View Poll Results: கதைப்போட்டி 06 வாக்கெடுப்பு

Voters
36. You may not vote on this poll
    The results in this poll are hidden.
  • தகுதியுடையவை தழைத்தோங்கும்

    The results are hidden 0%
  • கடவுளும் மனிதனும்

    The results are hidden 0%
  • நான் சொல்வதெல்லாம் உண்மை...

    The results are hidden 0%
  • தீர்ப்பு

    The results are hidden 0%
  • அண்ணி என்றால்...

    The results are hidden 0%
  • சந்தேகம்

    The results are hidden 0%
  • புரிதல்...

    The results are hidden 0%
  • பந்தா !

    The results are hidden 0%
  • வீரபத்திரன் ...

    The results are hidden 0%
  • அரளிப்பூக்கள்

    The results are hidden 0%
  • எதார்த்தம்

    The results are hidden 0%
  • காதல் பண்பாடு

    The results are hidden 0%
  • “பச்சை நிறமே இல்லை.”

    The results are hidden 0%
  • மாற்றாள்

    The results are hidden 0%
  • மாயை

    The results are hidden 0%
  • நானும்,ஜெயனும்,திருச்சியும்.

    The results are hidden 0%
  • அன்பு சம்ராஜியம்

    The results are hidden 0%
  • மாமன் மகள்

    The results are hidden 0%
  • உண்மைகள் தெளிவாகும் போது …

    The results are hidden 0%
  • கடவுள்களின் முகவரி

    The results are hidden 0%
  • செல்போன்

    The results are hidden 0%
  • காதலுக்கு உருவம் உண்டு

    The results are hidden 0%
  • பிராயச்சித்தம்

    The results are hidden 0%
  • தண்ணீர்

    The results are hidden 0%
  • சக்ரவியூகம்

    The results are hidden 0%
  • ஆசான்

    The results are hidden 0%
  • சில நிஜங்கள்

    The results are hidden 0%
  • கடைசி வரை...

    The results are hidden 0%
  • யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா?

    The results are hidden 0%
Multiple Choice Poll.
Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 59

Thread: கதைப் போட்டி 06 - வாக்கெடுப்பு

                  
   
   
  1. #25
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    தண்ணீர்

    தண்ணீர்

    ராமலிங்கம் பூங்காவில் அமர்ந்திருந்தார். அவர் ஜெயராமுக்காக காத்திருந்தார். தினமும் சுமார் ஆறிலிருந்து எட்டு மணி வரை பேசுவார்கள். சில சமயம் கோவில் அல்லது மாலுக்குப்போய் பேசுவார்கள். அவர்கள் பேச்சு அரசியல், பொதுப்ப்ரச்சனை,வீட்டுப் பிரச்சனை என்று நீண்டு கொண்டே போகும். அன்றும் பேச ஆரம்பித்தார்கள்.

    'உங்கள் பில்டிங்கில் தண்ணி வரதா? '

    'இப்போதைக்கு வரது. வெயில் காலத்தில் எப்படியோ தெரியலை. '

    'இந்தியா முழுவதும் மழை குறைவு தான். '

    "மழை வந்தாலும் பிடித்து வைக்க ஒரு வழியும் செய்வதில்லை. இந்த அரசியல் வாதிகள்ஒருவருக்கொருவர் குற்றம் சொல்வதிலேயே டயம் சரியாக இர்ருக்கு."

    "எல்லா ஆறுகளையும் ஒண்னு சேர்த்தால் கஷ்ட்டம் இருக்காதாம்"

    "இதற்கு சென்டர் தான் முயர்ச்சிக்கணும்'

    "சென்டர் சுப்றேமே கோர்ட் சொல்வதை யார் கேட்கிறார்கள்? காவேரி பிரச்சனை தீர்த்துதா? "

    "தண்ணீரை பொது உடமையாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்!"

    ராமலிங்கத்துடைய மொபைல் அடித்தது. "ஊரிலிருந்து கசின் வரப்போரானாம். நான் வரேன். கிளம்பினார்.

    வீட்டுக்குப்போய் கால் அலம்ப போன போது குழாயில் தண்ணி வரவில்லை.

    ஏ மாலா ஏன் தண்ணி வரலை"?

    சிறிது தயங்கியவள் "பக்கெட்டில் பிடித்து வைச்சிருக்கேன்"

    "ஏன் தண்ணி வ-ர-லை?"

    "நம்ம பில்டிங்கில் பக்கத்து சைடில் தண்ணி நின்னு போச்சு. பழைய பைப்பு. அடைஞ்சிருக்கு"

    அதான் தெரியுமே.மீட்டிங் போட்டோமே. நிறைய பேர் பணம் தர சம்மதிக்கலை. அடுத்த வாரம் மீட்டிங் இருக்கு."

    "அதுவரை எங்கு போவார்கள்? அதான் அந்த சைடுகார அவர்களே பணம் செலவழித்து பைப்பு மாற்றுகிறார்கள்."

    "அதெப்படி என் பெர்மிஷன் இல்லாமல் மாற்றுவார்கள்? நான்தானே செகரட்டரி."

    வேகமாக வெளியே வந்தார். "வேலையை நிறுத்துங்கள்" என்று கத்தினார்.

    அந்த சைடிலிருந்த குடும்பத்தினர் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

    "சார் எங்கள்ளுக்கு சொசைட்டி பைசா வேண்டாம்.டியுப் போட்டு எடுக்க எந்த வீட்டுக்காரரும் சம்மதிக்கலை.ஒரு மணி நேரத்தில் வேலை முடியும். மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் "

    "என் சம்மதமில்லாமல் எப்படி ஆரம்பிக்கலாம்?இப்போதே வேலையை நிறுத்துங்கள்' என்று சப்தம் போடா ஆரம்பித்தார்!!

  2. #26
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    சக்ரவியூகம்

    சக்ரவியூகம்


    “குறை ஓன்றும் இல்லை
    மறை மூர்த்தி கண்ணா
    குறை ஓன்றும் இல்லை கண்ணா........
    குறை ஓன்றும் இல்லை... கோவிந்தா”

    என்ற மதுரமான குரலில் பாடிக்கொண்டிருந்தாள் நந்தினி. அரங்கமே அவள் பாடலின் பக்தி லயத்தில் மூழ்கி கிடந்தது. பேரருள் கண்ணனை அந்த கோவிந்தனை தன் பாடலினால் அனைவர் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினாள். கச்சேரி முடிந்ததும் அனைவரும் பலத்த கரகோஷத்தினால் தம் பாராட்டுகளைத் தெரிவித்தனர். நந்தினி சிறந்த பாடகி என அறிவித்து அவளுக்கு பரிசும் வழங்கப்பட்டது.

    நந்தினி அனைவருக்கும் புன்னகையோடு கைகூப்பி தன் நன்றியை தெரிவித்தாள். ஸ்டேஜ் திரை முடியதும் நந்தினியின் அம்மா கற்பகம் ஓடி வந்து தன் மகளை அனைத்து நெற்றியில் முத்தமிட்டாள். “அம்மா தாத்தா எங்க? ” என்று நந்தினி கேட்டாள் “இதோ வந்துட்டேன்” என்று புன்னகையோடு சதாசிவம் கற்பகத்தின் தந்தை இருசக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு வந்தார் அதில் கற்பகம் தன் மகளை உட்கார வைத்தாள்.

    இரவு வீட்டில் சாப்பிட்டப் பிறகு “தாத்தா இன்னிக்கு கச்சேரி எப்படி” என்று நந்தினி கேட்டாள் “உன்ன மிஞ்ச இந்த லோகத்துல யாரு இல்லடி கொழந்த பிச்சி எடுத்துட்ட” என்றார்

    “ம்ம் நந்தினி ரெண்டாவது பாட்டுல கொஞ்ச ஸ்ருதி சேரலடி ஒரு எடத்துல தாளம் கூட விலகிடுச்சி” என்று சுட்டிக்காட்டினாள் அம்மா
    “அது எனக்கும் தெரியும்மா அப்போ எனக்கு வாய்ஸ் ட்ரை ஆயிடுத்து அதான்”

    “அப்போ இன்னும் கொஞ்சம் நீ நல்லா ப்ராக்டீஸ் பண்ணனும்.... சரி நீ போய் படு” நந்தினி தன் இருசக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே அதை லாவகமாக தன் அறைக்கு ஓட்டிச் சென்றாள்.

    மறுநாள் காலை கற்பகம் நந்தினி காலேஜ் சென்றவுடன் கோயிலுக்கு வந்தாள். சுவாமி தரிசனம் முடித்தாள் மனமுருக மகளுக்காக பிராதித்தாள். அங்கே இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு தன் கணவன் சுவாமிநாதனை எதிர்பாராமல் சந்தித்தாள். சற்றே எடைப் போட்டு தொந்தியுடன் இருந்தான். அவன் அருகே வந்து சற்று தயங்கி

    “எப்படி இருக்கே?”

    “நன்னா இருக்கேன்” கிளம்ப முற்ப்பட்டாள்

    “என்னை எப்படி இருக்கேள்னு கேட்கமாட்டியா? இன்னும் உனக்கு கோபம் தீர்ல இல்லயா?”

    “நான் யாரு உங்கள கேள்வி கேட்க கோபப்பட எனக்கு அந்த உரிமை இல்ல”

    “ஆமா நா செஞ்ச தப்புக்கு மன்னிப்பே இல்ல இப்போ தண்டனையே அனுபவிசிட்டு இருக்கேன்”

    “என்ன சொல்றேள்?”

    “உன்னையும் கொழந்தையும் ஆத்தவிட்டு அனுப்பிச்ச பாவத்துக்கு தண்டனைய அனுபவிக்கிறேன். நீ போனதுக்கப்புறம் உனக்கு விவாகரத்து கொடுத்துட்டு நானும் அம்மாவும் தஞ்சாவூர் போயிட்டோம் ரேவதிய கல்யாணப் பண்ணின்டேன் எங்களுக்கு ஒரு பய்யப்பொறந்தான். சொத்தெல்லாம் ரேவதிக் கைக்கு மாறிடுத்து........ நீ சாது மாட்டுப் பொண்ணா இருந்தே அம்மா உன்ன அவ்ளோ கொடுமப்படுத்தினா ஆனா அதெல்ல ரேவதிக்கிட்ட நடக்கல ...............அம்மா இப்போ ஹோம்ல இருக்கா.....பய்ய படிக்கணும்னு மெட்ராஸ் வந்தோம் அவனுக்கு எல்லா கெட்டப் பழக்கமும் இருக்கு சொத்த கறைக்குரான் கேட்க ஆளில்லை” விசும்பினார் சுவாமிநாதன்

    “கற்பகம் நீ நம்ம பொண்ணை நன்னா வளர்த்திருக்கே என்னமா பாட்டு பாட்றா நா ஒருதரம் அவளோட பேசணும் ..........அவ தோப்பனார் நான்னு சொல்லமாட்டேன் .......... உங்க ஆத்துக்கு வரட்டுமா?”

    “என்னை மன்னிச்சுடுங்கோனா” என்று கூறி அவனைத் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டாள்

    வீட்டுக்கு திரும்பியதும் மனம் உளைச்சலாக இருக்கவே சற்று ஓய்வு எடுத்தாள் பழைய நினைவுகள் அவள் கண்முன் நிழலாடியது.

    “உங்க குழந்தைக்கு ரெண்டு காலும் சுவாதீனம் இல்ல நரம்பு பாதிச்சிருக்கு டிரீட்மென்ட் கொடுத்து பார்க்கலாம் ஆனா சரியாகும்னு கேரண்டி கொடுக்க முடியாது” டாக்டர் சொன்னார்

    பிறந்து இரண்டே நாள்ஆன தன் பிஞ்சுக் குழந்தையை மடியில் போட்டு அழுதாள் கற்பகம் “இந்த சனியன தூக்கி வெளிய போடு யாரு இதை ஆயுசு பூரா வெச்சி காப்பாத்த முடியும்” என்றாள் அவள் மாமியார்

    “அத்தைய்ய்”

    “என்னடி சத்தபோட்ற இந்த கொழந்தை பெரிசானா யார் கால் இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணிப்பா?”

    “கல்யாணம் ஒண்ணுதான் வாழ்கையில்லை அத்தை இவள நல்லாப் படிக்க வெச்சி பெரிய ஆளாக்குவேன்”

    “கற்பகம் அம்மாவையா எதிர்த்து பேசற அவா வாழ்ந்துப் பார்த்தவா அவாளுக்கு எல்லாத் தெரியும்” சுவாமிநாதன்

    “என்னங்க நீங்களுமா?”

    “என்னால இந்த கொழந்தைய ஏத்துக்க முடியாதுடி நாளைக்கு இதுக்கு கல்யாணம் காட்சி பண்ண முடியுமா? இது என் குழந்தைனு சொல்ல அவமானமா இருக்கு இதை நம்ம வேளக்காரன்கிட்டக் கொடுத்துடு அவன் இதை எங்கயாவது விட்டு வந்துடுவான் பணம் கொடுத்துடலாம் அதுக்கு”

    கற்பகம் அழுதுக்கொண்டே “என்னால என் குழந்தையப் பிரிய முடியாதுங்க தயவு செஞ்சிபுரிஞ்சிக் கோங்க”

    “கற்பகம் கடைசியா சொல்றேன் நாங்க சொல்றத கேளு”

    “சுவாமிநாதா ஒண்ணு நா இந்த ஆத்துல இருக்கணும் இல்ல இந்த கொழந்தை இந்த ஆத்துல இருக்கணும நீயே முடிவு செய்” --அம்மா

    “நீங்க இந்த ஆத்துல இருங்க அத்தை நானும் என் கொழந்தையும் இந்த ஆத்த விட்டுப்போறோம்”

    “என்ன நெஞ்சழுத்தம்டி நோக்கு அம்மாவையே எதிர்த்து பேசறயா? போ இந்த ஆத்த விட்டு போ இனிமே எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமு இல்லை”

    “சுவாமிநாதா படிச்ச திமுறு வேற ஓண்ணுமில்லடா........போட்டும் போ இதுகளுக்கு கஷ்டப்பட்டாதான் புத்திவரும்”

    “நான் போறேன் அத்தை ....... தாலிங்கறது ஒரு பொண்ணுக்கு வேலிதான் அத்தை ஆனா தாலி இல்லனாhகூட ஒரு பொண்ணு மனசுல சக்ரவியூகம் அமசுன்டா அவளோட அனுமதி இல்லாம யாரும் உள்ள வரமுடியாது இத புரிஞ்சிக்கேங்கோ நான் இன்னிக்கு சங்கல்பம் செய்றேன். இவள ஏதாவது ஒரு துறையில சிறந்து விளங்க செய்வேன்னா அப்போ நீங்க நாம இவள வளர்க்காம விட்டுடோமேனு நிச்சயமா ஃபீல் பண்ணுவேள்”

    அன்று வெளியே வந்து தன் தந்தையுடன் சேர்ந்து நந்தினிக்கு பிடித்த பாட்டு கற்றுக்கொடுத்து பல இன்னல்களுக்கு பிறகு அவளை சிறந்த பாடகியாக்கியுள்ளாள். இன்று அவள் சங்கல்பம் நிறைவேறியது.

  3. #27
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    ஆசான்

    ஆசான்

    அந்த மதிய வேளையில் கதிரவனை வர விடாமல் சிறைபிடித்து வைத்திருந்த முரட்டு மேகங்கள் ஒன்று திரண்டு மழையாய் கொட்டி தீர்த்தன. மழை நின்ற பிறகும் ஏனோ இடியும், மின்னலும் தொடர்ந்து நர்த்தனம் செய்து கொண்டிருந்தது. அதிகம் மிதிபட்டு தெளிவாய் சிரித்தது சாலையோரம் தேங்கி கிடந்த மழை நீர். சொட்டுசொட்டாய் விழுந்த தண்ணீர் துளிகள் சன்னல் கம்பிகளில இசை எழுப்பிக் கொண்டிருந்தது. மௌனமாய் சாய்ந்தபடி இனம் புரியாத வேதனையோடு கைகளில் தவழ்ந்த ஈரமாய் கிடந்த கடிதத்தை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார் மாணிக்கம். வெளியே வந்த கமலம் கணவரின் கரங்களில் தவழ்ந்த கடிதத்தை கண்டதும் அவருடைய மௌனத்தை கலைத்தாள்.

    "என்ன கடுதாசி இது?"

    "ம்...உம் மவன் போட்ட கடுதாசி" என்றார் மாணிக்கம். அதைக்கேட்டவுடன் பரபரப்பானாள் கமலம்.

    "அப்படியா...என்ன எழுதி இருக்கான் சொல்லுங்க" என்றால் முகம் மலர...

    "என்ன பாசம் பொத்துகிட்டு வருதோ?"

    இல்லைங்க...என்ன இருந்தாலும் அவ நம்ம...." கமலம் முடிப்பதற்குள்...

    போதும்....நிறுத்துடி...அவன் பண்ணிண காரியத்துக்கு உன்னோட பாசம் ரொம்ப அவசியமோ? இந்த ஊர்ல எனக்கு இருந்த மரியாதையை நாசம் பண்ணிண பாவி அவன்..." என்று பொருமி தள்ளினார் மாணிக்கம்.

    ஓய்வு பெற்ற தமிழாசிரியர் மாணிக்கம். ஆனாலும் ஓய்வில்லாத மன உளைச்சலில் கிடந்தார். ரகு அவரது ஒரே மகன். அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் உத்தியோகம். கை நிறைய சம்பளம். மகனின் திறமையையும், உழைப்பையும் பார்த்து பூரித்துப் போனார்கள் மாணிக்கமும், கமலமும். அவனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து பார்க்க ஆசைப்பட்ட போதுதான் ஒரு பேரிடியை கொடுத்தான் ரகு. தன்னோடு வேலை பார்க்கும் பெண்ணை விரும்புவதாகவும் அந்த பெண்ணையே கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினான். கூடவே இன்னொரு பேரிடியை தந்தான். அவள் அமெரிக்க நாட்டுப் பெண் என்றும் அவள் பெயர் லிண்டா என்றும் ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டான். அதிர்ந்து போனார் மாணிக்கம் அப்பாவிடமிருந்து பதில் வராததால் நேரடியாக அவரிடம் பேசி சம்மதம் வாங்க ஊருக்கு வந்த போதுதான் பிரச்சனை மேலும் பெரிதானது.

    சோகத்தோடு நினைவுகளை அசை போட்ட கமலத்தை பார்த்து பெருமூச்சோடு....

    "பழச நினைச்சு என்ன ஆகப்போகுது கமலா..." என்றார் மாணிக்கம்.

    "இப்ப அவன் என்னதான் எழுதியிருக்கிறான்?"

    "லீவுக்கு அவன் குடும்பத்தோட ஊருக்கு வரலாம்னு இருக்காணாம். வரட்டுமானு கேக்றான்." மாணிக்கம் சொன்னதை கேட்டதும் அவசர அவசரமாக கண்களை துடைத்தவள்...

    "என்ன குடும்பத்தோட வரானா...கண்டிப்பா வரச் சொல்லி கடுதாசி போடுங்க..."

    "என்ன பேசற கமலா...இவ்வளவு அசிங்கம் நடந்திருக்கு மறுபடியும்...." மாணிக்கம் முடிப்பதற்குள்.

    "போதும் நிறுத்துங்க...அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்? நமக்கு தெரியாம பொண்ண கூட்டிட்டு ஓடிட்டானா? உங்கள மதிச்சு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் வாங்கத்தானே அவன் வந்தான் அவனை நாமதான் அசிங்கப்படுத்திட்டோம். நாம ஒண்ணும் அசிங்கப்படல"

    கமலம் பொரிந்து தள்ள....

    “போதும் கமலா. இந்த ஊர்ல எனக்குனு ஒரு மரியாதை இருக்கு. வாத்;யார் புள்ள மக்குனு சொல்லுவாங்க. ஆனா நான் அவன நல்லா படிக்கவச்சு வெளிநாட்டு அனுப்பிவச்சேன். எதுக்காக? இந்த காரியம் பண்றதுக்கா? இப்படிபட்ட அவன மறுபடியும் கூப்பிடனுமா...?"

    "கூப்பிட்டா ஒண்ணும் தப்பில்ல. அவன் என்ன கொலையா பண்ணிட்டான்?" என்றால் கமலம்

    "ஆனா கமலா நம்ம சொந்த பந்தம் என்ன நினைக்கும். ஏற்கனெவே அவன் பண்ணிண காரியத்துக்கு நம்ம சாதி சனம் நம்ம மேல கோபத்தோட இருக்காங்க. உனக்கே அது நல்லா தெரியுமே"

    "சாதி, மதம் இல்லைனு நீங்கதான் பாடம் சொல்லி தந்தீங்க. ஆனா இப்ப நம்ம மவன் கல்யாணம் பண்ணிணதுக்கு கோபப்படறீங்க. சாதி சனத்தை நாம பாத்திட்டு இருந்தா இப்படி அநாதையா நாம வீட்டுக்குள் கெடக்க வேண்டியதுதான். நாம சாகும் போது எத அள்ளிட்டு போறோம்? உங்களோட வறட்டு கவுரவம் கோபத்தை விட்டிட்டு அவங்கள வரச்சொல்லி தயவு பண்ணி கடிதாசி போடுங்க". கமலம் தன் மொத்த ஆதங்கத்தையும் கொட்டி புலம்பி தீர்த்தாள். அவளின் புலம்பலில் நிலை குலைந்த மாணிக்கம் சிலையாய் அவள் வீட்டிற்குள் செல்வதை பார்த்துக் கொண்டேயிருந்தார்.

    அன்று கமலத்திற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. மகன் குடும்பத்தோடு வருவதால் விழுந்து விழுந்து அவசரஅவசரமாக எல்லா வேலைகளையும் செய்தாள். மனைவியின் நடவடிக்கையை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார் மாணிக்கம். வாசலில் கார் சப்தம் கேட்டதும் ஆராத்தி தட்டோடு ஓடோடி சென்றாள் கமலம். முழுசாக ஐந்து வருடங்கள் ஓடி விட்டது மீண்டும் தன் மகனை பார்ப்பதற்கு ஏதோ உயிர் போய் மீண்டும் வந்தது போல் இருவருக்கும் இருந்தது. காரை விட்டு இறங்கிய ரகு தன் மனைவி குழந்தையோடு வாசலுக்கு வந்ததும்....

    "ஒரு நிமிஷம் இருங்க...." என்று மகிழ்ச்சியோடு ஆரத்தி தட்டை சுற்றி திருஷ்டி கழித்தாள் கமலம்.

    வெள்ளைக்கார பெண்ணை பார்க்க அக்கம் பக்கம் எல்லோரும் மாணிக்கம் வீட்டை கூட்டமாக முற்றுகையிட்டார்கள். அமெரிக்க என்றாலே ஆச்சரியமாகத்தானே பார்ப்பார்கள். ஏதோ ஜவுளி கடை பொம்மை அண்ணாந்து பார்ப்பது போல் லிண்டாவை பார்த்தார்கள். லிண்டாவிற்கு எல்லாமே புதிதாக இருந்தது. ஆரத்தி சுற்றி முடித்ததும் தன் பேரனை அள்ளி எடுத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் பொங்க முத்தமிட்டு மகிழ்ந்தாள் கமலம்.

    "உள்ள வாங்க" என்று அழைத்தாள் கமலம். எல்லாவற்றையும் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்தை நோக்கி ரகு....

    "அப்பா எப்படி இருக்கீங்க? இன்னும் என் மேலே கோபமா?" என்று ஆதங்கத்தோடு கேட்டான்.

    "இல்லப்பா...உள்ள வா....உள்ள வாம்மா" என்று லிண்டாவை அழைக்க, தன் அப்பா, அம்மாவை அறிமுகப்படுத்தி வைத்தான் ரகு.
    லிண்டா மெல்ல தலை சாய்த்து இரு கரம் கூப்பி வணக்கத்தை சொன்னது கமலத்தின் காதருகே கிசுகிசுத்தார் மாணிக்கம்.

    "பையன் எல்லாமே நல்லாதான் சொல்லி கொடுத்திருக்கான்" என்றதும்...

    "அவன் எம் மவன்" என்று பெருமிதத்தோடு சொன்னாள் கமலம்.

    வீட்டிற்குள் சென்றதும் கமலத்திற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. லிண்டாவிற்கு ஆங்கிலத்தை தவிர வேறு மொழி தெரியாததால் அப்பா, அம்மா பேசிய எல்லா விவரங்களையும் ரகு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தான். தன் வீடு முழுக்க சுற்றி காட்டினான் ரகு. தன் கடந்த வாழ்க்கையை நினைவு கூர்ந்தான். தங்களுக்காக ஓடி ஓடி கமலம் உபசரிப்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் லிண்டா.

    "ஏம்பா ரகு...என் பேரனுக்கு என்ன பேரு வெச்சிருக்க?"

    "ஹர்ஷத்னு வெச்சிருக்கேன்" என்றான் ரகு.

    "என்னடா பேரு இது. ஒரு நல்ல தமிழ் பேரா வைக்கக்கூடாதா" என்று ஆதங்கப்பட்டார் மாணிக்கம்.

    "போதும் உங்க தமிழ் புராணம்" என்றாள் கமலம்.

    அம்மாவின் பேச்சைக் கேட்ட ரகு மெல்லிய சிரிப்போடு...

    "அப்பா! பேருதான் ஹர்ஷத். ஆனா நாங்க செல்லமா ராஜானு கூப்பிடுவோம். ஏன்னா என் தாத்தா பேரு ராஜரத்தினம்தானே."

    தன் தந்தையை நினைவு கூர்ந்ததை கண்டு சந்தோசப்பட்டார் மாணிக்கம்.

    பாத்ரும் சுத்தமாக இல்லாததால்....

    "ஓ! நாஸ்டி டாடி" என்று வெளியே ஓடி வந்தான் ரகுவின் மகன்.

    "ஏண்டா இது நாஸ்டியா? உங்கப்பா உன்ன மாதிரி இருக்கும்போது பாத்ரூமே இல்லடா" என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் மாணிக்கம்.

    பேரக்குழந்தையோடு விளையாடிதில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. அந்த அமைதியான மாலை நேரத்தில் புழுதியை கிளப்பிக்கொண்டு கார் மாணிக்கம் வீட்டை நோக்கி வந்து நின்றது. வீட்டின் முன் கார் வந்து நின்றதும் வெளியே வந்ததார் மாணிக்கம். காரின் முன் கதவை திரந்து வந்தவர் மாணிக்கத்தை நோக்கி....

    "கலெக்டர் அய்யா உங்கள பாக்க வந்திருக்காரு" என்று சொன்னதும் பரபரப்பானார் மாணிக்கம். காரின் பின்புற கதவை திறந்து வெளியே வந்தவரை கூர்ந்து கவனித்தார் மாணிக்கம்.

    "வணக்கம் அய்யா...நல்லா இருக்கீங்கலா? என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க" என்று காலில் விழுந்தவரை பார்த்ததும் வெலவெலத்தார் மாணிக்கம்.

    "நீங்க....நீங்க...?" என்று மெல்ல மாணிக்கம் இழுக்க...

    "என்ன தெரியலீங்களா....நான்தான் ஆரோக்கியசாமி மகன் சார்லஸ்." என்றதும்...

    "அடடா...சார்லஸா....அடையாளமே தெரியல. வாங்க வாங்க" என்று அழைத்ததும்....

    "என்னங்க அய்யா... என்ன போய் வாங்க போங்க கூப்பிடறீங்க....சும்மா வா போனே கூப்பிடுங்க"

    "சரிப்பா உள்ள வா... கமலா இங்க வந்து பாரு யாரு வந்திருக்கானு" என்று சார்லஸை உள்ளே அழைத்து சென்றார் மாணிக்கம்.

    "சார்லஸ்! டிரெயினிங் எல்லாம் முடிஞ்சுதா...?"

    "டிரெயினிங் முடிஞ்சு இப்ப நம் மாவட்டதுக்கே மாற்றலாகி வந்திருக்கேன்"

    கமலம் யார் என்று தெரியாமல் விழிக்க...

    'என்ன கமலா முழிக்கற. நம்ம ஆரோக்கியசாமி மவன் சார்லஸ். இப்ப நம் மாவட்டதுக்கு கலெக்டாரா வந்திருக்கான்."

    "அடையாளமே தெரியலப்பா. எப்படி இருக்கற?" என்று அன்போடு விசாரித்தாள்.

    "நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்கலா?" என்று நலம் விசாரித்தான். பிறகு தன் மகன் குடும்பத்தோடு வந்திருப்பதை சொன்ன மாணிக்கம் எல்லோரையும் அறிமுகப்படுத்தி சார்லஸ்க்கு அறிமுகப்படுத்தி வைத்தார் மாணிக்கம்.

    லிண்டாவிடம்...

    "மை ஸ்டுடண்ட்... நௌ ஹி ஸ் டிஸ்ரிடிக் கலெக்டர்" என்று அறிமுகப்படுத்தினார் மாணிக்கம். தன் மாமனாரை பெருமிதத்தோடு பார்த்தாள் லிண்டா.

    "சரிங்க அய்யா...நான் கிளம்பறேன்" என்றான் சார்லஸ்.

    "இருப்பா...சாப்பிட்டு போலாம்" என்றாள் கமலம்.

    "இல்லம்மா...வேலை இருக்குமா...இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்...அய்யா நான் கிளம்பறேன்" என்று விடை பெற்றான் சார்லஸ். மகிழ்ச்சியோடு வழியனுப்பி வீட்டிற்குள் வந்ததும் ரகு மெல்ல...

    "அப்பா நாங்களும் கிளம்பறோம்" என்றதும்

    "ஏம்ப்பா நீதான் இன்னும் லீவு இருக்குன்னு சொன்னையே" என்று மாணிக்கம் கேட்க

    "ஆமாப்பா. ஆனா நான் இங்க தங்க முடியும். ஆனா லிண்டாவும், பையனும் இந்த மாதிரி தங்கி பழக்கம் இல்லாதவங்க. அதனால டவுன்ல ஹோட்டல் தங்கியிருக்கோம். நம்ம சாப்பாடு, இடம் எல்லாம் இவங்களுக்கு சேராது அதான். நாளைக்கு வரேப்பா."

    ரகு சொல்ல சொல்ல மாணிக்கம், கமலத்தின் முகம் சுருங்கி போனது.

    அன்று ஞாயிற்றுக்கிழமை. கிடைத்த சிறிது ஓய்வு நேரத்தில் மெல்ல செய்தித்தாளை புரட்டி படித்துக் கொண்டிருந்தான் சார்லஸ்.
    அப்போது வெளியே காலிங்பெல் அடிக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்தான். அவனுடைய உதவியாளர் நின்று கொண்டிருந்தார்.

    "என்ன பரமசிவம் திடீர்னு?"

    "சார்...ஒரு வருத்தமான செய்தி...."என்று இழுத்தார்.

    "என்ன...?"

    "நம்ம மாணிக்கம் வாத்தியார் காலமாயிட்டார்" என்று உதவியாளர் சொன்னதும் அதிர்ந்து போன சார்லஸ்

    "சார் இறந்திட்டாரா?...எப்படி? என்னாச்சு அவருக்கு?"

    "இன்னிக்கு காலைல நெஞ்சுவலினு சொன்னாராம். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதுகுள்ள உயிர் போயிடுச்சு"

    "அப்படியா....? அவர் மகனுக்கு தகவல் சொல்லியாச்சா?"

    "அந்த கொடுமைய ஏன் கேக்கறீங்க...அவருக்கு தகவல் சொல்லியாச்சு. ஆனா அவர் வரமுடியாத சிக்கல் மாட்டிட்டாராம். உறவுக்காரங்களை வச்சு காரியம் பண்ண சொல்லிட்டாரு. ஆனா யாரும் அவருக்கு காரியம் பண்ண மாட்டேங்கறாங்க"

    "என்ன கொடுமை இது. ஏன் பண்ண மாட்டேங்கறாங்க?"

    "அவரு மகன் சாதி விட்டு வேறு மதத்த சேர்ந்த வெளிநாட்டுப் பொண்ண கல்யாணம் பண்ணிட்டதால உறவுக்காரங்களுக்கும் வாத்தயாருக்கும் சரியான பேச்சு வார்த்தை இல்ல. அதான்"

    "அதுக்காக இந்த நேரத்துலயா அவங்க கோபத்தை காட்டறது?"

    "என்ன சார் செய்யறது...காலம் எவ்வளவு மாறியும் இன்னும் அதே ரத்தம்தான் இங்க ஓடுது."

    பரமசிவம் சொன்னதை கேட்டு நொந்து போனான்.

    கூடுகளை நோக்கி பறவைகள் திரும்பும் அந்த அந்தி சாயும் நேரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்த சுடுகாட்டில் மாணிக்கத்தில் உடற்கூடு அநாதையாய் கிடந்தது. சுடுகாட்டில் தன் காரை நிறுத்திவிட்டு மெல்ல மாணிக்கத்தின் உடல் அருகே வந்தான் சார்லஸ். அடுக்கி வைக்கப்பட்ட கட்டைகளின் நடுவே எத்தனையோ மாணவர்களை நிமிர வைத்த அந்த உடல் சாய்து கிடந்தது. எதிரே அவரின் ஒட்டுவதற்கு விருப்பம் இல்லாத பங்காளி உறவுகள் என ஒரு கூட்டமே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன. அவர்களை நோக்கி சார்லஸ்

    "இவ்வளவு பெரிய மனுஷன் செத்திருக்காரு. அவருக்கு கடைசியாய் காரியம் பண்ணி அனுப்ப அனுமதி கொடுங்க"

    கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர்....

    "இதபாருங்க தம்பி. இது எங்க சொந்த பிரச்சனை. நீங்க தலையிடாதீங்க"

    "கொள்ளி வைக்கிற இடத்துல சொந்த பிரச்சனை என்ன வேண்டிகிடக்கு" என்று சார்லஸ் கேட்க...

    "சாதி விட்டு கல்யாணம் பண்ணி எங்கள அசிங்கப் படுத்தின குடும்பத்துக்கு நாங்க எதுவும் செய்ய வேண்டியதில்லை" என்று பெரியவர் உறும

    "அதுக்காக உங்க கோபத்தை இந்த நேரத்துல காட்டறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா..?

    "இதபாரு உன்னோட கலெக்டர் அதிகாரத்தை இங்க காட்டாதே...அந்த ஆளோட மவனே வரல. உனக்கு என்ன வேண்டி கெடக்கு?"
    மற்றொருவர் நக்கலாய் கேட்க கோபமடைந்த சார்லஸ்

    "அவர் என்னோட வாத்தியார். அவருக்கு இப்படி ஒரு காரியம் நடக்கறத பாத்து சும்மா இருக்க முடியாது"

    சார்லஸ் சொல்ல சொல்ல....

    "இத பாரு இதுல நீ தலையிடாதே. மரியாதையா திரும்பி போயிடும்"

    "முடியாது" என்று சார்லஸ் மறுப்பு சொல்லி சிதைக்கு அருகே நெருங்கியபோது மாணிக்கத்தின் உறவினர்கள் கோபத்தோடு சார்லஸை நெருங்கினார்கள். அதில் இருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுக்க சார்லஸ் கோபத்தோடு கத்தினான்.

    "என்னடா நெஞ்ச நிமித்தரீங்க? நான் கலெக்டரா இருந்தாலும் இந்த மண்ணலதான் பொறந்தேன். எனக்கும் அதோ கோபமும், ஆத்திரமும் நெறைய இருக்கு" என்றவன் வேகமாக தன் காருக்குள் வைத்திருந்த கைத்துப்பாக்கி வேகமாக எடுத்துக் கொண்டு....

    "வாங்கடா..." என்று கத்த மெல்ல சண்டை போட்ட கூட்டம் பயத்தில் கொஞ்சம் பின்வாங்க பதறிப்போன அவன் உதவியாளர் பரமசிவம் ஓடி வந்து அவனை தடுத்து...

    "சார்...கொஞ்சம் பொறுமையாய் இருங்க...நீங்கலே இப்படி செய்யலாமா....?

    "எப்படி பொறுமையாய் இருக்கறது பரமசிவம்? இவங்க என்னை என்ன செஞ்சுறுவாங்க...அதையும் பாக்கறேன்." என்றவன் தன் சட்டையை கழற்றி எறிந்து விட்டு அருகே இருந்த வெட்டியான் கையில் இருந்த தீ பந்தத்தை வாங்கி மாணிக்கத்தின் உடலுக்கு நெருப்பு மூட்டினான் சார்லஸ். தான் பாடமாய் கற்றுத் தந்த "சாதிகள் இல்லையடி......" இப்போது படமாய் இருக்கும்போது நிறைவேறியதை நினைத்து மெல்ல நிம்மதியோடு அந்த ஆத்மா தன் பயணத்தை தொடர்ந்தது,

  4. #28
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    சில நிஜங்கள்

    சில நிஜங்கள்


    போகப் போக இந்த லோகநாயகி சுபாவேம சரியில்லாம போயிடுத்து மாமி. ஆரம்பத்துல நல்ல பொம்மனாட்டியா, ஆத்துக்கு அடக்கமான மருமகளா இருந்தா, ஆனா இப்ப ரொம்ப மோசமானவளா மாறிட்டா. நேக்கு ரொம்ப கஷ்டமா போயிடுத்து மாமி. குடும்பத்துக்கு குத்து விளக்கா இருக்க வேண்டியவ இப்படியா பொறுப்பில்லாதவளா மாறணும்? மாமியார கொஞ்சம் கூட மதிக்கிறதில்ல. எல்லாத்துக்கும் எதிர் பேச்சு தான். அவா ஆத்துக்காரன் அதான் அந்த வினோத்துப்பய இவள லவ் மேரஜ் பண்றதுக்கு முன்னாடியும் இவள சுத்தி சுத்தி தான் வந்தான். இப்பவும் சுத்தி தான் வாரான். இதுல அவனுக்கு வெளியூர்ல வேல கிடச்சி போயிட்டான். வாரத்துக்கு ஒரு நாளோ ரெண்டு நாளோ தான் அவனால வீட்டுக்கு வர முடியும் . இனிமே இந்த
    லோக நாயகி பண்ணப்போற கூத்தெல்லாம் எங்க அவனுக்கு தெரியப்போறது?

    அவ அம்மாக்கும், அவ மாமியாருக்கும் ஒேர வயசு தானே இருக்கும். அம்மாவுக்கு குடுக்குற மரியாதைல கொஞ்சம் கூடவா மாமியாருக்கு இவ கொடுக்கப்பிடாது? தன் மாமியாருக்கு விஷம் கலந்து குடுக்குற அளவுக்கு துணிஞ்சிட்டாளே பாதகத்தி. எல்லாம் அந்த சிவா, அதான் அவ கள்ள புருஷன், வினோத் சினேகிதன் சொல்லிக்குடுக்குற ஐடியா தான். வினோத்துக்கு உள்ளுர்ல கெடைக்க வேண்டிய வேலைய வெளியூருக்கு மாத்தி விட்டேத இந்த சிவா தான். இந்த சிவா வினோத் ஆத்துல காலடி எடுத்து வச்சத்துக்கு அப்புறம் இந்த பிரச்சனை எல்லாமே. இப்ப பாருங்க தன் சினேகிதன் வீட்டுக்கே துரோகம் பண்ண துணிஞ்சிட்டான் சண்டாளன்.

    சிவா மோசமானவன்னு தெரிஞ்சிக்காம அவன வீடுவரைக்கும் வர விட்டது வினோத் தப்பு. சிவா போட்ட சொக்குபொடியில மயங்கி அவன் வலையில விழுந்தது லோகநாயகி தப்பு. இந்த லோகத்துல மனுசாள நம்பேவ முடியிறதில்ல மாமி. யாரு நல்லவா? யாரு கெட்டவா? ன்னே தெரிய மாட்டேங்கிறது. எல்லாரும் பாக்குறதுக்கு நல்லவா மாதிரிதான் தெரியுறா. ஆனா பழகிப்பாத்தா தானே தெரியுறது அவா, அவா யோக்கியைத என்னான்னு.

    என்ன பொம்மனாட்டி இவா? இந்த சிவா ஆத்துக்கு வந்தாலே போதும் எல்லாத்தையும் மறந்து அவன் கூட பேச ஆரம்பிச்சிடுறா. அப்படி என்னத்த தான் பேசிப்பாளோ. நேக்கு ஒரு மண்ணும் புரியல. ஒரு தடவ இப்படித்தான் லோகநாயகி சிவா கூட பேசிட்டு இருந்தா. அப்போ அவ குழந்தைய தேள் கடித்திடுத்து. தொட்டில்ல கெடந்து அந்த பச்ச மண்ணு துடியா துடிச்சி அழுகுது. இது கூடவா அவ காதுல விழாம போகும்? அந்த அளவுக்கு பேசுறா. நல்ல வேள அந்த நேரத்துல பெருமாளா பார்த்து கோவிலுக்குப் போன அவா
    மாமியார சீக்கிரம் அனுப்பி வைச்சிருக்காரு போல. அவங்க மட்டும் அப்போ வரலன்னா..... நெனச்சி பாக்கேவ நெஞ்சு பதறுது மாமி.

    இதெல்லாம் நடந்ததுக்கு அப்புறம் தானே இன்னக்கி அவா மாமியா லோகநாயகிய கண்டிச்சாங்க. எங்க இவங்க இன்னும் இப்படியே கண்டிக்க ஆரம்பிச்சிட்டா நிம்மதி போயிடும். சிவா கூட பேச முடியாது. கள்ள காதல் வெளிய தெரிய வந்துருமோனு பயந்து அவாள கொல்ல துணிஞ்சிட்டா. அதனால தான் அந்த விஷம் கலந்த பால அவங்களுக்கு குடிக்க கொடுத்தா.
    அவங்க அத குடிக்கிறதுக்குள்ள இந்த பாவிபய டிவிக்காரன் தொடரும்னு போட்டு முடிச்சிட்டான். இப்பல்லாம் டிவி சீரியேல பார்க்க முடியல மாமி.ரொம்ப விளம்பரமா போட்டு கொல்றா.


    "ஏண்டி புவனா. குழந்த எவ்ளோ நேரமா பசியில அழுதுண்டு இருக்கு. நோக்கு இந்த டிவி சீரியல பத்தி பேச ஆரம்பிச்சிட்டா எதுவுமே காதுல விழாதோ டீ? நானும் எவ்வளவு பிராணண குடுத்து கத்தீண்டு இருக்கேன். கொஞ்சம் உள்ள வா டீ..."

    அட! அட! அட! சித்த நேரமாவது என்ன நிம்மதியா இருக்க விடுதா இந்த கெழம். எனக்குன்னு மாமியாரா வந்து எம் பிராணத்த வாங்கீண்டு..... என் ஆத்துக்காரர்ட்ட இத ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்துட்டு நாம நம்மதியா இருக்கலாம்ன்னு பல தடவ சொல்லி பார்த்தாச்சி. அவரு கேக்குற மாதிரியே தெரியல. இன்னக்கி வரட்டும் அவரு.... ஹ்ம்.... நீங்க நாளக்கி மறக்காம நிஜங்கள் சீரியல் பாருங்கோ மாமி. நான் அப்புறம் வாரேன்.


    ஒரு வழியாக புவனா வீட்டுக்குள் நுழைகிறாள். அவள் குழந்தை இன்னும் அழுகையை நிறுத்தியதாக தெரியவில்லை.

  5. #29
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    கடைசி வரை..

    கடைசி வரை...

    மகாதேவன் மேல வாங்க.. என அழைத்த குரலைக் கேட்டு தலையை உயர்த்தினான் மகாதேவன். நான்கு பேர் நின்றிருந்தார்கள்.
    நம்ம க்ளாஸ் ரூம் இதுதான் என்றான் ஒருவன் அருகிலிருந்த வகுப்பறையை சுட்டிக்காட்டியபடி

    மகாதேவன் படிகளில் ஏறி வகுப்பறையை அடைந்தான். அங்கிருந்த நீளமான பெஞ்ச்களை பார்த்தபடியே "எங்க எக்ஸாம் நம்பரையே டேபிள்ல காணோம்.

    அதெல்லாம் அப்படித்தான்.. சிரித்தபடி சொன்னான் ஒருவன்

    யார் வேணா எங்க வேணா உட்காரலாம் என்றான் இன்னொருவன்

    அந்த அறை முழுவதும் மாணவர்களின் பேச்சுக்களால் இரைச்சலாய் இருந்தது.

    மகாதேவனுக்கும் உடனிருந்த நண்பர்களுக்கும் வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கும். டி.எம்.இ எனப்படும் இளநிலை பொறியாளர் படிப்பில் மூன்றாம் செமஸ்டர் தேர்வுக்காக வந்திருந்தனர். பி.டெக் தேர்வு எழுதுபர்களும் அங்கு இருந்தனர். எல்லோரும் சம்பந்தப்பட்ட பாடபுத்தகம் வைத்திருந்தனர். எல்லோரும் பகுதி நேர படிப்பு படித்துக்கொண்டிருப்பவர்கள்.

    ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார். மாணவமாணவிகள் ஒரு பெஞ்சுக்கு மூன்று பேர் வீதம் அமர்ந்தார்கள். ஆசிரியர் முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்களிடம் விடைதாள்களை கொடுத்து "உங்களுக்கு ஒன்னு எடுத்துக்கிட்டு அப்படியே மத்தவங்களுக்கு பாஸ் பண்ணுங்க" என்றார். தொடர்ந்து, உங்க நம்பர், சப்ஜக்ட் கோட் நம்பர் எல்லாம் சரியா எழுதுங்க. என்றார்.

    சரியாக 9.55க்கு ஒரு நபர் வந்து வினாத்தாள் கட்டுகளை கொடுத்து விட்டு போனார். 10.00 மணிக்கு மின்சார மணி சத்தம் கேட்டது. ஆசிரியர் முதலில் பி.டெக் ஸ்டூடண்ட்ஸ் மட்டும் வாங்கிக்கோங்க.. என வினாத்தாள்களை கொடுத்தார். அடுத்து டிப்ளமோ ஸ்டூடண்ட்ஸ் வாங்கிக்கோங்க... என கொடுத்தார்.

    மகாதேவன் கேள்வித்தாளை ஒருமுறை முழுமையாக படித்தான். அவன் எதிர்பார்த்தது போல் எளிதாயில்லை. படித்தது எல்லாம் மறந்து போனது போல் ஒரு பதைப்பு. புத்தகத்தின் பக்கங்களை திருப்பும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். அங்கிருந்த பலரும் புத்தகத்தை பார்த்து எழுத துவங்கியிருந்தார்கள். சிலர் விடைக்கான பக்கத்தை தேடிக்கொண்டிருந்தார்கள். மகாதேவன் தெரிந்த விடைகளை எழுதினான். மனதுக்குள் புத்தகத்தை எடுக்கலாமா வேண்டாமா என யோசனை.

    அப்போது கையில் துண்டு சீட்டுடன் ஒருவன் வகுப்பறைக்குள் வந்தான். எல்லாம் கவனிங்க...இந்த கொஸ்ட்டின்ங்களுக்கு ஆன்சர் உங்க புக்லயே இருக்கு. டி.எம்.இ க்கு சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க. கொஸ்ட்டின் ஒன்.. பேஜ் நம்பர் ட்வெண்ட்டி டூ. கொஸ்ட்டின் டூ பேஜ் நம்பர் சிக்ஸ்டி சிக்ஸ், கொஸ்ட்டின் த்ரீ பேஜ் நம்பர் நைண்ட்டி ஒன்.. என கேள்வித்தாளில் இருந்த பத்து கேள்விகளுக்கும் விடைக்கான பக்கங்களை சொன்னார். அது போலவே பி.டெக் கேள்விகளுக்கான விடைகளையும் சொன்னார். கடைசியில் "செக்கிங் வர்றப்ப யாரும் மாட்டிக்கிட்டா நாங்க பொறுப்பில்ல" என்றார்.

    புத்தகத்தை பார்த்து எல்லோரும் விடைகளை எழுதினார்கள். நேரம் ஆக ஆக சிலர் "கை வலிக்குது..பாஸ் ஆக இது போதும்" என கமெண்ட் அடித்து சிரித்தவாறு விடைத்தாள்களை கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு போனார்கள். எல்லோருடைய முகமும் மகிழ்ச்சியாயிருந்தது. இந்த படிப்பை முடித்தால் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என பேசிக்கொண்டார்கள். அவர்களில் மத்திய, மாநில, மற்றும் தனியார் கம்பெனிகளில் பணிபுரிவோர்கள் இருந்தனர்.

    மறுநாள் அடுத்த பரிட்சையிலும் இதே மாதிரி எழுத துவங்கும் நேரத்தில் அந்த நபர் வந்து விடைகளை சொல்லி விட்டு போனார். அன்று பரிட்சை முடித்து மகாதேவன் தன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். ஆனால் மனதில் குழப்பம். இப்படியும் பாஸாகனுமா? இப்படியும் சர்ட்டிபிகேட் வாங்கனுமா? என துளைத்தது. ஆனா சர்ட்டிபிகேட்டுக்கு தனி மதிப்பு உண்டே.
    பெயருக்கு பின்னால் பெருமையாக போட்டுக்கொள்ளலாமே.

    அகத்தின் அழகு முகத்தில் தெரிய, இரவு சாப்பிடும் போது மனைவி கேட்டாள் "என்னங்க எக்ஸாம் கஷ்டமாயிருந்துச்சா"?
    "ப்..ச்" என்றவாறு இல்லையென தலையசைத்தான்.

    அன்று இரவு அவனுக்கு சரியான தூக்கம் வரவில்லை. கடந்த சிலமாதங்களாகவே தேர்வுக்காக படிப்பதால் தூக்கம் குறைந்து போனது. தெருவில் ஜன நடமாட்டம் இல்லை. தெருவிலே இரு புறமும் நடந்தான்.

    மகாதேவன் பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் விடுமுறையில் மெயின் ரோட்டிலிருந்த லேத் (LATHE) பட்டறையில் உதவியாளராக சேர்ந்தான். அங்கேயே வெல்டிங் வேலையும் கற்றுக்கொண்டான். லேத்-தின் முன்பு நிற்க ஆரம்பித்தால் அவனிடம் கொடுக்கப்பட்ட வரைபடத்துக்கேற்ப லேத்தில் பொருத்தப்பட்ட இரும்பு உருளையை மாற்றாமல் அங்கிருந்து நகரமாட்டான். சில நேரம் ஆறு ஏழு
    மணி நேரம் கூட ஓய்வில்லாமல் நின்றபடியே இருப்பான். இரும்பின் வெளிப்புறம் கண்ணாடி போல மாறிப்போகும் அவனிடம்.

    வெல்டிங் செய்யும் போது புகைப்பட்டு அன்று இரவெல்லாம் கண்களில் நீராக வழியும். இரவு தைலத்தை லேசாக விரலில் தடவி இமைக்கு மேல் போட்டு படுத்துவிடுவான். அரைமணி நேரத்துக்கு கண்களில் எரிச்சல் ஏற்படும். பிறகு சரியாகிவிடும். மறுநாள் காலை வேலைக்கு செல்ல தவறியதில்லை. இரும்பு ஜன்னல்கள் கதவுகள் செய்யும்போது பனையின் மீது கிடத்தியிருக்கும் இரும்பு சட்டத்தின் மேல் வைத்திருக்கும் கட்ரு (உளி) மேல் சம்மட்டியை இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி ஓங்கி அடிக்கும் போது ஒரே அடியில் என்ன விட்டுடு என துண்டுகளாகி போகும். அவற்றை லிவர் ப்ளேட் மேல் வைத்து லிவரால் வளைக்கும் போது அவை அவன் கைக்கேற்ப்ப வளைந்து விரும்பும் வடிவமாக மாறும்.

    சில சமயம் ஆஸ்பெஸ்டாஸ் ஓடு பதிக்கும் நேரங்களில் உயரமான இடங்களிலும் முக்கால் அடி அகல சுவரில் தரையில் நடப்பது போல் தயக்கமில்லாமல் நடப்பான். இரண்டு வருட தொழில் அனுபவத்துக்கு பிறகு அரசு ஐ.டி.ஐ யில் சேர்ந்து "டர்னர்" படிப்பு முடித்து சான்றிதழும் பெற்றான்.

    தெருவில் நடந்து கொண்டிருந்த மகாதேவன் கையில் அதிர்ந்த அலைபேசியை பார்த்தான். புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

    ஹலோ..? என்றான்

    ஹலோ மஹா... நான் நம்பி..நம்பி ராஜன் பேசுறேன்.

    பத்து வருஷத்துக்கு முன்பு கேட்ட குரல். ஹே நம்பி.. எப்டிடா இருக்கெ..? ஆமா என் நம்பர் எப்டி கெடச்சது" கேட்டான் மகா

    கிருபா குடுத்தான்..... ஒனக்கு ஒரு பையன் ஒரு பொன்னு இல்ல... பசங்க எப்டி இருக்காங்க. என்றான் நம்பி

    எல்லாம் நல்லா யிருக்காங்க.. ஆமா ஒன்னோட ரெண்டு பொன்னுங்களும் சவுக்கியமா?

    எல்லாம் நல்லாயிருக்காங்க... பரவாயில்ல ஞாபகம் வச்சிருக்கியே.

    அப்புறம் நம்பி, வேலையெல்லாம் எப்டி போயிட்டிருக்கு..?

    நா இங்க கோயம்பத்தூர்ல ஒரு கம்பெனில சைட் சூபர்வைசரா இருக்கேன். நீ எப்டி இருக்கே. பார்ட் டைம்ல டிப்ளமோ படிச்சியே..முடிச்சிட்ட இல்ல..?

    இல்லடா பார்ட் டைம்ல படிக்கிறதெல்லாம் பெரிய டார்ச்சர்டா. அத அப்ப டிஸ்கண்ட்டினியூ பண்ணிட்டேன்.

    ஏண்டா?

    கம்பெனில வேலய முடிச்சிட்டு அங்க க்ளாஸ்க்கு போனா சில சமயம் மாஸ்டர் வரமாட்டாங்க. நாம கொஞ்சம் லேட்டா போயிட்டாலும் வெளியில்யே கொஞ்ச நேரம் நிக்க வச்சுதான் உள்ள வரச்சொல்லி கையசைப்பாங்க. பர்ஸ்ட் செமஸ்ட்டர்ல ஒரு சப்ஜட்டுக்கு ஒரே ஒரு நாள் தான் மாஸ்டர் வந்தாரு. மேக்ஸ் சொல்லவே வேண்டாம். அவ்ரு பாட்டுக்கு நடத்திக்கிட்டே போவாரு.
    ப்ளஸ்டூ முடிச்சவங்களுக்கு மட்டும் கொஞ்சம் புரியும். நம்மல மாறி ஆளுங்களுக்கு புரியாது. டியூஷன் சேர்ற அளவுக்கு அப்ப வசதியுமில்ல. நேரமுமில்ல. ஒருமுறை செகண்ட் செமஸ்டர் அப்ப ஒரு சப்ஜக்ட்டுக்கு மாஸ்டரே வரல. ஹெச்.ஓ.டி க்கிட்டபோய் கேட்டோம். அவரு "மாஸ்டர் வரலன்னா நீங்க தாம்பா படிக்கனும். நீங்க கட்டுற பீஸ வச்சு ஒரு மயிரும் புடுங்க முடியாதுன்னாரு".
    பார்ட் டைம் டீச்சர்ஸ்க்கெல்லாம் அப்ப அந்தளவுக்கு சேலரி இல்லையோ என்னமோ..?

    "ஆமா..மா பார்ட் டைம்ல படிக்கிறதெல்லாம் அவ்ளோ ஈசியில்ல. நா ஐ.டி.ஐ முடிச்சிட்டு அடுத்த வருஷமே புல் டைம்ல டி.சி.இ சேர்ந்துட்டேன்..." என்றான் நம்பி

    படிக்கனும்னு ஆசப்பட்டா மேரேஜ்ஜுக்கு முன்னாடியே படிச்சிடனும். மேரேஜ்ஜுக்கு அப்புறம் படிக்கிறதா இருந்தா வேற வேலைக்கு போகாம எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம இருந்தா தான் முடியும். என்றான் மகாதேவன்

    நம்மல மாறி மிடில் க்ளாஸ்க்கு பிக்கலும் பிடுங்கலும் தான லைஃப் எனக்கூறி சிரித்தான் நம்பிராஜன். மகாதேவனும் சிரித்தான்.

    சரி விடு மஹா.. பசங்கள நல்லபடியா படிக்க வை.

    எங்க விட முடியுது..? ஒர்க் பண்ற எடத்தில எல்லாம் வேல தெரிஞ்சாலும் தெரியாட்டியும் படிச்சவங்களுக்கு ஒரு மரியாத, எங்களமாதிரி ஆளுங்களுக்கு ஒரு மரியாததான். படிச்சிருந்தா ஈஸியா ப்ரமோஷன் வாங்கலாம். இல்லன்னா கஷ்டம் தான்.

    ஆமா..மா இங்க கன்ஸ்ட்ரக்சன் சைட்ல காலம்பூரா ஒழச்சு குடும்பத்த, பிள்ளைங்கல காப்பாத்துற சித்தாளு பெரியாளுங்கள வா போன்னு பேசுவோம். அவுங்க வயசானவங்களா இருப்பாங்க. அதே புதுசா அப்பதான் டி.சி.இ முடிச்சிட்டு வருவாங்க அவுங்கள சார்..ம்பாங்க..மேடம்..பாங்க" என்ற நம்பியின் குரலில் வருத்தம் தொனித்தது.

    இங்க நம்ம நாட்டில உழைக்கிறவனுக்கு மரியாத யில்ல. சட்டையில அழுக்குப் படாம வேல செய்றவனுக்கு தான் மதிப்பு. ஒடம்பு வலிக்க உழைக்கிறவன கீழ்சாதிக்காரனா பாக்கிறவங்க நம்ம ஆளுங்க. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால நம்ம ஐ.டி.ஐக்கு போயிருந்தேன். கொஞ்சம் கூட ஒரு டெவலப்மெண்ட் இல்ல. அந்த காம்பவுண்ட் வேலியெல்லாம் விழுந்து கெடக்கு.
    என்றான் மகாதேவன்.

    இங்க நம்மூர்ல ஐ.டி.ஐ படிப்புக்கெல்லாம் மதிப்பு இல்ல. பீ.ஏ...பீ.காம்னு ஏதாவது டிகிரி கோர்ஸ் படிச்சிட்டு, கெடச்ச வேலய செய்துக்கிட்டு, இல்லாட்டி வேலயா கெடைக்காம இருக்கிறவன் கூட கல்யாண பத்திரிக்கையில பேருக்கு பின்னாடி பீ.ஏ.. பீ.காம்னு போட்டுக்குவான். ஆனா ஐ.டி.ஐ படிச்சவன் எத்தன பேரு வெல்டர், டர்னர், ஃபிட்டர்னு போட்டுக்கிறான்..? நீயே கூட போட்டிருக்க
    மாட்ட.." என்றான் நம்பி

    ம்.. அதத்தான் நானும் சொல்றேன். அந்த படிப்புக்கு மரியாத இருந்தா தான போட்டுக்கு முடியும். ஒருமுறை டிப்ளமோ ஸ்டூடண்ட்டு ஒருத்தன இண்டர்வியூ பண்ணோம். எங்க மேனேஜர் நாலஞ்சு கேள்வி கேட்டார். ஒன்னுத்துக்கும் பதில் சொல்லல. கடைசியா சர்க்கிளுக்கும் பை ஆர் ஸ்கொயருக்கும் என்ன ரிலேசன்னு கேட்டார். அதுக்கும் பதில் சொல்லல. சரி நாங்க லட்டர்
    அனுப்புறோம்னு சொல்லி அவன அனுப்பி வச்சார் மேனேஜர்." என்றான் மகா.

    இப்பல்லாம் எங்க ஒழுங்கா படிச்சிட்டு வந்து எக்ஸாம் எழுதுறாங்க. ரொம்ப பேர் பிட் அடிச்சுதான் எழுதுறாங்க. என் சிஸ்டர் டீச்சரா இருக்காங்க. அவுங்க வந்து சொல்வாங்க. பொண்ணுங்க கூட சூப்பரா பிட் அடிக்கிறாங்களாம். அதும் சுடிதார் டிரஸ் கால்கிட்ட ரொம்ப லூஸா இருக்கிறதால தொடைக்கு அடியில வச்சு மறச்சுக்குவாங்களாம். எழுதுறப்ப தொடைக்கு மேல வச்சு துப்பட்டாவில
    மறச்சுக்கிதுங்களாம். அவ்வளவு ஏன் போலிஸ் டிபார்ட்மெண்ட்டில இருந்து எக்ஸாம் எழுத வர்றவங்க கூட பிட் அடிக்கிறாங்களாம். என்றான் நம்பி.

    நம்பி, நா இப்ப இங்க ஒரு காலேஜ்ல டி.எம்.இ சேந்திருக்கேன். எக்ஸாம் ஹால்ல அப்டியே புக்க டேபிள் மேல வச்சு தான் எல்லாரும் எக்ஸாம் எழுதுறாங்க. நா ஹால் டிக்கட் வாங்க போனப்ப தான் ஒருத்தன் பி.டெக் சேந்தான். அவங்கிட்ட காலேஜ் ஆள் சொன்னாங்க "நீங்க ஃபீஸ கட்டிட்டு எக்ஸாம் அட்டண்ட் பண்ணுங்க. கட்டாயம் நீங்க பாஸ் ஆயிடுவீங்க அவ்ளவுதான் நாங்க
    சொல்ல முடியும்னாங்க. அந்த படிக்க வந்த ஆளு "எப்டீங்க க்ளாஸே அட்டண்ட் பண்லயென்னு" கேட்டான். அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம்னாரு அந்த காலேஜ் ஆளு. எனக்கு அப்ப ஒன்னும் புரியல. எக்ஸாம் ஹால்ல தான் புரிஞ்சுது....... என் தலையெழுத்து நானும் அப்படித்தான் எழுதினேன். என பெருமூச்சு விட்டான் மகா.

    சரி விடு. ரொம்பல்லாம் ஃபீல் பண்ணாத, இப்பல்லாம் நியாயத்துக்கு மதிப்பில்ல. தைரியமா தப்பு பண்றது கூட இப்ப ஒரு க்வாலிஃபிகேஷன்" என்றான் நம்பி

    மகாதேவன் விரக்தியாய் சிரித்தான்.

    மறுநாள் காலை வழக்கமாக வேலைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தான் மகாதேவன். "என்னய்யா பரிச்சைக்கு போகலயா?" என்றார் அவனுடைய அப்பா.

    அந்த பரிச்சய எழுதி பாஸ் ஆனா அது எனக்கு அசிங்கம்ப்பா. அங்க எல்லாரும் புக்க பாத்து எழுதுறாங்கப்பா. அப்படி புக்க பாத்து எழுதி நானும் படிச்சிருக்கேன்னு பட்டம் வாங்குறத விட நான் படிக்காதவனாவே இருந்துட்டு போறேன். இப்படி பொய் சர்ட்டிஃபிகேட் வாங்கி தான் எனக்கு எங்க கம்பெனியில ப்ரமோஷன் கெடைக்கும்னா எனக்கு அந்த ப்ரமோஷனே வேண்டாம்"
    என்ற போது மகாதேவன் கண்கள் கலங்கி குரல் தடுமாறியது. மூக்கை உறிஞ்சி கொண்டு பெரு மூச்சு விட்டான்.

    எவன்னா எப்படின்னா எழுதிட்டு போறான், நீ படிச்சு எழுத வேண்டியது தானய்யா. என்றார் அப்பா

    எனக்கு அந்த எக்ஸாம் ஹால பாக்கவே அருவருப்பா இருக்குப்பா என்ற போது அவன் கண்ணிலிருந்து நீர்த்துளி விழுந்தது.

    அந்த காலேஜ்ல கட்ட பன்னெண்டாயிரம் கடன் வாங்கியிருந்தியே அத அடச்சிட்டியா..? என்றார் அப்பா வருத்தத்துடன்.

    போன மாசமே அடச்சிட்டேன்ப்பா. என்றான் மகா.

    கடந்த சில மாதங்களாய் படிப்புக்காக நேரம் செலவிட்டதால் வேளையில் சற்று கவனம் குறைந்திருந்தான். இப்போது அந்த சுமை இல்லை. வழக்கம் போல் வேலையில் கவனம் செலுத்தினான். சார்ஜண்ட்டாக இருந்தவன் அடுத்த மூன்று மாதங்களுக்கு பிறகு அலுவலகத்தில் சூபர்வைஸராக பதவி உயர்வு பெற்றான். பொதுவாக டிப்ளமோ முடித்தவர்களுக்கு மட்டுமே அந்த பதவி கிடைக்கும்.
    அவனே கூட எதிர்பாரதது. கிடைத்து விட்டது. நேர்மைக்கும் உழைப்புக்கும் அனுபவத்துக்கும் என்றைக்கும் மதிப்பிருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. ஆனால்...!

    ஆனால் அலுவலக கலந்தாய்வு கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேச வேண்டிய எழுத வேண்டிய அவசியம் இருந்தது. பலவிதமான பொறியியல் கணக்குகள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆங்கிலத்தில் வருகிற கடிதங்களை புரிந்து அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் எழுத வேண்டியிருந்தது. அவையெல்லாம் பெரிய சவாலாய் இருந்தது அவனுக்கு.

    ஒருநாள் இதையெல்லாம் நினைத்தவாறே மேற்கொண்டு படிக்கலாமா..? வேண்டாமா? என யோசித்துக்கொண்டே தன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான். சாலையில் வாகன நெருக்கம் அதிகமாய் இருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் பின் பக்கம் எழுதப்பட்டிருந்த வரிகளை படிக்க நேர்ந்தது. அதில் எழுதப்பட்டிருந்த வரிகள்...

    "வீடு வரை உறவு
    வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை
    கடைசி வரை கல்வி"


    அந்த நீளமான சாலையின் முனை வரை அந்த ஆட்டோ அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது.
    மகாதேவன் தன் வண்டியை கல்லூரி இருக்கும் பாதையை நோக்கி செலுத்தினான்.

  6. #30
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2

    யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா?

    யாராவது என் பேனாவைப் பார்த்தீங்களா?


    "அம்மா! இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்க?"."அந்த மேசை மேல தான் இருந்துச்சு! நால்லா தேடிப் பாரு!!".
    நானும் அரைமணிநேரமாகத் தேடுகிறேன்.கிடைக்கவில்லை.

    ராசியான பேனா! எவ்வளவோ ஸ்டைலா புது புது பேனா வந்தாலும்,இந்த பேனா மேல எனக்கு காதல் அதிகம்!ஐந்து வருட பிணைப்பு எங்களுக்குள்! அழகான என் எழுத்துக்கள் என்றும் அழகாக இருக்க வேண்டி, என் அப்பா வாங்கித்தந்த பேனா அது.
    அந்தப் பேனாவினால் எழுதத் துவங்கினாலே,எழுத்துக்கள் உயிர் பெற்றது போல எனக்குள் உணர்வு வரும்.அது விவரிக்க முடியாத இன்பம்!அந்தப் பேனாவைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

    "பேனா கிடைச்சுதா?" என்ற கேள்வியோடு அம்மா என் அறைக்குள் வந்தாங்க.இருவருமாக அலமாரி,மேசை,படுக்கை என எல்லா இடங்களிலும் தேடினோம்.சிறிது நேரத்துக்கு பிறகு, அம்மா ஏதோ நியாபகம் வந்தது போல, "அடடா..மறந்தே போய்ட்டேன்!நீ காலையில ஆபிஸ் போனதுக்கு அப்புறம், காமாட்சி அக்கா வந்துச்சு. ஏதோ அவங்க பொண்ணுக்கு லோன் வாங்க விண்ணப்பம் பூர்த்தி செய்யனும்னு பேனா கேட்டுச்சு. நானும் அந்த பேனாவை எடுத்துக் குடுத்திட்டேன்.இன்னும் கொண்டு வந்து தரலை..நானும் வேலையா இருந்ததால, மறந்தே போய்ட்டேன்!!","அந்த பேனாவை எதுக்குமா குடுத்த?" என்று கூறிவிட்டு கோபத்தோடு வாசலை நோக்கிச் சென்றேன்."மணி ஆறு ஆகிடுச்சு! அவங்க வீட்டுக்கு வந்திருப்பாங்க! போய் வாங்கிட்டு வந்துடு..இனிமே நான் யாருக்கும் குடுக்கல டா! கோபப்படாதே!",என்ற அம்மாவின் குரல் வாசல் வரை கேட்டது.

    காமாட்சி அக்கா வீடு, எங்க வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருக்கிறது.எங்க தெருவில் மொத்தமே 6 வீடுகள் தான், அதில் படிச்ச உயிர்கள் ரெண்டு பேர் தான். ஒன்னு நான். இன்னொன்னு, காமாட்சி அக்கா பொண்ணு யமுனா.நான் படிச்சு முடிச்சு வேலைல இருக்கேன். யமுனா கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.நல்ல குடும்பம்.லேசான பனிக்காற்று, கார்த்திகை மாதம் என்பதை நினைவுப்படுத்தியது.
    காமாட்சி அக்கா வீட்டுக்கு வெளியே கொடியில் காய்ந்த துணிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.என்னைப்பார்த்ததும்,"தம்பி! வாங்க.இப்ப தான் யமுனா கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.உள்ள வாப்பா!",நான் வாசலில் நுழைந்தபோது அடுத்த கட்டளை,"யம்மு!!! குமார் அண்ணனோட பேனாவை எடுத்துட்டு வா!" என்று சொல்லியபடிதுணிகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் போய்விட்டார்."அண்ணா! எப்படி இருக்கீங்க?",இது யமுனா."நல்லா இருக்கேன் யம்மு.காலேஜ் எப்படிப் போகுது?"என்றபடி பேனாவை வாங்கிகொண்டேன்."காலேஜ் ஜாலியா போகுது.பரீச்சை வந்தா தான் கடுப்பா இருக்கும்!" ,"அது அப்படித்தான். கல்லூரி முடிச்சதுக்கு அப்புறம்,இந்த எரிச்சல் கூட சிரிப்பூட்டும்!"என்றேன்.அவள் சிரித்தாள்.

    சிறிது நேரப் பேச்சுக்குப் பின்னர், காமட்சி அக்கா கொடுத்த தண்ணீரை பருகிவிட்டு வெளியே வந்தேன்.பேனா எனது சட்டைப் பையில்.
    வீடு வந்து சேரும் போது மணி 7. ஒரு கதை எழுத நினைத்து தான் அந்த பேனாவைத்தேடினேன்.உடை மாற்றிக்கொண்டு, வெள்ளைத்தாளுடன் மொட்டை மாடியில் அமர்ந்து யோசிக்கத்துவங்கினேன்."வந்து சாப்பிடு டா! மணி எட்டாகப் போகுது." அம்மாவின் குரல் கற்பனைகளைக் கலைத்து விட்டது. "இப்ப தாம்மா வந்தேன்.அதுக்குள்ள என்னசாப்பாடு?பசிக்கல.நான் அப்புறமா சாப்பிடுறேன்!",என்றேன் கோபமாக. அப்படி சொன்னேனே தவிர பசி வயிற்றைக் கிள்ளியது.ஒரு வரியாவது எழுதிவிட்டு சாப்பிடப் போலாம் என அமர்ந்திருந்தேன்.

    நிலா,வானம்,நட்சத்திரம்,மேகம் எனப்பார்த்த எனக்கு,கதை எழுதும் எண்ணம் மாறி, கவிதை எழுதத் தோன்றியது.
    "நிலவே! உனக்கும் எனக்கும் இடையில் உணர்வுப்பாலமாய் என் கவிதை" எனத்துவங்கிய போது பசி உணர்வு மேலோங்கிவிட்டது. பேனாவையும், தாளையும் மேசை மேல் போட்டுவிட்டு அவசர அவசரமாக சாப்பிடச் சென்றேன்.உண்ட மயக்கம். உடனடி உறக்கம்.
    காலை எழுந்து அலுவலகம் செல்லும் அவசரத்தில் இரவு நடந்த கவிதை முயற்சி மறந்தே போய்விட்டது.

    மாலையில் வீட்டுக்கு வந்த உடன் மீண்டும் தேடினேன்.
    "அம்மா! இந்த மேசை மேல வச்சிருந்த என் பேனாவை பார்த்தீங்களா"!!

    "மறதி, நம் தேசிய வியாதி"

  7. #31
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    மன்ற உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்

    கதைப்போட்டிக்கான வாக்கெடுப்பு தொடங்கிவிட்டது. போட்டியில் இருக்கும்
    29 கதைகளுள் உங்களுக்குப் பிடித்த 4 கதைகளுக்கு ஒரே தடவையில் வாக்களிக்கவும். நான்கிற்கு அதிகமாகவும் குறைவாகவும் இடப்பட்ட வாக்குகள் செல்லாத வாக்குகளாக கணக்கில் கொள்ளப்படும். (தயது செய்து இதை வாக்களிக்கும் போது கவனத்தில் கொள்ளவும்).


    வாக்கெடுப்பு நவம்பர் 30ம் தேதி முடிவடையும். வாக்களித்தவுடன் 'வாக்களித்தாயிற்று' என இத்திரியில் தெரியப்படுத்தவும்.


    வாக்களிக்கத் தொடங்குவீர்.. சிறந்த கதையாசிரியர்களைத் தேர்ந்தெடுப்பீர்!!

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    வாக்களித்துவிட்டேன்.

  9. #33
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    வாக்களித்துவிட்டேன்.

  10. #34
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் க.கமலக்கண்ணன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Location
    சென்னை
    Age
    49
    Posts
    1,456
    Post Thanks / Like
    iCash Credits
    45,705
    Downloads
    101
    Uploads
    0
    வாக்களித்துவிட்டேன். அனைவரும் வாக்களிக்கவும்...
    உங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்




  11. #35
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Jul 2010
    Location
    விழுப்புரம்
    Age
    35
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    18,028
    Downloads
    4
    Uploads
    0
    நானும் வாக்களித்துவிட்டேன் .
    தமிழுக்கும் அமுதென்று பேர்! -
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
    எங்கள் உயிருக்கு நேர்!

  12. #36
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    வாக்களித்துவிட்டேன்.

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •