப் பின் இருக்கையில் அம்மாவுடன் அமர்ந்தான் சிவா. அம்மா சிவாவிடம்
    பாப்பா இரயில் ஏறுன 10 நிமிடத்துல இருந்தே கேக்க ஆரம்பிச்சுட மாமா வீடு எப்ப வரும், மாமா இப்போ எங்கனு கேட்டு கேட்டு இரயிலையே இரண்டாக்கிட, இப்ப பாரு தூங்குற எதுமேப் பண்ணாத மாதிரி.....

    அக்காவும் ஆமா டா சிவா,

    எப்போதும் சிவா மாமா சிவா மாமா தான் சொல்லிட்டு இருக்க, உன்ன முழிச்சுப் பாத்தான அவளோ தான், இனி ஒரு வாரத்துக்கு உன்னயும் அவளையும் பிடிக்க முடியாது என்றாள்..

    சிவா எல்லாவற்றைக் கேட்டுக்கொண்டே குழந்தையை தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக சிவா கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள் குழந்தை கண்கள் திறந்துப்பார்க்காமலே, சிவா மாமா ஊரு வந்துடுசு என்றாள்.. இப்பொதும் கண்கள் திறக்கப்படவில்லை.... அப்படியே உறங்கியும் போனாள்....

    அம்மா, அக்காவைப் பார்த்து

    பாருடி உன் பிள்ளைய தூங்குனக்கூட மாமா மேல இருக்கப் பாசத்த என்றாள்

    உன் பிரிவைத் தாங்கும் சக்தி இந்தப் பிஞ்சு இதயத்திற்கு இருக்காது என அவன் மனம் அவனுக்குச் சொல்லத் தொடங்கியது, கார் வீட்டை அடைந்தது........


    - முற்றும் -

  12. #24
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    பிராயச்சித்தம்

    பிராயச்சித்தம்

    தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். 'அச்சு அச்சு' எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.

    அவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.

    குழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.

    முத்துராசு தூரத்தே இருந்த படலையை விலக்கிக் கொண்டு உள்ளே வருவதைக் கண்டார். அவனுக்கும் இப்பொழுது ஐம்பது வயது கடந்திருக்கும். கல்யாணமாகியிருந்தால் தன்னைப் போலவே பேரன் பேத்திகளைப் பார்த்திருப்பானென எண்ணிக் கொண்டார். பெருமூச்சு விட்டார். காலம் காலமாகக் குற்றவுணர்ச்சியில் சிக்கிச் சுழன்ற நெடுமூச்சு. இருவருடைய வாழ்க்கைகளைச் சீரழித்த பெரும்பாவத்தின் உஷ்ணமூச்சு.

    மெதுவாக எழுந்துகொண்டார். முத்துராசு அதற்குள் திண்ணைக்கே வந்துவிட்டிருந்தார். வெள்ளைச் சாரம், வெள்ளைச் சட்டை. எண்ணைய் தேய்த்து இடப்புற வகிடெடுத்து ஒரு பக்கமாக அழுத்தி வாரப்பட்ட தலைமயிரில் வெள்ளிக்கம்பிகள் கலந்திருந்தன. வயதானாலும் ஆளின் கம்பீரமும் மிடுக்கும் இன்னும் குறையவில்லை என்பதைப் போல நின்றிருந்தார். நேரில் பார்க்கும் யாரும் அவரை சித்தம் பிசகியிருந்து, முப்பது வருடங்களாக மனநல மருத்துவமனையிலிருந்து கடந்த வருடம்தான் விடுவிக்கப்பட்டவரென உடனே அனுமானிக்க முடியாது. மாதத்தில் ஓரிரு நாட்கள் ஏதோ பேய் பிடித்தாட்டுவதைப் போல நடந்துகொள்ளுமவர் மற்ற நாட்களில் மிகவும் சாதாரணமாகவும் இயல்பாகவுமிருந்தார்.

    " அண்ணா.. தூங்கிட்டிருந்தீங்களோ ? "

    " ஓமடாப்பா..சின்னவன் என்ர மேல ஒண்ணுக்கடிச்சிட்டான். இரு..மேல் கழுவிக் கொண்டு வாரன் "

    அவர் வெளியே இறங்கி திண்ணைப்பக்கமாகவே சுற்றிக் கொண்டு கொல்லைப்புறக் கிணற்றடிக்கு நடந்தார். முத்துராசுவும் அவரைப் பின் தொடர்ந்தார். முற்றத்து மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் பேத்தி, சின்னவனை மடியிலமர்த்தி ஆடிக் கொண்டிருந்தவள், முத்துராசுவைக்கண்டதும் கால்களை ஊன்றி ஊஞ்சலை நிறுத்தி பயந்த கண்களால் அவரைப் பார்த்திருந்தாள். குழந்தையைக் கண்டதும் முத்துராசு அருகில் சென்று குனிந்து அதன் கன்னத்திலொரு முத்தம் கொடுத்தார். அது தன் கையைப் பொத்தி முத்தமிடப்பட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தன் அக்காவைப் பார்த்தது. எட்டு வயதுச் சிறுமி பயத்துடனேயே புன்னகைத்து வைத்தாள். முத்துராசு அகன்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள். அவருக்குப் பேய்பிடித்து சில நாட்களுக்கு முன் தன் வீட்டார் பட்டபாடு அவளுக்குத் தெரியும்.

    அந்த வீட்டில் முத்துராசுவுக்கு மதிப்பு அவரது அண்ணனிடம் மட்டும்தான். அண்ணியோ, அவர்களின் மகனோ, மருமகளோ அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. முத்துராசு வீட்டுக்கு வந்து நின்றால், தோலில் ஒட்டிக் கொண்ட அட்டையை அது இரத்தமுறிஞ்ச முன் அகற்றத் தவிப்பதுபோல அகற்றிடவும் அவ்வுறவை துடைத்து வழித்தெறிந்திடவும் அவர்கள் துடித்தார்கள். அதுவும் முத்துராசு வந்து தனது அண்ணாவிடம் ஏதும் வாங்கிப்போகும் நாளில் அவரது அண்ணியின் முணுமுணுப்புக்கள் நாள்முழுதும் அவ்வீட்டினுள் எதிரொலித்தபடி அலையும்.

    முத்துராசு கிணற்றடியிலிருந்த புளித்தோடை மரத்தடியில் அண்ணா உடல்கழுவி முடியும்வரை காத்திருந்தார். தெள்ளிய நீர் கொண்ட அகன்ற கிணறு. அண்ணாவும் முத்துராசுவும் பிறக்கும் முன்னரே அவர்களது அப்பாவால் தோண்டப்பட்ட கிணறு. இருவருக்கும் சொந்தமான, பல அறைகளைக் கொண்ட அந்தப் பெரிய வீட்டைக் கட்டும் பொழுது நீர்த்தேவைக்கெனத் தோண்டப்பட்ட கிணறு, இன்றுவரையும் அள்ள அள்ள ஊறி நிறைந்துகொண்டே இருக்கிறது. குளிக்கவும் துவைக்கவும் பயன்படும் நீர் வழிந்து கொல்லைப்புறமிருந்த கீரைப்பாத்திக்கு ஓடிற்று. பின்னரும் அதன் வழியே போய் அவர்களுடைய பரந்த வயலின் வாய்க்காலில் கலந்தது. ஐந்தாறு ஏக்கர்களுக்கும் அதிகமான அந்த வயல்காணியை ஒரு காலத்தில் பராமரிக்கவென வந்து வயல் காணியின் மத்தியிலே குடிசை போட்டுக் குடியிருந்த சின்னமணிதான் அந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தவர்.

    சின்னமணி அவர்களிருவரும் பிறக்கும் முன்பே அங்கு தங்கியிருந்து அந்தக் குடும்பத்துக்கெனவே உழைத்து வந்தவர். வயல்வேலை நடக்கும் காலங்களில் அதற்கென ஆள் சேர்ப்பது, கண்காணிப்பது, விதைப்பது, விளைந்தவற்றைப் பத்திரமாகக் களஞ்சியத்தில் சேர்ப்பதென மிகவும் நேர்மையோடு உழைத்தவர். தோட்டத்தில் தேங்காய் பறிப்பது, விறகு பிளந்து போடுவது எல்லாம் அவர் பொறுப்புத்தான். அவரது மனைவியும் இப் பெரிய வீட்டிலேயே சமையல்,வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள். முத்துராசுவைப் பெற்ற அன்னை, பிரசவம் கண்ட சில நாட்களிலேயே ஜன்னி கண்டு பினாத்திக் கிடந்தநாட்களில் அவரை முழுமையாகப் பராமரித்துப் பார்த்துக்கொண்டது அவள்தான். ஜன்னி குணமாகாமலேயே அவர் செத்துப் போனார்.

    முத்துராசு இப்பொழுது என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறாரென யோசித்துக் கொண்டே கிணற்றிலிருந்து நீரை அள்ளி உடம்பில் வார்க்கத் துவங்கினார். குளிர்ந்த நீர் படப்பட மேனி சிலிர்த்தது. துண்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்த சிறுமி வந்த வேகத்திலேயே கிணற்றுக்கட்டில் அதை வைத்துவிட்டு ஓடிப் போனாள். சலனமுற்றவர் திரும்பிப்பார்த்தார். சமையலறை யன்னலினூடாகத் தன் மனைவி இருவரையும் கண்காணித்தவாறிருப்பதைக் கண்டார். அவர் பார்ப்பதறிந்ததும் அவளது பார்வை கிணற்றடியிலிருந்த அகத்தி மரத்துக்குத் தாவியது.

    போன முறை வாக்குவாதம் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை. அண்ணாவைப் பார்த்துப் போகவென வந்த முத்துராசு, அந்த வீட்டுத் தோட்டத்தில் நன்கு காய்த்து மரத்திலேயே பழுத்திருந்த பப்பாளிப்பழமொன்றை முனையில் சிறு கத்தி கட்டிய நீண்ட கம்பால் பறித்தெடுத்து, தனது வீட்டுக்குக் கொண்டு போவதற்காக எடுத்துவைத்தார். உண்மையில் அது வீடு அல்ல. குடிசை. சின்னமணியின் குடும்பம் தாங்கள் வாழ்வதற்கென்று ஓலையும், களிமண்ணும் கொண்டு கட்டி வைத்திருந்த குடிசை. முப்பது வருடங்களுக்கும் முன்பொரு நாள் எல்லோருமாகக் குடும்பத்தோடு விரட்டியடிக்கப்பட்ட அந் நாளில், எரிந்தது பாதியும் எரியாதது மீதியுமாகத் தீ தின்ற குடிசை. எல்லா அநீதங்களையும் தீக் கண்களால் பார்த்திருந்த குடிசை. எல்லாவற்றையும் மறைத்துப் பூசி மெழுகப்பட்ட அதன் ஒரு அறைக்குள்தான் முத்துராசு தன் ஆடைகளோடும் சமையல் பாத்திரங்களோடும் முடங்கிப்போயிருந்தார்.

    பப்பாளிப்பழத்தைப் பறித்து அவர் தன்னோடு வைத்துக் கொண்டதைக் கண்ட அவரது அண்ணி, தனது பருத்த உடம்பைச் சுற்றியிருந்த புடவையை வரிந்து கட்டிக் கொண்டு முற்றத்துக்கு வந்தாள். பின்னாலேயே மருமகளும் குழந்தையை இடுப்பில் செருகிக் கொண்டு வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அவர் பழம் பறிப்பதைக் காட்டிக் கொடுத்தவள். நீண்ட நாட்களின் பின்னர் நகரத்திலிருந்து வரப்போகும் தன் கணவனுக்காக மரத்திலேயே பழுக்கட்டுமெனப் பழத்தினை விட்டு வைத்தவள் அவள்தான்.

    விடயத்தைச் சொல்லித் தன்மையாகக் கேட்டிருந்தால் முத்துராசு தானாகவே பழத்தினைக் கொடுத்திருக்கக் கூடும். பெரும் எரிச்சலோடு வந்த அண்ணி காரசாரமாக 'இப்படிக் கேட்காமல் பார்க்காமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனால் நாங்கள் குடும்பத்தோடு வீதிக்கிறங்கிப் பிச்சைதான் எடுக்கவேண்டும்' எனச் சத்தமிடத் தொடங்கியதில்தான் அவரது உள்ளிருந்த ஆற்றாமையும் கோபமும் கலந்த பேய் விழித்துக் கொண்டது.

    பழத்தினைத் தூக்கி அப்படியே நிலத்தில் அடித்து, அதன் மேல் ஏறி நின்று மிதித்து சத்தம் போட்டுக் கத்தத் துவங்கினார். தனக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில், வயல்காணியில் பாதிப் பங்கிருப்பதாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இரு பக்கமும் வார்த்தையாடல்கள் தடித்தன. கொம்பு சீவப்பட்ட, வீரமிக்கவொரு எருமைமாட்டினைப் போலக் கோபத்தோடு, பெரிதாய்ச் சப்தமெழ மூச்சுவிட்டபடி முத்துராசு அங்குமிங்குமாக நடந்து அண்ணியைத் தாக்கவென ஆயுதமொன்றைத் தேடினார். வேலிக்கு மேலால் எட்டி எட்டி அயலவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன விபரீதம் நடக்கப்போகிறதோவென அறியும் ஆவல் அல்லது தாம் பார்க்க விபரீதம் நடக்கவேண்டுமென்ற ஆவல் அவர்கள் கண்களில் மிதந்தது. மருமகள் குழந்தையை சிறுமியிடம் கொடுத்துவிட்டு மல்லுக்கு நிற்கும் மாமியாரின் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள்.

    நல்லவேளையாக வெளியே போயிருந்த அண்ணா ஆட்டோவில் வந்திறங்கினார். அண்ணாவைக் கண்டதும் 'இப்பவே என்ர பங்கைப் பிரிச்சுக் கொடு' என முத்துராசு, அண்ணனை நோக்கிச் சப்தமிடத் தொடங்கினார். அண்ணாவுக்கு அவரை அடக்கத் தெரியும். அவ்விடம் வந்து தன் மனைவியைச் சப்தம் போடாமல் உள்ளே போகும்படி ஏசினார். தம்பியைத் தோளோடு சேர்த்தணைத்து ஆட்டோவுக்கு அழைத்துப் போனார். பின்னர் அதிலேயே அவருடன் போய் வயல்காணிக் குடிசைக்கு அழைத்துப் போனார். அவன் அமைதியாகும்வரை அங்கேயே இருந்து பேசிவிட்டு கிளம்பிவந்தார்.

    இன்று என்ன பிரச்சினை எழப்போகிறதோ எனத் தெரியவில்லை. துண்டை எடுத்து உடல் துடைத்துக் கொண்டவர் புதுச் சாரத்தை அணிந்துகொண்டார். வந்த வழியே திண்ணைக்கு வந்து சாய்மனைக் கதிரையில் அமர்ந்துகொண்டார். அது பழங்காலக் கதிரை. அவர்களது தந்தையார் வழி வந்தது. அவர் அவ்வூர்ப் பெரிய மனிதர். நாலெழுத்துப் படித்தவர் என்பதால் மட்டுமல்ல. வழிவழியாக வந்த உயர் வம்சத்தைச் சேர்ந்தவர். முன்னொரு காலத்தில் அந்த முழுக் கிராமமே அவர்களது மூதாதையருக்குச் சொந்தமாக இருந்தது. அவர்கள் குடும்பத்துக்குச் சேவை செய்ய வந்தவர்களெல்லாம் சேர்ந்துதான் அது ஒரு கிராமமென ஆகியிருந்தது. அந்த பரம்பரை மரியாதையும் கௌரவமும் நன்றி விசுவாசமும் ஊரில் இன்னும் அந்தக் குடும்பத்துக்கு இருந்து வருகிறது. வீதியில் இறங்கி அவர் நடந்தால் எதிர்ப்படுபவர்கள் தலைதாழ்த்தி, வணக்கம் சொன்னார்கள்.

    முத்துராசுவும் பின்னாலேயே வந்து திண்ணைக் கட்டில் அமர்ந்து கொண்டார். மழை வரும்போல இருந்தது. அந்தி வெயிலற்று மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. கொஞ்ச நாளாக அந்திசாயும் பொழுது மழை பெரிதாய், இடி மின்னலோடு அடித்துப் பிடித்து வருகிறது. பருவம் தப்பிய மழை.

    " தம்பி, ஏதாச்சும் குடிக்கிறியோ? "

    தன் கை விரல்நகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவிதப் பணிவோடு தலைநிமிர்ந்து புன்னகைத்தார். வாசற்கதவுக்குப் பின்னால் மறைந்திருந்து அண்ணி பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்..

    " வேண்டாமண்ணே..நான் வந்தது...மழை பெய்றதால கூரையெல்லாம் நைந்துபோய் கடுமையா ஒழுகுது. தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள வருகுது. யாரையாவது அனுப்பி ஓலை மாத்தித் தந்தால் புண்ணியமாப் போகும்" என்றார்.

    " சோதர பாசத்தால பார்க்க வந்திருப்பாரெண்டு நெனச்சால், இப்பவும் வாங்கிப் போகத்தான் வந்திருக்கிறார் " அண்ணி உள்ளே இருந்து ஒரு விதக் கிண்டல் தொனியோடு குரல் கொடுத்தார்.

    அண்ணா, அவரைச் சத்தம் போடாமல் உள்ளே போகும்படி மிரட்டினார். 'இதற்கொன்றும் குறைச்சலில்ல' என்பது போன்ற முணுமுணுப்போடு அண்ணியின் குரல் அடங்கியது.

    " தம்பி, நான் அன்றைக்கு அங்க வந்தபோதே கவனிச்சேன். கட்டாயம் நாளைக்கே ஆளனுப்புறேன். நானும் வருவேன். அரிசி,பருப்பெல்லாம் இருக்குதா, முடிஞ்சு போச்சுதா? நாளைக்கு அதையும் எடுத்துக் கொண்டுவரலாம். தனியாச் சமைச்சுச் சாப்பிடறத விட்டுட்டு எங்களோடு வந்து இரு எண்டாலும் கேக்குறாயில்ல "

    "அப்ப நாளைக்கு வாங்கோ அண்ணே..பார்த்துக் கொண்டிருப்பேன்" முத்துராசு புன்னகையோடு எழுந்து நடக்கத் தொடங்கினார். அண்ணா பார்த்துக்கொண்டே இருந்தார். அவசரமானதாகவும் அதேவேளை சீரானதாகவும் ஒரு நடை. மழை பெய்யுமுன்பு வீட்டுக்குப் போய்விடும் அவசரமாக இருக்கக் கூடும். அண்ணி முன்னால் வந்தார். பின்னாலேயே மருமகளும் வந்து மாமியாரின் பின்னால் மறைந்து, எட்டிப் பார்த்தாள்.

    "அப்ப நாளைக்கு மகாராஜாவோட வீட்டுக்குப் போகப் போறீங்களோ?" மனைவியின் குரலில் எகத்தாளம் வழிந்தது.

    " இப்படி ஒழுக்கம் கெட்டதுக்கெல்லாம் வாரி இரைச்சிக் கொண்டிருந்தால் எங்கட பிள்ள குட்டிகளுக்கு நாங்க என்னத்தக் கொடுக்கிறது?"

    "அவன் எண்ட உடன்பிறப்பு. நாந்தான் கொடுக்கவேணும். அவனுக்கும் இந்த வீட்டில, வயலில, தோட்டத்துல எல்லாத்திலயும் சமபங்கு இருக்குது. அவனுக்குக் கேட்கவும் உரிமை இருக்கு "

    " ஓஹ்.. அப்படியே இருக்குறதையெல்லாம் முழுசாக் கொடுத்தாலும் பைத்தியக்காரனுக்கு அதை வச்சிக் கொண்டு என்ன செய்யத் தெரியும்? "

    புருவத்துக்கு மேலால் நெற்றி சுருங்கக் கோபத்தோடு விழிகள் தெறிக்க மனைவியைப் பார்த்தார். அவரது கோபம் பற்றி மனைவிக்குத் தெரியும். அப்படியே திரும்பி முணுமுணுத்தபடி உள்ளே போனாள். மருமகளும் பின்னாலே போனாள். அடுத்த அறைக்குள் பெண்கள் இருவரும் கிசுகிசுப்பாகக் கதைத்துக் கொள்வது கேட்டது. பெண்களின் கதைகளுக்கு முடிவுகளில்லை. அது வாலாக நீளும். ஒன்றின் முனையைப் பற்றி இன்னொன்று. அதன் முனையைப் பற்றி இன்னொன்று எனப் பழைய காலங்களுக்குள் மீளச் சுழலும்.

    கதிரையில் சாய்ந்திருந்து விழ ஆரம்பித்திருந்த தூறலைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு வசுந்தரா நினைவு வந்தது. அவள் மேல் காதலும் மோகமும் கொண்டு திரிந்த அவரது இளமைக்காலம் கண் முன் வந்தது . வசுந்தரா சின்னமணியின் மகள். அவர் வீட்டுக்கு அவளது அம்மாவுடன் சமையல் வேலைக்கு உதவிக்கென வரும் அழகி. ஏதேனுமொரு நாட்டுப்புறப் பாடலைத் தன் எழில் குரலில் வழியவிட்டபடியே சமைப்பவள் அவரது கண்களில் பட்டுத் தொடர்ந்த காதல் வார்த்தைகளில் மயங்கிப் போனாள். கோபுரத்தில் வாழ்பவனுக்கும் குடிசையில் சீவிப்பவளுக்கும் வரும் காதல் இணையும் வழியற்றதென அவள் சிறிதும் யோசிக்கவில்லை. அல்லது காதல் அவளை மயக்கியிருந்தது. காதலின் பொய்கள் சொல்லி அவளை வீழ்த்தினார்.

    அந்தக் குடும்பத்தின் வாரிசு அவ் ஏழைப்பெண்ணில் வளரத் துவங்கியபொழுது அவளால் எதையும் மறைக்க முடியவில்லை. ஆனால் அவரால் எல்லாவற்றையும் மறுக்க முடிந்தது. முடியாப் பட்சமொன்றில் எல்லாப் பழிகளையும் தம்பி மேல் போட்டார். மூத்தவன் சொல்லும் எதையும் நம்பும் அப்பா, அம்மாவை விழுங்கிப் பிறந்த இளையவனிடம் என்னவென்றே விசாரிக்காது மிகவும் வன்மமாகவும் குரூரமாகவும் அடித்து உதைத்து வீட்டை விட்டே விரட்டிவிட்டார். அதே இரவில் சின்னமணி குடிசையையும் எரித்து, ஊரை விட்டே குடும்பத்தோடு ஓடச் செய்தார். அன்றைய இரவில் துரோகமும், வீண்பழியும், ஒரு பேருண்மையும் தீயோடு தாண்டவமாடியது. ஊர் முழுதும் பார்த்திருக்கப் பட்ட அவமானமும், இழைக்கப்பட்ட அநீதியும் முத்துராசுவை மனநிலை தவறச் செய்தது. சொந்த வீட்டுக்கே கல்லெறிந்தபடி, ஊர் எல்லைக்குள்ளேயே வீதியோரங்களில் புரண்டலைந்தவரை அண்ணன்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனதிற்குள் அலையடித்தது. விரட்டி விரட்டித் தொடரும் அலை. ஆழங்களுக்குள் இழுத்துப்போகவெனப் பின்னாலேயே துரத்தும் உக்கிர அலை. அறைக்குள் இன்னும் பெண்களின் கிசுகிசுப்புக் கேட்டது. இவர் எழுந்து கொண்டார். அவர்களிருந்த அறை வாசலில் போய் நின்றார்.

    " என்னோட உசுருள்ளவரைக்கும் தம்பிக்கு என்னால முடிஞ்சதைச் செய்யத்தான் போறேன். இதைப் பத்தி இனிமே இந்த வீட்டுல யாராவது ஏதாச்சும் பேசினீங்களெண்டால் கொலைதான் விழும்" என்றார் ஊருக்கெல்லாம் கேட்கப் போல மிகச் சத்தமாக.

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •